கல்லை யார் வேண்டுமானாலும் தங்கமாக்கலாம், ஆனால்,
மனதைத் தங்கமாக்க கோடியில் ஒருவருக்கே சாத்தியமாகும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்

ஸ்ரீஆயுர்தேவி மகிமை

கிருதயுகத்தில் சிறப்புற்று விளங்கிய ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனை, காலப் போக்கில் மக்களின் அசிரத்தையால் மறைந்துவிட, தற்போது சித்த புருஷர்களின் அருட்பெருங் கருணையால் கலியுகத்து மக்களிடையே ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் பவனி வருகிறாள்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானம் சக்திஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் 1992ம் ஆண்டு நவராத்திரி தினப் பெருவிழாவில் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவெள்ளீஸ்வரர் சிவாலயத்தில் ஸ்ரீ ஆயுர் தேவி மஹிமை என்னும் தலைப்பில் ஒன்பது நாட்களுக்கு ஆன்மீக உரை அருளி ஸ்ரீ ஆயுர் தேவி யின் திரு உருவத்தையும் ஆஸ்திக மக்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.
தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளின் திருவருட் கருணையால் ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் பராசக்தி அம்சங்களை வடித்தெடுத்துக் கலியுக மக்களுக்கென ஈந்து அற்புத ஆன்மீகத் திருப்பணியாற்றி வருபவரே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.
ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.

பொதுவாக சித்த புருஷர்களின் திரூஉருவத்தைக் கோயில் தூண்களில்தான் காணலாம். ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட, ஸ்ரீ பராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி, என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள். எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.
ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து, தம் குருவருளால், ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமைகளாகத் தாம் திரட்டியளித்தவை ஓர் அணுவினும் சிறிதே என்றும் ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளை விரித்துரைக்கப் பலகோடி சதுர் யுகங்கள் கூடக்காணா என்றும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருள்கின்றார். என்னே ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமை!

ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களின் விளக்கம்
வலதுகரம் [மேலிருந்து கீழ்]: 1. கயாஸூர மஹரிஷி 2.ஆணி மாண்டவ்யர் 3. அத்ரி மஹரிஷி 4. குண்டலினி மஹரிஷி
இடது கரம் [மேலிருந்து கீழ்]: 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி 2. சாரமா முனிவர் 3. அஸ்தீக சித்தர் 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி
எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

பொதிய மலைச் சாரல்… பல்லாயிரக் கணக்கான அற்புதமான மூலிகைகளின் குணங்களைத் தாங்கி நறுமணத்தென்றல் வீச…
சித்தர்குல நாயகராம் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தம் சிஷ்யர்களுடன் சிவ ஆராதனையை நிகழ்த்திய பின் மெளனமாய் அமர்ந்திருக்கிறார். போகர் சாந்தமாய்த் தன் சற்குருவைத் தொழுது, வணங்கி கேட்கத் தொடங்குகிறார்.
போகர்: சற்குருதேவா! இன்று முதல் நாம் அனைவரும் திவ்ய க்ஷேத்ராடனம் தொடங்குகிறோம் அல்லவா? குறிப்பாக, தேவி உபாசனையைப் பற்றிக் கலியுக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது என்று சாட்சாத் சதாசிவனே அருளியதாக இன்றைய பூஜையில் எடுத்துரைத்தீர்கள். எனவே நாம் அம்பிகை அருள்புரியும் திருத்தலங்களுக்குச் செல்கிறோமல்லவா….?
தேவி அவதாரங்கள்
அகத்தியர்:- ஆம் போகா! அது மட்டுமல்ல, ஸ்ரீவித்யாவாக தரிசனம் தரும் பராசக்தி உறைகின்ற மேருச்சக்கரத்தில் மட்டும் 43 கோடி தேவியர் அருளாட்சி செலுத்துகின்றனர். அதர்மம் பெருகி வரும் கலியுகத்தில் கோடி கோடியாய் உடல் நோய்களும் மன நோய்களும் வறுமை, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் பொன்ற சமுதாய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆதலால் இந்த 43 கோடி தேவியரும் பூலோகதில் அவதரித்துத் தீவினைகளை எதிர்த்து நல் வாழ்க்கையை நிலைநாட்டிக் கலியுக மக்களுக்கு அருள் புரிய விழைகின்றனர். ஆனால் சிவபெருமான் திருவுளம் யாதோ அதுதானே நடைபெறும்!
புலிப்பாணி:- இறைவனின் திருவுளம் தாங்கள் அறியாததா குருதேவா?
அகஸ்தியர்:- சீடர்களே, ஆதி சிவனின் ஆக்ஞைப்படி பல்வேறு யுகங்களில் பல்வேறு தேவியர் அவதாரம் பெற்றுள்ளனர். ஆனால் யுகதர்மங்கள் மாறுவதால் தேவியருடைய அவதார அம்சங்களும் மாறுகின்றன.
போகர்:- ஞான குருவே! தற்போது மீண்டும் அவதாரம் பெறும் ஸ்ரீதேவி சக்தி யாரென்று அறிய விரும்புகிறோம்!
ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் அவதாரம்
அகத்தியர்:- (புன்முறுவலுடன்) கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் வீட்டிற்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீ ஆயுர் தேவி என்னும் ஆதிபராசக்தி அவதாரமே தற்போது சித்த புருஷர்கள் மூலமாக கலியுகத்தில் மீண்டும் அருள் புரிய வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
ஸ்ரீ ஆயுர் தேவி மீண்டும் அவதாரம் பெறுகிறாள் என்று சொல்வதைவிட ஸ்ரீ ஆயுர் தேவி உபாசனை கலியுகத்தில் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதே சரியானது!!
ஆம் சிஷ்யர்களே! இதனைப் பின்னர் விளக்குகிறேன், எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் பல யுகங்களில் சற்குருமார்களால் அளிக்கப்பட்டு வந்து சென்றுள்ளன. இவையெல்லாம் சாதாரண மனிதனின் அறிவிற்கெட்டாத ஆன்மீக ரகசியங்கள். காலபோக்கில், சரியாக கடைபிடிக்காதவற்றை மனித குலம் மறந்து விடுகிறது. மறைந்தவைகளைச் சற்குரு மூலமாகவே ஒருவன் அறிந்து தெளிவு பெறமுடியும்.
போகர்:- குருதேவா! மனிதன் வாழ்நாளில் அறிந்து கொள்ள வேண்டியவை எண்ணிறத்தன என்பதை உணர வேண்டும். எதை அறிந்து கொண்டால் மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவன் ஆகிறானோ அதை மட்டும் அறிந்து கொண்டால் போதும், என்பதை அவன் உனர வேண்டுமல்லவா.
அகத்தியர்:- ஆம் போகா! முதலில் குருவின் காலைப் பற்று! அவரே அனைத்தையும் அறிந்தவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வேதம், கணிதம், பௌதீகம், அணுவியல், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துத் துறைகளையும் கற்க முடியுமா? ஆனால் இறையருளால் அனைத்தையும் பெற்று தரவல்ல சற்குருவை அடைந்தால் போதும், அவரே அறிவு. உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் ஏட்டு சுரைக்காய்களே! எனவே நம் சித்தர் பாரம்பரிய சற்குரு மூலம், ஆங்கீரஸ வருட்த்தில் [கலியுகாதி 5094] ஸ்ரீ ஆயுர் தேவி உருவ தரிசனம் நவராத்திரி பூஜையின் போது மீண்டும் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் சித்தம்

(ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்த ஸ்ரீ பாஸ்கரராயர், ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனையை உய்த்துணர்ந்து ஸ்ரீ அம்பிகையின் பாதங்களைச் சரணடைந்த உத்தம புருஷர்.
ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபுவின் ஆக்ஞைப்படி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் திருவருளால் ஸ்ரீ ஆயுர்தேவி யின் சிலா ரூபத்தை, பிம்ப ஸ்வரூபத்தைச் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அக்டோபர் 1992 நவராத்திரித் திருவிழாவில் நிகழ்ந்த் ஆன்மீக சொற்பொழிவின் போது கலியுக ஆன்மீக பக்தர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார். ஸ்ரீ ஆயுர் தேவி ஸ்வரூபம் கபால சித்த வடிநாடி என்ற கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளால் தொகுத்து அருளப்பட்டது. சித்தர்களின் பொக்கிஷமான இந்த கிரந்தங்கள் ஸ்ரீ வித்யா உபாசனையின் உன்னத ஆன்மீக நிலைகளில்தான் அறிவால் உணரப் பெறும்.)

போகர்:- கிருதயுகம், திரேதா யுகத்திற்குப் பிறகுப் ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை மறைந்து விட்டதா? குருதேவா?
அகத்தியர்:- இல்லை போகா! எவ்வாறு ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மகிமை, ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம் போன்றவை, 300, 400 வருடங்களுக்குள்ளாகப் பல சித்தர்களின் மூலம் புத்துணர்ச்சி பெற்றதோ அதுபோல பல்வேறு யுக மக்களின் அசிரத்தையால் கால போக்கில் மறைந்த ஸ்ரீ ஆயுர் தேவி வழிபாடு தற்போது நடைமுறைக்கு மீண்டும் வருகிறது. ஸ்ரீதேவி, காருண்ய தேவியாக மக்களின் நலனுக்காக மீண்டும் தோன்றி அருள்பாலிக்கின்றாள்.
புலிப்பாணி:- ஞானாசிரியரே! புதுப்புது தேவியர் தோன்றுவது அவசியமா என்று சில ஆன்மீகவாதிகளே குழம்புகின்றனரே, அது ஏன்?
அகத்தியர்:- நன்கு கேட்டாய் புலிப்பாணி! கலியுக மக்கள் சுகங்களை நாடுபவர்கள். ‘துக்கங்களும், துன்பங்களும் உடனே தீரவேண்டும்’ என்று எதிர்பார்க்கின்றனர். சுகதுக்கங்களுக்கிடையே உண்மையான பக்தியை அவர்களால் பெற முடியாது. எனவேதான் அவர்களுக்கு உரித்தான தக்க இகபர சுகதுக்கங்களைத் தந்து அதற்கு அப்பாற்பட்ட பரம்பொருளும் உண்டு என்பதைச் சாதாரண மக்களுக்கும் உணர்த்துவதற்காகவே தேவி உபாசனை என்று சாக்த வழிபாடு பிறந்தது.
போகர்:- இதனால்தான் மாரியம்மன் திருவிழா, காளி பூஜை போன்ற பல்வேறு அம்மன் வழிபாடுகள் கலியுகத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதல்லவா குருதேவா?
அகத்தியர்:- ஆம்! எந்த சுவாமிக்குப் பிரார்த்தனை செய்தால் எந்த வியாதி நீங்கும்? பணக் கஷ்டம் தீரும்? குழந்தைப் பேறு உண்டாகும்? வேலை கிடைக்கும்? என்று கோடிக்கணக்கான மக்கள் அலைந்து திரிந்து பல கோயில்களை நாடுகின்றனர். இம் முறையிலாவது மக்களின் இறைநம்பிக்கை பெருகுவது குறித்து மேலுலகத்திலுள்ள பித்ருக்களும், ரிஷிகளும், தேவதைகளும் மகிழ்ச்சியுறுகின்றனர்.
எனவே குறிப்பிட்ட வியாதியையோ கஷ்டத்தையோ நிவர்த்தி செய்ய தேவியர் மீண்டும் அவதாரம் பெறுகின்றனர். இதனால்தான் பல தேவிசக்திகளின் வழிபாடு கலியுகத்தில் வலுப்பெற்று வருகிறது. புதுப்புது தேவி அம்சங்கள் என்பதை விட பல யுகங்களில் அவதாரம் பூண்டிருந்த தேவியரே மீண்டும் சக்தி வடிவம் பெறுகின்றனர் என்பதை ஆன்மீகவாதிகள் உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.
போகர், புலிப்பாணி:- ஸ்ரீ ஆயுர்தேவியின் அவதார மஹிமைகளை எளிமையாகக் கூற வேண்டுகிறோம் குருதேவா?
அகத்தியர் :- பல இலட்சம் கிரந்தங்களில் பல்லாயிரம் சித்தர்களும், மஹரிஷிகளும் வர்ணித்துள்ளதைச் சுருக்கித் தருவது எளிதா? எனினும் கூறுகின்றேன். கிருதயுகத்திலிருந்து யுகம் யுகமாக தர்ம நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப் பட்டமையால்தான் கலியுகத்தில் இன்றைக்கு வன்முறைகளும், அராஜகமும் பெருத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஜீவன்களிடத்தில் ஒழுக்கம் குறைந்து விட்டதேயாகும். இறை நம்பிக்கையோடு ஒழுக்கம் வளர்ந்தால், தனக்குரித்தானதைத் தன் கர்ம வினைகளுக்கேற்பப் பெறுவோம் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் காமம், குரோதம், போட்டி, பொறாமை இவற்றிற்கு இடமில்லையே! உலக ஜீவன்கள் சாந்தமயமாக ஜீவிக்குமல்லவா!
புலிப்பாணி:- சற்குருவே! அப்படியானால் சிறு குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் பொறுமை, நல்லெண்ணம், அடக்கம், போன்ற இகபர சுகங்களையும் அளிக்க வல்லவள் ஆயுர்தேவி. ஆனால் ஸ்ரீ அம்பிகை இவற்றை அருளும் முறைகளே அதிஅற்புதமானதாகும்!
போகர்:- கலியுகத்தில் மனிதன் கைமேல் பலன் காணத் துடிக்கிறானே! அர்ச்சனை செய்தவுடன் வியாதி குணமாக வேண்டும், ஒரு மணடல பூஜைக்குப் பின் உடனே குழந்தை பாக்கியம் கைகூடவேண்டும் – இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியிடம் கூட மன்றாடுவார்களே, குருதேவா!
அகத்தியர் :- முறையான இகபர சுகங்களுக்காகப் பிரார்த்திப்பதில் தவறில்லை சிஷ்யர்களே! அது நல்ல முறையில் பூஜை, தான தர்மங்களோடு அமைந்தால் பிரார்த்தனையின் பலன் வலுப்பெறும். இதற்காகத் தான் நாம் சத்சங்கங்களை உருவாக்கியுள்ளோம். சத்சங்களில் இருப்போர் சொற் பொழிவுகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், உரையாடல்கள் மூலமாக மக்களுக்குத் தான தர்மங்களைப் பற்றி போதிக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இரவு உறங்குவதற்கு முன் இன்றைக்கு இரண்டு பேர்களிடமாவது நல்ல விஷயங்களையும் இறைப்பணி பற்றியும் (சற்குரு போதித்தவைகளை) பரிமாறிக் கொண்டோமா? என்று தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உன்மையான ஆத்ம விசாரமாகும். இத்தகைய எளிமையான ஆத்ம விசாரத்திற்கு வித்திட்டு உரிய செல்வங்களை வழங்கி அருள்புரிபவளே ஸ்ரீ ஆயுர்தேவி. இதற்காகவே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒன்பது கரங்களைப் பூண்டு அவதாரங் கொண்டுள்ளாள். வேண்டுவதை வேண்டிடில் அவள் தருவதை தருவாள் என்பது பிரார்த்தனையின் இரண்டாவது பாடம். அதுவே ஆத்ம விசாரத்தின் தெளிவு
போகர் :- நல்லாசாணே! வழக்கமாகச் சங்கு, சக்கரம், மழு போன்ற ஆயுதங்களைத் தாங்கி துஷ்ட நிக்ரஹ பாணியில்தான் அம்பிகைகள் அவதாரங் கொண்டுள்ளனர். ஸ்ரீ ஆயுர்தேவியின் தோற்றமே வித்தியாசமாக உள்ளதே!?
அகத்தியர் :- ஆதிபராசக்தியின் அவதார விருப்பமும் அதுவேதான் போகா! இதையே ஸ்ரீ ஆயுர்தேவியின் அனுக்கிரக பரிபாலனமும் வித்தியாசமானது எனக் குறிப்பிட்டோம். ஸ்ரீ ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும், நவக்கிரஹத் தத்துவங்களை எளிமையாக விளக்குகின்றன.
நவக்கிரஹ தத்துவம்
போகர் :- மனிதனுடைய இன்பங்களையும், துன்பங்களையும் தனித்தனியே ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். உலகின் அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுகதுக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கி விடுகின்றன. துன்பங்களையும், துக்கங்களையும் நிவர்தி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய பொதுப் பிரார்த்தனை ஆக்கிவிட்டது. இது கருதியே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்பவே நவக்கிரக தெய்வங்களை இறைவன் படைத்தான். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப இகபர சுகங்களை நவக்கிரகாதிபதிகள் கணிக்கின்றனர்
ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான தீபிகா பிம்ப சக்கரம் அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்த தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலன்ங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது.
கும்பகோணம், வாரணாசி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்படும் கும்பமேளா உற்சவம் உணர்த்தும் சிருஷ்டியை உற்பவிக்கச் செய்யும் அமிர்த கலச குடத்தைச் சிவபெருமான் இந்த தூபிகா பிம்பச் சக்கரத்திலிருந்துதான் வடிவமைக்கிறார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம்
நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி, வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.
எட்டு கரங்களிலும், ஒன்பது சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி!!
ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில் சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண்திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்க, ஸ்ரீ நந்தீஸ்வரர் அவற்றைப் பல இலட்சம் கிரந்தங்களாக இன்றைக்கும் எழுதித் தொகுத்து வருகிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்தோரே இக்காட்சிகளைக் காணும் அருள் பெறுவர். குருவருள் பெற்றாலோ அனைத்தையும் உய்த்துணரலாம்.
ஒரு கரத்தில் பலகோடி யுகங்கள் அமரும் பேறு பெற்ற சித்த மஹரிஷி அக்கரத்தில் அமரத் தகுதி வாய்ந்த மற்றொருவர் உருவாகும் போது ஸ்ரீ அம்பிகையின் திருமேனியில் தாம் ஐக்கியமாகி அடுத்தவருக்குக் கரபீடம் பெறும் பாக்கியத்தை அம்பிகையின் அருளால் அளிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களில் அமரும் பேறு பெற்றவர்களைக் கணக்கில் வடிக்க இயலாது. இதுவரை கோடி கோடியான சித்த புருஷர்களும், மகரிஷிகளும் இவ்வாறாக ஸ்ரீ ஆயுர்தேவியின் திருமேனியில் ஐக்கியமாகியுள்ளனர்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளையும், தோற்றங்களையும் அவதார ரகசியங்களையும் விவரிக்கும் ஸ்ரீ அகஸ்திய கிரந்தகளுள் கபால சித்தவடி கிரந்தம், தூபிகாதேவி கிரந்தம் ஆகியவை அடங்கும்.
தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரின் குருவருளால் பெற்ற இத்தகைய சித்த கிரந்த இரகசியங்களைக் கலியுகமக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக எடுத்தருளியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளாவார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் வாகனம்
அன்ன வாகனத்தை பூண்டவள் ஸ்ரீ ஆயுர்தேவி. அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. திருவிடைமருதூரில் சிவபெருமானுக்கு நந்தியாகச் சலாலகன் என்ற நந்திஸ்வரர் அறக்கடவுள் அமர்ந்துள்ளார். பலகோடி ஆண்டுகள் தவம் புரிந்து இத்தகைய அரிய பேற்றைச் சலாலகன் பெற்றார் எனில் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அன்ன வாகனமாகவும், இரண்டு சிம்ம பீடங்களாகவும் அமைந்துள்ளோர் எத்தகைய தவப்பெருநிலையை அடைந்திருக்க வேண்டும்!!
ஸ்ரீ ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவையே சாட்சாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற விழைந்த போது, தேவி உபாசனை மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக வரித்துத் தரிசனம் செய்ய இயலும் என்று ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில் திளைத்து அன்னவாகனமாக அமையும் பேறு பெற்றார்.
ஒன்பதின் தத்துவம்
ஒவ்வொரு மனிதனின் தேகத்திலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன. நாசி துவாரங்கள் வழிச் செல்லும் சுவாசத்தை முறைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் வாசிகலைத் தத்துவத்திற்கு பிராணாயாமம் என்று பெயர் இதன் விளக்கங்களைப் பலரும் அறிவர்.
நாசிகள் தவிர ஏனைய ஏழு துவாரங்களிலும் சுவாசம் உண்டு. இந்த ஆன்மீக ரகசியங்களை அறிந்தவர்கள் சித்த புருஷர்களே! கர்ணாயாமம், யோனியாமம், குக்குடயாமம் என்று மூன்று வகை யாம நியம முறைகளினால் ஏனைய ஏழு துவார வாசிகலைகளை முறைப்படுத்தினால், சித்தர்களைப் போல் என்றும் சிவ சித்தத்தில் திளைக்கும் பேற்றைப் பெறலாம்.

மனித எண்ணங்களின் மூலம்
இந்த ஒன்பது துவாரங்களின் மூலம் சக்திகளும், எண்ணங்களும் உள்வெளிச் செல்கின்றன. இதனால் நொடிக்கு நொடி ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக நிலை மாறி கொண்டேயிருக்கிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள், சக்திகளின் உள்வெளிப் போக்குவரவால் மனிதனின் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. அவன் மனோநிலையும் மாறுகிறது.
பத்மாசனத்தில் ஆசன, யோனி வாயில்களும், பிராணாயாமத்தால் நாசிகள், கண்களும், மௌனத்தால் வாயும், ஒங்காரத்தால் செவிகளும் சாந்தமடைகின்றன. நவ துவார வாசிகளை முறைப்படுத்துதலே உன்னத தியானமாகும். ‘இதற்கு ஸர்வ ஸித்த யோகம்’, அல்லது ஸர்வ ஸித்த சரீர தியானம்’ என்று பெயர்.
உடலே திருகோயில்
நவ துவார வாசிகளுக்கேற்ப மனிதனுடைய தேகக் கர்ம பரிபாலனம் நடைபெறுகின்றது. இதற்கேற்ப இன்ப துன்பங்கள் அமைகின்றன. எனவேதான் அனைத்து ஜீவன்களின் இன்ப துன்ப நிலைகளை ஒன்பதாகப் பகுத்துள்ளனர். மனிதனுடைய தேகத்திலும் ஒன்பது நவக்கிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. நவகிரக தேக பரிபாலன விதியும் உண்டு. இருதய கமலத்தில் ஆத்மா, ஸர்வேஸ்வரனாக வீற்றிருக்க, தேகமே இறைவன் குடி கொண்ட கோயில். உடலின் ஒன்பது பகுதிகளில் நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஏனைய தெய்வங்களின் அருளாட்சி அமையும் தேக அம்சங்களும் உண்டு. நவக்கிரக வழிபாடு பொதுவாகக் கோயில்களில்தான் அமைந்துள்ளது. ஆனால், ஸ்ரீ ஆயுர்தேவி இல்லந்தோறும் இருக்க வேண்டிய அகிலாண்டேஸ்வரி ஆதலின், ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை,

  1. சிவாம்சம் பரிபூரணமாக நிறைந்திருப்பவள் ஆதலின் பரம்பொருள் வழிபாட்டையும்,
  2. நவக்கிரக தத்துவம் விளக்கும் ஒன்பது வகையான இகபர சுகங்களைத் தருபவளாதலால் நவக்கிரக வழிபாட்டையும்,
  3. சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காத்து ரட்சிப்பதால் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண வழிபாட்டையும்,
  4. அதி அற்புத சித்த புருஷர்களும், மகரிஷிகளும் அருட்பெரும் தவத்தால் அருளியுள்ள பரிகார முறைகளால் ஒன்பது வகையான துன்பங்கள் நிவர்த்திக்கின்ற முறையையும் தந்து சற்குருமார்களின் வழிபாட்டையும் ஒருங்கே தருவதால்

ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின் ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக அமைகிறது.
அன்னவாஹனம்
போகர் :- சற்குரு தேவா! ஸ்ரீ ஆயுர்தேவி அன்ன வாஹனத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் யாதோ?
அகத்தியர் :- பறவையினங்களில் முதன் முதலில் தோன்றியது அன்னமே! சிருஷ்டியின் போது ஒவ்வொரு லோகத்திலும், ஒவ்வொரு பறவையை ஆதிமூலப் பட்சியாக இறைவன் படைகின்றான். பட்சி சாஸ்திரத்தில் இடம் பெறும் ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு யுகங்களில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட பட்சியேயாகும். இவ்வாறாக தேவிலோகத்தில் ஆதிபட்சியாகிய அன்னப் பறவை ஒருமுறை பரப்பத அரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள பாற்கடலிலும் கூட பாலையும் நீரையும் இரண்டாக பிரித்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதனின் திருச்சன்னிதியில் கூடக் கலப்படமா? என்று தேவர்கள் அதிசயிக்க ‘அனைத்து லோகங்களிலும் புனிதமான க்ஷீரத்தைக் (பால்) கொண்ட பாற்கடலிலும் நீர் கலந்துள்ளதா? இந்த நீர் எவ்வாறு உட்புகுந்தது’ என அனைவரும் வியந்து நிற்க, ஸ்ரீ பெருமாள் விவரித்தார்.
என்னுடைய பிரார்த்தனைகளுக்கேற்ப சிவபெருமான் என்னுடைய திருமார்பில் திரு நடனம் ஆடினார். இதனால் என் எடை கூடியது. அதைத் தாங்க இயலாது ஆதிசேஷன் பெருமூச்சு விட்டு, பிரபோ! திடீரென்று தங்கள் திருமேனியின் எடை பெருகக் காரணமென்ன? என்று வினவ, அடியேன் ஆதிசேஷனுக்கு இறைவன் சிவபெருமான் திருநடனம் ஆடிய காட்சியை விவரித்தேன்.
சாட்சாத் சதாசிவ பரம்பொருளையும், நாராயண மூர்த்தியையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் பெற யான் என்ன புண்ணியம் செய்தேனோ! என்று புளகாங்கிதம் அடைந்து ஆதிசேஷன் ஆனந்த கன்னீர் வடித்தனன். அக்கண்ணீர்த் துளிகள் பாற்கடலில் கலந்தன. அதனையே ஆதிமூல அன்னபட்சி பிரித்து தந்தது. இத்தகைய தெய்வ திருவிளையாடல் புரிந்த அன்னப் பறவையே ஸ்ரீ ஆயுர்தேவியுன் வாகனமாக அமைந்துள்ளது’
சிம்ம பீடங்கள்
புலிப்பாணி :-  ஆஹா! கேட்பற்கே இனிமையாக உள்ளதே! குருவே! அடுத்து சிம்ம பீடங்கள்…
அகத்தியர் :- சொல்கிறேன் புலிப்பாணி! சிம்ம பீடங்களாய் இருக்கும் இவர்கள் யுகதர்ம மனுக்களாவர். பலகோடி யுகங்களில் தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்த மனுப்ரஜாதிபதிகள், கர்த்தம பிரஜாபதியின் சிஷ்யர்கள். அதர்மத்தை எதிர்த்து கர்ஜித்தவர்கள். பிராணிகளின் கர்ம பரிபாலனங்களை நிர்ணயிக்கும் பித்ருலோக ஆதித்யர்களின் நியமனத்தையே மேற்கொண்டுள்ள அற்புதமான மனு அவதார புருஷர்கள் ஒவ்வொரு லக்கினத்தில் பிறக்கும் ஆண், பெண் ஜீவன்களைப் பரிபாலிப்பதற்கென்றே யுகாந்தர மனு தேவர்கள் உள்ளனர். சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய நாராயணமூர்த்தியின் அருட் கடாட்சத்தைப் பெற்றவர்களே இந்த சிம்ம பீடங்கள். அனைத்து லோகங்களிலும் சிம்ம லக்ன ஜீவன்களுக்கு அதிபதி இவர்களே!
போகர் :- குருவே! அப்படியானால் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்தின் மூலம் நமஸ்காரயோகமும், அனைத்து ஆசன முறைகளும் சித்திக்குமல்லவா?

அகத்தியர் :- நிச்சயமாக! யோகம் பயில்வோருக்கு குறிப்பாக ராஜயோகிகளுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி தியானம சிறந்த, விரைவான பலன்களை அளிக்கக் கூடியதாகும். அது மட்டுமல்லாது, அன்ன வாகன தரிசனமானது (அன்னம் பால் நீர் இரண்டையும் தனித்தனியே பிரிப்பது போல்) பகல் – இரவு பிரித்து கானும் தீர்க்க தரிசனத்தையும் அபாரமான ஜோதிட கிரக பரிபாலன அறிவையும் தரவல்லதாகும். ஜோதிடர்களுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை முக்கியமானதாகும்.

திரிமூர்த்திகள்
போகர் :- பிரம்மா, விஷ்ணு, ருத்ர திரிமூர்த்திகள் ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தத்துவத்தை விளக்க வேண்டுகிறேன் குருதேவா!
அகத்தியர் :- திரிமூர்த்திகள் தமக்குரித்தான ஆக்கல், காத்தல், அழித்தல் முப்பெரு இறை நியதிகளால் மூவரே தவிர அவர்கள் ஒன்றிடும்போது பரப்பிரம்மமாக ஒளிர்கின்றனர். மூவரும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய ஸ்ரீ ஆயுர்தேவியைப் பரம்பொருளின் அம்சமாக வழிபடுகின்றனர் என்றால் தேவியவள் மகாத்மியத்தை வடித்துரைக்க இயலுமா?
மேலும் திரிமூர்த்திகள் அம்சங்கள் யுகத்திற்க்கு யுகம் மாறுபடுகின்றன. மனிதனின் சிற்றறிவிற்கெட்டாத இவ்வித இறைநிலைகளைச் சற்குருவருளால்தான் அறிந்து கொள்ள இயலும்.
திரிமூர்த்திகள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நாமத்தைப் பூண்டு அருள் புரிகின்றனர். ஸ்ரீ ஆயுர்தேவியைப் பூஜிக்கும் திரிமூர்த்திகள் நாமங்கள் யாதெனில்
ருத்ரர் – தைத்ரீயப்ரஜாபதி
விஷ்ணு – ருத்ரப்ரளயர்
பிரம்மா – ருத்ரப்ரியர்
இவர்கள் தேவி குணாந்தர யுகத்தைச் சார்ந்த திரிமூர்த்திகள். திரிபுர சம்ஹாரமூர்த்திற்கும் முந்தைய யுகத் திரிமூர்த்திகள்.
எனவே, இத்திரிமூர்த்திகள் தரிசனம் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் மாயா அறிவைத் தந்து, அம்மாயைகளைக் களையும் எளிய பரிகார முறைகளையும் சித்த மகரிஷிகளின் மூலமாக உணர்த்துகிறது. ஸ்ரீ ஆயுர்தேவியிடமிருந்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைப் பெற்று மனிதனுடைய உடல், மன வளர்ச்சிக்கேற்ப அருள்பவர்களே இத்திரிமூர்த்திகள்.
ஸ்ரீ சித்திரகுப்த தேவர்
போகர் :- ஆசானே! சித்திரகுப்த நாதர் ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவடிகளில் சமர்ப்பிப்பது யாதோ?
அகத்தியர் :- பாலினன் என்னும் திருப்பெயரைப் பூண்ட சித்ரகுப்த தேவர் சிருஷ்டியைக் கூட்டுவிக்கும் பிரம்மாக்களின் கர்ம பரிபாலனத்தையும், பிரம்ம குருக்களின் ஆயுளையும் ஸ்ரீ தேவியின் ஆக்ஞைப்படி நிர்னயிப்பவர். இவர் சாதரண தேவஸ்வரூபர் அல்லர். பிரம்ம குரு லோகங்களின் அமைப்பைப் பரிபாலிப்பவர். இவருடைய தரிசனம் காணக்கிட்டாதது. இவருடைய கிரீடம் வெறும் தலைப்பாகை மட்டுமன்று. கோடிக்கணக்கான ஜீவன்களின் தலைவிதிகளை நிர்னயிக்கும் பிரம்ம குருமார்களின் கர்ம வினைகளைத் தொகுத்து வரையறுக்கும் அற்புதமான இறை சிருஷ்டியாகும்.
ஒவ்வொரு விநாடியிலும் என்னிறந்த ஜீவன்களின் கர்ம வினைகள் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றை இம்மியும் பிசகாது அணுவளவும் குறையின்றிச் சீராகப் பகுப்பது இறைவனின் அற்புதப் படைப்பால்தான் முடியும்.
ஆத்ம விசார மூர்த்தி
ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும் முன் தன்னுடைய அன்றைய செயல்களை உன்மையான மனச்சாட்சியுடன் நினைவுகூர்ந்து அவற்றை இந்த பாலினன் என்ற சித்ர குப்த தேவரிடம் சமர்ப்பித்து அன்றைய தவறுகளுக்கு மனம் வருந்தி அந்நாளில் நற்செயல்களைச் செய்ய வாய்ப்புத் தந்த பித்ரு தேவர்களுக்கு நன்றி செலுத்துவதே நான் யாரென்ற உண்மையான ஆத்ம விசாரத்தின் துவக்கமாகும். ஸ்ரீ சித்ர குப்த தேவர் வெறும் கர்ம கணக்கு எழுதுபவர் என மக்கள் கருதுகின்றனர். அது தவறு. மனிதனின் ஆத்ம விசாரத்திற்கு வித்திடுபவர் இவரே.
போகர் :- ஆத்ம விசாரத்திற்கு வழி வகுக்கும் அருளைச் சித்ர குப்தர் எவ்வாறு பெற்றார் குருதேவா?
ஸ்ரீ கிருஷ்ணன் திருமேனி கண்ட கிரீடம்
அகத்தியர் :- சொல்கிறேன் போகா! ஒருமுறை சித்ரகுப்தர் பலகோடி ஜீவன்களின் தலைவிதிக்குரித்தான கர்ம வினைகளைக் கணக்கெழுத, அவற்றுள் பெருமளவு தீவினைகளாக இருப்பது குறித்து மனம் வருந்தி ஸ்ரீ பாலினன் தம் தலையில் குட்டிக் கொள்ள அவருக்கு தீராத தலைவலி வந்து விட்டது. இதனால் அவர் மேலும் பணிபுரிய இயலாது திகைத்திட, கர்மங்களின் தேக்கத்தால் சர்வ லோகங்களும் ஸ்தம்பித்தன. சித்ரகுப்தர் பதறி எழுந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டிட, அவர் நம் இடைகச்சையையே ஸ்ரீ பாலினன் சித்ரகுப்தனின் தலைக் கிரீடமாக்கிட தீராத தலவலியும் நின்றது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய தலைப் பாகையே ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவுருவப் படத்தில் ஸ்ரீ பாலினன் சித்ரகுப்த தேவரின் சிரசில் மிளிர்வதாகும். காணக் கிடைக்காத கிரீடம் இது.
ஒற்றைத் தலைவலிக்கு மருந்து
தீராத ஒற்றை தலைவலியால் அவதியுறுவோர்க்கு இந்த சித்ரகுப்தரின் தரிசனமும், தியானமும், நாமஸ்மரணமும் விரைவில் பலனளிக்கும். எனவே இத்தகைய நோயுடையோர் தலைக்கு எண்ணெய் கூட இல்லாது வாடும் ஏழைகட்குச் சீப்பு, எண்ணெய் தானமளித்து இந்தப் பாலினன் சித்ரகுப்த தேவரைத் துதி செய்ய வேண்டும்.
புலிப்பாணி :- ஞான குருவே! ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ பாலினன் சித்ர குப்த தேவருக்கு தரிசனம் அளித்தாரா?
அகத்தியர் :- சித்ரகுப்த தேவர் வேண்டியும் அவருக்கு விஸ்வரூப தரிசனம் அளிக்காத ஸ்ரீ கிருஷ்ணன், அவருக்குக் குழலூதும் கிருஷ்ணனாகத்தான் காட்சியளித்தார். அவர் விஸ்வரூப தரிசனம் அளிக்காததற்குப் பல காரணங்கள் உண்டு!
போகர் :- கலியுகத்தில குழலூதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வழிபாட்டிற்கு வைத்தால் செல்வம் ஊதிய காற்றுபோல் மறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறதே குருதேவா!
அகத்தியர் :- வீடுகளில் குழலூதும் கிருஷ்ணன் விக்ரகத்தையோ, படத்தையோ வைத்து வழிபடுவதால் எவ்வித தவறும் இல்லை. குழலூதும் கிருஷ்ணனாக காட்சியளித்த கண்ணபிரான் சித்ரகுப்த தேவரிடம் இன்றிலிருந்து உன் நாமஸ்மரணமும், வழிபாடும் மக்களுக்கு ஆத்ம விசாரத்தை வளர்ப்பதாக! என்று வரங் கொடுத்தார். மேலும், மக்களின் நித்ய கர்மங்களை நீ தொகுப்பதால் உன்னை எண்ணுபவர்களுக்கு தம் குறைகளை நிவர்த்தி செய்யும் பக்குவம் கிட்டி தன்னை முதலில் அறிந்து, தானே பிற அனைத்தும் என்ற உயரிய மனோபாவமும் கிட்டும் என்று வரமருளினான்.
எனவே குழலூதும் கிருஷ்ணனை வழிப்பட்டால் ஸ்ரீ சித்ரகுப்தனின் அருளும் கூடுவதால், பிற கடுமையான தியான முறைகளை விட ஆத்ம விசாரம் எளிதில் கைகூடும். இது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரமாகும். ஸ்ரீ இரமண மகரிஷியின் பழைய ஆஸ்ரமத்தில் குழலூதும் கிருஷ்ணன் படம் ஒன்று அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஆனால் அதன் ஆத்ம விசார ஆன்மீக ரகசியத்தை இன்றேனும் பக்தர்கள் புரிந்து கொள்வார்களாக!
ஸ்ரீ தர்மதேவர்
போகர் :- சற்குருவே! ஸ்ரீ தர்ம ராஜாவாகிய கால மகா பிரபு ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தாத்பர்யம் என்ன?
அகத்தியர் :- அணுவினும் சிறிய கிருமிகள் முதல் பெரிய பிராணிகள், தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின், தேவாதிதேவரின் கால முடிவை இறை நியதிப்படி பரிபாலிப்பவரே ஸ்ரீ எமதர்மராஜாவாகிய ஸ்ரீ கால மகாபிரபு
பூலோகத்தில் மக்கள் எமபயம் நீங்க மந்திரங்களைச் சொல்லி வழிபாடுகளையும் நிகழ்த்துகின்றனர். இந்த மனோநிலையைச் சற்று விருத்தி செய்து, எமபயம் நீங்குவதைவிட தங்களுடைய பூஜைகளும், ம்ருத்யுஞ்ஜய ஹோமங்களும், தான தருமங்களும், இறையருளால் ஆயுளை விருத்தி செய்கின்றன என உணருவது சத்தியமானதாகும்.
ஸ்ரீ கால மகாபிரபு தம்முடைய இறைப்பணியை அவரவர் கர்ம வினைகளுக்கேற்பச் செவ்வனே செய்து வருகிறார். இல்லாவிடில் பிராணிகளும், தாவரங்களும் மக்களோடு மக்களாய்ப் பெருகி உலகமே இட நெருக்கடியில் ஸ்தம்பித்து விடும்.

மரண பயம் வேண்டாம்
மனிதர்கள் இன்னமும் மரணம் என்பதைத் தாங்க முடியாத துன்பமாகத்தான் கருதுகின்றார்கள். மரணத்திற்குப்பின் வாழ்வு என்பதை உணர்ந்தாலும் மனித மனம் அதன் நிலைகளை உணர்வதில்லை. ஸ்ரீ எமதர்மராஜா ஓர் உயிரை ஒரு தேகத்தில் இருந்து பிரித்து மற்றொரு தேகத்திற்கு எடுத்து செல்லும் அதி அற்புதமான இறைப்பணி புரிகிறார்.
எனவே எமனைக் கண்டு அஞ்ச வேண்டாம்!
அவரவர் விதி நிர்ணயத்திற்கேற்ப மரணத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு எமபயம் இராது. தியானத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீ ரமண மகரிஷிபோல தினந்தோறும் தன்னுடய மரணத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டால் அது அற்புதமான தியானமாக மலர்ந்து ஆத்மா அழிவற்றது. ஆத்மா குடியிருக்கும் கோயில்களே தேக சரீரங்கள் என்பதை அறிவர். உண்மையில் தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகையே.
ஸ்ரீ ஆயுர்தேவி திருஉருவ படத்தில் பிரசன்னமாகியிருப்பவர்கள் ஸ்ரீ சுதர்மனன் என்ற ஸ்ரீ காலமகாப்பிரபுவும் அவர் பத்தினி தெய்வமாகிய ஸ்ரீ சுதர்மிணியும் ஆவர்.
சுமங்கலி பாக்கியம்
கலியுகத்தில் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க்க சுமங்கலியாக வாழ விரும்புகிறாள். அவளுடைய பூஜை முறைகளும், கற்புத் தன்மையும், பெரியோர்க்கு பணிவிடை செய்தலும், அவள் கணவனின் ஆயுளை விருத்தியடையச் செய்யும். இத்தகைய குணங்களை உடைய பெண்மணிகளுக்கு மாங்கல்யப் பிராப்தத்தையும், சுமங்கலித் தன்மையையும் இறையருளால் மேற்கண்ட ஸ்ரீ சுதர்மிணி சமேத ஸ்ரீ காலமகா பிரபுவே மனமுவந்து அருளி அருள்பாலிக்கின்றனர்.
போகர் :- அகால மிருத்யுதோஷ நிவர்த்தி பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!
விபத்துக்கள், தோஷங்கள் நீங்க
அகத்தியர் :- சில குடும்பங்களில் பித்ரு சாபங்களாலும் பித்ரு காரியங்களைச் சரிவர செய்யாததாலும் ஏற்படுகின்ற அகால ம்ருத்யு தோஷத்தால் நேரிடும் இள வயது மரணங்கள், திடீர் மரணங்கள், விபத்துக்கள், இளம் விதவைக் கோலங்கள், சிசு மரணங்கள் போன்ற பெருந் துன்பங்களை ஸ்ரீ கால மகா பிரபு நீக்கி, ஸ்ரீ ஆயுர்தேவி அனுக்கிரகத்தால் நல்வழி காட்டுகின்றார்.

ஸ்ரீகயாசுர மகரிஷி

போகர் :- ஸ்ரீ ஆயுர்தேவியின் வலக் கரங்கள் நான்கில் முதல் கரப்பீடமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கயாஸுர மகரிஷியைப் பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!
அகத்தியர் :- ஸ்ரீ ஆதி பராசக்தி உறையும் ஸ்ரீ வித்யா லோகத்தில் அற்புதமான பித்ரு கோண சூட்சும பிந்து ஆரத்தில், தங்கத் தாமரை மேல் சந்திர கலையில் கடக ஆரத்தில் குண்டலி சகிதமாய் சங்கு சக்ரதாரியாக மூன்று கண்களுடன் ஒளிவிடுப் பிரகாசிப்பவள் ஸ்ரீமா தேவி ஆவாள்.
ஸ்ரீமாதேவியை உபாசனை செய்து உன்னத உத்தம நிலை அடைந்தவரே கயாஸுர மகரிஷியாவார். ஆயிரம் மகாலக்ஷ்மி தேவியர் ஒருமித்து அளிக்கின்ற வரங்களை ஸ்ரீமாதேவி தனிப் பெரும் தேவியாய் அருளும் பாங்குடையவள். பிரதமை திதியில் வழிபடுவது இவளுக்குப் பிரீதியானது. குறிப்பாக நவராத்திரிப் பிரதமைத் திதியில் இத்தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகி வர்ஷிக்கும்.

ஸ்ரீகயாசுர மகரிஷி

பித்ரு சாப நிவர்த்தி
போகர் :- ஞானதேவா! கயாஸுர மகரிஷி, ஸ்ரீமாதேவியைக் குறித்து தவமியற்றியது ஏன்?
அகத்தியர் :- கலியுகத்தில் மக்களுடைய பெரும்பான்மையான துன்பங்களுக்கு மூல காரணம் அவர்கள் தங்கள் பித்ருக்களுக்குரித்தான கடமைகளை நிறைவேற்றாததே ஆகும். தானம், தர்ப்பணம், சிராத்தம் போன்ற பித்ரு கடன்களை மனப் பூர்வமாகச் செய்பவர்களும், ஆத்மார்த்தமாகச் செய்து வைப்பவர்களும் அருகி விட்டனர். ஊதியத்திற்கேற்ப ஓதுவதே மந்திரம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இவற்றைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாக அறிந்த ஸ்ரீ கயாஸுர மகரிஷி, கலியுக மக்களைப் பித்ரு சாபங்களிலிருந்து மீட்கும் பொருட்டு ஸ்ரீமாதேவியை நோக்கி தவமிருந்தார்.
கயா ஸ்தலபுராணம்
கோடானு கோடி யுகங்கள் தவமிருந்து ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் தன்னலமற்ற தவப்பெரு நிலையைக் கண்டு அதிசயித்தனர் தேவர்கள். அவர்கள் கயாஸுர மகரிஷியை அணுகி தங்கள் அற்புத தவத்தால் ஸ்ரீமாதேவி தங்களுக்கு அருளும் முன், எங்களால் இயன்ற தொண்டைத் தங்களுக்கு அர்ப்பணிக்கின்றொம் என்றனர். ஸ்ரீ மாதேவியின் அருளால் அவர்களுடைய வினயத்தை அறிந்து கொண்ட மகரிஷி, நீங்கள் அனைவரும் என் அங்கத்தில் இடம் பெற்று வாழ்த்தியருள வேண்டும்! என்று வேண்டினார்.
போகர் :- சற்குருவே! முப்பத்து முக்கோடி தேவர்கள் குடிபுகும் தேக அமைப்பை ஸ்ரீ கயாஸுர மகரிஷி கொண்டார் என்றால் எத்தகைய தவநிலையை அவர் மேற்கொண்டிருத்தல் வேண்டும்! கேட்பதற்கே வியப்பாய் உள்ளதே!
அகஸ்தியர் :- உண்மைதான் போகா! கயாஸுரர் ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அருளை பெற்றவர் அல்லவா! அமிர்தம் அருந்திய முப்பத்து முக்கோடி தேவர்களின் வாசத்தால் ஒருமித்த சஞ்சீவ ஸ்திர வாழ்வை ஸ்ரீ மாதேவியின் கருணயால் பெற்ற ஸ்ரீ கயாஸுர மகரிஷி, விண்ணகத்து நெடிது வளர்ந்த கல்லால மரம் போல் தேவாதி தேவரின் சரீரங்களோடு பூமியில் புதையுண்டார். அதுவே இன்றைக்கும் கோடிகோடியான ஜீவன்களின் பித்ரு சாபங்கள் நிவர்த்திக்கும் கயா புனித பூமியாகும். அவர்தம் புனித தேகத்தில் எழுந்த புண்ணிய ஸ்தலமே கயா.
தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் வளர்த்து வந்த பித்ரு கடன்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் திருவருளாலும், ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அனுக்ரகத்தாலும், ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் அருந்தவத்தாலும் கயா பூமியில் இடும் பிண்ட, தர்ப்பணத்தால் நொடியில் தீர்கின்றன.
புலிப்பாணி :- அத்துணை கோடி மக்களின் பாவச் சுமைகளைத் தாங்க வல்லவரன்றோ கயாஸுர மகரிஷி! குருவே!
ஸ்ரீ விஷ்ணு பாதம்
அகஸ்தியர் :- ஆம்! ஸ்ரீ கயாஸுர மகரிஷி இன்றைக்கும் அருள் பாலிக்கும் கயா திருத்தலத்தையே, பிரம்மா தம் சிருஷ்டிக்கான பிரம்ம யாகத்தை நடத்தத் தேர்ந்தெடுத்தார். பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணு கயாஸுர மகரிஷியின் இருப்பிடமான கயா ஸ்தலத்தையே ஸ்ரீ விஷ்ணு உதயஸ்தானமாக ஏற்று தம் ஸ்ரீ விஷ்ணு பாதங்களைப் பதித்தார்.
கயாஸுர மகரிஷியின் திருமார்பில்தான் ஸ்ரீ விஷ்ணுவின் திருப்பாதங்கள் தரிசனம் அளிக்கின்றன. இவ்வாறாக கயா பூமியைப் பித்ரு தேவர்களின் தெய்வீக பூமியாக, ஸ்ரீ விஷ்ணு பாத ஸ்தலமாக மாறப் பெரும் தவம் புரிந்தவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷியே

பிண்ட தர்ப்பண பலன்
போகர் :- கயா ஸ்தலத்தில் பிண்ட தர்ப்பணம் இடுவதால் யாது பயன் குருதேவா?
அகஸ்தியர் :- கலியுகத்தில் மனிதனின் உடல், உணவைச் சார்ந்து அன்னமய கோசமாக உள்ளது. பித்ருக்களோ தங்கள் உணவை ஜலமயமாய்ப் பெற வேண்டும் என்பது இறை நியதி. அதனால்தான் தர்ப்பணங்கள் நீரால் வார்க்கப்படுகின்றன.
தேவர்கள் அக்னி மூலமாகவும், கந்தர்வர்கள் பசுநெய் மூலமாகவும் உணவைப் பெற வேண்டும் என்பதும் இறை நியதியே! பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவே கயாவில் ஸ்ரீ பாத ஸ்வரூபத்தில் உறைவதால் அவரே பிண்ட தர்ப்பணங்களை ஏற்று அன்னமாகவும், நீராகவும், பசுநெய்யாகவும் பகுத்து அளித்து பித்ரு கடன்களை நொடியில் தீர்த்து அருள் புரிகின்றார். கங்க-மாதேவி இதற்குச் சாட்சியாக நிற்க, நீர்த்தாரை வர்ஷிக்கும் போது பித்ருகடன் நிவர்த்தி பூர்த்தியாகிறது.
போகர் :- உயர் ஆசானே! பித்ரு கடன்கள் தீருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
அகஸ்தியர் :- ஸ்ரீ மாதேவியின் அருள் பெற்றாலே பித்ரு கடன்கள் தீரும். இதற்கு வித்திடுபவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷி. இவர் பல பரிகாரங்களை அருளியுள்ளார்.
எளிய பித்ரு பரிகார முறைகள்

  1. 1001 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து கோதுமைப் பண்டங்கள நான்கு திக்குகளிலும் வைத்து நாய்களுக்கு இடுவதால் பில்லி, சூன்யத் துன்பங்கள் நீங்கும்.
  2. இறந்தவர்களுக்கு விருப்பமான உணவுகள், ஆடை அணிகலன்கள் ஏனைய பொருட்களை காயத்ரி மந்திரத்தை ஜபித்து ஏழைகளுக்கு தானமாக அளித்தால் தடைப்பட்ட திருமணங்கள் நன்கு நடைபெறும்.
  3. பொறாமை, குரோதங்களால் சிலர் பல குடும்பங்களைப் பிரித்து துன்புறுத்தியிருப்பர். இவர்கள் காயத்ரி மந்திரத்தை ஜபித்து பசு தானம் செய்தால் குடும்பங்களைப் பிரித்த பாவங்கள் தீரும். பெண்கள், பசுக்களுக்கு மஞ்சள் இட்டு பழம், கீரை போன்ற உணவையளித்து கோத்ரய மந்திரங்களை ஜபித்து 21 முறை பசுவை வலம் வர வேண்டும்.
    ஆண்களாயின் பசுவிற்குக் குங்குமமிட்டு மேற்கண்டவாறு பெண்களைப் போல் வழிபடவேண்டும்.
  4. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நான்கு இதழ்களுடன் கூடிய ஆராக்கீரையின், ஒவ்வொரு இலைக்கும் 11 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து சிறிது வெல்லம் சேர்த்து கர்ப்பிணிப் பசுவிற்கு ஆகாரமாய் அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.
    இந்த தானதர்மங்களை எந்நாளிலும் எவ்விடத்திலும் செய்யலாம். கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிக் கரையில் செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.
ஏனைய பரிகாரங்கள்

  1. மயக்க நிலையில் வாதத்தில், coma  நிலையில் பேச இயலாது இறந்தவர்களுக்காகக் கிழக்கு மேற்காக தர்ப்பைகளை வைத்து அதன் மேல் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஊமைகளுக்கும் இவ்வாறே.
  2. நிறைய கடன்களை விட்டுச் சென்று இறந்தோருக்கு வடகிழக்கில் தர்ப்பைகளைப் பரப்பிப் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்..
  3. ஆண் சந்ததி இல்லாதோர் தர்ப்பைகளை வடகிழக்கிலும், பெண் சந்ததி இல்லாதோர் வடமேற்கிலும் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
  4. சந்ததியில்லாது இறந்தோர்க்கு தர்ப்பைகளை தென்மேற்கில் பரப்பி பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்

இது தவிர பெண்கள் தங்கள் மாமனார், மாமியார் பற்றிய பொய், புகார்களைத் தன் பெற்றோரிடம் தெரிய படுத்துவதால் பல துன்பங்கள் ஏற்படும். பெரியோருக்கு அடக்கமாக பணிவிடை செய்யாது, அகங்காரத்துடன் நடக்கும் பெண்களுக்கும் சில சாபங்கள் உண்டு. இவர்கள் தர்ப்பையில் மூன்று முடிச்சுகள் இட்டு, அதில் பிண்டம் வைத்து, கட்டிய வஸ்திரங்களுடன் நீரில் இறங்கி, பிண்டத்தை நீரில் இட்டு, கட்டிய வஸ்திரத்தையும் தானம் செய்தல் வேண்டும். இதனால் தகாத முறையில் தாம் வருத்திய மாமனார், மாமியார்களின் சாபங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.
பெண்கள் பிண்டமிடுதல்
போகர் :- பெண்கள் பிண்டம் இடலாமா குருதேவா?
அகஸ்தியர் :- இடலாம். ஒரு நாட்டுப்பெண் புகுந்த வீட்டு பெரியோர்களை அவமதித்தால் அப்பெரியவர்கள் அளிக்கும் சாபத்தினால் அப்பெண்ணிற்குப் பலதுயர்கள் உண்டாகும். இதற்காக அப்பெண்தான் மேற்கூறிய முறையில் பிண்டதர்ப்பணம் இட்டு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
போகர் :- பித்ரு ஹோம குண்டங்கள் பற்றி ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் விளக்கம் யாது குருதேவா?
பித்ரு ஹோம குண்டங்கள்
அகஸ்தியர் :- இதை விளக்கினால் பல காண்டங்களாக விரிவு பெறும். எனினும் சுருக்கித் தருகின்றேன். மக்களுக்கு அறிவிப்பாயாக!
ஹோமம் செய்வதால் நற்பலன்கள் உண்டாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பித்ருக்களுக்கும் ஹோமம் செய்வதுண்டு. இறந்தவர்களின் உயரத்திற்கேற்பத் தக்க இட்த்தில் ஹோம குண்டம் அமைத்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் செய்யும் ஹோமங்களும் உள்ளன. பித்ரு ஹோம குண்டங்கள் எத்திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீ கயாஸுர மகரிஷி வரையறுத்துள்ளார்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில செயல்கள் எத்தகைய தோஷங்களுக்கு நம்மை ஆளாக்குகின்றன என நாம் அறிய மாட்டோம். அத்தோஷங்களுக்கு உரிய நிவர்த்தியையும் கயாஸுர மகரிஷி அருளியுள்ளார்.

ஸ்ரீகயாசுர மகரிஷி அருளிய பித்ரு ஹோம விளக்கங்கள்

தவறு

அடைகின்ற
தோஷம்

தோஷத்தின் விளைவு

ஹோம குண்டம்
அமைக்கும் திசை

ஆஹூதியாகப் படைக்க
வேண்டியது

முதியோர் இல்லம அலலது
அனாதை இல்லஙகளில்
விடப்பட்டு பெற்றோர்
மரணமடைதல்

சுருஹத்தி
தோஷம்

எதிர்பாராத
விபத்துக்கள்
நேரும்

தென்கிழக்கு
திசை

அவர்கள் விரும்பிய உணவை
ஆஹூதியாகத் தானமளித்தல்

சொத்திற்காக மட்டும்
காப்பாற்றப்பட்டு பின்பு
சொத்தைக் கவர்ந்தபின்
அவர்களை ஏமாற்றுதல்

கோரகத்துரு
தோஷம்

நோய்கள்,
தீராத வறுமை
ஏற்படும்

வடகிழக்கு
திசை

மூதாதையர் சொத்தில் ஒரு பங்கை
சிவன் கோயிலுக்கு அளித்தல்
மூதாதையர் விரும்பிய இனிப்புப்
பொருளை ஆஹூதியாக்குதல்

கணவன் மனைவியின் பேச்சை
கேட்டுப் பெற்றோர்களை
இம்சித்தல்
அவர்கள் ஆதரவின்றி
மரணம் அடைதல்

மாரிவடு
தோஷம்

குடும்பத்தில்
குழ்ந்தைகளுக்கு
மயக்கமேற்படுதல்

தென்மேற்கு
திசை

அனாதை இல்லங்களில்
இருக்கும் விதவைகள்
வயதானவர்களுக்கு உதவி

பெற்றோர்கள் குழந்தைகளைத்
தாம் இருக்கும்போதே
அநாதை இல்லங்களில்
சேர்த்தல்

குமாரிகா
தோஷம்

கடைசி
காலங்களில்
நிராதரவு

வடமேற்கு
திசை

அநாதை
குழந்தைகளுக்குச்
சேவை

குறிப்பு
விபத்துக்களில் இறந்தோர்க்கு தென்கிழக்கு திசையில் ஹோம குண்டம் வைத்தல் வேண்டும்.

ஸ்ரீகயாசுர மகரிஷி அருளிய தர்ப்பண விதி முறைகள்

வகையினர்

தர்ப்பை நுனியை வைக்க
வேண்டிய திசைகள்

பேச இயலாது
இறந்தோர்க்கு

கிழக்கு மேற்கு

நிறைய கடன்களை
பாக்கியாக வைத்து
இறந்தோர்க்கு

வடகிழக்கு தென்மேற்கு

ஆண் சந்ததி
இல்லாதோர்க்கு

தென்கிழக்கு வடமேற்கு

பெண் சந்ததி
இல்லாதோர்க்கு

வடமேற்கு தென்கிழக்கு

குழந்தை
இல்லாதோர்க்கு

தென்மேற்கு வடகிழக்கு

மாமனார் மாமியாரைப்
பற்றித் தவறான
புகார்களை தங்கள்
பெற்றோரிடம் கூறும்
பெண்கள்
(இதற்குப்
பெரிய சாபங்கள்
உண்டு)

தர்ப்பையில் மூன்று முடிச்சுகள்
இட்டு அவற்றில் பிண்டம்
வைத்து கட்டிய
வஸ்திரத்துடன் நீரில் இறங்கி
பிண்டத்தை நீரில் இட்டு
மாற்றுடை பூண்டு
கட்டிய வஸ்திரத்தை
தானமாக அளித்தல்

குறிப்பு

  1. தர்ப்பண மந்திரங்கள் அறியாதோர் மேற்கண்ட திசைகளில் தர்ப்பைகளை வைத்து இறந்தவரின் பெயரைச் சொல்லி திறந்த வலது கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களிடையே எள் கலந்த நீரை தர்ப்பையின் நுனிப் பகுதியில் விழுமாறு ஊற்ற வேண்டும்.
  2. ஸ்நானம் செய்த உடல் சுத்தத்துடன் இறைநாமம் ஓதியவாறே அன்னம் வடித்து ஒரு பெரிய சாத உருண்டையைச் செய்திட இதுவே பிண்டமாகும்.
  3. பிண்டத்தின் (அன்ன உருண்டை) அன்னசாரத்தை நீர் மூலமாகவே தர்ப்பையில் ஆவாஹனமாகும் பித்ருக்கள் (மேலோர்) பெறுகின்றனர்.

போகர் :- ஸ்ரீ மாதேவியை எளிதாக வழிபடும் முறை யாது குருதேவா?
அகஸ்தியர் :- ஸ்ரீ ஆயுர்தேவி போன்று ஸ்ரீ மாதேவியின் உருவத்தை எமது சித்தர் பாரம்பரியத்தைச் சார்ந்த சித்த புருஷர் தக்க சமயத்தில் உணர்த்துவார். அதுவரையில் ஸ்ரீ மாதேவியை மனதால் தியானித்து பிரதமைத் திதியன்று ஏதேனும் ஒருகோயிலில் மாக்கோலமிட்டு மல்லிகைப் பூவை ஏழைகளுக்கு தானம் அளித்து வழிபட்டு வருதல் வேண்டும்.
நவராத்திரி பிரதமைத் திதியில் இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீ மாதேவியாக வரித்து வணங்க வேண்டும். அல்லது மேலே கூறியவாறு மாக்கோலம் இட்டு தானஞ் செய்தல் வேண்டும். இதுவே ஸ்ரீ மா தேவியை எளிதாக வழிபடும் முறை.
இவ்வாறு அற்புதத் தவங்கள் புரிந்து தன்னலமற்ற மக்கள் சேவை செய்து ஸ்ரீ ஆயுர்தேவியின் வலது முதல் கரத்தில் இடம் பெற்றார் கயாஸுர மகரிஷி.
ஸ்ரீ ஆயுர் தேவி தரிசனம்
போகர் :- சற்குருவே! ஸ்ரீ ஆயுர்தேவியை முதன்முதலில் பலகோடி யுகங்களுக்கு முன் உலகிற்கு அறிமுகப்படுத்தியது யார்?
அகஸ்தியர் :- தற்போது கலியுக மக்கள் மிகவும் எளிமையான வழியில் எம் பாரம்பரிய வழித்தோன்றல் மூலம் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்று விட்டனர். ஆனால், பல கோடி யுகங்களுக்கு முன் திருஅண்ணாமலையில் குறிப்பிட்ட பக்ஷங்களுக்கு, யுகங்களுக்கு அருணாசல மலையைக் கிரிவலம் வந்தவர்களுக்கே ஆயுர்தேவி தரிசனம் கிட்டும் என்பது இறை நியதியாக இருந்தது. அதுவும் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்திற்கு முன் துவித சிரஞ்சீவி என்றும், ஆத்யந்த பிரபு என்றும் அழைக்கப் பெற்ற ஸ்ரீ விநாயக ஆஞ்சநேய அர்த்தநாரீஸ்வர ரூபங்கொண்ட தெய்வத்தைத் தரிசனம் செய்தல் வேண்டும். இது திரேதா யுகம் நியதி.

திருஅண்ணாமலையில் கிரிவல பாதையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனப் பாதை என்ற முகட்டுப் பாதை உள்ளது. பிருத்வி நந்தி அருகே யானைபடு குழி என்ற முக்கோணத் தீர்த்தப் பகுதியில் குருவருளால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு ஸ்ரீ துவித சிரஞ்சீவி தரிசனம் கிட்டும். கிருத, திரேதா யுகங்களில் ஸ்ரீ துவித சிரஞீவி மகா பிரபுவின் அர்த்த நாரீஸ்வர ரூபதரிசனம் கிட்டியது. இவரே ஸ்ரீ ஆயுர்தேவியின் தரிசனத்திற்கு வழிகாட்டுவார்.
கலியுகத்தில் மகான்களுக்கும், குருவருள் நிரம்ப பெற்றவர்களுக்குமே, இத்தகைய அற்புத தரிசனம் கிட்டும். ஏனையோருக்கு திருஅண்ணாமலையே சிவரூபமாக காட்சியளிப்பதால், குறிப்பிட்ட பகுதியிலிருந்து மலையைத் தரிசனம் செய்திடில் அது ஸ்ரீ தேவியின் முகவடிவத்தில் காட்சியளிக்கும். ஆனால் இதற்கும் ஸ்ரீ சற்குரு அருள் வேண்டும்.
கல்லால மரம்
போகர் :- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தவக்கோலம் பூண்டிருக்கும் கல்லாலமரம் பூலோகத்திலுள்ளதா சற்குருவே?
அகஸ்தியர் :- கோடிக் கணக்கான ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ள திருஅண்ணாமலையில் மலை உச்சியில் கல்லால மரம் உள்ளது. இம்மரத்தின் அடியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மனித சரீரத்தில் இன்றும் காட்சி தருகிறார். இந்தியாவின் பல புண்ணிய நதி தீரங்களிலும், பொதிகை மலை, இமய மலை, கொல்லி மலை போன்ற சித்தர்கள் வாழும் மலைப் பகுதிகளிலும் கல்லாலமரம் விளங்குகின்றது. ‘ஊர்த்துவ மூலமரம் எனப்படும். இம்மரத்தின் வேர்ப்பகுதி வளைந்து மேல் நோக்கி வானத்தில் வேர்விட்டு இருக்கும். காண்பதற்கு அரிய காட்சி இது, வேர்ப்பகுதி மேல் நோக்கியும், இலைத் தழைகள் கீழ்நோக்கியும் அமைந்துள்ள அற்புத விருட்சங்கள் பல உண்டு. இவற்றின் தரிசனமே பல சித்திகளைத் தரவல்லது.
திருஅண்ணாமலையில் கல்லாலமரம் அமைந்துள்ள மலைப் பகுதிய்ல் காட்சிதரும் ஸ்ரீ ஆயுர்தேவி சிலாரூபத்தைச் சனகாதி முனிவர்கள் நால்வரும் இன்றைக்கும் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர். திருஅண்ணாமலையைத் தாண்டாது அதனைச் சுற்றிச் செல்லும் சூரியபகவானும் ஸ்ரீ ஆயுர்தேவியை தினமும் வணங்கி செல்கின்றார்.
இது தவிர இமய மலைப் பகுதியிலும் ஸ்ரீ மஹாஅவதூது பாபா, த்ரைலிங்க ஸ்வாமி போன்ற அற்புத மஹான்கள் தினமும் வழிபடுகின்ற பனி மலை குகையில் ஸ்ரீ தாராதேவி ஆலயத்தில் ஸ்ரீ ஆயுர்தேவிக்கு சன்னதி அமைந்துள்ளது. குருஅருள் பெற்றோர் இதனை இன்றும் தரிசிக்கலாம்.
ஸ்ரீ இரமண மஹரிஷி தரிசனம் செய்த கல்லால இலையைக் கொண்டுள்ள அபூர்வமான கல்லால மரம் அமைந்திருக்கும் திருஅண்ணாமலை உச்சிப் பகுதியில் ஸ்ரீ ஆயுர்தேவியின் சிலாரூப வடிவைக் காணலாம். இது இன்றைக்கும் பிரம்ம ரகசியமாகவே இலங்குகிறது.
ஸ்ரீ ஆயுர்தேவி கோயில்
போகர் :- குருதேவா! ஸ்ரீ ஆயுர்தேவிக்குக் கோயில்கள் எழுப்பலாகுமா?
அகஸ்தியர் :- ஸ்ரீ அம்பாளின் விருப்பம் அதுவாயின் எதுவும் நடக்கும். எனினும் எம் பரம்பரையோன், எம்முடைய கிரந்தகளிலிருந்து எடுத்தருளியுள்ள ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை உச்சாடனம் [ஜபம், பாராயணம்] செய்யப்படவேண்டும். ஸ்ரீ ஆயுர்தேவிக்கான காயத்ரி மந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு தியானிக்கப்படவேண்டும். அதன்பிறகு யாம் அளித்துள்ள ஸ்ரீ ஆயுர்தேவி ஹோமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைய்யில் நிகழ்த்தப் பெறவேண்டும் என்று ஓர் ஆவாஹன அளவுகோல் உள்ளது.
எந்த தெய்வத்திற்கும் ஒரு கோயில் அமையும் முன் இத்தகைய ஆன்மீக குறியீட்டு இலக்கணங்கள் உண்டு. அவை முற்றுப்பெறும் போது ஸ்ரீ ஆயுர்தேவியே தானாகக் கோயில் கொண்டு அருள் பாலிப்பாள்!
எனினும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு கோயில் எழுப்புவதற்கான மனிதப் பிரயத்தனங்கள், முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை. ஸ்ரீ அம்பிகை விரும்பும் போது அது தானே கைகூடும்.

போகர் :- திரிமூர்த்திகள் தவிர ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்ற தெய்வ அவதாரங்கள் உண்டா சற்குருதேவா?
அகத்தியர் :- திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ராவண சம்ஹாரத்திற்கு முன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் போது ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்றார்.
அப்போது, ஸ்ரீ ராமா! உன்னுடைய துவாபர யுக கிருஷ்ணாவதாரத்தில் என்னுடைய பரிபூரணமாக என் அருளை பெறுவாய் என்று கூறி ஸ்ரீ தேவி ஆசிர்வசித்தாள்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் தம் சற்குரு சந்தீபனியிடம் குருதட்சிணை அளிக்க சென்ற ஸ்ரீகிருஷ்ணனிடம் அவர் ஸ்ரீ கிருஷ்ணா! உன்னிடம் நான் குருதட்சிணை பெறும் நேரம் வந்து விட்ட்து. பல ஆண்டுகளுக்கு முன்னர் சமுத்திர ராஜன் என் புதல்வனை ஆட்கொண்டுவிட்டான். அவனை மீட்டு தருவதே நீ எனக்கு தரும் குருதட்சிணையாகும். என்று தெளிவாக கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணனும் பல சமுத்திர லோகங்களைக் கடந்து தேடியும் சந்தீபனியின் புதல்வன் அகப்படவில்லை. ‘குரு தட்சிணையின்றித் திரும்புவதா? அதுவும் பூர்ணாவதாரத்தால் இயலாத ஒன்றா? என ஸ்ரீ கிருஷ்ணன் சற்று சிந்தித்தான்.
தம்மை பூர்ண அவதார அம்சங்களிலிருந்து விடுவித்து, மனித அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாய் தன்னைப் பாவித்துக் கொண்டார். அப்போது ஸ்ரீ அருணாசல க்ஷேத்திரமும், ஸ்ரீ ஆயுர்தேவியின் மூலமந்திரத்தை ஜபித்த வண்ணமெ ஸ்ரீ கிருஷ்ணன் கடலுக்குள் புகுந்தான்.
மச்சாவதாரம் புரிந்தவனன்றோ! ஒரு மச்சத்தின் வயிற்றில் சந்தீபனியின் புதல்வன் இருப்பதைக் கண்டு அவனைக் கரை சேர்த்து, குரு தட்சிணையாகச் சற்குருவின் அபிலாக்ஷைகளுக்கேற்பத் தந்தருளினான்.
அப்போது சந்தீபனி, ஸ்ரீ கிருஷ்ணா ! ஸ்ரீ ஆயுர்தேவி மகிமையை உலகிற்கு எடுத்துரைத்து மக்களுக்குச் சேவை செய்வாயாக! என்று அருளினார்.
சற்குரு சந்தீபனியின் விருப்பப்படியே ஸ்ரீ கிருஷ்ணன் இன்றும் திருஅண்ணாமலை மலைக் காட்டிலுள்ள கல்லால மரத்தின் ஒவ்வொரு இலையிலும் ஆலிலைக் கிருஷ்ணனாகத் தவழ்ந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் மகாத்மியத்தை பலகோடி லோகங்களுக்கும், சனகாதி முனிவர்கள் மூலம் பரப்பி வருகிறார்.
இந்த ஆன்மீக ரகசியத்தை நாரதருக்கும் உணர்த்தியவர்கள் சித்த புருஷர்களே! இன்றும் கோகுலாஷ்டமி அன்று திருஅண்ணாமலையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசன முகட்டில் கிருஷ்ணனின் புல்லாங் குழல் ரீங்காரத்தைக் கேட்டு இன்புற்றவர்கள் ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீ விடோபா ஸ்வாமிகள், ஸ்ரீ பூண்டி மகான், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் போன்றோர் மட்டுமன்றி பாரதியார், ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் ஆகியோருமாவர்.
ஸ்ரீ ரமண மகரிஷி எப்போதும் மலை உச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்ததின் ஆன்மீக ரகசியம் இதுவே. பிரபஞ்சத்தின் ஆன்மீக சிகரமாக விளங்கும் அருணாசல மலையில் கோடானுகோடி தெய்வ லீலைகள் நிகழ்கின்றன. இதை ரசித்து ஆத்மானுபவம் பெற்று பரமானந்தத்தில் திளைத்து மகிழ்ந்தவர்களே ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் முதலான மகான்கள். சாதாரண மனிதனும் ஆத்ம உணர்வுகளுடன் கிரிவலம் வருவானாயின் சற்குரு அருளால் இத்தகைய தெய்வ திருவிளையாடல்களையும் பரமாத்ம லீலைகளையும் துய்த்துணரலாம்.

 
ஸ்ரீஆணிமாண்டவ்ய மகரிஷி

போகர் : குருதேவா! ஸ்ரீ ஆயுர் தேவியின் இரண்டாவது வலகரத்தில் அமரும் பேறு பெற்ற ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் எவ்வாறு இந்த அனுக்ரகம் பெற்றார்?
அகஸ்தியர் : ஸ்ரீ ஆணிமாண்டவ்யரின் சரிதத்தை பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம். அவர் ஸ்ரீ விதாத்ரி தேவி என்னும் அம்பிகையைத் துவிதியை திதிதோறும் வழிபட்டு வந்தார். இத்திதியில் ஸ்ரீ விதாத்ரி தேவி நூறு மகாலக்ஷ்மி தேவியரின் அனுக்ரகத்தை ஒன்றாகத் திரட்டியருளும் சக்தியுடையவள்.
ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் வரலாறு
ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அற்புத தவங்கள் புரிந்து அதன் பயனை மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்த உத்தம மகரிஷியாவார். ஒரு முறை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது அந்த வனத்தில் அரசக் காவலர்களால் துரத்தப் பெற்ற கொள்ளையர்கள் இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்து ஒளிந்து கொண்டனர். மகரிஷியின் அருகில் ஆயுதங்கள் கிடப்பதைக் கண்ட சேவகர்கள் இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர் எனத் தவறாக கருதி அவரைச் சிறையிலிட்டனர்.

ஸ்ரீஆணி மாண்டவ்ய மகரிஷி

தீர விசாரிக்காத அரசரும் அவரைக் கழுவிலேற்ற மூன்று தினங்கள் ஆகியும் யோகத்தில் திளைத்துத் தேஜோ மயமான காந்தியுடன் பிரகாசித்த அவரைக் கண்டு அஞ்சி, இவர் மகா தபஸ்வியே என்று எண்ணித் தம் மக்களுடன் அவரைச் சரணடைந்து மன்னிப்புக் கோரினார்.
இத்தவறுக்கு நீ காரணமில்லை என்று அரசனை மன்னித்தார் மகரிஷி. பின்பு, நான் அறக்கடவுளைக் காண்பேன். ஒன்றுமறியா எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்ற ஆத்ம விசாரத்துடன் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார். அவர் தபோபலத்தைத் தாங்க இயலாத அறக்கடவுள் அவர் முன் பிரசன்னமாகி முனிபுங்கவரே! தாங்கள் சிறு வயதில் ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் வதைத்ததற்கான தண்டனையே இது என்று விளக்கிட்டார்.
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? குருவருளால் தவ முறைகளை யான் அறிந்ததால் அறக்கடவுளாகிய தங்களிடம் விளக்கம் கேட்டுப் பெற்றேன். ஆனால் வரப் போகும் யுகங்களில் பக்தி குன்றிவிடும். தவ முறைகள் மறைந்து விடும். குறிப்பாகக் கலியுக மக்கள் கோடி கோடியாய் மாபெரும் தவறுகளைச் செய்வர். அவர்களுக்கு எத்தகைய பெரிய தண்டனைகள் அமையுமோ என எனக்கு அச்சமாக உள்ளது என்றார்.
அறக்கடவுள் முனி சிரேஷ்டரே! செய்யும் தவறுகளுக்குத் தண்டனைகள் உண்டு. ஆனால் பிராயச்சித்த் முறைகளைத் தங்களைப் போன்ற மகரிஷிகளால்தானே இறைவனிடம் பெற்றுத் தர முடியும். என்றார்.
ஸ்ரீ ஆணி மாண்டவ்யரின் தவம்
உடனே ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் மீண்டும் வனம் புகுந்து பல கோடி யுகங்கள் தவம் புரிந்தார். மக்கள் தம் அறியாப் பருவத்தில் செய்கின்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தங்களை அவர் வேண்டிட ஸ்ரீ விதாத்ரி என்னும் தேவி பிரசன்னமானாள். அது முதல் அவர் ஸ்ரீ விதாத்ரி உபாசனையைத் தீவிரமாக மேற்கொண்டார். அதன் காரணமாக அவர்,
குழந்தைகளுக்கான பரிகாரங்கள்

  1. பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், சகல உடல் வியாதிகள், கண்ணேறு வியாதிகள் இவற்றிற்கான காரணமும் பரிஹாரங்களும்.
  2. சிறுபிள்ளைகளுக்கான வியாதிகள், திருஷ்டிகள், சாபங்கள்
  3. குழந்தைகளைப் பேணும் முறைகள், கல்வி, வீரம், இசை, ஞானம் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெறுதல் போன்ற விஷயங்களை ஆராய்ந்து குழந்தைகளுக்கும், பாலர்களுக்கும் உரித்தான தெய்வீகமான வாழ்வைப் பெற்றுத் தருவதற்கு ஆற்ற வேண்டிய பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் அருளியுள்ளார்.

           இவற்றால் பாலாரிஷ்ட தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள் எளிதில் நிவர்த்தியாகின்றன. சிறுவர்கள் மந்த புத்தியுடன் இருத்தல், பசியின்மை, மப்பு, மாந்தம், ஜலதோஷம், வயிற்றுப் போக்கு போன்ற வியாதிகளுக்கான நிவாரணங்களையும், பரிகார முறைகளையும் விவரித்துள்ளார் ஸ்ரீ ஆணிமாண்டவ்ய ரிஷி.
மொத்தத்தில் குழந்தைகள் பரிபாலனத்திற்கு ஸ்ரீ மாண்டவ்யரின் விளக்கங்கள் முதன்மையானதாகும்.
கைக்குழந்தை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திற்குரிய தேவதைகள் காக்கின்றனர்.அவர்கள் யாவர்? குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீர்க்கும் வழிகள் எனப் பல விஷயங்களை ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அருளியுள்ளார்.
போகர் : ஸ்ரீ மாண்டவ்யரின் குழந்தை பராமரிப்புப் பற்றிய விதிகளை உரைக்க வேண்டும் ஞானகுருவே!
அகஸ்தியர் : பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தான தருமம் செய்ய பழக்க வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டிய அறங்களை முறையாக வகுத்தவர் ஸ்ரீ மாண்டவ்யர் ரிஷியாவார்.

ஸ்ரீஆணி மாண்டவ்யர் அருளிய குழந்தைகளின் தோஷப் பரிகாரங்கள், காக்கும் தேவதைகள்

குழந்தையின் வயது காக்கும்
தேவதை
பிறர் எண்ணம் குழந்தைபடும் வேதனை பெற்றோர்களுக்கு ஏற்படும்
துன்பம்
தோஷ நிவர்த்தி முறைகள்
முதல் மாதம் திலமாதா பொறாமை தூக்கம் வராது அழுதல், கபம் தம்பதிகளுக்குள்
வேற்றுமை
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
நீரைப் பருக வேண்டும்
இரண்டாவது மாதம் புங்கவி ஏக்க எண்ணங்கள் வயிற்றுப் போக்கு மாமியாருடன் விரோதம் 108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
குவளை நீர் பருக வேண்டும்
மூன்றாவது மாதம் வைகரி கோப எண்ணங்கள் தலைவலி தந்தைக்கும் மாமனாருக்கும்
இடையே வெறுப்பு
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அருகம்புல் நீர் பருக வேண்டும்
நான்காவது மாதம் புவனா கீழ்த்தர எண்ணங்கள் உடல் முறுக்கி அழுதல் தம்பதிகளுக்குள் பொய்
நிலவும்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அருகம்புல் நீர் பருக வேண்டும்
ஐந்தாவது மாதம் தரணி பழிவாங்கும்
எண்ணங்கள்
விக்கல் நோய் நாத்தனாருடன்
மனபேதம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
துளசி நீர் பருக வேண்டும்
ஆறாவது மாதம் பாவினி குரோத எண்ணங்கள் பயந்து அழுதல் வேலை செய்யுமிடத்தில்
வீண் பழி
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வில்வ நீர் பருக வேண்டும்
ஏழாவது மாதம் ஜகதாயி காம எண்ணங்கள் மூத்திர கோளாறு மேலதிகாரியிடம்
மன வேற்றுமை
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வன்னி இலை நீர் பருக வேண்டும்
எட்டாவது மாதம் ஜலஜாக்ஷி கையால் செய்த பாவம் மூச்சுச் திணறும் கடன் அதிகமாகும் 108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அரச இலை் நீர் பருக வேண்டும்
ஒன்பதாவது மாதம் சுவர்ணாக்ஷி காலால் செய்த பாவம் மார்புச் சளி கீழே விழுந்து அடி
அதனால் துன்பம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
சுக்கு நீர் பருக வேண்டும்
பத்தாவது மாதம் த்ரிமபாலா உச்சி மோர்தல் இருமல் வாக்குத் தவறுதல் 108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மல்லிகைப் பூ நீர் பருக வேண்டும்
11வது மாதம் ஜலபுத்ரீ கட்டி அணைத்தல் அதிசுரம் பொருளை இழப்பர் 108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
பாரிஜாத நீர் பருக வேண்டும்
12வது மாதம் விஸ்வதாயி முத்தம் இடுதல் அதிமூத்திரம் நண்பர்களுக்குள்
மனபேதம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
சாமந்திப் பூ நீர் பருக வேண்டும்
இரண்டு வயது மாலமாதா முதுகில் தூக்குதல் பின்னால் விழுதல் ஒற்றைத் தலைவலி குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
மூன்று வயது பிரபுதாரிணி     தங்கம் இழப்பு
கண்டங்கள் ஏற்படும்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
நான்கு வயது சதுராணி     சிறு கஷ்டங்கள்
துன்பங்கள்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஐநது வயது பாலினிமாதா     உறவினர் இழப்பு குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஆறு வயது பினாகினி     பிரிந்து வாழ்வர் குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஏழு வயது சப்தா     எதிரிகள் தாக்குதல் குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
8 வயது முதல்
15 வயது வரை
தேவதாரிணி     கணவன், மனைவி, பெற்றோர்
தனித் தனி வாழ்க்கை
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்

ஸ்ரீ விதாத்ரி தேவி
போகர் : ஸ்ரீ விதாத்ரி தேவியின் தோற்றமென்ன குருதேவா?
அகஸ்தியர் : ஸ்ரீ விதாத்ரி தேவியின் திருவுருவத்தை எம் பரம்பரை சித்த குருமார்கள் மூலம் இறையருளால் யாம் பிறகு வெளிபடுத்துவோம். ஸ்ரீ விதாத்ரி தேவி திரிபுர சம்ஹாரத்தில் ஸ்ரீ சிவபெருமானுக்கு மகாசூலம் தாங்கி உதவி புரிந்தவள். மேக நிறத்தினள், கேடயம், சூலம், அம்பு கவசம் தாங்கி அருள் பாலிப்பவள். அறக்கடவுள் ஸ்ரீ எம தர்ம ராஜா, தர்மதேவதைகள் ஆகியோரால் பூஜிக்கப்படும் தேவி.
ஜீவனின் முடிவு
ஒருமுறை சக்ரசூடன் என்பவன் தன் இறப்பை அறிய வேண்டி எமனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். எமன் பிரசன்னமாகி உன் இறப்பிற்கு முன் நான் உனக்கு நான்கு முறை முன்னறிவிப்புத் தருகிறேன். என்று அருளி சென்றார்.
சக்ரசூடன் இறப்பதற்கு முன் எமதர்மராஜன் தோன்ற அவன் திடுக்கிட்டு தாங்கள் சொல்லியவாறு நான்குமுறை அறிவிக்கவில்லையே என்றான்.
உடனே எமதர்மராஜா, சக்ரசூடா! உன்க்கு மட்டுமல்லாது அனைவருக்குமே இறை விதிப்படி மரணம் பற்றிய நான்கு முன்னறிவிப்புகள் தரப்படுகின்றன

  1. தலை முடி, மீசை நரைத்தல்
  2. மயிர்க்கால்கள் உதிர்ந்து வழுக்கை தோன்றுதல்
  3. தோல்கள் சுருங்குதல்
  4. நடை, உடை தளர்தல்

இவற்றை அறிந்து கொண்டாவது மனிதன் தன் இறப்பை முன்னரே அறிந்து தான தருமங்கள், இறைத் திருப்பணி போன்ற நற்காரியங்களைச் செய்திட வேண்டும். இவற்றை ஓரளவாவது செய்தவர்களே எவ்வித மரண பயமுமில்லாது இறப்பை எதிர் நோக்குவர். ஏனையோர் எமனை எண்ணி அஞ்சி அஞ்சியே சாவர். இப்படி தர்மம் காக்கும் ஸ்ரீ எமதர்மராஜனே போற்றி வணங்கிய சிறப்பு ஸ்ரீ விதாத்ரி தேவிக்கு உண்டு.
துவிதியைத் திதியில் கோதுமைப் பண்டங்களை நிவேதித்து, பிச்சிப்பூ தானம் கொடுத்து எளிமையாக வழிபட்டு இத்தேவியின் அருளைப் பெறலாம்.

ஸ்ரீஅத்திரி மகரிஷி

போகர் : குருதேவா! இல்லறத்தில் பெண்களுக்கு தர்மத்தை அருளிய ஸ்ரீ அத்திரி மகரிஷியையும், அவர் பத்தினி அனுசூயா தேவி பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். ஸ்ரீ அத்திரி மகரிஷி, ஸ்ரீ ஆயுர் தேவியின் மூன்றாவது வலக் கரம் அமர்ந்து அருள்புரிகின்றார் அல்லவா?
பெண்ணின் சிறப்பு
அகஸ்தியர் : பிரபஞ்ச வாழ்வில் பெண்களுக்கு அற்புதமான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது, பொறுமை, அடக்கம், பணிவு இவற்றை இயற்கையிலேயே உடைய பெண்கள் கணவன்மார்களுக்கு நற்செயல்கள் புரிய உறுதுணையாக இருக்க வேண்டும். ஏனெனில் கணவன்மார்கள் செய்கின்ற தான தருமங்கள் போன்ற நற்செயல்களால் விளையும் புண்ணியத்தில் பாதிப்பங்கு இயற்கையாகவே அவர் தம் மனைவியர்க்கு வந்து சேர்கிறது.
போகர் : குருதேவா! இத்தகைய அருளைப் பெண்கள் எவ்வாறு பெற்றனர்?
அகஸ்தியர் : தீவிர சிவ பக்தரான பிருகு முனிவர் கயிலாயத்தில் தினமும் சிவபெருமானை வலம் வந்து செல்வது வழக்கம். அவர் ஸ்ரீ ஆதிபராசக்தியான பார்வதி தேவியை வலம் வருவதில்லை. இதை கண்டு சினம் கொண்ட ஸ்ரீ பார்வதி தேவி, பிருகு முனி வரும்போது ஸ்ரீ சிவபெருமானுடன் சேர்ந்து நின்று காட்சியளித்தாள். பிருகு முனியோ லாவண்யமாக வண்டாக மாறிச் சிவனை மட்டும் வலம் வந்து சென்றுவிட்டார்.

ஸ்ரீஅத்திரி மகரிஷி

அதைக் கண்டு உமையம்மை, சுவாமி! ரிஷிகளே சிவன் வேறு சக்தி வேறு என்று பிரித்துக் காட்டினால் உலக மக்கள் என் செய்வார்கள்? ஸ்ரீ தேவி உபாசனை காலப் போக்கில் அதுவும் கலியுகத்தில் மிகவும் இன்றியமையாத வழிபாடாக அமையவிருக்கிறதல்லவா? எனவே, தங்களின் ஒரு பாதியை, இடப்பாகத்தை எனக்கு தந்தருள்வீர்களாக! என்று வேண்டினாள்.
உமையவளின் விருப்பப்படி அன்று முதல் கணவன்மார்களின் புண்ணியத்தில் பாதிபங்கு மனைவிக்கு இயற்கையாக வந்து சேரும் என்ற வரத்தையும் ஸ்ரீ பார்வதிதேவி சிவபெருமானிடமிருந்து பெற்றார்.
புலிப்பாணி : ஆனால், பெண்கள் செய்கின்ற செயல்களால் விளைகின்ற பாவத்தில் பாதிபங்கு கணவன்மார்களைச் சேர்வதான இறை நியதி எவ்வாறு வந்தது குருதேவா?

சந்திரனின் சாப விமோசனம்
அகஸ்தியர் : ருத்ர ப்ரஜாபதிகளின் தலைவனாகிய தட்சன் தன்னுடைய 27 நட்சத்திரப் புதல்வியரையும் ஸ்ரீ சந்திர பகவானுக்கு மணம் செய்து வைத்தான். ஸ்ரீ சந்திரனோ ரோகிணியின் மேல் அதிக மையல் கொண்டு வாழ்ந்திடவே ஏனைய பெண்கள் தட்சனிடம் இது குறித்து முறையிட்டனர். பொங்கி எழுந்த சினத்தால் தட்சனும் ஸ்ரீ சந்திர பகவானை நோக்கி, உன்னுடைய பதினான்கு கலைகளும் தேய்வதாக! என்று சாபமிட்டார்.
திதிக்குத் திதி கலைகள் தேய்வு பெற்ற ஸ்ரீ சந்திர பகவானைப் பார்த்து 27 நட்சத்திர பெண்களும் கவலை கொண்டனர். தங்களுடைய அவசர புத்தியாலும், தட்சனுடைய சினத்தாலும் ஏற்பட்ட எதிர்பாராத விளைவுகளைக் கண்டு அஞ்சினர்.
போகர் : சற்குருதேவா! இதன் மூலம், புகுந்த வீட்டுப் பெரியவர்கள் பற்றி தங்கள் பெற்றோரிடம் எவ்வித முறையீடும் பெண்கள் செய்தலாகாது, பணிவுடன் எதையும் ஏற்க வேண்டும் என்ற பாடத்தைப் பெண்கள் உணர வேண்டும் அல்லவா?
அகஸ்தியர் : நன்றாகச் சொன்னாய் போகா! 27 நட்சத்திரப் புதல்வியரும் தம் தந்தை தட்சனையடைந்து ஸ்ரீ சந்திர பகவானுக்கு சாப விமோசனம் தர வேண்டினர்.
தட்சன், நீங்கள் பரிகாரம் வேண்டி ஸ்ரீ சிவபெருமானையே நாட வேண்டும். எனினும் ருத்ர ப்ரஜாபதிகளின் தலைவன் என்னும் முறையில் எதிர் காலத்தில் பெண்கள் இத்தகைய துன்பங்களிலிருந்து தங்களைக் காத்து கொள்ள ஒரு வரம் தருகிறேன். பெண்கள் செய்கின்ற பாவத்தில் பாதி பங்கு அவர்தம் கணவன்மார்களைச் சாரும். இதை அறிந்து தெரிந்து கணவன், மனைவியர் ஒருமித்துப் பரஸ்பர அன்புடன் வாழ்வார்களாக என்றார்.
போகர் : கணவர் புண்ணியத்தில் பாதிப் பங்கு பெண்களுக்குச் செல்கிறது. அவளுடைய பாவத்தில் பாதி பங்கு கழிந்து கணவனுக்கு செல்கிறது. இதனால் பெண்ணிற்கு அதிக சக்தியா? சமபேதமில்லாத நியதியாக உள்ளதே குருதேவா?
அகஸ்தியர் : காரணமின்றி இறை நியதி அமைவதில்லை. பாரபட்சமாக தோன்றுகின்ற இதனைச் சீரமைக்கவே ஸ்ரீ அத்திரியின் பத்தினியாக படைக்கப் பெற்ற ஸ்ரீ அனுசூயா தேவி, அம் மகரிஷியின் தபோபலத்தால் பல பிராயசித்தப் பரிகாரங்களைத் தந்தருளியுள்ளனள்.
இல்லறம் நல்லறமாக அமைய ஸ்ரீ அத்திரி மகரிஷி தம்பதியினர் அருளியுள்ள அறவழி முறைகள் பெரிதும் பயன்படும். சண்டகள், சச்சரவுகள் இன்றி அமைதியான ஓடம்போல் வாழ்க்கைப் பயணம் அமையும்.
போகர் : ஸ்ரீ அத்திரி மகரிஷி கடுமையான பிரம்மச்சரியத்தை மேற்கொண்டவரல்லவா?
ஸ்ரீ அத்திரி மஹரிஷி வரலாறு
அகஸ்தியர் : திரிதியைத் திதியில் ஸ்ரீ போகதா தேவி என்னும் தேவியை வணங்கி, அனுசூயாவை அற்புத மனவியாகப் பெற்றவரே ஸ்ரீ அத்திரி மகரிஷி . நைஷ்டிக பிரம்மசாரியாய் இருந்த் ஸ்ரீ அத்திரி மகரிஷியைப் பல தேவர்களும், தெய்வங்களும், அவரை தாம்பத்ய வாழ்க்கைக்கு ஓர் இலக்கணமாக அமையுமாறு வேண்டி வற்புறுத்தினர்.
மூன்று கண்களுடன், அக்னி ரூபத்தில் ஆள்காட்டி விரல் முத்திரையுடன் தோற்றமளிக்கும் ஸ்ரீ போகதா தேவியை ஸ்ரீ அத்திரி மகரிஷி உபாசனை செய்து வந்தார். தமக்கு உத்தம மனைவி கிட்டுவது மட்டுமல்லாது, சர்வ லோகத்திலுள்ள பெண்களுக்கும் அவள் ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே அவர் அவா. மகரிஷியின் திரிதியைத் திதி வழிபாட்டினால் மனமகிழ்ந்து ஸ்ரீ போகதா தேவி ஸ்ரீ அனுசூயா தேவியே மகரிஷிக்கேற்றவள் என வாழ்த்தியருளினாள். ஆனால் மணமான பின் மகரிஷி தம்பதியினர் மீண்டும் கடுந்தவத்தை மேற்கொண்டனர்.
போகர் : திருமணத்திற்குப் பின்னும் கடுந்தவமா! ஏன் குருதேவா?
மகரிஷி தம்பதியினரின் தவம்
அகஸ்தியர் : அனுசூயா தேவி சுயநலமின்றித் தன் கணவருக்குப் பணிவிடை செய்தவள். இறை நியதியின்படி மகரிஷியின் தவப் பலன்களில் பாதிப் பங்கு எவ்வித முயற்சியும் இல்லாமல் தனக்கு வந்து சேர்கிறது. தன்னுடைய சிறு தவறுகளின் விளைவில் பாதிப் பங்கு அவருக்கு சென்று, அவருடைய தவத்தை மாசடையச் செய்கிறது. இது முறையல்லவே என்று மனமுருகி இந்த நியதியை மாற்றவே கடுந்தவம் மேற்கொண்டாள்.
இறை நியதியை மாற்ற இயலாது என்பதை நன்கு அறிந்த ஸ்ரீ அத்திரி மகரிஷி, பெண்களின் பதிவிரதா தர்மமே அவர்களைக் காக்கும் உத்தம தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்த அவரும் அனுசூயா தேவியுடன் கடுந்தவம் பூண்டார்.
புலிப்பாணி : இருவருக்கும் உற்ற தெய்வம் ஸ்ரீ போகதா தேவி, ஆதலின் ஸ்ரீ தேவி என்ன வரம் தந்தனளோ! முடிவைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் குருதேவா!
போகர் : இருவரும் கடுந்தவம் பூண்டனர் எனில் எத்தகைய சிறப்பான தவம் அது குருதேவா! ஏனெனில் தவமுறையைப் பொறுத்தன்றோ ஸ்ரீ போகதாவின் அருள்வரமும் அமையும்!
ஸ்ரீ போக்த குணப்ரீதம்
அகஸ்தியர் : உண்மையே சிஷ்யர்களே! இல்லறத்திலிருந்து கொண்டே கடுந்தவமென்பது மற்ற தவங்களிலிருந்து மாறுபடுவதே! அவர்களுடைய இல்லறத் தவத்திற்குப் போக்த குண ப்ரீதம் என்று பெயர். ஸ்ரீ அத்திரி மகரிஷி நல்ல இல்லறத்திற்குரிய நற்செயல்களையும் செவ்வனே நிறைவேற்றி நாள் முழுதும் ஸ்ரீ போகதா தேவியை வழிபட்டு நாடெங்கும் பலருக்கும் இவ்வுபாசனையைப் பரப்பி வந்தார்.
ஸ்ரீ அனூசூயா தேவியும் ஸ்ரீ போகதா தேவி பூஜையில் தன் பர்த்தாவிற்குப் பேருதவியாக இருந்ததோடன்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பல கோயில்களிலும் சர்க்கரை கலந்த கோதுமை மாவினை எறும்புப் புற்றுகளில் இட்டு பிச்சி பூவினைப் பெண்களுக்குத் தானமளித்து வந்தனள். இந்த போக்த குணப்ரீதம் என்ற பூஜையை எளிய முறையில் அனைத்து பெண்களும் செய்து வந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுளும், நற்குணமும் கிட்டும்.
போகர் : சற்குருவே! எளிமையான பூஜையாக உள்ளது. ஆனால் பலனோ அபரிமிதமாக உள்ளதே குருதேவா
அகஸ்தியர் : வேதங்களும் கடினமான ஹோம முறைகளும் கலியுகத்தில் அருகி வருகின்றனவே! எனவேதான் சித்த புருஷர்கள் எளிய மக்களும் கடைபிடிக்கும் வண்ணம் எளிய ஸ்ரீ சக்தி உபாசனையைச் சற்குருமார்கள் மூலம் விளக்கி வருகின்றனர்.
ஸ்ரீ அத்திரி மகரிஷி, அனுசூயா தேவியின் பக்திப் பூர்வமான வழிபாட்டை மெச்சிய ஸ்ரீ போகதா தேவி பரமசிவனருளால் பெருந் திருவிளையாடலைப் புரிய விழைந்தனள். எவ்வாறு?
அருகே திருகையிலாயத்தில்…
ஸ்ரீ அனுசூயா தேவி கண்ட அற்புதம்
பிருகு முனிவர் வண்டாக மாறி சிவபெருமானை மட்டும் வலம் வர, உமையவள் இறைவனின் இடப்பாகம் வேண்டி தவம் புரிய சிவபெருமான், பார்வதி! என் இடப்புறம் பெற வேண்டிடில் பூலோகத்தில் ஸ்ரீ அத்திரி மகரிஷியின் தர்ம பத்தினியாம் ஸ்ரீ அனுசூயா தேவியை நாடி அதற்கான நெறிமுறைகளை அறிந்து வருவாயாக! என்று அருளாணையிட்டார்.
ஸ்ரீ அனுசூயா தேவி தினந்தோறும் தன் பர்த்தாவின் பாதங்களைப் புனித நீரால் கழுவி அர்ச்சித்துப் பாத பூஜை செய்து, நமஸ்கரித்து வந்தாள். பாத பூஜை அபிஷேக நீரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து வைத்தாள். இதன் அற்புத மகிமையை அவள் அறிந்தாளில்லை. இப்புனித நீரால் பின்னர் கிடைத்தற்கரிய ஒரு தெய்வானுபவத்தைப் பெற்றனள்.
தான் லோகமாதாவாயிற்றே! ஒரு ரிஷி பத்தினியிடம் செல்வதா? என்று ஆதிபராசக்தி எண்ணவில்லை. தான் அறியாததைத் தெரிந்தவரிடம் கேட்டு தெளிவடையலாம் என்று பணிவுடன் ஸ்ரீ அனுசூயா தேவியை தேடி பூலோகம் வந்தாள்.
ஸ்ரீ நாரதர் ஸ்ரீ அனுசூயாவின் பெருமைகளை ஸ்ரீ பார்வதிக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீ பரமேஸ்வரியும் ஒரு சாதாரணப் பெண்மணியாக ஸ்ரீ அத்திரி மகரிஷியின் குடிலை நாடி வந்து, இல்லற தர்மத்தைப் பற்றி அறவிளக்கம் கேட்டு அனுசூயா தேவியை வேண்டினாள். அப்போது….
திரிமூர்த்திகளின் திருவிளையாடல்
திரிமூர்த்திகளும் மூன்று ரிஷிகளின் ரூபத்தில் மகரிஷி அத்திரியின் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். ஸ்ரீ அத்திரி மகரிஷி வெளிச் சென்றிருந்தமையால் ஸ்ரீ அனுசூயா அவர்களை வரவேற்று உபசரித்து, அதிதிகளாக உணவு ஏற்குமாறு வேண்டினள்.
அந்த ரிஷிகளோ, நாங்கள் அவதூத சித்தாந்திகள், எவரும் ஆடையின்றி உணவு பரிமாறினால்தான் உணவு ஏற்போம் என்று கூறினர். ஸ்ரீ அனுசூயாவிற்கு எத்தகைய ஒரு தெய்வீக சோதனை!
பார்வதி தேவி மலைத்து நின்றாள். திரிமூர்த்திகளே அதிதிகளாக அமைவது எத்தனை பாக்கியம்! ஆனால் அவர்கள் திரிமூர்த்திகள் என்பதை அனுசூயா அறியாள்! ஆனால் திரிமூர்த்திகளோ ஸ்ரீ அனுசூயா தேவியைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்குகின்றனரே! அவள் என்ன செய்கிறாளென்று பார்ப்போம்! என்று எண்ணி அமைதியாக ஒதுங்கி நின்றாள்.
ஸ்ரீ அனுசூயா தேவி சற்றும் அயராது, தேவரீர் அமருவீர்களாக! என்று அவர்களை அமர்வித்துத் தன் கணவருக்கு பாதபூஜை செய்த புனித நீரை எடுத்து ரிஷிகள் மீது தெளிக்க…
அதன் புனிதத்தால் அவர்கள் மூவரும் குழந்தைகளாயினர். ரிஷிகளின் சித்தாந்தத்திற்குப் பங்கம்வராவண்ணம் அனுசூயா அவதூத மேனியில் அவர்களுக்கு அமுது படைத்து அவர்களை வணங்கி எழுந்தாள்.
கணவனின் ஆயுள் விருத்தி
அவளின் பதிவிரதா மேன்மையினைக் கண்டு வியந்த திரிமூர்த்திகளும் ஸ்ரீ பார்வதி தேவியும் தத்தம் தெய்வாவதார ரூபங்களில் எழுந்தருளி ஸ்ரீ அனுசூயா தேவியை வாழ்த்தினர். ஆங்கே ஸ்ரீ போகதா தேவியும் தரிசனமளித்து வாழ்த்தி இல்லறத்தில் கணவன்மார்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகளை எடுத்துரைத்தனள்.
பெண்கள் ஸ்ரீ அனுசுயாதேவி இயம்பிய வண்ணம் தக்க தானதர்மங்கள் செய்திடில்

  1. கணவனின் புண்ணியத்தில் பாதிப் பங்கு மனைவியைச் சாராது.
  2. கணவன்மார்கள் விரும்பிடில் வேண்டுமளவு புண்ணியத்தைத் தங்கள் பத்தினிகளுக்கு அளிக்க முடியும்.
  3. மனைவியருடைய பாவச்சுமைகள் கணவனைச் சாராது. இதனால் கணவன்மார்களின் ஆயுளுக்குப் பங்கம் வராது

என்ற மூன்று அரும்பெரும் வரங்களை ஸ்ரீ அனுசூயா தேவி கலியுக மக்களுக்குப் பெற்றுத் தந்தனள். கணவன்மார்களுக்கு எளிய தான தர்மங்களையும் வழிபாடுகளையும் கடைபிடிக்குமாறு அவர்தம் மனவியர் ஒத்துழைப்புடன் ஆக்கமும் உறுதியும் அளிப்பாராயின் அவர்கள் தீர்க்க சுமங்கலித்துவமும் அற்புதமான மாங்கல்ய பிராப்தமும் பெறுவர், பிறவியறுக்கும் தெய்வ பக்தியைப் பெறுவர்.

ஸ்ரீஅத்ரி மகரிஷி ஸ்ரீஅனுசுயா தேவி அருளிய ஆண்கள் பெண்கள் செய்ய வேண்டிய
நட்சத்திர தான தர்மங்கள்

நட்சத்திரம் ஆண்கள் செய்ய
வேண்டிய தானம்
பெண்கள் செய்ய வேண்டியவை

அஸ்வினி

மஞ்சள் சாதம்

மஞ்சள் அரைத்து ஏதேனும் ஒரு கோயிலுக்கு அளித்தல்

பரணி

நெல்லி பொடி

கணபதி கோயிலில் அரைத்த சந்தனம் அளித்தல்

கார்த்திகை

வற்றல் குழம்பு

முருகன் கோயிலில் பழங்கள் அளித்தல்

ரோகிணி

தயிர்

அம்மன் கோயிலில் பால் தானம் செய்தல்

மிருகசீரிஷம்

பருப்பு

பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை அளித்தல்

திருவாதிரை

களி, கூழ்

சிவன் கோயிலில் குங்குமம் அளித்தல்

புனர்பூசம்

பால் சாதம்

கிருஷ்ணன் கோயிலுக்குத் திருவிளக்கு, மூங்கில்கள் அளித்தல்

பூசம்

சாம்பார் சாதம்

அரசமர நாகமிருக்கும் கோயிலில் பால் அளித்தல்

ஆயில்யம்

மோர்/வத்தல் குழம்பு

வன்னி விநாயகர் கோயிலில் மோதகம் அளித்தல்

மகம்

கீரை

ஆலமர விநாயகர் கோயிலில் கொழுக்கட்டை அளித்தல்

பூரம்

பலாப்பழ இனிப்பு சாதம்

முருகன் கோயிலில் பஞ்சாமிருதம் அளித்தல்

உத்திரம்

புளியோதரை

வைத்தீஸ்வரன் கோயிலில் கலவை சாதம் அளித்தல்

ஹஸ்தம்

தேங்காய் சாதம்

மூலவருக்கு மல்லிகைப்பூ தானம் (ஏதாவது கோயிலில்)

சித்திரை

சர்க்கரைப் பொங்கல்

சிவன் கோயிலில் வில்வ மாலை அளித்தல்

சுவாதி

பருப்புப் பொடி சாதம்

அம்மன் கோயிலில் முல்லை மாலை அளித்தல்

விசாகம்

கருவேப்பிலைப் பொடி சாதம்

கணபதி கோயிலில் விளாம்பழம், வெல்லம் சேர்த்து அளித்தல்

அனுஷம்

வெண்பொங்கல்

சிவன் கோயிலில் மகிழம்பூ அளித்தல்

கேட்டை

மாங்காய் சாதம்

சிவன் கோயிலில் தாமரைப்பூ அளித்தல்

மூலம்

அதிரசம்

பெருமாள் கோயிலில் தோசை அளித்தல்

பூராடம்

போளி

காலபைரவர் கோயிலில் உருளைக் கிழங்கு சாதம் அளித்தல்

உத்திராடம்

கடலை மாவு

எல்லை தேவதைக்கு இளநீர் அளித்தல்

திருவோணம்

அரிசிமாவு, கேசரி

எருக்குப் பூ மாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல்

அவிட்டம்

அவல்

வன்னி மாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல்

சதயம்

சேவை

ஹயக்ரீவர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் அளித்தல்

பூரட்டாதி

புட்டு

முருகன் கோயிலில் தேன், தினை மாவு அளித்தல்

உத்திரட்டாதி    

உளுந்து பட்சணம்

கோயிலில் பசுவிற்குக் கீரை, பழம் அளித்தல்

ரேவதி

கொத்துமல்லி துவையல்
சாதம்

அம்மன் கோயிலில் அடிப்பிரதக்ஷணம் செய்து
இனிப்பு தானம் அளித்தல்

அகஸ்தியர் : இவ்வாறாக உமையவள், ஸ்ரீ அனுசூயா தேவியிடமிருந்து போக்த குணப்ரீதி வழிபாட்டு முறைகளையும் அறிந்தாள். ஸ்ரீ அனுசூயா தேவி ஸ்ரீ பார்வதி தேவிக்கு இல்லற தர்மம் உபதேசித்த இடமே அம்பாசமுத்திரம் அருகிலுள்ள சிவசைலம் என்ற திருத்தலமாகும். அங்கு தான் ‘பார்வதி தேவி’ சிவனின் இடபாகம் பெற வேண்டி ஸ்ரீ அனுசூயா தேவி அளித்த முறையில் தான தருமங்கள் செய்து அற்புதத் தவம் புரிந்தனள்.
ஸ்ரீ அத்திரி மகரிஷியின் மகிமை
போகர் : ஸ்ரீ அத்திரி மகரிஷி ஸ்ரீ ஆயுர் தேவியின் கரபீடம் அமர்ந்து எங்ஙனம் குருதேவா?
அகஸ்தியர் : ஸ்ரீ அனுசூயா தேவியின் தபோபலனால், தான தர்ம வழிபாட்டுப் பிரார்த்தனைகளால்

  1. ஸ்ரீ அத்திரி மகரிஷியின் தபோபலனின் பாதிப் பங்கு ஸ்ரீ அனுசூயாவிற்குச் சேராது அவரிடமே தங்கிவிட்டது. இதனால் அவர் ஆயுள் விருத்தி பெற்று பலகோடி யுகங்கள் வாழ்ந்தார்.
  2. ஸ்ரீ அனுசூயா தேவியின் தீவிர போகதா தேவி உபாசனையால் அவள்தம் பூஜையின் பாதிபங்கு ஸ்ரீ அத்திரி மகரிஷியைச் சென்றடைந்தது
  3. ஸ்ரீ அனுசூயா தேவியின் தவறுகளுக்கான பாவங்கள் எவையும் ஸ்ரீ அத்திரி மகரிஷியைச் சென்று சேரவில்லை.

ஸ்ரீ அனுசூயா தேவியின் அற்புத தவத்தில் விளைந்த பயன்கள் இவை. இதனால் பிரபஞ்சத்திலேயே தபோ பலனின் சிகரமாக ஸ்ரீ அத்திரி மகரிஷி பிரகாசித்தார். அவர்தம் ஜோதி ஸ்வரூபத்தைக் கண்டு தெய்வாவதாரங்களே வணங்கி நின்றனர்.
போகர் : குருதேவா! இமாலயத் தபோபலன் பெற்றிருந்தும் ஸ்ரீ அத்திரி மகரிஷி சிஞ்சித்தும் கர்வம் கொள்ளவில்லை அன்றோ?
அகஸ்தியர் : ஆம் சிஷ்யர்களே! அதுவும் ஸ்ரீ அனுசூயா தேவியின் பதிவிரதா தன்மையினால்தான்! விண்ணை முட்டும் தெய்வானுக்கிரகம் பெற்றிருந்தும் ஸ்ரீ அத்திரி மகரிஷி சிறிதும் கர்வம் கொள்ளாது உலகெங்கும் பெண்களின் இல்லறத்தைப் பற்றிப் பிரசாரம் செய்து போகதா தேவி வழிபாட்டைப் பரப்பி மக்களுக்கெனத் தம் தவத்தை அர்ப்பணித்தார்.
ஸ்ரீ பார்வதி இடபாகம் பெறல்
அத்திரி, அனுசூயா இருவரும் சிவசைலம் வந்து சேர்ந்து அங்கு தவம் புரியும் பார்வதி தேவியைக் கண்டு வணங்கினர். இறைவனின் இடப்புறம் பெறக் கிழக்கு திக்கை நோக்கியிருந்த சிவபெருமானுக்கு நைவேத்தியமிட்டு இருவரும், இறைவா! கடுமையான நோன்பிருக்கும் ஸ்ரீ பார்வதி தேவியின் அபிலாட்சையைப் பூர்த்தி செய்து, இருவரும் கூடிய, தங்களுடைய அர்த்த நாரீஸ்வரூபத்தை அருள வேண்டும். என்று தியானித்து அமர்ந்தனர்.
கண் திறந்து பார்த்தால்…. நைவேத்தியமான உணவு மறைந்து விட்ட்து. கிழக்கே பார்த்து நின்ற இறைவனையும் காணோம்.
கல்யாணீ! என்றழைத்தவாறே சிவபெருமான் உமையவளுக்கு இடப்புறம் தந்து மேற்கே அர்த்தநாரீஸ்வரராய் எழுந்தருளினார்.
போகர் : எனவே ஸ்ரீ பார்வதி தேவி இடப்பாகம் பெற்ற திருத்தலம் சிவசைலமல்லவா?
அகஸ்தியர் : ஆம்! அதுமட்டுமல்ல, ஸ்ரீ அத்திரியும் ஸ்ரீ அனுசூயாவும் ஸ்ரீ பார்வதி நோன்பிருந்த இடத்தை வலம் வர அங்கே ஸ்ரீ ஆயுர் தேவி எழுந்தருளி, அத்திரி மகரிஷியே! உம் பணியை மெச்சி எம் கரபீடம் அளிக்கின்றோம்! அனுசூயா! ஸ்ரீ வித்யா லோகத்தில் நீ அற்புதமான சிறப்பைப் பெறுவாயாக! என்று அருளினள்.

ஸ்ரீகுண்டலினி மகரிஷி

புலிப்பாணி : குருதேவா ! ஸ்ரீ ஆயுர்தேவியின் வலதுபுறம் நான்காவது கரத்தில் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ குண்டலினி மகரிஷி, பாண்டிச்சேரி அருகில் பெரும்பாக்கம் – திருவக்கரையில் ஸ்ரீவக்ரகாளியம்மனின் திருக்கோயிலினுள் ஜீவசமாதி கொண்டுள்ள சித்த மாமுனி அல்லவா?
அகஸ்தியர் : ஆம்! இரண்டு கோடி ஆண்டுகள் தவம் புரிந்த உத்தம சித்த புருஷர் அவர். இன்றைக்குக் கலியுலகில் துர்மந்திரங்கள், துர்தேவதைகள், பில்லி, சூனியம், ஏவல், வைப்பு மந்திரங்கள், திருஷ்டி, மாய மந்திரங்கள் இவற்றால் எத்தனையோ குடும்பங்கள் அமைதியின்றி வாடுகின்றன. எதிர்வினைகளைத் தாங்குமளவிற்குப் பூஜா பலன்களை அவர்கள் பெறவில்லை. இத்தகைய தீயசக்திகளுக்கு முற்று புள்ளி வைக்கவே ஸ்ரீ குண்டலினி மகரிஷி அன்ன ஆகாரமின்றி இரண்டு கோடி ஆண்டுகள் தவம் புரிந்து ஸ்ரீ விக்ன காதினி தேவியின் தரிசனம் செய்தார்.
ஸ்ரீ விக்ன காதினி தேவி
போகர் : ஸ்ரீ விக்ன காதினி தேவி தீயசக்திகளை அழிக்கும் காளி ஸ்வரூபி அல்லவா குருவே?
அகஸ்தியர் : ஆம்! தொட்டதற்கெல்லாம் கோபம் கொள்ளும் முன்கோபிகள் ஸ்ரீ விக்ன காதினியைத் தொழுதால் சினமே வராது. சினம் கொல்லும் வனமாலியவள்.
ஸ்ரீ விக்ன காதினியின் அருள் தரிசனம் பெற்ற ஸ்ரீ குண்டலினி மகரிஷி மேலும் இரண்டு கோடி ஆண்டுகள் பல லோகங்களிலும் தவம் புரிந்தவாறே ஸ்ரீ விக்ன காதினி தேவியை வழிபட்டார். அவளுடைய மகாத்மியத்தையும் பரப்பி வந்தார்.

ஸ்ரீகுண்டலினி மகரிஷி

இத்தகைய அதிஅற்புத தவத்தால் பிரபஞ்சமெங்கும் உள்ள தீயசக்திகள், தீவினைகள், துர்சக்திகள், துர்தேவதைகள் ஆகியவற்றை அடக்கும் தபோபலனைப் பெற்றார்.
இறுதியில் கோடிக் கணக்கான தீயசக்திகளை அடக்கியவாறு திருவக்கரையில் ஸ்ரீ வக்கரகாளி திருசன்னதியில் ஜீவசமாதி கொண்டார்.
புலிப்பாணி : சற்குருவே! பில்லி, சூனியம், ஏவல்களினால் துன்பமடைந்தோர்க்கு ஸ்ரீ குண்டலினி மகரிஷி சமாதி தரிசனம் ஒரு வரப்பிரசாதமல்லவா?
ஸ்ரீ வக்ரகாளி மகிமை
அகஸ்தியர் : ஆம் சிஷ்யர்களே! தீய சக்திகளைத் தன்னிடம் ஈர்த்து அடக்கி ஆளும் வல்லமை பெற்றவர் ஸ்ரீ குண்டலினி மகரிஷியே! பௌர்ணமியன்று திருவக்கரையில் ஸ்ரீ  வக்ரகாளிக்கு அன்னம் படைத்து நைவேத்தியமிட்டு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து ஸ்ரீ குண்டலினி மகரிஷியைத் தரிசனம் செய்தால் சிறந்த பலன்களைத் தரும்.
மந்திரவாதிகளும் பில்லி, சூன்ய, ஏவல் வைப்போர் எவரும் இத்தலத்திற்கு வருவதற்கே அஞ்சுவர். ஏனெனில் துர்சக்திகளிடமிருருந்து மக்களை விடுவித்து அற்புதமான மக்கள் சேவையைச் சிறந்த இறைப்பணியாக இன்றும் செய்து வருகிறார் ஸ்ரீ குண்டலினி மகரிஷி. எவரும் இதுவரை செய்ய இயலாத அற்புத தவத்தைப் புரிந்து அதனைத் தன்னலமின்றி மக்களின் நலனுக்காகத் தியாகம் செய்து அருள்புரியும் உன்னதமான சித்த மகரிஷி இவர்.
ஸ்ரீ விக்ன காதினி பூஜை
போகர் : ஸ்ரீ விக்ன காதினி தேவியைச் சாதாரண மக்கள் வழிபடும் முறை யாதோ குருதேவா?
அகஸ்தியர் : பயத்தம் பருப்பு அரைத்த மாவுடன் சர்க்கரை கலந்து குறிப்பாகச் சதுர்த்தி திதியன்று கோயில்களில் ஏழைகளுக்கு அளிப்பதுடன் சாமந்தி பூ தானம் செய்வதும் ஸ்ரீ விக்ன காதினி தேவிக்குப் ப்ரீதி அளிக்க கூடியதாகும்.
நவராத்திரியில் சதுர்த்தியன்று நான்கு வயது பெண் குழந்தையை அலங்கரித்து ஆபரணமிட்டு வணங்குதலோடு மேற்கண்ட சாமந்தி பூ, இனிப்பிட்ட பயத்த மாவு தானங்களும் ஸ்ரீ விக்னகாதினி தேவியின் பரிபூர்ண அருளைப் பெற்று தரும்.
தீய சக்திகளின் பிறப்பு
புலிப்பாணி : குருவே! தீய சக்திகள் உருவாவதன் காரணமென்ன?
அகஸ்தியர் : துர்தேவதைகளையும் துர்சக்திகளையும் உபாசிப்பதால் கிட்டும் சக்திகளைப் பலர் தவறான முறைகளுக்கு பயன்படுத்தி மற்றவர்களுடைய சீரான வாழ்வைக் குலைக்கின்றனர். ஆனால் இறைவன் சிருஷ்டியில் காரண காரியமின்றி எதுவும் நடைபெறுவதில்லை.

சூன்ய வினைகளுக்குக் காரணம்
உயர் பதவியிலிருப்பவர்கள் வானளாவிய தம் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், மற்றவர்களை மிரட்டிப் பணிய வைத்து தமக்கு தேவையான, சுயநலமான வேலைகளைச் சாதித்துக் கொள்ளுதல், அதிகார தோரணையில் தவறான முறைகளில் பணம் பெறுதல், தம் அபரிமித உடல் சக்தியால் எளியவர்களை வதைத்துப் பணம் பறித்தல், பண்ணையார் தோரணையில் பிறர் உழைப்பால் பொருள் சேர்த்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவாமல் வாழ்தல் போன்ற பாவச் செயல்களைப் புரிவோர் அடுத்த ஜென்மங்களில் பில்லி, சூன்ய துர்சக்திகளால் அவதியுறுகின்றனர்.
இது மட்டுமல்லாது நாள், கிழமை பாராது செய்யும் சில செயல்கள் எதிர் விளைவுகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் உட்பகையாக, உள்ளிருந்து வரும் தீயசக்திகளாக அமைகின்றன.
உதாரணமாக அனைத்துத் தினங்களிலும் சவரம் செய்து கொள்ளலாகாது. அதிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அறவே கூடாது. மீறிச் செய்திடில் பல துன்பங்கள் உண்டாகும், தீய சக்திகள் பெருகும். இவ்வாறு தீயவற்றை நாமே உருவாக்கிக் கொன்கிறோம்.
போகர் : இந்த் தீயசக்திகளை எவ்வாறு தடுப்பது குருதேவா?
அகஸ்தியர் : இதற்கான விதிமுறைகளையும், பரிகாரங்களையும் ஸ்ரீ குண்டலினி மகரிஷி வகுத்து தந்துள்ளார். அதை மக்கள் அறிந்து கடைபிடித்து எளிய வழியில் தீய சக்திகளிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்
இவ்வாறு பல கோடி லோகங்களிலுமுள்ள தீயசக்திகளைத் தம் தபோபலத்தால் கட்டி வைத்து மக்களைக் காத்து திருவக்கரை ஜீவசமாதியில் அற்புத சேவையைப் புரிந்துவரும் ஸ்ரீ குண்டலினி மகரிஷி ஸ்ரீ ஆயுர்தேவியின் நான்காவது வலகரத்தில் அமரும் பாக்கியத்தைப் பெற்றார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் கரத்தில் அமர்ந்துள்ள ஒவ்வொரு மகரிஷியும், சித்தரும் மக்களுடைய பலவகைப்பட்ட துன்பங்களைக் களைவதற்கெனத் தங்களுடைய தவ பலன்களை அளித்து அருள் புரிகின்றனர். ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவருள் தரிசனம் குருவருளால் அனைத்துத் துன்பங்களையும் மாய்த்து சௌபாக்கிய வாழ்வைத் தர வல்லதாகும்.

ஸ்ரீ குண்டலினி மஹரிஷி அருளிய சூன்ய திதி, சவுன நாட்களின் விளக்கங்கள்

ராசிகள்

சூன்யதிதிகள்

மேஷம்

சஷ்டி

ரிஷபம்

சதுர்த்தி, திரயோதசி

மிதுனம்

பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடகம்

சப்தமி

சிம்மம்

த்ரிதியை, சஷ்டி, நவமி, திரயோதசி

கன்னி

பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம்

பிரதமை, துவாதசி

விருச்சிகம்

தசமி

தனுசு

த்விதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம்

பிரதமை, த்ரிதியை, துவாதசி

கும்பம்

சதுர்த்தி

மீனம்

துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

அமாவாசையும், பௌர்ணமியும் பரிபூரண நாட்கள்ளாதளின் எல்லா சுபச் செயல்களுக்கும் ஏற்றவை

குறித்த ராசிக்காரர்கள் அவரவர்க்குரித்தான சூன்ய திதிகளில் அனைத்து நற்காரியங்களையும், நகம், சவரம், முடிவெட்டுதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூன்ய திதிகளில் விஷ்ணு சகஸ்ர நாமம், கால பைரவர் துதி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைக் கூட்டாக பாராயணம் செய்தலால் சூன்ய திதிகளின் தீய விளைவுகளைத் தணிக்கலாம்.

தலைமுடு வெட்டுதல், முகக்ஷவரம், நகம் வெட்டக் கூடாத நட்சத்திர நாட்கள்
குண்டலினி மஹரிஷி அருளியது

நட்சத்திரம் புராண நிகழ்சிகள் விளைவுகள்
பரணி

கிருஷ்ணன் - ஸ்யமந்தக மணி

மணி திருடியதாக வீண் பழி

கிருத்திகை

வீரபாகு தேவர்-கிரௌஞ்சமலை

மாயையால் மயக்கம்

திருவாதிரை      

சகுனி

துரியோதனிடம் சிறைப்படல்

ஆயில்யம்

இந்திரன் - அகல்யை

யோனியுடல் சாபம்

மகம்

எமதர்மன் - மார்க்கண்டேயன்

பதவி பறிப்பு

பூரம்

தசரதன் - இரவு வேட்டை
சப்தவேதி-ரிஷிகுமாரன்

ரிஷி சாபம்

விசாகம்

சூரபத்மன் - முருகன் கோபம்

தலைவன், உறவினர் மேலதிகாரி கோபம்

கேட்டை

கர்ணன் - இந்திரன் கவச குண்டலம்      

இழப்பு

மூலம்

கம்சன் - கிருஷ்ணன்

அழிவுகாலம்

பூராடம்

சிசுபாலன் - கண்ணன்

அழிவுகாலம்

பூரட்டாதி

தருமன் - சூதாட்டம்

நாடு, சொத்து இழப்பு

மேலும் இத்தகைய நட்சத்திர நாட்களில் மட்டுமல்லாது அவரவர் ராசிக்குரித்தான சூன்ய திதிகள், செவ்வாய், வெள்ளி முதலிய நாட்களில் மழித்தல், நகம் வெட்டுதல் கூடாது.
தகாத நாட்களில் சவரம் செய்தமையால் பல புராண புருஷர்கள், இதிகாச தேவமூர்த்திகள், பாத்திரங்கள் மேற்கண்டவாறு பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

ஸ்ரீஅஹிர்புத்ன்ய மகரிஷி

போகர் :- குருதேவா! ஸ்ரீ ஆயுர்தேவியின் இடது முதல் கரத்தில் காட்சி தரும் ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷியின் மேன்மையை பற்றி விளக்க வேண்டுகிறேன்
அகஸ்தியர் :- ஒவ்வொரு சித்த புருஷரும் மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தையும் துடைக்கும் பொருட்டுத் தவம்புரிந்து தங்களைத் தியாகம் செய்து தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். மக்களுடைய கோடானு கோடி துன்பங்களைத் துடைத்திடவே பல கோடி சித்தர்கள் அவதரித்துள்ளனர். எனவே மக்களுக்காகச் சுயநலமின்றி அனைவரும் இறையருளால் சேவை செய்திடவேண்டும்.  தனக்கெனத் தன் குடும்பத்திற்கென வாழ்தலால் ஒரு பயனுமில்லை. இவ்வாறு மீண்டும் மீண்டும் கோடி ஜன்மங்கள் எடுத்துச் சுயநல வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன்?
ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி
ஸ்ரீ சுதர்ஸன மகாமந்திரத்திற்குரிய ரிஷியான ஸ்ரீ அஹிர் புத்ன்ய மகரிஷி காசியில் கங்கைக் கரையின் 64 விசேஷமான கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படித்துறையில் தம் தந்தையின் அஸ்திக் கலசத்தைத் தாங்கியவாறே தவமிருந்து ஸ்ரீ நிதிப்ரபா என்னும் தேவியை வழிபட்டுப் பித்ரு காரியங்களைச் செவ்வனே செய்து வந்தார்.
ஸ்ரீ நிதிப்பிரபா தேவி
ஸ்ரீ அஹிர் புத்ன்ய மகரிஷி தந்தை, தம் புதல்வன் அற்புதத் தவங்களைப் புரிந்து பல்லோக ஜீவன்களின் பித்ரு கடன்களைத் தீர்க்கும் நல்வழிகாட்டியாக, சற்குருவாக, மகரிஷியாக மலர இருப்பதைத் தீர்க்க தரிசனமாக அறிந்தார். கங்கையில் அவர் தம் உடலை உகுத்தபோது தன் புதல்வன் அஹிர்புத்ன்ய மகரிஷியிடம் ஸ்ரீ நிதிப்ரபா தேவி உபாசனைகளைக் கற்பித்து,
அஹிர்புத்ன்யா! ராசி-கிரக சங்கமங்களின் சூட்சுமத்தையும் தோஷ பரிகார நிவர்த்திகளையும் ஸ்ரீ நிதிப்ரபா தேவி உனக்களித்து மகிழ்வாள். அதனை மக்களுக்கு எளிதில் புரியும்படி விளக்குவாயாக என்றார்.

ஸ்ரீஅஹிர்புத்ன்ய மகரிஷி

அஹிர்புத்ன்ய மகரிஷி, தந்தையே! கிரக நிலைக் கல்வி பிரபஞ்சம் போல் விரிந்ததாயிற்றே! அடியேனால் அனைத்தையும் கிரகிக்க ஆயுள் போதுமா? அதற்குரித்தான அறிவு வேண்டாமா? என்று வினவினார்.
கவலையுறாதே அஹிர்புத்ன்யா! ஸ்ரீ நிதிப்ரபா தேவியருளால் அனைத்தும் கிட்டும். என் அஸ்திக் கலசத்தைத் தாங்கியவாறு ஸ்ரீ நிதிப்ரபாவைப் பூஜித்துப் பல க்ஷேத்ரங்களுக்கும் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் யாவையும் தரிசிப்பாயாக! எங்கு என் அஸ்தி, தாமரையாக மலர்கின்றதோ அப்போதுதான் என் ஆத்மாவின் நற்கதி பூர்ணம் பெறும் என்பதையும், ஸ்ரீ நிதிப்ரபா தேவியின் அருளும் நமக்குக் கனிந்து பரிபூர்ணமடைந்தது என்பதையும் அறிவாயாக! தாமரையாக மலரும் அவ்விடமே உன்னதமான பித்ருஸ்தலம் என்பதையும் ஸ்ரீ தேவி உணர வைப்பாள் என்றார். அன்றிலிருந்து கிரக சங்கம நிலைகளையும், தோஷ பரிகார முறைகளையும் சற்குருமார்கள், சத்சங்கங்கள் மூலமாக பரப்பி கோடி கோடியாம் ஜீவன்களின் பித்ரு கடன்களைத் தீர்க்க அருள்புரிவாயாக.
கிரக சங்கம பலன்கள்
அஹிர்புத்ன்ய மகரிஷி, கங்கையின் 64 கட்டங்களிலும், ஒவ்வொரு கட்டத்தின் ஒவ்வொரு படித்துறையிலும் ஓராண்டு அமர்ந்து ஸ்ரீ நிதிப்ரபா தேவியைத் தியானித்து வழிபட்டார். ஸ்ரீ தேவியும் கிரக ராசி சங்கம நிலைகளை அவருக்கு விளக்கியருள அதைத் தம் அறிவால் பெருக்கிக் கொள்வார்.
உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில், மேஷ ராசியில், குரு, சுக்கிரன் என்றவாறு கிரக சங்கமங்கள் இருக்கும். இவ்வாறு 12 ராசிகளிலும் பல கிரகங்கள் பல்வேறு நிலைகளில் சங்கமமாகும். இத்தகைய கிரக சங்கமங்களினால் நன்மைகளும் தோஷங்களும் உண்டாகும். இந்தத் தோஷங்களுக்கான பலன்களை, பரிகார முறைகளை ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி வகுத்துள்ளார்.
காசியிலும் கயாவிலும் மட்டுமின்றிப் பல க்ஷேத்திரங்களிலும் 6400 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ நிதிப்ரபா தேவியின் திருவருளால் ராசி கிரக சங்கம நிலைகளைப் பற்றிய விசாலமான அறிவு பெற்று இறுதியாக தமிழகத்தில் கும்பகோணத்தில் காவேரிக்கரையிலுள்ள சக்கரப் படித்துறைக்கு வந்து சேர்ந்தார் அஹிர்புத்ன்ய மகரிஷி.
கும்பகோணம் சக்கரப் படித்துறை மகிமை
அஹிர்புத்ன்ய மகரிஷி, புனிதமான காவிரி நதி தீரத்தில் அமைந்துள்ள சக்கரப் படித்துறையில் தம் தந்தையின் அஸ்தி கலசத்தை வைத்துத் தர்ப்பணாதி பிதுர் கடன்களையும் தான தர்மங்களையும் செய்து ஸ்ரீ நிதிப்ரபா தேவியையும் வழிபட்டார். பூஜைகள் முடிந்தவுடன்…… கண கணவென்று மணி ஒலிக்க…..
அஸ்திக் கலசத்திலிருந்து தாமரைப் புஷ்பங்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து விரிந்து காவிரி நதியில் அழகிய ஆரமாய்க் கண்ணைப் பறிக்கும் ஒளியோடு மிதந்து சென்றன.
அஹிர்புத்ன்ய மகரிஷி அளவிலா ஆனந்தமடைந்தார். ஆங்கே ஸ்ரீ நிதிப்ரபா தேவி தரிசனம் தந்து, அஹிர்புத்ன்ய ரிஷியே! தங்களுடைய தவப் பெருநிலை கண்டு மகிழ்ந்தோம். வரும் யுகங்களில் பிதுர்காரியங்களைச் சரிவரச் செய்யாமையால் பல குடும்பங்களில் சந்ததியின்மை, வறுமை, பெரிய வயது கடந்தும் பெண்கள் திருமணம் ஆகாமை, கொடிய வியாதிகள் போன்ற துன்பங்களினால் மக்கள் அவதியுறுவர்.

சக்கரப் படித்துறை கும்பகோணம்

கும்பகோணத்தில் சக்கரப் படித்துறையில் செய்யும் அமாவாசை, கிரகண, மாதப்பிறப்பு தர்ப்பணங்களையும், ஏனைய பித்ரு சிரார்த்த தர்ப்பணங்கள் பிண்டங்கள் அனைத்தையும் நீயே ஏற்று பிதுர் சாபங்கள் நிவர்த்தி செய்து மக்களைக் கரையேற்றுவாயாக! என்று அருள்பாலித்தனள்.
எனவே அமாவாசை, கிரகணம், மாதப் பிறப்பு, சங்கராந்தி போன்ற விசேஷமான நாட்களில் கும்பகோணம் சக்கரப் படித்துறையில், தர்ப்பணாதிகளுடன் இயன்ற அளவு அன்னதானமும் செய்திடில் ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷியே அவற்றை ஏற்று பித்ரு சாபங்களையும் நிவர்த்தி செய்கின்றார்.
போகர் :- ஸ்ரீ கயாஸூர மகரிஷியின் அருள்முறை ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷியிடமிருந்து வேறுப்பட்டதல்லவா குருதேவா?
அகஸ்தியர் :- ஆம் போகா!! வசதியுள்ளோர் காசி, கயா சென்று பித்ரு கடன்களைத் தீர்க்கலாம். தெற்கிலுள்ள ஏழை, எளிய மக்கள் என் செய்வர்? அமாவாசைத் தர்ப்பணத்தைச் சக்கரப் படித்துறையில் பக்தி சிரத்தையாகச் செய்பவர்களுக்கு அஹிர்புத்ன்ய மகரிஷி கருனையால் அவர்கள் காசிக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை மகரிஷியே அருள்வார். அதுபோல கயாவில் ஸ்ரீ கயாஸூர மகரிஷியை பக்தி சிரத்தையோடு தியானிப்போர்க்கு அவர் அருளால் சக்கரப் படித்துறையில் புனித காவேரி ஸ்நான வாய்ப்பு வாழ்வில் தேடிவரும். மேலும் சக்கரப் படித்துறைப் பரிகாரங்கள் கிரக சங்கம தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்.
போகர் :- ஞான குருதேவா! சக்கரைப் படித்துறையா! சக்கரப் படித்துறையா?

சக்கரப் படித்துறை – பெயர் விளக்கம்
 அகத்தியர் :- (புன்முறுவலுடன்) ஸ்ரீமன் நாராயணப் பெருமாளுக்கே இந்த சந்தேகம் வந்தது, உனக்கு வந்ததில் வியப்பொன்றும் இல்லையே! பித்ரு தேவர்களின் நாயகனான பெருமாள், ஸ்ரீ அஹிர்புத்ன்யரைச் சோதிக்க வந்தார். அன்றுதான் அஹிர்புத்ன்ய மகரிஷியின் தந்தையின் அஸ்திக் கலசத்தில் தாமரை மலர்ந்த நன்னாள். மகரிஷி, ஆனந்தத்தோடு, சர்க்கரைப் பொங்கல் படைத்து நைவேத்தியமிட்டுத் தான் உண்பதற்குமுன் ஓர் அதிதிக்காகக் காத்திருக்க ஸ்ரீ பெருமாள் ரிஷியாக வந்து சேர்ந்தார்.
சர்க்கரை! சக்கரம்!
வந்த முனிவரிடம் ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை எடுத்து அளித்தார். முனிவரோ பிசாதத்தில் தம் வலது கையைப் பதித்து, சர்க்கரையா? சக்கரமா? என்று கேட்டு பலமாக சிரித்தார். அஹிர்புத்ன்ய மகரிஷி ஒன்றும் புரியாது பிரசாதத் தட்டை நோக்க, சர்க்கரைப் பொங்கலின் மேல் விஷ்ணுவின் சங்கு சக்கர முத்திரை பொறிக்கபட்டிருந்தது கண்டு திகைத்தார். சர்க்கரைப் பொங்கலில் சக்கரம்! சர்க்கரைப் பொங்கல், விஷ்ணு சக்கரப் பொங்கலாயிற்றோ!
ஆம்! கயாவில் ஸ்ரீ விஷ்ணு பாதங்கள்! அதுபோல சக்கரப் படித்துறையிலும் தம் முத்திரையைப் பதித்து இங்கும் தம் அங்கீகாரத்தை வெளிக் காட்டினார் ஸ்ரீ மகா விஷ்ணு! இன்றைக்கும் கும்பகோணம் சக்கரப் படித்துறையின் அருகில், முனிவராக வந்து அருள் பாலித்த ஸ்ரீ மஹா விஷ்ணு எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் காணலாம்.
அமாவாசை போன்ற விசேட பித்ரு தினங்களில் ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி இக்கோயிலுக்கு வந்து செல்வதை குருவருள் பூண்டால் கண்கூடாகக் காணலாம்.

சர்க்கரை வியாதி நிவாரணம்
அஹிர்புத்ன்யா! சர்க்கரைப் பொங்கல் தந்து சக்கரப் படித்துறையைப் புனிதமாக்கியதால் யான் இவ்விடமிருந்து சர்க்கரை வியாதியை நீக்கும் தன்வந்திரியாகவும் இருப்பேன். பிரதமை முதல் அமாவாசை, பௌர்ணமி வரை ஒவ்வொரு திதியிலும் என்னை நினைத்து யாம் குறிப்பிடும் உணவுப் பக்குவத்தை மேற்கொள்பவர்களுக்கு அவர்களுடைய சர்க்கரை வியாதியைக் குணமாக்குவேன். இதில ஆழ்ந்த நம்பிக்கையே அற்புத பலனையளிக்கும்! என்று ஸ்ரீ பெருமாள் அருளி ஒவ்வொரு திதிக்கும் உரித்தான உணவு முறைகளையளித்தார்.

எனவே, சர்க்கரை வியாதியால் வருந்துபவர்களுக்கும் சர்க்கரை வியாதி மருத்துவத்தில் சிறப்புப் பெற விரும்புபவர்களுக்கும் சக்கரப் படித்துறைப் பெருமாள் சிறப்பான பலன்களை அளிக்கிறார். கும்பகோணம் சக்கரப் படித்துறையில் அமாவாசை, மாதப் பிறப்பு, சனிக்கிழமை, திருவோண, புனர்பூச, மூல நட்சத்திரங்கள், சங்கராந்தி, கிரகண காலங்களில் இங்கு தர்ப்பணம், பிண்டங்கள், பித்ரு ஹோமங்கள், சிரார்த்தங்கள், தான தர்மங்கள், உத்தரக் கிரியைகள் போன்ற பித்ரு காரியங்களைச் செய்திடில் ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி இவற்றை ஏற்று வஸு, ருத்ர, ஆதித்ய பித்ருக்களுக்கும், பித்ரு தேவர்களுக்கும் நேரிடையாக அளித்து அற்புதமான வரங்களை பெற்று தருகிறார். சர்க்கரை வியாதிக்காரர்கள் மேற்கண்ட திதி உணவு முறை, தானதர்மங்களைச் செய்தால் அற்புத குணங்கள் ஏற்படும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கான திதி உணவு முறை
ஸ்ரீ அஹிர்புத்ன்ய மஹரிஷி அருளியது

திதிகள் உணவு வகைகள்
பிரதமை

வாழைத்தண்டு பொரியல்

த்விதியை

கோவைக்காய் (பொரியல்)

த்ரிதியை

சிறுகீரை (பருப்புடன் மிதமாக வறுவல்)

சதுர்த்தி

வாழைப்பூ பொறியல் / கறி

பஞ்சமி

நூல்கோல் (வேக வைத்து உண்ணுதல்)

சஷ்டி

அவரைக்காய் பொரியல்

சப்தமி

பிடியளவு துளசி + மிளகு

அஷ்டமி

ஒரு நெல்லிக்காய் வற்றல் + ஜலம்

நவமி

வெந்தயக்கீரை கூட்டு

தசமி

பாகற்காய் கூட்டு பொரியல்

ஏகாதசி

சுண்டைக்காய் கூட்டு

துவாதசி

முள்ளங்கியை வேகவைத்து உண்ணுதல்

த்ரயோதசி

21 வில்வ இலை + மிளகு + மாலையில் மாதுளம் பழச்சாறு

சதுர்த்தசி

அகத்திப்பூ பொரியல்

அமாவாசை / பௌர்ணமி

நீராரை (ஆரா) கீரை கூட்டு

அந்தந்த திதியில் காலை உணவு இதுவே, மதியம், இரவு அவரவர் விருப்பப்படி உண்ணலாம்.

ஸ்ரீசாரமா முனிவர்

போகர் : ஸ்ரீ ஆயுர்தேவியின் இரண்டாவது இடக்கரத்தில் அமரும் பேறு பெற்ற சாரமா முனிவர் பற்றி விளக்க வேண்டுகிறோம் குருதேவா!
ஸ்ரீ பாபக்னி தேவி
அகஸ்தியர் : ஸ்ரீ பாபக்னி தேவி என்னும் தேவியை வழிபட்டு பல அற்புத வரங்களைப் பெற்றவர் சாரமா முனிவர். சஷ்டித் திதியில் ஸ்ரீ பாபக்னி தேவியைப் பூஜித்துத் தினமும் கோவிலில் பசுவிற்கு அகத்திக் கீரை அளித்து வந்த சாரமா முனிவர் தம்முடைய ஒவ்வொரு அங்கமும் புனிதம் பெற வேண்டித் தவம் புரிந்தார். ஒவ்வொர் அங்கத்திற்குமென 1008 சஷ்டித் திதிகளில் ஸ்ரீ பாபக்னி தேவியைப் பூஜித்து உபவாசமிருந்து தேஜோமய ரூபம் பெற்றார். பல்லாயிரம் உறுப்புகளுக்காகப் பல லட்சம் சஷ்டித் திதிகளில் நோன்பிருந்த அவருடைய நகக் கண்களில்கூட ஜோதிப் பிரகாசம் தெரியும். அந்த அளவிற்குப் பாதாதி கேசமாக அனைத்து அங்கங்களாலும் இறைப்பணி புரிந்து வந்தார்.
புலிப்பாணி : சற்குருவே! மனிதன் தன்னுடைய அங்கங்களால் பல தவறுகளைச் செய்கின்றான். முன் ஜென்ம வினைகளுடன் இப்பிறவியில் சேர்கின்ற வினைகளும் அவனைத் துன்புறுத்துகின்றன. இதற்கானப் பிராயச்சித்தங்களைச் சாரமா முனிவர் அருளியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் குருதேவா
அகத்தியர் : நன்கு புரிந்து கொள்ளுங்கள் சிஷ்யர்களே! பிராயச்சித்தம் செய்தால் பாவங்கள் கரைவதில்லை. பிராயச்சித்தம் என்பது ஒரு தவறு செய்ததற்காக மனமார வருந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பரிகாரங்கள் செய்தலாகும். பரிகாரத்திற்குப் பின்னும் அதே தவறுகள் தொடர்ந்தால் பாவங்கள் பெருகி அதிகமாக வருத்தும். நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கும் மனிதன் தன் வாழ்வில் ஏதெனும் ஒரு நாளாவது தன் தவறுகளுக்கு வருந்தித் திருந்த மாட்டானா என்ற உயரிய எண்ணத்தில்தான் சற்குரு மூலமாகக் கொடிய பாவங்களுக்கும் பரிகாரங்கள் இறைவனால் தரப்படுகின்றன.

ஸ்ரீசாரமா முனிவர்

மனிதன் தன் உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களினால் செய்யும் பாவங்களுக்கு சாரமா முனிவர் பிராயச்சித்தங்களைத் தந்துள்ளார். சாரமா முனிவர் அருளியுள்ள, அனைத்து உறுப்புக்களினால் செய்த பாவங்களுக்கான பரிகார முறைகளைக் கடைபிடித்து கோடிக்கணக்கானவர்கள் நல்வழியில் திருந்தியுள்ளனர்.
போகர்: சாரமா முனிவர் கரிகாலச் சோழன் காலத்தவரா? குருதேவா?
அகத்தியர் : சாரமா முனிவரோ பல யுகங்களில் இதே பெயரில் அவதரித்துப் பல சேவைகளைப் புரிந்துள்ளார். மகரிஷிகள் எல்லோரும் இறை நிலையைப் பரிபூரணமாக அடைந்தவர்கள். இறைவனின் விருப்பத்திற்கிணங்க பல வேறு சேவைகளைச் சாதிக்கப் பல்வேறு யுகங்களில் அதே பெயரிலோ, வேறுபல நாமங்கள் தாங்கியோ சிருஷ்டிக்கப் படுகின்றனர். இவ்வகையில் ஸ்ரீ அத்திரி மகரிஷி, ஸ்ரீ குண்டலினி மகரிஷி, சாரமா முனிவர் ஆகியோர் பல யுகங்கலில் அவதரித்துச் சேவை புரிந்துள்ளனர். காலக் கோட்பாடும், சரித்திர வரையறையும் இவர்களுக்கு உரித்தானவையல்ல. இவர்களைச் சரித்திரப் பாடத்திற்குள் ஆராய்ச்சியாளர்கள் புகுத்தினால் குழப்பமே ஏற்படும். ஆன்மீக முனிவர்களின் சரிதம் விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டது

யோக மஹிமை
போகர் : குருவே! இவர் திருச்சியில் செவ்வந்தி நாதராக அருள் புரியும் தாயுமான சுவாமிக்குத் திருப்பணிகள் புரிந்துள்ளாரல்லவா?
அகத்தியர் : ஆம், சாரமா முனிவர் தம் தபோபலத்தினால் நாகலோகத்திலிருந்து பூலோகத்திற்குச் செவ்வந்தி வித்துக்களைக் கொணர்ந்து செவ்வந்தி வனங்கள் அமைய வழிவகுத்தவதார். இவரே செவ்வந்தி நாதரென திருச்சி மலைக்கோட்டை சிவனுக்குப் பெயர் சூட்டினார்.
புலிப்பாணி : குருதேவா! தற்காலத்தில் யோகம், கண்டம், கரணம் இவற்றைக் கணித்துச் சுபநாட்கள் அமைப்பதில்லையே? இதனால் பல எதிர் விளைவுகள் நேரிடுமே!
அகத்தியர் : உண்மையே! பஞ்சாங்கத்தைப் பார்த்து நாள் கணித்துச் சுபமுகூர்த்தங்கள் அமைந்தும், திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லையே என்று மனம் வருந்துவோருண்டு. சுபநாட்கள் பாராது காரியம் செய்தால் எதிர்விளைவுகள், குறிப்பாக நோய்களாகவே அமையும். சில குறிப்பிட்ட நோய்களுக்காகக் குறித்த யோகத்தில் சில தான தர்மங்களைச் செய்வாராகில் அத்தகைய நோய்கள் தீரும் வழி காணலாம். இத்தகைய யோக தான தர்ம வழிமுறைகளை ஸ்ரீ பாபக்னி தேவியின் திருவருளால் சாரமா முனிவர் அருளியுள்ளார்.
யோகங்கள் பலவகைப்படும். அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம் என யோகங்கள் பல உண்டு. நாள் (திதி), கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் இவை ஐந்தும் கூடிய பஞ்சாங்கத்தில் யோகங்களைப் பற்றி சிறப்பான விளக்கங்களை சாரமா முனிவர் அளித்துள்ளார்.
இது தவிர உடல் உறுப்பு ஒவ்வொன்றாலும் செய்த தவறுகளுக்கும் பிராயச்சித்த முறைகளை அருளியுள்ளார்
போகர் : உடல் உறுப்புகளால் செய்திடும் பாவங்கள் தீர வழிகண்டிடில் மனித குலத்திற்கு அது பெரும் பரிசாகவே அல்லவா அமைகிறது குருதேவா?
அகத்தியர் : உண்மையே! இத்தகைய பிராயச்சித்த முறைகளைப் பெறுவதற்குச் சாரமா முனிவர் பலகோடி ஆண்டுகள் தவமிருந்து தம் அங்கங்கள் அனைத்தையும் புனிதப்படுத்திக் கொண்டார். இதனால் தேஜோமயமான தேக சக்தியைப் பெற்ற அவர் தம் உடலைச் சட்டையெனக் கழற்றி ஜீவனைக் களைந்தபோது, அக்னி பகவானே அந்தச் சரீரத்தைப் பஸ்மம் செய்ய இயலாது திகைத்தார் என்றால் ஸ்படிகமான அவர் சரீர மேன்மையை என்னென்று சொல்வது! எனவேதான் ஸ்ரீ ஆயுர்தேவி, ஜீவ ரகசியமாகச் சாரமா முனிவரைத் தம் கரத்தில் தாங்கிச் சிறப்பித்தனள்.

நோய் நீக்கும் யோக தானங்கள்
சாரமா முனிவர் அருளியது

பாவம் செய்யும் உறுப்பு பாவத்தால் விளையும் நோய்கள் / தோஷங்கள் / சாபங்கள் பரிஹாரம் செய்ய வேண்டிய யோக நேரம் நைவேத்யம்/தானம் வழிபட வேண்டிய கோயில்/மூர்த்தி (மூர்த்திக்கான காயத்ரீ மந்திர ஜபத்துடன்)
தலை தந்தை வகையில் திவசம் செய்யாத தோஷங்கள் விஷ்கம்பம் புட்டு ஹயக்ரீவர்
கண் கண் புரை, கட்டி முதலிய நோய்கள் ப்ரீதி பேணி தத்தாத்ரேயர்
காது ஒட்டு கேட்கும் பழக்கம், வாயு அடைத்து காது கேட்காத நோய்கள் ஆயுஷ்மான் வடை வராஹஸ்வாமி
நாசி நுரையீரல் நோய்கள் சௌபாக்கியம் இடியாப்பம் த்ரிவிக்ரமஸ்வாமி
உதடு உதடு/வாய் சம்பந்தமான நோய்கள்(புற்றுநோய்), பொய் சொன்ன தோஷம் சோபனம் பாயாசம் ராமன்
கன்னம் அன்ன துவேஷங்கள், எதிரிகளால் துன்பங்கள் அதிகண்டம் பாலன்னம் கிருஷ்ணன்
கை வாத நோய்கள், நரம்பு வியாதிகள் சுகர்மம் கேழ்வரகு அடை ஸ்ரீ நரஸிம்மர்
தோள் மூட்டு நோய்கள் திருதி கோதுமை பலகாரம் கேசவர்
மார்பு மன நோய்கள் சூலம் தேன்குழல் சுதர்சனர்
வயிறு கர்ப்ப சம்பந்தமான நோய்கள் கண்டம் தேங்காய் சாதம் குரு பாதுகை நமஸ்காரம்
இடுப்பு பிறர் சொத்துக்களை அபகரிப்பதால் ஏற்படும் கொடிய பாவங்கள் விருத்தி தோசை சங்கரநாதர்
அடிவயிறு குறைவான ஆடை அணிவதால் வரும் மானபங்கங்கள் துருவம் மோதகம், சாதம் கணேசர்
தொடை நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் வியாகதம் மிளகுபொடி முருகர்
முழங்கால் கடன்கள் ஹர்ஷனம் வடை ஹனுமார்
பாதம் அவமரியாதை, பிறர் முன் இகழப்படுதல் வஜ்ரம் தயிர்சாதம் தாமோதரர்
விலாப்புறம் புட்ட நோய்கள் சித்தி புளியோதரை புருஷோத்தமர்
முதுகு அனாதையாகுதல், பிள்ளைகளால் நிராகரிக்கப்படுதல் வ்யதீபாதம் பிரண்டைத் துவையல் சாதம் சரபேஸ்வரர்
பின்கழுத்து குழந்தைகளுக்கான நோய்கள் வரீயான் எலுமிச்சை சாதம் பிரத்யங்காரா
பின்பகுதி(உட்காரும் இடம்) பதவி இழத்தல் பரிகம் கடலை உருண்டை சின்னமஸ்தா தேவி
ஆண்குறி ஏமாறுதல், சொத்துக்களை இழத்தல் சிவம் கொத்துக்கடலை சாதம் கார்த்யாயன ரிஷி
பெண்குறி பித்த, மயக்க நோய்கள் சித்தம் அவரை சாதம் விஜயா தேவி
ரோமம் அலுவலகத்தில் பிறரால் துன்பங்கள் சாத்தியம் பருப்பு சாதம் சரஸ்வதி
நகம் தாக நோய்கள், இருதய வியாதிகள் சுபம் அவல் உப்புமா காயத்ரி
இமை குழந்தைகளின் ஒழுக்கமின்மை சுப்பிரம் லட்டு லலிதா
புருவம் கணவனுக்குப் பேராபத்து பிராமியம் ஜிலேபி பிராம்ராம்பிகை
தொப்புள் கண்பார்வைக் கோளாறுகள் மாஹேந்திரம் மொச்சை சாதம் மஹேஸ்வரி
நெற்றி கணவனுக்கு ஆயுள் குறைதல் வைதிருதி போளி வைதீஸ்வரர் கோவில்

ஸ்ரீ பாபக்னி தேவி பூஜை
புலிப்பாணி : ஸ்ரீ பாபக்னி தேவியை எவ்வாறு வழிபட வேண்டும், குருதேவா!
அகத்தியர் : சஷ்டி திதியில் கோயிலில் பசுமாட்டிற்கு அகத்திக் கீரை உணவளித்து வணங்குதல் வேண்டும். நவராத்திரி சஷ்டித் திதியில் ஆறு வயது பெண் குழந்தைக்கு அலங்காரம் செய்வித்துப் புத்தாடைகள் அளித்து ஆபரணங்கள் அணிவித்து வணங்கி மகிழ்ந்திட்டால் ஸ்ரீ பாபக்னி தேவி ஆனந்தமுற்று அருள் பாலிக்கின்றாள்
அங்கஹீனம் உடைவர்களுக்கு
போகர் : அங்கஹீனம் உள்ளவர்களுக்கு ஏதேனும் நல்வழி காட்டப்பட்டுள்ளதா குருதேவா?
அகத்தியர் : இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் சாரமா முனிவரையே கண்கண்ட குருவாக போற்றி வழிபட்டால் தக்க பலன்கள் கிட்டும். ஸ்ரீ சாரமா முனிவரை வழிபட்டோருக்கு ஸ்ரீ புட்டபர்த்தி சாயிபாபாவின் திருச்சன்னதியில் அங்கஹீனங்கள் சரியான அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது. அங்கஹீனமுடையோர் சமுதாயத்தின் பல தரப்புகளிலும் உண்டு. அவர்கள் தங்களுக்கு எந்த அங்கம் குறைவுபட்டுள்ளதோ அதற்குரித்தான, சாரமா முனிவர் அளித்துள்ள பரிகார, தான தர்மங்களைப் புரிய இறையருளால் நல்வழி பிறக்கும்.
எவரும் நினைத்துப் பார்த்திராத அற்புதமான மார்க்கத்தில் சாரமா முனிவர் தம் தபோ பலன்களை மக்களுக்கு அர்ப்பணித்தமையால் ஸ்ரீ ஆயுர் தேவியின் திருக்கரங்களில் ஒன்றில் அமையும் பேறு பெற்றார்.

ஸ்ரீஅஸ்தீக சித்தர்

போகர் : நம் சித்தர் பாரம்பரியத்தில் சகல கோடி நாகலோகங்களின் நாயகராய் விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் ஸ்ரீ ஆயுர்தேவியின் மூன்றாவது இடகரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றாரல்லவா? அவர் மகிமைகளைப் பற்றி எடுத்துரையுங்கள் குருதேவா
அகஸ்தியர் : அஸ்தீக சித்தர், மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களில் கடைபிடிக்க வேண்டிய எளிய வாழ்க்கை முறைகளை அமைத்துத் தந்துள்ளார். சப்தமி திதியில் ஸ்ரீ புண்ணியாதேவி எனும் தேவியை வழிபட்டு அதிஅற்புத வரங்களைப் பெற்று அவற்றை மக்களின் தேவைக்காக அர்ப்பணித்து அருள் புரிந்து வருபவர் இவர்
போகர் : குருதேவா! பாம்பென்றால் படையும் நடுங்கும்! இந்தப் பாம்பு விஷயத்தில் எந்த மனிதனும் அரண்டு விடுகின்றானே! இதற்கு நாகபூஷணங்களின் அதிபதியாம் ஸ்ரீ அஸ்தீக சித்தர் கவசம் போல காத்தருள்கின்றாரன்றோ?
பாம்பு பயம் நீங்க…
அகத்தியர் : நிச்சயமாக ! நாகமும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜந்துவே. அதன் வழியில் அதனை விட்டுவிட வேண்டும். வழியில் எதிர்ப்படுமானால் ஸ்ரீ அஸ்தீகா, அஸ்தீகா என்றோ ஸ்ரீ ஆஸ்தீக சித்தாய நம என்று ஸ்ரீ அஸ்தீகரைத் துணைக்கு அழைத்துத் துதித்தால் எத்தகைய விஷப் பாம்பும் வழிவிட்டுச் சென்று விடும். தீண்டாது. இந்த ஆன்மீக ரகசியத்தை மனித குலத்திற்கு எடுத்துரைத்து அவர்களின் அச்சத்தைப் போக்குவீர்களாக! அஸ்தீகா, அபயம்! என்றால் எந்தப் பாம்பும் தீண்டாது. இது தெய்வ நியதி
புலிப்பாணி : சற்குருவே! பல குடும்பங்களில் நாக தோஷத்தால் பிள்ளைப்பேறு இல்லாமை, திருமணத் தடங்கல்கள் ஆகிய துன்பங்கள் தொடர்கின்றனவே! இதற்கு ஸ்ரீ அஸ்தீக சித்தர், பரிகார முறைகளை அளித்துள்ளாரா?

ஸ்ரீஅஸ்தீக சித்தர்

நாக தோஷம் நீங்க ….
அகத்தியர் : ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரித்தான நாகதேவதை உண்டு. அந்தந்த நட்சத்தினருக்காக அமையும் நாகதோஷத்தால் பல நோய்கள், துன்பங்கள் உண்டாகும். இதற்கு பரிகாரமாகக் குறிப்பிட்ட மரத்தின் கீழுள்ள பாம்புப் புற்றிலோ, அந்தந்த நட்சத்திர நாளன்று பால் ஊற்றி வர எத்தகைய நாக தோஷமும் அகலும். இத்தகைய 27 நட்சத்திரப் புற்று அபிஷேகங்களைப் பற்றிய ஆன்மீக விளக்கங்களை ஸ்ரீ புண்ணியா தேவியிடமிருந்து பெற்று மக்கள் நலனுக்கென அருளியுள்ளார் ஸ்ரீ அஸ்தீக சித்தர்
நாகராஜன், நாகவல்லி, நாகரத்தினம், நாகலட்சுமி என்ற பெயருடையோர் இரு பாலர்களிலும் உண்டு. இத்தகைய நாகம் சம்பந்தபட்ட பெயருடையோர் தினமும் ஸ்ரீ சித்தரை வழிபடுதலும், அவரவர் நட்சத்திரத்திற்கு உரித்தான நாகதேவியைத் தினமும் ஜபித்தலும் விசேஷமானதாகும்.
போகர் : நாக தோஷம் என்பது பெண்களுக்கு மட்டும் அமைவது ஏன் குருதேவா ?
அகத்தியர் : அப்படியல்ல போகா! இருபாலருக்குமே பல நாகதோஷங்கள் உண்டு எனினும் கலியுகத்தில் பெண்கள் சமமான உரிமையைப் பெறாததால் ஒவ்வொரு பெண்ணுடைய திருமணமும் நடப்பதே ஒரு பெரிய யாகத்தை நடத்துவது போல அமைந்துவிட்டது. பெண்களுக்கு நாக தோஷம் அமையும்போது அவர்கள் திருமணம் தடைப்படுவதாலும், சந்ததி பிராப்தம் பாதிக்கப்படுவதாலும் அவர்களுடைய நாகதோஷமும் பெரிய பிரச்னையாகத் தோன்றுகிறது. நாகதோஷத்திற்கு ஸ்ரீ அஸ்தீக சித்தர் அளித்துள்ள பரிகார முறைகள் அதிஅற்புத தேவ ப்ரீதி தரும் பரிகாரங்களாகும். பூலோகம் மட்டுமன்றி விண்ணுலக லோகங்களிலும் ஸ்ரீ அஸ்தீகருடைய பரிகார பிராயச்சித்தங்கள் செம்மையான ஜீவபரிபாலனத்திற்கு உதவுகின்றன.
பெண்களின் நாக தோஷங்கள் நீங்க…..
நாகதோஷங்கள் பெண்களுக்கே பெரும்பாலும் அமைகின்றன என்பதும் ஓரளவு பொருந்தும். ஏனெனில் நாகதோஷம் ஆண்களுகு அமைந்திடில் ஆயுள் பங்கம் வரக்கூடும். பதிவிரதா பெண்மணிகள் ஆண்குலத்தின் நாகதோஷத்தை ஆண்களிடமிருந்து பெண்குலத்தாரே ஏற்று அதனால் விளையும் துன்பங்களை ஏற்று தியாகம் புரிய வழிவகுத்தனர். எனவே நாகதோஷ விளைவுகள் ஆண்கள் வாழ்வில் வெளிப்படையாக தெரிவதில்லை.
பரீட்சித் மஹாராஜாவின் நாகதோஷ நிவர்த்தி
அர்ஜூனனுடைய பேரன் பரீட்சித் மகராஜாதான் பாண்டவ குலத்தில் பாண்டவர்கள் காணும் வண்ணம் இறுதியாக மிஞ்சிய வாரிசு. அவன் புதல்வனே ஜெனமேஜெயன்.
பரீட்சித் மஹாராஜா கானகத்தில் வேட்டையாடிக் களைப்புற்று நீர் தேடி சமீக முனிவரின் ஆஸ்ரமத்தை நாடினார். தியானத்தில் ஆழ்ந்திருந்த முனிவரைக் கண்டு அவர் தன்னை மதிக்கவில்லை எனத் தவறாக கருதி சினத்தால், வழியில் கிடந்த இறந்த நாகத்தை முனிவர்மேல் தூக்கியெறிந்துவிட்டு, நாடு திரும்பினான் பரீட்சித் ராஜா. முனிவரின் புதல்வன் சிங்கி, தன் தந்தையின் நிலையைக் கண்டு பதறி, இந்த அதர்மச் செயலைச் செய்தவனை இன்னும் ஏழு நாட்களில் பாம்பு தீண்டி அவன் இறப்பானாக என்று சாபமிட்டான்.
தியானத்திலிருந்து எழுந்த சமீகர் நடந்ததை எண்ணி வருத்தமுற்று, சிங்கா! சாபத்தைக் கொடுத்து விட்டாயே! நம்மைப் போன்ற முனிவர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றித் தார்மீக முறையில் மக்களுக்கு எவ்வித துன்பமும் இல்லாமல் ஆட்சி நடத்தும் பரீட்சித் ராஜாவை முறையாகக் கவனிக்காதது நம் பிழையல்லவா? எனக் கூறினார். பின் மனம் வருந்தி இருவரும் அரண்மனை சென்றனர்.

ஆத்திரத்தால் தான் இழைத்த தீங்கிற்குச் சிங்கியின் சாபம், தனக்குரித்தான தண்டனையே, என்று உணர்ந்த பரீட்சித் மஹாராஜா தம் வாழ்வின் எஞ்சிய ஏழு நாட்களிலும் பகவத் நாம ஸ்மரணையில் திளைத்துத் தட்சகன் என்ற பாம்பினை எதிர்நோக்கி மரணத்தை ஏற்று நற்கதியை அடைந்தான்.
ஸ்ரீ அஸ்தீக சித்தரின் விஜயம்….
பரீட்சித்தின் புதல்வன் ஜெனமே ஜெயன், உத்துங்கர் என்ற ரிஷியின் அறிவுரையால் தன் தந்தையைக் கொன்ற நாகத்தைப் பழிவாங்க எண்ணி மாபெரும் சர்ப்ப யாகத்தைத் தொடங்கினான். உத்துங்கரின் மந்திர நாதங்களுக்கு கட்டுப்பட்டு சர்வலோகங்களில் இருந்தும், அனைத்து நாக லோகங்களிலிருந்தும் கோடிக்கணக்கான சர்பங்கள் வேள்வியில் வந்து விழுந்து மாண்டன.
எஞ்சிய தட்சக சர்ப்பம் இந்திரனைச் சரணடைந்தது. ஆனால் உத்துங்கரின் மந்திர ஒலி சக்தி இந்திரனையும் சேர்த்து இழுத்திட்டது. பரிகாரம் வேண்டி அனைத்து தேவர்களும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை நாட அவர் பிரபஞ்சத்திலுள்ள நாக தெய்வங்களுக்குச் சிவகுரு ஸ்ரீ அஸ்தீக சித்தரே! பரிகாரம் வேண்டி அவரைச் சரணடையுங்கள் என்றார்.
அனைவரும் ஸ்ரீ அஸ்தீக சித்தரைத் தொழ உத்துங்கரும் ஜெனமேஜெயனும் ஸ்ரீ அஸ்தீக சித்தரைத் தியானித்து சுவாமி! செய்வதறியாது நிற்கின்றோம்! என்று மனமுருக பிரார்த்தித்தனர்.
ஸ்ரீ அஸ்தீக சித்தர் ஆங்கே வேள்விச் சாலையில் எழுந்தருளினார். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர். ஓம் ஸ்ரீ அஸ்தீக சித்தாய நம எனப் பிரபஞ்சமெங்கும் ஸ்ரீ அஸ்தீக நாம்ம் ஒலித்திட சர்வலோக தேவதைகளும், தெய்வாதியரும் அவரைத் தரிசனம் செய்தனர். பல கோடி யுகங்களுக்கு ஒரு முறையே தவத்திலிருந்து வெளிவரும் ஸ்ரீ அஸ்தீக சித்தரின் தேஜோமயமான ரூப தரிசனமே அற்புதமான ஸர்வலோக, ஸர்வதுக்க நிவாரணமளிக்கும் ஜோதி வடிவமாகும்.
ஜெனமேஜெயனும் உத்துங்கரும் அஸ்தீகரின் ஒளிபொருந்திய தேக காந்தியை கண்டு சாந்தமடைந்து சர்ப்ப யாகத்தை முடித்தனர்.
ஸ்ரீ அஸ்தீக சித்தர், ஸர்ப்ப க்ரந்தி என்னும் மூலிகையினை ரகசியமான ஸர்ப்ப ரட்சக மந்திரம் ஓதி பூர்ண ஆஹுதியாக ஹோமத்திலிட அக்னியில் பஸ்பமான கோடி கோடியாம் நாகங்களும், நாக தேவதைகளும் உயிர்த்தெழுந்து அனைவரையும் வணங்கி தத்தம் லோகங்களுக்கு மீண்டன. அஸ்தீகர் தங்களுக்கு மறுவாழ்வு அளித்தமையால் அனைத்து நாகங்களும், நாக தேவதைகளும், இன்றிலிருந்து ஸ்ரீ அஸ்தீகரை நினைப்பவரை நாங்கள் தீண்ட மாட்டோம் எனச் சத்தியம் செய்தன.
ஜெனமேஜெயா! உன் தந்தை பரீட்சித் மகராஜாவைப் பார் என்று ஸ்ரீ அஸ்தீக சித்தர் விண்ணுலகைக் காட்டினார். அங்கே தர்மர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள், அபிமன்யு இவர்களிடையே பரீட்சித் குதூகலமாக அமர்ந்து உரையாட அருகே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ரசித்து கேட்கும் அற்புதமான காட்சி தெரிந்தது.
ஜெனமேஜெய!! தட்சக சர்ப்பத்தின் தீண்டல் ஒரு தெய்வத் திருவிளையாடலே! அதனாலன்றோ ஓர் உத்வேகம் பெற்று பரீட்சித் மஹாராஜா ஸ்ரீ சுகமகரிஷியால் ஸ்ரீ பாகவத ஸ்மரணம் ஊட்டப்பெற்று தற்போது நீ காணும் அதிஅற்புத லோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் அமரும் பாக்கியம் பெற்றான்! இவ்வாறு ஸ்ரீ அஸ்தீக சித்தர் விளக்க ஜெனமேஜெயன் தன்னையே மறந்தான். சித்தர் வாக்கிலே அனைவருக்கும் ஓர் அற்புத சமாதி நிலை கூடியது.
பெண்களின் தியாக மனம்
ஸ்ரீ அஸ்தீக சித்தர் மன்னனை அரவணைத்து, ஜெனமேஜெயா! உனக்கும் இப்போது ஒரு சோதனை! தேவையற்ற ஸர்ப்ப யாகத்தைச் செய்து நாகதோஷங்களைப் பெற்று விட்டாய்! மன்னன் செய்தால் மக்களைச் சாரும்! உன் மக்கள் அதை ஏற்றால் உன் தோஷம் நிவர்த்தியாகும் என்று கூறினார்.
லட்சகணக்கான இளைஞர்கள், யுவதிகள் திரண்டு வந்து, எம் மன்னனின் பாவத்தை யாம் ஏற்போம் என்று கூறினர். ஸ்ரீ அஸ்தீக சித்தர் அவர்களின் மனோலயங்களை ஊடுருவிப் பார்த்து, ஜெனமேஜெயா! உன் மக்களில் பெண் குலத்தாரே, குறிப்பாக இளம் பெண்களே உன்னுடைய பாவங்களை மனதார, இதயபூர்வமாக ஏற்க விரும்புகின்றனர். எனவே மனித குலத்தில் பெண்களே திறமைசாலிகள்! இவர்களுடைய பூஜா பலன்களினால் தங்கள்   கணவன்மார்களுடைய நாக தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தியையும் இன்றிலிருந்து நான் பெண்களுக்கு அளிக்கின்றேன். எனவே நாகச் சதுர்த்தியன்று நாகதேவ பூஜை இன்றிலிருந்து பெண்களுக்கே உரித்தானதாகும். இந்த நாக பூஜை சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும், என்று நல்வரத்தை அருளினார்.    
இவ்வாறாக ஜெனமேஜெயனைச் சார வேண்டிய நாகதோஷம் பெண்களுக்கே அமைந்தது. இவர் அருளிய நாக தோஷ நிவர்த்தி முறைகளால் மகிழ்வுற்று ஸ்ரீ ஆயுர்தேவி தம் கரத்தில் இடமளித்தாள்.

ஸ்ரீ அஸ்தீக சித்தர் அருளிய நாகதோஷ நிவர்த்தி முறைகள்

அவரவர் பிறந்த நட்சத்திரம் வணங்க வேண்டிய நட்சத்திர தேவதை வணங்க வேண்டிய நாகத்தின் பெயர் பால் ஊற்ற வேண்டிய,
புற்று இருக்கும் திக்கு
பலன்
அஸ்வினி சரஸ்வதி சர்ப்பரிகன் கிழக்கு திக்கு மாங்கல்ய சூக்ஷ்ம தோஷ நிவர்த்தி
பரணி துர்கா வாசுகி மேற்கு திக்கு மாதவிடாய் நோய் நீங்கும்
கிருத்திகை அக்னி தட்சகன் தெற்கு திக்கு முறையற்ற மாதவிடாய் துன்பமில்லாமல் நிற்கும்
ரோகிணி பிரம்மா சங்கபாலன் வடக்கு திக்கு தம்பதியின் மனஸ்தாபங்கள் நீங்கும்
மிருகசீருஷம் சந்திரன் மதிமதன் தென்கிழக்கு திக்கு கணவனின் மதிகெட்டு, அதனால் வரும் துன்பம் நீங்கும்
திருவாதிரை ருத்திரன் கார்கோடகன் வடகிழக்கு திக்கு குழந்தைகளின் நோய்கள் நீங்கும்
புனர்பூசம் தேவர்கள் தனஞ்ஜயன் தென்மேற்கு திக்கு நண்பர்களால் வரும் துன்பங்கள் நீங்கும்
பூசம் வியாழன் குளிகன் வடமேற்கு திக்கு மகன், மகள் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைவேறும்
ஆயில்யம் ஆதிசேஷன் ஆதிசேஷன் அரச மரத்தடி புற்று அண்ணி முறையில் குடும்ப விவகாரங்கள் நீங்கும்
மகம் சுக்கிரன் பதுமன் வில்வ மரத்தடி புற்று பிரிந்த கணவன்/மனைவி திருந்தி சேர்வர்
பூரம் பார்வதி மகாப்பதுமன் ஆலமரத்தடி புற்று கன்னிகா தோஷ நிவர்த்தி, திருமணத் தடங்கல் நீங்கும்
உத்திரம் சாத்தான் சாமதந்தன் வேப்ப மரத்தடி புற்று அம்மை நோய்கள் தீரும்
ஹஸ்தம் சூரியன் வாஸ்மருதம் அம்மன் கோயில் புற்று லிகோடர்மா, தோல் வியாதி நீங்கி சுகம்
சித்திரை விஸ்வ கர்மா விஜயன் முருகன் கோயில் புற்று இழந்த சொத்து மீண்டும் கிட்டும்
சுவாதி லஷ்மி லவணம் முனீஸ்வரர் கோவில் புற்று காற்று சேஷ்டை, வியாதிகள் நீங்கும்
விசாகம் சுப்பிரமணியர் சஷ்டிகன் கோயில் குளத்தருகே உள்ள புற்று நீண்ட நாள் கிடைக்காத பணி கிடைக்கும்
அனுஷம் வாயு விமலன் எல்லையம்மன் கோயில் புற்று வாயு, வாத நோய் நீங்கும்
கேட்டை தேவேந்திரன் சஞ்சணன் மலைமேல் உள்ள புற்று கேட்டை நட்சத்திரப் பெண்களின் ஏக்கங்கள் நீங்கும்
மூலம் கந்தன் அசுராதிகன் சிவன் கோயில் புற்று வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டு நீங்கும்
பூராடம் வருணன் காருணன் அம்மன் கோயில் இடப்புறப் புற்று வாழ்க்கை சந்தோஷமாக அமையும்
உத்திராடம் கணபதி கம்பீரன் அம்மன் கோயில் வலப்புறப் புற்று மந்தபுத்தி உள்ளவர் நிலைமாறி புத்திகூர்மை பெறுவர்
திருவோணம் விஷ்ணு காளிங்கன் சிவன் கோயில் இடப்புறப் புற்று நிரந்தர வேலை அமையும்
அவிட்டம் இந்திராணி இந்துபாலன் சிவன் கோயில் வலப்புறப் புற்று அயன சயன சுகங்கள் அமையும்
சதயம் எமதாமன் பாசாலன் சமாதி கோயில் புற்று மரண பயம் நீங்கும்
பூரட்டாதி குபேரன் ஜொலிபலன் வயல் நடுவே உள்ள புற்று கடனே இல்லாத வாழ்வு அமையும்
உத்திரட்டாதி காமதேனு தேனுபாலன் மரப்புற்று குழந்தைக்காக பால் சுரக்கும்
ரேவதி சனீஸ்வரன் சஞ்சிதா சுரங்கப் புற்று (மேல்மருவதூர்
கோயிலிலும், திருவொற்றியூரிலும் உள்ளது)
கன்னிகா தோஷம் நீங்கி சுகம் பெறுவர்

அந்தந்த நட்சத்திரதிற்குரித்தான நாக தேவதையின் நாமத்தைத் துதித்து அதற்குரித்தான தெய்வ மூர்த்திக்கு பூஜை செய்து குறித்த திசையில்/மரத்தில் கோயில் புற்றில் உள்ள நாகத்திற்குப் பால் ஊற்றி வணங்கிட மேற்கூறிய பலன்கள் ஏற்படும்.

ஸ்ரீகார்க்கினி தேவி ஸ்ரீசம்வர்த்தர்

ஸ்ரீ ஆயுர்தேவியின் இடது நான்காவது கரத்தில் ஸ்ரீ கார்க்கினி தேவி என்னும் சித்தர் குல பெண் மஹரிஷியும் ஸ்ரீ சம்வர்தர் என்ற ஞானியும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.
புலிப்பாணி : ஒரு சித்தர் குலப் பெண்மணி ஸ்ரீ ஆயுர்தேவி கரபீடத்தில் அமர்ந்திருப்பது பெண்குலத்தை உயர்வடையச் செய்வதற்கல்லவா குருதேவா?
அகத்தியர் : ஆண், பெண் வேறுபாடு, ஞானிகள், யோகிகள், சித்தர்கள் நிலையில் இருப்பதில்லை. ஏன், சாதாரண மனிதனும் பல உன்னத ஆன்மீக நிலைகளை அடைய வேண்டுமெனில் ஆண், பெண் இன வேறுபாட்டைக் களைந்தாகவே வேண்டும். அங்கமும் அழகும் ஆண், பெண்ணினத்தைப் பிரித்துக் காட்டுவது விஞ்ஞானப் பூர்வத் தத்துவம். ஆனால் ஆன்மீகத்தில் ஆண்,பெண் விளக்கம் வேறுபடுகிறது. இங்குதான் சக்தி தத்துவம் நடைமுறைக்கு வருகிறது.
எவ்வாறு மாட்டு வண்டி, குதிரை வண்டி, மின்சார ஊர்தி இவைகளில் சக்தி வேறுபடுகிறதோ அதுபோல ஆண் சக்தி, பெண் சக்தி என்ற இரண்டு மட்டுமே உண்டு. தேவி வழிபாட்டில் இவை இரண்டும் சங்கமமாகின்றன. இந்த உண்மையான சக்தி சங்கமங்களில்தான் தெய்வீக சக்தி பிறக்கின்றது.

எனவே சக்தியின் வேறு வகைகளே ஆண் சக்தியும் பெண் சக்தியுமே தவிர ஆண், பெண் இன வேறுபாடு கிடையாது.

போகர் : தேவி உபாசனை இருபாலார்க்கும் முக்கியமானதல்லவா குருதேவா?

ஆண், பெண் வேறுபாடு
அகத்தியர் : ஆம்! தேவி உபாசனையை ஆண் மேற்கோள்ளும்போது அவன் நாளடைவில் முறையற்ற காமத்தை களைந்து, பெண் இனத்தை முற்றிலும் ஓர் பரிபூர்ண இறைசிருஷ்டி என்பதை உணர்கின்றான். அதாவது பெண் சக்தி தத்துவத்தை அறிந்தவனாகின்றான். இதையறிந்த பின் அந்தத் தேவ உபாசனையின் பலனென ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஆண் சக்தி, பெண் சக்தி சங்கமத்தை உணர்வித்து அதனை தெய்வீக சக்தியாக மாற்றிப் பரம்பொருளைக் காட்டுகிறாள்.

ஸ்ரீசம்வர்தர் ஸ்ரீகார்கினி தேவி

தேவி உபாசனையை மேற்கொள்ளும் ஒரு பெண், ஆண் சக்தியின் மகிமையை உணர்ந்து தன் கணவரிடம் சரணடைந்தால் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியே அவளுக்கு ஆண் சக்தி பெண் சக்தி சங்கமத்தைக் கூட்டுவித்துக் கணவனைத் தெய்வமாக காட்டுகிறாள்.
போகர் : இதனைக் கலியுக ஆண், பெண் இனத்தோர் அறிந்து கொள்ள வேண்டுமே, குருதேவா?

அகத்தியர் : அடியேன் கூறிய அனைத்தையும் கலியுக மக்களுக்கென அருளியவளே ஸ்ரீ கார்க்கினியான பெண் துறவி ஸ்ரீ கார்க்கி என்றும் அழைக்கப்படும் இவர் அஷ்டமி திதி தோறும் ஸ்ரீ பிரம்ம சாரிணி என்னும் தேவியை துதித்துப் பேரருளைப் பெற்ற சித்த தேவியிவள்.
அவதார புருஷர்கள் கூட நாகதேவியின் பரிபூரண அருளைப் பெற்றதில்லை. ஆனால் கார்க்கினி, ஸ்ரீ பிரம்ம சாரிணி தேவிக்குரிய சகலகோடி நாகதேவதைகளையும் உபாசித்து அவற்றிண் அருளைப் பெற்றவளாவாள்.
ஸ்ரீ கார்க்கினி தேவி பெண்குலத்தார் அனுபவிக்கும் துன்பங்களுக்காக நிவர்த்தி முறைகள் தேடிப் பலகோடி ஆண்டுகள் ஒரு துளி பால் மட்டுமே அருந்தி தவமிருந்தாள்.
ஸ்ரீ கார்க்கினி தேவியே, கார்க்கி சந்நியாஸினி, கார்க்கி பிரம்மசாரிணி தேவி என்றும் பல நாமங்களில் அழைக்கப்படுகிறாள். தாம் வழிபட்ட தேவியான ஸ்ரீ பிரம்மசாரிணி தேவியின் திருநாமத்தோடு கூடி ஸ்ரீ கார்க்கினி பிரம்மசாரிணி என்ற சித்தஞானியாய் அழைக்கப்படுகிறாள்.

அமிர்த கலச மகிமை
காக்கினி தேவி, ஸ்ரீ பிரம்மசாரிணி தேவியைத் தியானித்துப் பலகோடி யுகங்கள் தவமிருந்தார் அல்லவா? ஒவ்வொரு மகாப் பிரளய முடிவிலும் க்ஷீர ஸாகரமெணப்படும் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதர் புரண்டு படுத்துத் திசை மாற்றிக் கரயோக நிலைகளை கூட்டி அரிதுயில் கொள்வார். அந்த அசைவில் தெறிக்கும் பாற்கடலின் அதிஅற்புதப் பால்துளிகள் குறிப்பிட்ட சிலரையே சென்றடையும். அதுவும் ஸ்ரீ ரங்கநாதர் விரும்பும் ஜீவன்களுக்கே அவை சென்றடையும். அதிலும் ஸ்ரீ பிரம்மசாரிணி தேவியை உபாசிப்பவர்களுக்கு க்ஷீரசாகரப் பால் துளிகள் எளிதில் கிட்டும்.

அற்புத அமிர்தம்
இவ்வாறு பலகோடி யுகங்களில் ஸ்ரீ கார்க்கி தேவிக்கு பூரணமான பாற்கடலின் திருப்பால் துளிகள் கிட்டின. இதனால் அவள் உதரம் குடமெனப் பெருத்துச் சகல லோகங்களிலுள்ள பெண் ஜீவன்களுக்கும் அருள் பாலித்தது. இவ்வுதரக் குடத்தை ஸ்ரீ ஆயுர்தேவி தம் திருக்கையில் ஏந்திட அது அமுத கலசமாக மாறிற்று. ஸ்ரீ கார்க்கினியே ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரத்தில் அமிர்த கலசமாக மாறினாள். ஸ்ரீ ஆயுர்தேவியின் நான்காவது இடகரத்தில் ஒளிரும் அமுத கலசம், பாற்கடலில் கிட்டிய அமிர்தத்திற்கும் முந்தையது.
தேவர்களும் அசுரர்களும் இவ்வமுதக் கலசத்தைப் பெற துடித்தனர். பலகோடி யுகங்களில் பல அற்புதமான வரங்களைப் பெற்றாலும் அதைப் பெண் குலத்திற்காகத் தியாகம் செய்து அர்ப்பணித்த கார்க்கினி தேவியின் தவத்தை நிகர்த்த தவம் செய்தோருக்கே இந்த அமுதக் கலசம், என்று ஈஸ்வரன் ஆணையிடவே எவரும் இதை பெற முன்வரவில்லை.
தேவர்களும், அசுரர்களும் கார்க்கினி தேவியை நாடி அவள் உபதேசித்தபடி தானதர்மக்களுடன் ஸ்ரீ பிரம்மசாரிணி தேவியை உபாசிக்க ஸ்ரீ தேவியும் அவர்கள் முன் எழுந்தருளி ஸ்ரீ ஆயுர் தேவியின் எட்டாவது திருக்கரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அமுத கலசம் பெண் குலத்தோருக்கு அற்புதப் பணிகள் புரிந்த தவசீலர்களுக்கே உரித்தானதாகும். எனினும் உங்களுக்கு அமுதம் வேண்டுமாயின் அதனைப் பாற்கடலிலிருந்து பெறும் முறையை ஸ்ரீ மகாவிஷ்ணுவிடமிருந்து பெறுவீர்களாக! இந்த அமுததிற்கு ஈடானது ஸர்வலோகங்களிலும் கிட்டாது என கூறி மறைந்தனள்.

எனவே அமுதக் கலசமாய் மாறி அருள்புரியும் ஸ்ரீ கார்க்கினி தேவியை அனைத்துப் பெண்மணிகளும் பூஜித்துத் தங்களுடைய துன்பங்களுக்குப் பரிகாரம் தேடி நல்வாழ்வு வாழ வேண்டும்.

போகர் : குருதேவா அமுதமாக மாறிய ஸ்ரீ கார்க்கினி தேவி எவ்வாறு அருள்பாலிக்கின்றார்?

அகத்தியர் : ஸ்ரீ கார்க்கினி தேவி குரு தத்துவத்தைத் தேவி உபாசனை வழிபாடாக விளக்கிட வேண்டும் என்று ஸ்ரீ ஆயுர்தேவியைப் பிரார்த்திக்க ஸ்ரீ ஆயுர்தேவியும் ஸ்ரீ பிரம்மசாரிணியின் அபிலாஷைகளைச் சம்வர்தர் என்னும் ஞானி மூலமாக விசேஷமாக நிறைவேற்றிடத் திருஉளங்கொண்டாள்.

ஸ்ரீ சம்வர்தர்
சம்வர்தர் என்ற ஞானி பலகோடி ஆண்டுகளாகப் பல லோகங்களிலும் குருகுல தத்துவத்தை பரப்பி வந்தார். குரு தத்துவத்தை எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க தேவி வழிபாடே உன்னதமானது எனத் தெளிந்து அதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி இருந்தார்.
பல யுக காலங்கள் தவமிருந்த சம்வர்தர் ஸ்ரீகால பைரவரை நாடினார். ஸ்ரீ கால பைரவர் பிரளய காலத்தை நிர்ணயிக்கும் சிவாம்ச மூர்த்தியாவர். பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடிக் காலமும் கால பைரவரின் வாசி-மூச்சுக் காற்றினால் வாக்கிய பஞ்சாங்கமாக, திருக்கணிதமாக காலநிர்ணயமாக விரிகின்றது. இவர் திருவருளால் தான் ஸ்ரீ சம்வர்தர் போன்ற மகரிஷிகள் பிரளயத்திலும் விஞ்சி வாழ்ந்து பல கோடி யுகங்கள் குரு மகிமையைப் பரப்புகின்றனர்.

ஸ்ரீ சசிப்ரபா வழிபாடு
சம்வர்தரே! ‘சசிப்ரபா’ என்ற அம்பிகையை அஷ்டமி தோறும் வணங்கி ரிஷபத்திற்கு (காளை) வாழைப்பழ தானம் செய்தல் வேண்டும். நீ அஷ்டவக்ர ரிஷிப் பரம்பரையில் வந்தமையால் நவராத்திரியில் எட்டாவது திதியில் எம் அம்பிகையின் அருளால் ஏற்றம் பெறுவாய் என்றூ அருளினார் ஸ்ரீ காலபைரவர்.

ஸ்ரீ சம்வர்தரும் ஸ்ரீ சசிப்ரபா தேவியை 88 சதுர்யுகங்களின் அஷ்டமிதோறும் வழிபட்டு தேவியின் தரிசனம் பெற்றார். இதுவரை பலகோடி யுகங்களில் குரு தத்துவத்தை விளக்கி வந்த ஸ்ரீசம்வர்தர், குரு பிரம்ம தேவலோக மரியாதையைப் பெற்றிருந்தோம். ஆனால் சசிப்ரபா தேவியோ சற்குரு தத்துவத்தை வர்ணித்த பொழுது பலகோடி யுகங்களில் தாம் உணர்ந்ததை விட மேலும் விசேஷமான அம்சங்களை ஸ்ரீ சசிப்ரபா தேவி அருள்கின்றனளே! என்று வியப்படைந்தார். தாம் கற்றது அணுவளவே என்று தெளிந்தார்.
ஸ்ரீ சசிப்ரபா தேவி நகைத்தனள். சம்வர்தரே! தேவி உபாசனையில் தான் இறைவனின் பரிபூர்ணம் காணலாம். ஆனால் சற்குரு உபாசனையில் சம்பூர்ணம் கண்டவரோ அரிது! ஏனெனில் சற்குருவே தம் குரு நெறிமுறைகளைத் தேவி உபாசனையின் மூலம் ஊட்டுகிறார். தின்ன தின்னத் திகட்டாத பொருள் அமுதமே- குருவருளே அந்த அமுதம்! அதுவும் பாற்கடலில் வரவிருக்கும் அமுதமன்று. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியாக வீற்றிருக்கும் ஸ்ரீ ஆயுர்தேவியின் எட்டாவது கரத்தில் மிளிரும் அமுத கலசம் கொண்டுள்ள அமுதமாகும். யாம் குறிப்பிட்ட அந்த உபாசனை சம்பூர்ணத்தையும் காட்டவல்லது. ஸ்ரீ தேவி உபாசனையில் பரிபூர்ணம் பெற்ற ஸ்ரீ கார்க்கினி தேவி எமது அம்சமான ஸ்ரீ பிரம்மசாரிணியை தொழுது உத்தம நிலையை அடைந்தாள். அவளே அமுதநிலை பெற்றவள். சற்குரு உபாசனையோடு இறை பணிபுரிந்து எம் வழிபாட்டோடு குரு தத்துவத்தைப் போதிப்பீராக! இதன் மூலம் சம்பூர்ணம் பெற அருள்கின்றோம் என்று மொழிந்தனள்.

குரு விளக்கம்
குரு பாரம்பரியங்கள், குரு வணக்க முறைகள், குரு ஆராதனை வழிபாடுகள், குருபூர்ணிமா பூஜா விதிகள் குருகுல தத்துவங்கள். குரு வழிபாட்டுத் தோத்திரங்கள் குரு பகவானின் கிரஹ தசா புக்தி விளக்கங்கள் போன்ற குருதத்துவங்களை ஸ்ரீ சம்வர்தர் ஸ்ரீ சசிப்ரபாவிடம் கற்றதோடன்றிப் பலகோடியுகங்களிலும் பிரசாரம் செய்து பிருங்க ரிஷிப் பாரம்பரியங்களை உருவாக்கி உலகெங்கும் சத்சங்கங்கள் தழைக்க வழிவகை செய்தார்.
கோடிக்கணக்கான சத்சங்கங்கள் இன்று பூவுலகில் மட்டுமல்லாது விண்ணுலகமெங்கும் சற்குரு அருளின் மேன்மையினை எடுத்துரைக்கின்றன. கலியுகத்தில் மனிதன் தெய்வத்தை உணர ஒரே வழி சற்குரு நடத்தும் சத்சங்கங்களே. தம் தவப்பலன்களைச் ஸகலகோடி ஜீவன்களுக்கெனத் தியாகம் புரிந்து அற்புத பணி ஆற்றிய சம்வர்தரையும் தன் எட்டாவது கரத்தில், ஸ்ரீ கார்கினி தேவியோடு ஏந்தினாள் ஸ்ரீ ஆயுர்தேவி அமிர்தக் கலசத்தின் உள்ளும் வெளியும் ஒளிப்பிழம்பாய் பீடம் கோண்டுள்ளார் ஸ்ரீ சம்வர்தர். இவர் உபாசனை சற்குருவைப் பெற்றுத் தரும்.
இவர் அருட்கருணையினால்தான் நவராத்திரி அஷ்டமித் திதியில் பக்தியுடன் வழிபடுவோர்க்கு ஸ்ரீ ஆயுர்தேவி அமிர்தத்தின் அம்சங்களை குரு ஆசீர்வாதமாக அருள்கின்றாள்.
கார்க்கி தேவியும் சம்வர்தர் மகரிஷியும் அருள் பாலிக்கின்ற ஆயுர்தேவியின் எண்கர வழிபாடு பெண்களுக்கு நல்வாழ்வையும் அனைவருக்கும் குருவருள் பெறும் நல்வழியையும் அருளுவதாகும்.
பூலோகத்தின் முதல் சத்சங்கம் பிறந்த இடம் சென்னை – திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் சிவாலயம் ஆகும். ஸ்ரீ சம்வர்தரின் சிஷ்யர்களாக பிருங்கீஸ்வர சித்தர்கள் முதல் சத்சங்கத்தை இத்திருகோயிலில் பலகோடி யுகங்களுக்கு முன் தொடங்கினார்கள்.
ஸ்ரீ சம்வர்தர், ஸ்ரீ பிருங்கீஸ்வர சித்தர்களின் திருஉருவங்களை இத்திருகோயில் தூண்களில் காணலாம். சற்குருவைத் தேடுபவர்களுக்கு இத்திருக்கோயில் தரிசனம் இன்றியமையாததாகும்.

ஸ்ரீ கால மகாபிரபுவின் வாகனம்
ஸ்ரீ ஆயுர்தேவியின் பாதங்களை வணங்கி நிற்கும் ஸ்ரீ எம தர்மராஜாவாகிய ஸ்ரீ காலமஹாபிரபு, ஸ்ரீ சுதர்மனன் என்ற திருநாமத்தைப் பூண்டவர். இவர் நசிகேதஸிற்கு அருளிய கடோபநிஷத்தில், மரணத்திற்கும் பின் தொடர்கின்ற வாழ்வை பற்றியதான இவருடைய தர்மநெறிகளே விளக்கப் பட்டுள்ளன.

இவருடைய வாகனமாகிய சுவாலினன் என்ற எருமைக் காளை அதிஅற்புதத் தபோபலன்களை உடையது.

ஸ்ரீ ஞானேஸ்வரரின் திவ்ய சரிதையில் இந்த எருமையை வேதம் சொல்ல வைக்க முடியுமா? என்று ஊர் மக்கள் கேட்ட பொழுது ஐந்து வயதுக் குழந்தையான ஸ்ரீ ஞானேஸ்வரர் அந்த எருமை ஜீவனைப் பரம்பொருளின் உறைவிடமாக எண்ணி வலம் வந்து தொட்டு வணங்கி சுவாலின மகா பிரபுவே! வேதம் ஓதுவீர்! என்று வேண்டியபோது சுவாலினன் என்ற அந்த எருமை விண்ணோர்கள் பூமாரிப் பொழியும் வண்ணம் வேதம் ஓதியது.

போகர் :- சற்குருவே! ஸ்ரீ ஞானேஸ்வரர் சரிதையில் இடம் பெறவே ஸ்ரீ ஆயுர்தேவி, சுவாலினன் மகாபிரபுவைப் பூலோகத்திற்கு எருமை ரிஷபமாக அனுப்பினாள் போலும்!

ஸ்ரீ கசவனம்பட்டி சித்தர்
அகத்தியர் :- திண்டுக்கல் அருகே கசவனம் பட்டிக் கிராமத்தில் அவதூதராய் ஒளிர்விட்டுப் பிரகாசித்த அதிஅற்புத அவதூத சித்த புருஷரான வருணா இஷ்ட திகம்பர சித்தர் (கசவனம்பட்டி மௌன சுவாமிகள்) முன்னைய பிறவியில் ஸ்ரீ ஞானேஸ்வரராக அருள் பரிபாலனம் செய்தார் என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியம். இவரே கசவனம்பட்டி மௌன ஸ்வாமிகள் என்றும் வணங்கப் பெற்றார்.

ஸ்ரீ கசவனம்பட்டி மௌன சுவாமிகள் பற்றிய அகஸ்திய கிரந்த தொகுப்பு எம் வெளியீடான ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஆகஸ்ட் 93, செப்டம்பர் 93, இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

போகர் :- கலியுலகில் எருமைமாடு என்று பண்பற்ற முறையில் பேசும் வழக்கு அமைந்துள்ளதே? குருதேவா?

அகத்தியர் :- அது தவறு போகா! இறைவன் படைத்த பிரபஞ்சத்தில் தேள், பாம்பு, மயில், மனிதன், தேவர் முதலான அனைத்து ஜீவன்களிலும் இறைவன் வாழ்கிறான். எருமை மாடு என்று கேலி பேசினால், திட்டினால் மரண தோஷங்கள் உண்டாகும். நெடுநாள் படுக்கையில் கிடந்து மரணம் ஏற்படும்.

எருமை மாட்டிற்கு மக நட்சத்திரத்தில் அகத்திக் கீரை அளித்து வந்தால் நோய், நொடியில்லாத சுகமான மரணம் கிட்டும். எம பயமில்லாது மரண தேவதையை எதிர்நோக்கலாம். உலகில் மனிதன் இறப்பிற்குத்தானே அஞ்சுகிறான்! அந்த எமபயம் நீங்க, மாரடைப்பு, வாகனவிபத்து, தற்கொலை போன்று அசுப மரணங்களில்லாது சிரித்த முகத்துடன் தெய்வ சிந்தையுடன் மரண தேவதையைத் தொழ, மக நட்சத்திரத்தில் எருமை வழிபாடு உதவுகிறது.

 இத்தகைய எளிய வழிபாட்டை சித்தர்களே கலியுக மக்களின் நலனுக்காக அளித்துள்ளனர்.
புலிப்பாணி :- சுவாலினனை வழிபடும் முறை உண்டா குருதேவா?

அகத்தியர்: மக நட்சத்திரத்தில் எருமைமாட்டிற்கு அகத்திக்கீரை அளிப்பதே சுவாலினன் மகாபிரபுவின் குருவாகிய காரடையான் கரட்டை என்னும் தெய்வ தேவதைக்குச் செய்யும் வழிபாடு. குருவை வணங்கினால் சிஷ்யன் மகிழ்வாரன்றோ? வாகனம் ஓட்டுபவர்கள் (Drivers) சுவாலினனை வணங்குதல் உத்தமமானது. விபத்துக்கள் ஏற்படாது.

ஸ்ரீஆயுர்தேவி பூஜைமுறை

திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001-வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் சுவாமிகள் அவர்கள் தம் குரு மொழிகளாகத் திருவாய் மலர்ந்து அருளியது. ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை முறையானது கலச பூஜைக்கும் கலசமில்லாது ஸ்ரீ ஆயுர்தேவி படம், பிம்பம் வைத்துச் செய்யப்படும் சாதாரண எளிய பூஜைக்கும் பொதுவானதாகும்.
பராசக்தி அம்சமான ஸ்ரீ ஆயுர்தேவி அளப்பரிய செல்வங்களையும், உயரிய ஞானத்தையும், அற்புதமான ஐஸ்வர்யங்களையும் அருளும் கண்கண்ட தெய்வமாவாள். இத்தகைய ஸ்ரீ ஆயுர்தேவியை முறையாக வழிபடுவது கலியுகத்தில் மிதமிஞ்சிக் கிடக்கும் தோஷங்களையும், பாவங்களையும் தீர்த்து நல்வழி காட்டி பரிபூரண சாந்தியையும், பகவத் கிருபையையும் பெற்று தரும்.
நவராத்திரியில் ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு பன்மடங்குத் திருவருளை வர்ஷிக்கும். நித்ய வழிபாடு அம்பாளின் ஸ்ரீ பாதாரவிந்தங்களில் நம்மை ஐக்யப்படுத்தும்.

ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை விதானம்
ஸ்ரீ வியாஸ மஹரிஷி அருளியது

 ஸ்ரீ ஆயுர்தேவியை சாதாரணமாகவும் கலசம் வைத்தும் வழிபடலாம். நவராத்திரியில் கலச பூஜை மிகவும் விசேஷமானதாகும். மற்ற நாட்களில் படம் வைத்து சாதாரணமான முறையில் பூஜை செய்யலாம்.

கலசம்: வெள்ளிக் கலசம், வெண்கலக் கலசம், செப்புக் கலசம், மா அல்லது பலா மரத்தினாலான மரக் கலசம் இவையே பூஜைக்கு உகந்தவையாகும்.
கலச அலங்காரம்: கலசத்தைத் தூய்மைப்படுத்தி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு முழு தேங்காயை மேல் வைத்து மாவிலை, பூ சேர்த்துப் பூரண கும்ப கலசமாய் அமைக்க வேண்டும்.
கலச நீர்த் திரவையங்கள்: சுத்தமான நீர் அல்லது கங்கா ஜலம் போன்ற புனித நதி நீரை மூன்று முறை கொதி வந்ததும் ஆறவைத்துக் கலசத்தில் ஊற்றவும். வெட்டிவேர், துளசி இவற்றுடன் சிறிதளவு (பொடி செய்த) கடுக்காய், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றைக் கலச நீரில் சேர்க்க வேண்டும்.
கலச ஸ்தாபனம்: நுனி வாழையிலையைக் கிழக்கு நோக்கி வைத்து பச்சரிசி பரப்பி அதில் வல மோதிர விரலால் ‘உ’ ‘ஓம்’ எழுதி அரிசி மேல் கலசத்தை வைக்க வேண்டும். வசதியிருப்பின் கல்சத்திற்கு மஞ்சள் நிற வஸ்திரம் (இரவிக்கை, புடவை) சார்த்தலாம், பட்டு வஸ்திரம் தவிர்க்கவும், நார்ப்பட்டைப் பயன்படுத்தலாம்.
நைவேத்யம்: மஞ்சள் நிறப் பதார்த்தங்கள், சர்க்கரைப் பொங்கல், குங்குமப்பூ சேர்த்த (கேசரிப்பவுடர் கலக்காத) பால் கலந்த கேசரி போன்றவை. எளிமை கருதின் மஞ்சள் நிற வாழைப் பழங்கள் போதுமானதாகும்.
நித்ய வழிபாடாயின் முந்திரி, சிறு திராட்சை, மஞ்சள் நிற வாழைப் பழங்கள் போன்றவற்றையும் நைவேத்யமாகப் படைக்கலாம்.
கலச விளக்கம்: கலசத்தில் மூன்று  முறை கொதி வந்த நீரை ஆறவைத்து ஊற்றுவதின் விசேஷத் தன்மையாவது:-

  1. முதல் முறை கொதிப்பது பிரளயத்திற்கு பின் சிருஷ்டிக்கும் காரணமான பிருத்வி தத்துவத்தையும்.
  2. இரண்டாவது முறை கொதிப்பது அப்பு தத்துவத்தையும் விளக்குகிறது
  3. மூன்று முறை கொதிப்பது நீரைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்கும். எனவே மூன்றாவது முறை கொதிப்பதால் கங்கை போன்ற புண்ணிய ஜீவ நதிக்குரிய தெய்வீக தன்மையை பூஜை மூலம் கலச நீர் பரிபூரணமாகப் பெறுகிறது. கங்கை நீரைக் கொதிக்க வைக்கும்போது கங்கை பிறக்கும் கங்கோத்ரி அருகே அமைந்துள்ள புனிதமான வெந்நீர் ஊற்றின் தெய்வீகத் தன்மையைக் கலச நீர் பெறுகிறது

ஆறவைப்பதின் மூலம் பனிமலைக் கைலாயப் பெருமானாகிய சிவபெருமானின் சாந்த ஸ்வரூப தத்துவத்தையும் அறிகிறோம்.
பூஜை: மஞ்சள் பிள்ளையார் வைத்து விநாயக பூஜையுடன் தேவி பூஜை தொடங்குகிறது.
ஸ்ரீ விநாயகரை ஆராதித்தபின் ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை ஆரம்பம். ஸ்ரீ விநாயகர் பூஜை அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.
ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை விளக்கங்கள்

  1. ஆயுர்தேவியை ஆடவர், பெண்டிர், குழந்தைகள் அனைவரும் வழிபடலாம். ஸ்ரீ ஆயுர்தேவிக்கான பிரத்யேகமான கட்டுப்பாடுகள் கிடையாது. எனினும் விரதம், அன்னதானம் போன்றவற்றையும் சேர்க்கின்ற பொழுது அதற்குரித்தான விசேஷமான பலன்கள் கிட்டுகின்றன.
  2. ஸ்ரீ ஆயுர்தேவி பூஜா முறையில் உள்ள மந்திரங்கள் கலச பூஜைக்கும், கலசமில்லாமல் ஸ்ரீ ஆயுர்தேவி படம் வைத்துச் செய்யப்படும் சாதாரண பூஜைக்கும் பொதுவானதாகும். மஞ்சள், குங்குமத்தை ஸ்ரீ ஆயுர்தேவியின் படத்திற்கு இடவேண்டும்
  3. தனக்கு பரிச்சயமான அபிராமி அந்தாதி, மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், லக்ஷ்மி ஸ்தோத்திரம், லலிதா சஹஸ்ரநாமம் போன்ற தேவ மொழி, தமிழ் மந்திரங்கள், பாடல்களை பாராயணம் செய்தும் வழிபடலாம்.
  4. தவிர்க்க முடியாத காரணங்களினால் மிக எளிமையாக வழிபடுவதாயின் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம், ஸ்ரீ ஆயுர்தேவி காயத்ரி இரண்டையும் 24/36/64/108 முறை ஜபித்து நைவேத்தியமிட்டு வழிபடலாம்.
  5. ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாட்டுடன் அன்னதானம் சேர்ந்திடில் அது மகத்தான பூஜையாக அமைகிறது. அன்னதானம் எனில் சில உணவுப்ப் பொட்டலங்களை அல்லது பிரட்/பன் (Bread and Bun) போன்றவற்றை ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் ஜபித்து ஸ்ரீ ஆயுர்தேவி காயத்ரி அல்லது தானறிந்த இறை நாமாக்களைச் சொல்லி ஸ்ரீ ஆயுர்தேவிக்கு அர்ப்பணித்து அதனைக் கோயில் வாசலில் உள்ள ஏழைகட்கு அளித்தலும் அன்னதானமேயாகும். இதனால் ஸ்ரீ ஆயுர்தேவியின் பிரசாதத்தை ஏழை, எளியோர்கட்கும், அனாதைகட்கும் பெற்றுத் தந்து அதி அற்புத தெய்வீகப் பணியை ஆற்றிடலாம்.
  6. எளிமையான நைவேத்ய முறையுடன் ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட காலையில் இரண்டு உரித்த வாழைப்பழங்களில் சர்க்கரை சேர்த்து 24 முறை ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் ஜபித்து பிரசாதமாக அருந்துதல்.
    மதியத்தில் சாதம் சமைத்த உடன் ஒரு கைப்பிடியளவு எடுத்து வைத்து சிறிது பருப்பு சேர்த்து அதன் மேல் சிறிய தக்காளித் துண்டு வைத்து ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் 64 முறை ஜபித்து பிரசாதமாக அருந்துதல்
    மாலையில் செப்பு, வெள்ளி கிண்ணத்தில் காய்ச்சி ஆறிய பாலில் சர்க்கரை சேர்த்து ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் 108 முறை ஜபித்து பிரசாதமாக அருந்துதல்.
  7. ஸ்ரீ ஆயுர்தேவியை எம்முறையில் பூஜித்தாலும் உன்மையான மனதுடன் வழிபட்டால் ஸ்ரீ ஆயுர்தேவி மகிழ்ச்சியுடன் ஏற்று அருள் புரிகின்றாள். ஆனால் உன்மையான மனதின் பக்திநிலையை அறிந்தவர் சற்குரு ஒருவரே. எனவே தக்க சத்குருவை நாடி பெறும் வரையில் சித்தர்கள், மஹரிஷிகள், பெரியோர்கள் விதித்த முறைகளின்படி வழிபடுவோமாயின் நாளடைவில் ஸ்ரீ தேவியின் தரிசனம் கிட்டும்.
கலச பூஜையில் கலசத்தை தயார் செய்து கொண்டு ஸ்ரீ விநாயகர் பூஜைக்குப் பிறகு இதிலிருந்து ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை தொடங்குகிறது. கலசமில்லாது சாதாரண பூஜையானது ஸ்ரீ விநாயகர் பூஜை அல்லாது விநாயகரைத் துதித்தபின் இதிலிருந்து தொடங்குகிறது.

ஜப சங்கல்பம்
அஸ்ய ஸ்ரீ ஆயுர்தேவி மஹாமந்த்ரஸ்ய ப்ரஹஸ்பதி ரிஷி:|
அனுஷ்டுப் சந்த:| ஸ்ரீ ஆயுர்தேவி தேவதா|ஸ்ரீம் பீஜம்|
ஹ்ரீம் சக்தி: |ஐம் கீலகம்| ஸ்ரீ ஆயுர்தேவி ப்ரஸாத
ஸித்யர்த்தே ஜபே வினியோக: |

கரந்யாஸம் (கர வழிபாடு)
கரந்யாஸம் செய்ய இயலாதோர் இருகரம் கூப்பி வணங்கினால் போதுமானதாகும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய அங்குஷ்டாப்யாம் நம: | (ஆள்காட்டி விரலினால் கட்டை விரலை அடியிலிருந்து நுனி வரை வருடிக் கொள்ளவும்)

ஆயுர்தேவி ஆயுர்தேவிருத்திகராய தர்ஜநீப்யாம் நம: | (கட்டை விரலினால் ஆள்காட்டி விரலை அடியிலிருந்து நுனி வரை வருடி கொள்ளவும்)

கமலதாரிண்யை சக்த்யை மத்யமாப்யாம் நம: | (கட்டை விரலினால் நடு விரலை அடியிலிருந்து நுனி வரை வருடி கொள்ளவும்)

ஹம்ஸவாஹின்யை பலாய அனாமிகாப்யாம் நம: | (கட்டை விரலினால் மோதிர விரலை அடியிலிருந்து நுனி வரை வருடி கொள்ளவும்)

ஸ்வாஹா தேஜஸே கனிஷ்டிகாப்யாம் நம: | (கட்டை விரலினால் சுண்டு விரலை அடியிலிருந்து நுனி வரை வருடி கொள்ளவும்)

ஓம் ஸ்ரீ ஸ்வாஹா வீர்யாய கரதல கரப்ருஷ்டாப்யாம் நம: | (இரு கைகளையும் உள்ளங்கையையும் புறங்கை தடவுவது போலவும் புறங்கையை உள்ளங்கை தடவுவது போலவும் தடவிக் கொள்ளவும்)

ஹ்ருதயாதி ந்யாஸம் (அங்க வழிபாடு)
ஹ்ருதயாதி ந்யாஸம் செய்ய இயலாதோர் உச்சந்தலை முதல் ஹிருதயம் வரை இரு கைகளால் ஒருமுறை தடவினால் போதுமானதாகும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய – ஹ்ருதயாய நம: | (வலது கையினால் ஹ்ருதயத்தைத் தொடவும்)

ஆயுர்தேவி ப்ரகாசாய சிரசே ஸ்வாஹா| (வலது கையினால் தலையைத் தொடவும்)

கமலதாரிண்யை சக்த்யை சிகாயை வஷட்| (வலது கையினால் தலை முடியைத் தொடவும்)

ஹம்ஸவாஹின்யை பலாய கவசாய ஹூம்| (இடது கையினால் வலது புஜத்தையும், வலது கையினால் இட்து புஜத்தையும் தொடவும்)

ஸ்வாஹா தேஜஸே நேத்ராய வௌஷட்| (வலது கையினால் முகத்திற்கு நேராக சொடுக்குப் போடவும்)

ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா வீர்யாய அஸ்த்ராய பட்| (இரு கைகளால் முகத்திற்கு நேரே தட்டவும்)
பூர் புவஸ்ஸூவரோ மிதி திக்பந்த: | (கலசத்தையோ ஸ்ரீ ஆயுர்தேவி படத்தையோ தொட்டு நமஸ்கரிக்கவும்)

த்யானம்
ஸ்ரீ ஆயுர்தேவியை நினைத்துத் தியானிக்கவும்

ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜய கௌரீ ஆயுர்தேவி
நமோ நமஸ்தே சிவகாமஸுந்தரி
நமோ நமஸ்தே அருணாசலேச்வரி
நமோ மஹா கௌரீ நமோ நமஸ்தே ||

மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவஸேனாயை
ஆயுர்தேவ்யை ஸ்வாஹா ||
ஸ்ரீ ஆயுர்தேவி மூல மந்திரத்தை 24/26/64/108 முறை ஜபிக்கவும்

ஸ்ரீ ஆயுர்தேவி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே பராசக்த்யை ச தேமஹி
தந்நோ ஆயுர்தேவ்யை ப்ரசோதயாத் ||
ஸ்ரீ ஆயுர்தேவி காயத்ரீ மந்திரத்தை 24/26/64/108 முறை ஜபிக்கவும்

லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
சந்தனத்தைக் கலசத்தில்/படத்திற்கு இடவும்
ஹம் ஆகாசாத்மனே புஷ்பானி பூஜயாமி|
கலசத்திற்கு/படத்திற்கு புஷ்பம் சமர்ப்பிக்கவும்
யம் வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி|
கலசத்திற்கு/படத்திற்கு தூப புகை காட்டவும்
ரம் அக்னியாத்மனே தீபம் தர்சயாமி|
கலசத்திற்கு/படத்திற்கு பசுநெய் தீபம் காட்டவும்
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி|
உரிய நிவேதனம் செய்யவும்
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி||
ஸர்வ உபசாரணைகளையும் ஏற்குமாறு தேவியை வேண்டவும்

மஹா மந்த்ர ஜப விதானம் (வழிபாடு)
த்யாயேத்:
நவாம்புஜாரூடம் வரதாபய பாணிகாம்|
ஆயுஷோ தேவதாம் நித்யாம் ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்||
ஆயுர்தேவி மஹாப்ராக்ஞே ஸூதிகா க்ருஹவாஸிநீ|
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயு: ப்ரயச்சமே||
ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்|
சக்தி சூல கதா பத்ம தாரிணீம் சந்த்ரமௌளிகாம்||
விசித்ரவஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்|
ஸிம்ஹஸ்கந்த கதே தேவி ஸுராஸுர ஸுபூஜிதே||
ப்ரபவாத்யப்தகே சங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே|
ஆயுர்தேவி நமஸ்துப்யம் வர்ஷ தேவீம் நமோஸ்துதே||
ஆயுர்தேவி பலம் தேஹி ஸர்வாரிஷடம் வ்யபோஹயா||
ஆயுஷ்மதாத்மிகாம் தேவீம் கராள வதனோஜ்வலாம்|
கோரரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்||
சுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்||
ஸர்வசத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே|
ஷஷ்டாம்ஸாம் ப்ரக்ருதைர்ஸித்தாம் ப்ரதிஷ்டாப்ய ச ஸுப்ரபாம்||
ஸுப்ரதாம் சாபி சுபதாம் தயாரூபம் ஜகத்ப்ரஸூம்|
தேவீம் ஷோடசஷ்ருஷாம்தாம் சாச்வதஸ்திர யௌவனாம்||
பிம்போஷ்டீம் ஸுத்தீம் சுத்தாம் சரத்சந்த்ரநிபானனாம்|
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸித்யை சாந்த்யை நமோ நம: |
ஹம்ஸவாஹின்யை ஸிம்ஹபீட நிவாஸின்யை நமோ நம:|
சுபாயை தேவஸேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம: |
வரதாயை புத்ரதாயை தனதாயை நமோ நம: ||
ஸ்ருஷ்ட்யை புத்ரதாயை தனதாயை நமோ நம: |
மாயாயை ஸித்தயோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம: |
ஸாராயை சாரதாயை ச பராதேவ்யை நமோ நம: |
பாலாரிஷ்டாஹ்ரு தேவ்யை ச ஆயுர்தேவ்யை நமோ நம: |
கல்யாணதாயை கல்யாண்யை பலதாயை ச கர்மணாம்: |
ப்ரத்யக்ஷாயை ஸ்வபக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம: |
பூஜ்யாயை ஸ்கந்தகாந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஷு|
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம: |
சுத்ததத்வம் ஸ்வரூபாயை வந்திதாயை த்ருணாம்ஸதா: |
வர்ஜிதக்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: ||

மேற்கண்ட மஹா மந்தர ஜப பாராயணத்திற்குப் பின் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம், காயத்ரீ ஜபித்து, கரந்யாஸம், அங்கந்யாஸம் செய்து மீண்டும் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம், காயத்ரீ ஜபிக்க பூஜை ஸம்பூரணமாகிறது.

ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை ஸம்பூரணம்

ஸ்ரீ ஆயுர்தேவி நாமாவளிகள், போற்றித் துதிகள்

  1. ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நம:
  2. ஓம் ஸ்ரீ அன்ன வாஹின்யை நம:
  3. ஓம் ஸ்ரீ அத்புத சாரித்ராயை நம:
  4. ஓம் ஸ்ரீ ஆதி தேவ்யை நம:
  5. ஓம் ஸ்ரீ ஆதிபராசக்த்யை நம:
  6. ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நம:
  7. ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நம:
  8. ஓம் ஸ்ரீ ஓங்கார ரூபிண்யை நம:
  9. ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நம:
  10. ஓம் ஸ்ரீ கிருதயுக சித்சக்த்யை நம:
  11. ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நம:
  12. ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நம:
  13. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிண்யை நம:
  14. ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம:
  15. ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம:
  16. ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நம:
  17. ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நம:
  18. ஓம் ஸ்ரீ பத்மாஸனஸ்தாயை நம:
  19. ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நம:
  20. ஓம் ஸ்ரீ துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, நிஷேவிதாயை நம:
  21. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நம:
  22. ஓம் ஸ்ரீ வேத மந்த்ர, யந்த்ர சக்த்யை நம:
  23. ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், சுபாயை நம:
  24. ஓம் ஸ்ரீ சிவ குடும்பிண்யை நம:
  25. ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நம:
  26. ஓம் ஸ்ரீ கரபீட வரப்பிரசாதின்யை நம:
  27. ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நம:

நவகரத்தவளாய் நன்மைகள் பல நல்கும் ஸ்ரீ ஆயுர்தேவியை அற்புதமான நாமாவளிகளால் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட ஸர்வ மங்கள ஸௌபாக்கியங்களும் கிட்டும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam