ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்
2000 ஆண்டு கார்ததிகை தீபப் பெருவிழா அன்னதானத்திற்காக தமது கைப்பட எழுதி அனுப்பிய
மளிகை சாமான்களின் பட்டியலை
அடியார்களின் தரிசனத்திற்காக இணைத்துள்ளோம்.
சற்குருவின் சொல் வேதம், வார்த்தை வேதம், எழுத்தும் வேதமே !
இந்த அன்பு மடலின் சில ருசிகரமான தகவல்களை அளிக்கிறோம்.
நாம் எழுதும்போது எங்கெல்லாமோ முற்றுப்புள்ளியை (full stop) வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம்.
ஆனால், ஸ்ரீ சுவாமிகள் இதை அங்கீகரிபபதில்லை. முற்றுப் புள்ளியை ஒரு வாக்கியம் முடிகிறது என்பதைக் குறிப்பதற்காக மட்டுமே பயன்படுதத வேண்டும். தெய்வீகத்தில் முடிவு என்பதே கிடையாது. இறைவனுடன், நற்காரியங்களுடன் உள்ள நமது தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தேவையில்லாமல் முற்றுப் புள்ளி வைத்து தெய்வீக பிணைப்புகளைத் துண்டித்து விடக் கூடாது. ஸ்ரீவாத்யார் அவர்கள் ஒரே ஒரு முறை மட்டும் வாக்கியத்தின் இறுதியில் புள்ளியை அமைத்து இந்த கடிதத்தை உருவாக்கி உள்ளார்கள்.
மங்களத்தைக் குறிக்கும் ஓம் என்ற பதததில் கூட புள்ளியை வைக்காது வலது புறம் மேல் நோக்கி செல்லும் வளையங்களை அமைத்துள்ளார்கள். இது காரியங்கள் நல்ல விதமாக நிறைவேறுவதுடன் அவை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் தததுவத்தையும் எடுத்துக் காட்டும்.
1, 2, 3 என்ற வரிசை எண்களில் புள்ளி வைக்காதது மட்டுமல்லாமல் அந்த எண்களை பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதைப் போல
பிரதட்சிண சுழிகளையும் அமைத்துள்ளார்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் தெய்வீக மயமாக்குவதற்காக பொதுவாக நவகிரகங்களுக்கு உரிய எண், வடிவம், சுவை இவற்றை நம் காரியங்களில் இணைத்துக் கொள்வது வழக்கம். இது எப்படி இந்த பட்டியலில் அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
கடிதத்தின் தேதி 15.11.2000. எண் கணிதத்தின்படி இது சூரியனுக்கு உரிய ஒன்றாக வரும் (1+5+1+1+2+0+0+0).
இது நற்காரிய சித்தியைத் தருவதற்காக இந்த பட்டியலை ஜீனி 2000 கிலோ என்று ஆரம்பிக்கிறார்கள்.
1 எண்ணுக்கு உரிய குசா என்னும் நற்காரிய சித்தி எண் 2 தானே.
ஜீனியின் சுவை இனிப்பு. இனிப்பு குரு பகவானுக்கு உரியது. எனவே குருவை வணங்கி பட்டியல் ஆரம்பமாகிறது.
இரண்டாவது பொருள் (உருண்டை) வெல்லம். அது பொன் நிறத்துடன் வட்டமாகத் திகழ்வது. மஞ்சள் நிலாவிற்குரிய எண் 2 தானே.
மூன்றாவது பொருள் அரைத்த மஞ்சள் தூள்.
மஞ்சள் நிறத்திற்குரிய குருவின் எண் 3 ஆகும். அதன் அளவு 5 கிலோ. மஞ்சள் எப்போது தூளாகும ?.
பெருமாளின் சக்கர வடிவமான திருவையில் அரைக்கப்படும்போது.
பெருமாளுக்குரிய எண்ணோ 5 ஆகும்.
இவ்வாறு ஒவ்வொரு வரிசை எண்ணுக்கும் பொருளுக்கும் அது குறிக்கும் எடைக்கும் சம்பந்தம் உண்டு.
இன்னும் ஒரு சுவையான பொருள்
சிறுபருப்பு (வரிசை எண் 8). சிறு பருப்பை பாசிப் பருப்பு என்றும் சொல்வோம்.
பாசி என்னும் சொல் பாசத்தைக் குறிக்கும். ”பாசம் மோசம் செய்யும் என்பது சித்தர்கள் வாக்கு.” பாசம் என்பது ஒரு வகை பற்றுதானே.
குளத்து நீரை மூடியுள்ள பாசி அதன் அடியில் உள்ள நீரை மறைத்து விடுவதைப் போல பாசமானது
நாம் இறைவனை தரிசனம் செய்ய முடியாதபடி மாயைத் திரையிட்டு மறைதது விடுகிறது.
எனவே, பாசி பருப்பு என்று சொல்லாமல் சுவாமிகள் சிறு பருப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
மேலும், இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மைக்ரோ சாப்ட் கார்பபரேஷனின் புகழுக்குக் காரணம்
அது் சுட்டிக் காட்டும் பணிவும், அடக்கமுமே ஆகும்.
”மைக்ரோ” என்றால் மிகச் சிறிய என்று பொருள், ”சாப்ட்” என்பது மென்மையைக் குறிக்கும்.
எனவே பணிவும் மென்மையும் சேர்ந்தால் அது அனைவரையும் கவர்வதில் ஆச்சரியமென்ன ?
பாதாம் பருப்பு என்று சொல்லாமல் பாதம் பருப்பு (வரிசை எண் 25) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதம் ஆகும் பருபபே பாதம் பருப்பு. அதாவது பணிவைத் தரும் பருப்பு என்று பொருள்.
குருவின் பாதங்கள் இரண்டுதானே. எனவே அளவும் 2 கிலோ.
பூமிக்கு வெளிச்சம் தரும் சூரியனுக்கு உகந்த எண் 1.
வெட்டும்புலி, டீகப் என்று தீப்பெட்டிகளின் பெயரைச் சொல்லாது Home Lite (வரிசை எண் 46) என்ற ரகத்தை குறிப்பதால்
அது வீட்டுக்கு வெளிச்சத்தைத் தரும் என்ற நல்ல குணத்தை வெளியிடுகிறது.
12 பெட்டிகள் என்று சொல்லாமல் சூரியனின் எண் சக்தியைப் பெறுவதற்காக ஒரு டஜன் என சுவாமிகள் குறித்துள்ளார்கள்.
மொத்தப் பொருட்களின் எண்ணிக்கை 57 (5+7=3). எனவே குரு எண்ணுடன் தொடர்ந்த பட்டியல்
குரு எண்ணுடனே பூரணம் பெறுகின்றது.
எனவே சுவாமிகளின் ஒவ்வொரு அசைவும் இறை மயம்.
ஓம் குருவே சுரணம்