அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

துவார சக்தி

ஸ்ரீஆதிபராசக்தியானவள் கன்னிப் பெண்களை இரட்சிப்பதற்காக ஸ்ரீதுவார சக்தியாக அவதாரம் பூண்டு அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீதுவார சக்தி எழுந்தருளியுள்ள இடங்களில் பருவமடைந்த கன்னிப் பெண்களை அழைத்துச் சென்று
1. ஸ்ரீதுவார சக்தியைத் தரிசனம் செய்தல்
2. இளநீர், பானகம் போன்ற இனிப்புப் பானங்களைத் தானம் அளித்தல்
3. பாவாடைகள், தாவணிகள், உள்ளாடைகள், வளையல்கள், ஜடை பில்லைகள் போன்றவற்றைத் தானம் செய்தல்
4. கன்னிப் பெண்கள்  அரைத்த மஞ்சள் சந்தனத்தை இறைவனுக்களித்தல் போன்ற நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.
சிறுமியர் தக்க வயதில் பருவமடைவதற்கும் சிறந்த ஒழுக்கங்களுடன் வாழ்வதற்கும், நன்முறையில் திருமணம் நிறைவேறுவதற்கும் ஸ்ரீதுவார சக்தி அருள்பாலிக்கின்றாள். தக்க வயதில் பருவமடையாப் பெண்கள் பற்றித் தாய்மார்கள் கவலை கொள்கின்றனர். அவர்கள் ஸ்ரீதுவார சக்தி அருள்பாலிக்கும் திருக்கோயில்களில் மேற்கண்ட தானதருமங்களுடன் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நற்பலன்கள் கிட்டும். சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீதுவாரசக்தி அம்மனுக்குத் தனிச் சன்னதி உள்ளது. ஸ்ரீதுவார சக்தி அம்பாளைக் குறித்த ஒரு கதவு துவாரத்தின் வழியேதான் தரிசனம் செய்ய வேண்டும்.

பிறருக்காக பிரார்த்தனை

ஆத்ம விசார வினா –விடை
அடியார் : குருவே! பிறருடைய நன்மைக்காகப் பிராத்தனை செய்வது சுயநலமற்ற தியாக வாழ்விற்கு அடிப்படை என்று அருளியுள்ளீர்கள். இந்தப் பிராத்தனையின் பலனை எவ்வாறு தெரிந்து கொள்வது?
குரு : ஆன்மீகப் பயிற்சியில் பிறருக்காகப் பிரார்த்தனை செய்வது நித்திய பூஜைகளுள் ஒன்றாகும். பிரார்த்திப்பதோடு ஒருவருடைய கடமை முடிகிறது. பலன் ஏற்பட்டதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள விரும்பினால் குழப்பமே மிஞ்சும். தன் பிரார்த்தனைக்கு ஏற்பட்ட பலன் என்று அளவிடத் தொடங்கினால் சுயநலமே பல்கிப் பெருகும்.
அடியார் : நோய்வாய்ப்பட்ட ஒருவருக்குப் பிரார்த்தனை செய்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அவர் குணமான பின்னும் பிரார்த்திப்பது வீணாகிவிடுமல்லவா? இதற்காகப் பிரார்த்தனையின் பலனைத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே?

ஸ்ரீசக்கரம்
அம்மன் சன்னதி திருவில்லிபுத்தூர்

குரு : பிரார்த்தனை செய்யும்போது கால வரையறையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். எந்தப் பிரார்த்தனையும் வீணாவதில்லை. ஒருவர் குணமான பின்னும் பிரார்த்தனை தொடர்ந்தால், அதிக புண்ணிய சக்தியானது அவருடைய எதிர்கால சுகாதாரத்திற்காகச் சேர்த்து வைக்கப்படுகிறது. பூஜா பலன்களைத் தருகின்ற பல்லாயிரம் தேவதைகள் உண்டு. அவற்றில் ஒன்றான “வரசித்தி தேவதை” சுயநலமற்ற சங்கல்பம் நிறைந்த பூஜைகளால் ஆனந்தம் அடைகிறது. இப்பூஜையின் பலனுடன் தான் பெற்ற ஆனந்தத்திற்குப் பரிசாக தனது சித்திகளைப் பூஜை செய்வோர்க்கு அளிக்கின்றது. இவ்வகையிலும் அதிக அளவு பூஜா புண்ணிய சக்திகள், சங்கல்பிக்கப்பட்ட, காரியங்கள் நிறைவேறியவுடன் தேவதா அனுக்கிரஹத்துடன் பல்கிப் பெருகி பூஜை செய்வோருக்கே ஆசிர்வாதங்களாக வந்து சேர்கின்றன.
அடியார் : கர்ம விதிகளின்படி ஒருவர் ஒரு வாரம் நோயால் அவதியுற வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். மற்றவருடைய பிரார்த்தனையினால் அவர் நான்கே நாட்களில் குணமடைகிறார். இது அவருடைய கர்மவினையில் குறுக்கிடுவதாக ஆகுமா? இது தவறில்லையா?
குரு : நம்பிக்கை நிறைந்த பிரார்த்தனைகளால் விதியை மாற்ற முடியும், கர்மவினைகளைக் கழிக்க முடியும் என்பது உண்மையே. இதன் பின்னணியில் பல ஆன்மீக ரகசியங்கள் நிறைந்துள்ளன. இதைச் சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள இயலாது. இருப்பினும் அடிப்படை உண்மையை மட்டும் விளக்குகிறேன். பல ஆன்மீக நிலைகளை அடையும்போது, இந்த அடிப்படை உண்மை பல மாறுதல்களுக்கு உள்ளாகின்றது. உண்மையான சத்தியம் மாறுபடுமா? என்ற கேள்வி எழலாம். இப்பூவுலகில் கண்களால் காண்பதையே சத்தியம் என்கிறோம். மானுடக் கண்களால் காண இயலாததை ஆன்மீக சக்தியால் காணும்போது சத்தியம், அசத்தியம் ஆகின்றதல்லவா? உதாரணமாக இரண்டு ஆன்மீக நிலைகளை விளக்குகின்றேன். பிரார்த்தனையின் பலனானது பூஜை செய்வோருடைய புண்ணிய பலம், மனோபாவம், ஆராதனை செய்கின்ற மூர்த்தியின் ஆவாஹன சக்தி, இறைநம்பிக்கை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.
1). அடிப்படை நிலையில் சாதாரண மனிதனின் பிரார்த்தனை சுயநலமற்றதாக இருந்தாலும், அவனுடைய குடும்பத்தினருடைய எண்ணங்களும் அவனுடைய பிரார்த்தனையின் சக்தியைப் பாதிக்கின்றன. வீட்டில் மனைவி, குழந்தைகளைக் கவனிப்பது கிடையாது. இன்னொருத்தருக்காகப் பிரார்த்திக்கின்றாராம், என்று குடும்பத்தினர் ஏங்கினால் அவனுடைய பிரார்த்தனையைச் சுயநலம் அற்றதாக ஏற்க முடியாது. அவனுடைய பூஜாபலன்கள் அத்தகைய ஏக்கங்களை நிறைவு செய்வதற்கும் பயன்படுவதால் சங்கல்பத்தின் விளைவுகள் மாறுபடும். அப்படியானால் சங்கல்பம் செய்வதற்கேற்ப பூஜாபலன்கள் அமைவதில்லையா? ஆம், சங்கல்பித்தவாறே பூஜாபலன்கள் சங்கல்பிக்கப்பட்டவர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. பூஜை செய்வோரின் தற்போதைய, பூர்வ ஜன்ம பந்தங்களின் மனோநிலைகளைப் பொறுத்துப் பலன்கள் மாறுபடும். எனவே சாதாரண மனிதனின் பிரார்த்தனை சங்கல்பம் அவனுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமைவதில்லை. எனினும் அவன் தன்னுடைய முயற்சியைக் கைவிடாது பூஜைகளைத் தொடர்ந்தால் நாளடைவில் அவனுடைய ஆன்மீக நிலை உயரும்.
2). உயர்ந்த ஆன்மீக நிலையில் ஒருவர் தன்கீழ் பல அடியார்களை ஒன்று சேர்த்துக் குறிப்பிட்டவரின் நோயைத் தீர்க்க சத்சங்கமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றார். இதை அவர் தம் கடமையாகச் செய்வதால் பலருடைய பூஜாபலன்களைத் திரட்டி மற்றவருடைய நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கின்றார். இத்தகைய உயர்ந்த ஆன்மீக நிலையிலான பிரார்த்தனையின் முழுப்பலனால் தான் சம்பந்தப் பட்டவருடைய ஏழு நாட்களுக்குரித்தான நோயானது நான்கே நாட்களில் குணமாகும். ஆனால் கர்மவினைகளின்படி அவருடைய எஞ்சிய மூன்று நாள் நோய் இப்பூஜைகளை முன்னின்று நடத்திய சத்சங்க வழிகாடியைத் தாக்கும். அவரும் பொறுமையுடன் இறையருளால் அதை ஏற்று அனுபவிக்கின்றார். இதை வெளிக்காட்டுவதும் கிடையாது. இத்தகைய தியாக உணர்ச்சிக்குப் பரிசாக அவருக்கு இறையருள் சற்குருவின் அருளாகப் பரிணமிக்கும். மேற்கண்ட இரண்டு நிலைகளுக்கு இடையிலும், இதற்கு அப்பாலும் ஆயிரமாயிரம் ஆன்மீக நிலைகளுண்டு. இவைகளை அனுபவத்தால்தான் உணர முடியும். எழுத்தில் வடிக்க இயலாது.

நவகிரக வழிபாடு

கலியுகத்தில் இன்பங்களை எண்ணியே வாழும் மனிதர்களே நிறைந்திருப்பதால் இன்பங்களைப் பெறுவதற்காக அதர்ம நெறிகளை, குறுக்கு வழிகளைக் கையாண்டு பல துன்பச் சுழல்களில் சிக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். மனிதனுடைய தினசரி வாழ்க்கைக்கு ஜீவன சக்தி அளிப்பது சூரிய ஒளி ஆகும். ஏனைய ஜீவன்களும் அப்படியே. சூரியனைத் தலைமையாகக் கொண்டு ஏனைய கிரகங்கள் இயங்குகின்றன. இவ்வாறாக மனிதனுடைய தினசரி வாழ்வில் நவகிரகங்களே ஆட்சி செலுத்துகின்றன. அன்றாட கிரக சஞ்சாரங்களுக்கேற்ப மனிதனுடைய மனோபாவம், தேகநிலை, உணர்ச்சிகள் போன்றவை மாறுபடுகின்றன. எனவே ஒவ்வொரு க்ஷணமும் மனிதன் அவனுடைய எண்ணங்களுக்கேற்ப பல குணாதிசயங்களைப் பெறுகின்றான்.
கிரக சஞ்சார நிலைகளை ஒருவன் நன்கு அறிந்து கொள்வானானால் அவன் அவைகளுக்கேற்ப தான தருமங்களைச் செய்து தீவினைகளிலிருந்து ஒதுங்கி உன்னத மனிதனாக வாழ முடியும். ஆனால் இத்தகைய ஜோதிட அறிவு மட்டும் பெறுவதால் எவ்வித பலனுமில்லை. ஏனெனில் அறிவோடு அகங்காரமும், அடக்கமின்மையும் வளர்ந்து துன்பங்கள் பெருகும். சற்குருவைப் பெற்ற ஒருவன் அவரருளால் பல சத்சங்க அடியாருடன் சேர்ந்து வேண்டுமளவு தான தருமங்களைச் செய்து குருவருள் கூடிய திருவருளோடு நல்வாழ்வு வாழலாம். சற்குரு கூடவே இருப்பதால் புண்ணியங்களை நன்கு பகுத்து எதிர்கால வாழ்விற்கும் ஈந்து விடுவதால் அகங்காரம், ஆணவம் போன்றவை ஏற்படுவதில்லை. குருமங்கள கந்தர்வா நம் தினசரி வாழ்வில் நவக்ரஹங்களைத் தியானித்து வழிபடும் எளிய முறையை அருளியுள்ளார். ஒரு நாளுக்குரிய 24 மணி நேரங்களிலும் ஒவ்வொரு மணிக்கும் ஒரு கிரகத்தின் ஆட்சி நடைபெறுகின்றது. அந்த ஒருமணி நேரம் முழுவதும் அந்த கிரகத்தின் இயல்புகள் பரிணமிக்கும். இதனையே ஹோரை என்கிறோம். உதாரணமாக திங்கட்கிழமையில் (காலை)

அமர்ந்தநிலை நவகிரக மூர்த்திகள்
திருப்பத்தூர்

6.00A A.M  to 7.00 A.M – சந்திர ஹோரை
7.00 AM to 8.00 A.M –   சனி ஹோரை
8.00 AM to 9.00 A.M -   குரு ஹோரை
9.00 AM to 10.00 A.M -   அங்காரக ஹோரை
10.00 AM to 11.00 A.M -    சூரிய ஹோரை
11.00 AM to 12.00 A.M -    சுக்கிர ஹோரை
(நன்பகல்)
12.00 AM to 1.00 P.M  -   புத ஹோரை
இவ்வாறாக மறுநாள் சூரியோதம் வரை அனைத்து கிரக ஹோரைகளும் குறித்த வரைமுறையில் மாறி மாறி அமையும். சூரிய உதய நேரத்திற்கேற்ப ஹோரையின் ஆரம்ப, முடிவு நேரங்கள் மாறுபடும்.
உதாரணம் : - 1.1.1994 அன்று சென்னையில் சூரியோதய நேரம் காலை 6.35 மணி ஆகும். அன்றைய தினம் கிரஹ ஹோரைகள் (காலை) அதற்கேற்றவாறு மாறும் 6.00 மணிக்கு பதிலாக 6.35க்குத் தொடங்கி ராகு காலம், எமகண்ட, குளிகை நேரங்களும் சூரிய உதய அஸ்தமண நேரங்களுக்கேற்ப மாறுபடும். ராகு, கேது ஆகிய கிரஹங்களுக்கு ஹோரைகள் கிடையாது. ஆனால் ராகுவிற்குரித்தான ராகு காலம் போல கேதுவிற்குரித்தான கேது காலம் எதிர்காலத்தில் ஜோதிடக் கணிதத்தில் முக்கியத்துவம் பெறும் எனச் சித்தர்கள் அருள்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் குறித்த வரிசையில் கிரஹ ஹோரைகள் அமைகின்றன.
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் (அங்காரகன்) என்ற வரிசையில் ஹோரைகள் மாறுகின்றன. சூரிய உதய நேரத்தில் ஞாயிறன்று சூரிய ஹோரையும், திங்களன்று சந்திர ஹோரையும், செவ்வாயன்று அங்காரக ஹோரையும் என்றவாறாக அந்தந்த தினத்திற்குரித்தான கிரக ஹோரை முதலில் அமைந்து உரிய வரிசையில் ஏனைய கிரக ஹோரைகள் தொடர்கின்றன.
ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரகத்தின் ஆட்சி பூலோகத்தில் அமைவதால் அக்கால வரையறையில் அந்த கிரகத்தின் பரிபூரண ஆதிக்கம் நிறைந்திருக்கும். குறித்த அவ்வொரு மணி முழுவதும் அந்த கிரஹாதிபதியைத் தியானித்து அவர்க்குரித்தான மந்திரங்களை ஜபித்து அக்கிரகத்திற்குரிய வஸ்திர, தான்யங்களைத் தானம் செய்வது அக்கிரகாதிபதியின் விசேஷமான அருளைப் பெற்றுத்தரும்.
உதாரணமாக வியாழன் அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், நண்பகல் 1.00 மணி முதல் 2.00 வரையிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மறுநாள் அதிகாலை 3.00மணி முதல் 4.00 மணி வரை குருஹோரை நேரங்களாகும். இந்த நேரங்களில் குரு த்யானமும், குருபூஜையும், கடலை தான்யம், மஞ்சள் வஸ்திர தானமும், கடலை வகை உணவு நிவேதனம்/தானம் செய்தலும் குருவின் பரிபூரண அருளைப் பெற்றுத்தரும். பல்வேறு அலுவல்களிலிருந்தாலும் அந்தந்த ஹோரையில் ஸ்ரீசூர்யாய நம: (சூர்யா போற்றி), ஸ்ரீசுக்ராய நம : (சுக்கிரா போற்றி), ஸ்ரீபுதாய நம : (புதனே போற்றி) , ஸ்ரீசந்த்ராய நம (சந்திரா போற்றி), ஸ்ரீசனீஸ்வராய நம: (சனீஸ்வரா போற்றி) ஸ்ரீகுரவே நம: (குருவே போற்றி) ஸ்ரீஅங்காரகாய நம: (குஜனே போற்றி) என்று உச்சரித்தோ, மௌனமாகவோ தியானிக்கவோ செய்ய வேண்டும். இந்த ஹோரையில் கிரக வழிபாட்டின் துவக்கமாக குறைந்தது 108 முறையாவது அந்தந்த கிரகாதிபதியின் திருநாமத்தை உச்சாடனம் செய்தல் வேண்டும்.
ராகு காலத்தில் இதேபோல் ஸ்ரீராகவே நம: (ராகுவே போற்றி) எனத் தியானிக்க வேண்டும். ராகு காலத்தில் இரண்டு கிரக ஹோரைகள் இணைந்து வரும் அச்சமயங்களில் ஸ்ரீராகு பகவானையும், அந்தந்த ஹோரைக்குரிய கிராதிபதியையும் சேர்ந்தோ, ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தோ வழிபட வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானின் அதிதேவதையான ஸ்ரீதுர்கா தேவியை வழிபடுதல் மூன்று தெய்வ மூர்த்திகளின் அருள்பொழிவினைப் பெற்றுத் தரும். இவ்வாறாக தினசரி வாழ்வில் ஒவ்வொரு மணியிலும் உரிய கிரகாதிபதியை வழிபடுவதால் நவக்கிரக நாயகர்களின் பரிபூரண அருளைப் பெற்று நல்வாழ்வு வாழலாம்.
ஹோரை நேரங்கள்
ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு கிரஹத்தின் ஆட்சி கீழ்க்கண்டவாறு அமையும். அந்தந்த கிரஹ ஹோரையில் அதற்குரித்தான கிரஹாதிபதியை வழிபட்டால் தினமும் நவக்கிரஹங்களை பூஜித்த பலன் கிட்டும். (சூரிய உதய நேரம் : 6.00 என்று கணக்கிடப்பட்டுள்ளது) சுப காரியங்களுக்கு செவ்வாய், சனி ஹோரை நேரங்களைத் தவிர்த்தல் வேண்டும். குரு, சுக்கிர ஹோரைகள் அனைத்து நற்காரியங்களுக்கு, வளர்பிறைச்சந்திரன் பயணம், தொழில், பெண்பார்த்தல், புதன் எழுதுதல், வழக்கு, சூரியன் உயில் எழுத, தொழில்/உத்தியோக உதவிகள் பெற பயன்படுத்தலாம்.


வாரம்

6.00 -7.00

7.00- 8.00

8.00 -9.00

9.00- 10.00

10.00- 11.00

11.00 -12.00

12.00 -1.00

1.00 -2.00

2.00-3.00

3.00-4.00

4.00-5.00

5.00-6.00

பகல்

ஞாயிறு

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

திங்கள்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

செவ்வாய்

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

புதன்

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

குரு

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

வெள்ளி

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

சனி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

இரவு

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

ஞாயிறு

திங்கள்

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்வாய்

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

வியாழன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

வெள்ளி

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

சூரிய

சுக்கி

புதன்

சந்தி

சனி

குரு

செவ்

பிந்து தர்ப்பணம்

ஸ்ரீவித்யா உபாசனையில் ஓர் அங்கமாக பிந்து தர்ப்பணம் அமைகின்றது. இஞ்சி, தேன் இவற்றால் அளிக்கப்படும் அர்க்கியத்துக்கு பிந்து தர்ப்பணம் என்று பெயர். இது பித்ரு தேவர்களைப் ப்ரீதி செய்வதற்காக அளிக்கப்படுவதாகும். ஆனால் கடினமான நியம நிஷ்டைகளுடன் கூடிய ஸ்ரீவித்யா பூஜையை மேற்கொள்வோர் தற்காலத்தில் அருகிவிட்டனர். ஸ்ரீபாஸ்கரராயர் என்ற மஹான் கலியுகத்தில் ஸ்ரீவித்யா உபாசனையில் மேன்மை பெற்று பலருக்கும் இந்த ஆன்மீக ரகசியத்தைப் போதித்தார்.
தற்போது ஸ்ரீவித்யா பூஜையை சிரத்தையுடன் செய்து வருபவர் ஒரு சிலரே. ஏனையோர் தாங்களாகவே சில நியமங்களைத் தளர்த்திக் கொண்டு சில முறைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் ஸ்ரீவித்யாவின் பரிபூரண அருளை அவர்களால் பெற இயலவில்லை.
பிந்து தர்ப்பணம் ஸ்ரீஅம்பாள் உபாசனையில் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருந்தாலும் பல யுகங்களுக்கு முன்னரே சித்த புருஷர்கள் பித்ரு பூஜையாக பிந்து தர்ப்பண முறையை அளித்துள்ளனர். “பிந்து” என்றால் ஜீவனின் கரு என்று பொருள். ஜீவனின் கரு என்பது சூட்சும சரீரத்தின் பிறப்புகளுக்குக் காரணமாகும். அக்காலத்தில் சந்தியாவந்தனம், அமாவாசை பூஜை, பிரும்ம யக்ஞம், ஔபாஸனம் போன்றவற்றில் பித்ருக்களுக்கான பூஜையையும் ஓர் அங்கமாக சேர்த்தனர். பித்ரு தேவர்கள் ப்ரீதி அடைந்தும் நன்னிலை பெற்று தெய்வீக லோகங்களை அடைகின்றபோது அவர்களுடைய வம்சாவளியினரும் ஆன்மிகத்தில் மேன்மையடைகின்றனர்.
ஏனைய பூலோக ஜீவன்களுக்கும் சேவை புரிந்து “மக்கள் சேவையே மகேசன் சேவை” எனச் சுயநலமற்ற வாழ்வினால்தான் பித்ருக்கள் சாந்தியடைவர். இதையொட்டியே அன்னதானம், வஸ்திரதானம், ஸ்வர்ண (தங்கம்) தானம், குடை, பாத்திரங்கள், விளக்குகள், காலணிகள், படுக்கைதானம், கோதானம் போன்ற பல்வேறு தானதர்ம வழிமுறைகளைப் பெரியோர்கள் நிர்ணயித்தனர். இவற்றோடு பித்ரு தர்ப்பணங்களையும் இட்டுப், பித்ரு பூஜைகளை நிறைவு செய்ய வேண்டும்.
தற்காலத்தில் அமாவாசை, மாளய அமாவாசை, கிரஹண காலங்கள் ஆகியவற்றை வெறும் தர்ப்பணத்தோடு முடித்து விடுகின்றனர். இதனால் பித்ருக்கள் பிரீதி அடைவதில்லை. தான தர்மங்களற்ற பித்ரு தர்ப்பணங்களை அவர்கள் ஏற்காததால் வறுமை, கடன் தொல்லைகள், குழந்தைகளுக்கு நோய்கள், குழந்தைப் பேறின்மை, திருமணத் தடங்கல்கள் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பித்ரு கடன்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் மீள்வதற்காகவே கார்த்திகை தீபப் பெருவிழாவில் திருஅண்ணாமலையிலும், மஹாளய அமாவாசை  ஆடி, தை அமாவாசைகளில் கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், ராமேஸ்வரம், காசி, திருவள்ளூர் போன்ற இடங்களில் தான தர்மங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
பித்ரு பிந்து தர்ப்பண முறை
இவற்றோடு நித்ய தர்ப்பண முறைகளுமுண்டு இதைச் சித்தர்கள் எளிமைப் படுத்தியுள்ளனர். தினமும் காலையில் சிறிது நீரருந்தியவுடன் தேனில் தோய்ந்த சிறுஇஞ்சித் துண்டுகளை ‘இவை எமது பித்ருகளுக்கு ஆஹுதியாக அமைய இறைவா, அருள்புரிவாயாக!” என்று பிரார்த்தித்து இஞ்சித் துண்டுகளை நன்கு மென்று விழுங்கவேண்டும், இதனையே கலியுகத்திற்குரிய பிந்து தர்ப்பணமாகச் சித்தர்கள் அருள்கின்றனர். எந்த லோகத்திலும் கிடைக்கின்ற பொருட்கள் ஒரு சிலவே. அவற்றுள் வில்வம், தர்ப்பை, தேன், இஞ்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எனவேதான் திதித் திவசங்களில் இஞ்சி, தேன் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பொதுவாக பித்ருக்கள் தங்கள் உணவினை நீர் மூலமாகவே பெற வேண்டும் என்பது விதி. ஆனால் தேன், இஞ்சி ஆகியவற்றின் மூலிகைத் தன்மைகளால், இவற்றை நேரிடையாகப் பெற்று விடுகின்றனர். எனவே மேற்கண்ட முறையில் தேனில் தோய்ந்த இஞ்சியை உண்டு தினசரி பிந்து தர்ப்பணம் செய்வது பித்ரு தேவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும். இவ்வெளிய தான முறையை அனைவரும் கடைபிடித்து நம்முடைய மூதாதையருக்கு பிந்து தர்ப்பணத்தை அர்ப்பணித்து குரு அருளால் அவர்களுடைய ஆசிகளைப் பெறுவோமாக!

ஸ்ரீபடேசாசிப் மருத்துவ சித்தர்

பாண்டிச்சேரி அருகே வில்லியனூரிலிருந்து சற்றுத் தொலைவில் கண்டமங்கலம் சின்னபாபு  சமுத்திரம் என்னும் சிற்றூரில் சித்த புருஷரான ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதி அமைந்து உள்ளது. ஜாதி, மதம் வித்தியாசமில்லாது அனைத்து மக்களுக்கும் தன் ஜீவசமாதியிலிருந்து அருள்புரியும் அற்புத சித்தர் இவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பல நாடுகளிலும் ஸ்ரீவைத்தீசுவரனாக பலகோடி மக்களின் நோய்களைத் தீர்த்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீபடேசாஹிப் சித்தர்.
தன்னிடம் வருகின்ற நோயாளிகளை கோயில் (ஜீவசமாதிக் கோயில்) நுழை வாயிலில் உள்ள மகிழ மரத்தை வேகமாகச் சுற்றி வரச்செய்வார். அவர்கள் களைப்படைந்தால் கூட கண்டும் காணாததுபோலிருந்து விடுவார். மகழமரத்தைச் சுற்றி வந்த களைப்பில் நோயாளிகள் மயக்கமடைந்து கிழே விழுந்துவிடுவர். இந்நிலையில் தான் இருந்த இடத்திலிருந்தே கிழே விழுந்தவர்களைத் தீர்க்கமாக உற்று நோக்குவார். நோயாளி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் சந்தோஷத்தில் குதித்துக் கூத்தாடுவார். ஏனெனில் அவரது நோய் பறந்தோடியிருக்கும், நோயிருந்த சுவடே தெரியாது. இவ்வாறு, தான் இருந்த இடத்திலிருந்தே லட்சக் கணக்கானோரின் நோய்களை இறையருளால் தீர்க்கும் வல்லமை பெற்ற ஈடில்லா சித்த புருஷரே ஸ்ரீபடேசாஹிப் .
பெரும்பாலும் மௌனமாக இருப்பார். ஓரிரண்டு வார்த்தைகளே பேசுவார். தன்னிடம் வருவோர்களையெல்லாம் மகிழ மரத்தைச் சுற்றச் செய்வார். இவ்வாறு அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம், ஏராளம். நோய்களைத் தீர்க்கும் திருக்கோயிலே ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதியாகும். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என மதஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீபடேசாஹிப் ஆவார்.
நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத அற்புதமான சிலைக்கல் இமயமலை அடிவாரத்தில் 2000 அடிக்குக் கீழ் பூமியுனுள் கிடைக்கின்றது. இறையருளால் இத்தகைய விசேஷமான சிலைக்கல்லை ஸ்ரீபடேசாஹிப் தனது அன்பார்ந்த சிஷ்யர்களுள் ஒருவனான பொன்னன் மூலமாக இக்கோயிலின் கிணற்றினுள்ளிலிருந்து வெளிக் கொணர்ந்து ஓர் ஆன்மீக விந்தையைப் புரிந்தார். இந்த ‘நிஷ்ட தார்ய” சிலைக் கல் ஸ்ரீபடேசாஹிபின் திருக்கரங்கள் பட்டவுடன் அற்புத லிங்கமாக மாறியது. அதுவே ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதியை அடுத்துள்ள சிவன் கோயிலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் என்னும் மூலவராக உருப்பெற்றுள்ளது.
ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதிக்கும், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் ஸ்ரீபடேசாஹிப் ஜீவசமாதியைத் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர் மோர்தானம் செய்தல் உத்தமமான பலன்களை அளிக்கும். கான்ஸர், காசநோய், தொழுநோய், எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்கள் உடையோருக்கு ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதி தரிசனம் ஒரு அருமருந்தாய் அமையும்.
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், ஏனைய மருத்துவத் துறை வல்லுனர்கள் ஸ்ரீபடேசாஹிபின் ஜீவசமாதியைத் தரிசனம் செய்து இயன்ற திருப்பணிகளையும், தான தருமங்களையும் செய்திடில் தங்கள் துறையில் முன்னேற்றம் பெறுவர். புதிதாக மருத்துவம் தொடங்குவோர் ஸ்ரீபடேசாஹிப் அருளைப் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும். கையில் ஸ்ரீதன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் ஸ்ரீபடேசாஹிபின் தோற்றம் கோயிலில் அழகான வண்ணப்படத்தில் பதிந்துள்ளது. இது காண்பதற்கரிய காட்சியாகும்.
ஸ்ரீபடேசாஹிப் குழந்தைகளுக்கு இனிப்புகள், மாம்பழம் ஆகியவற்றை அளித்து அவர்கள் மனம் கனிக்கச் செய்வார். ஆகவே அவர்தம் ஜீவசமாதியில் மாம்பழம், இனிப்புகளை அனைவருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு அளித்தல் சிறந்ததாகும்.
ஒரு நாள்.... ஸ்ரீபடே சாஹிப் குழந்தைகளை அழைத்து ஒரு பெரிய குழியைத் தோண்டச் செய்தார். தான் அதற்குள் இறங்கியவுடன் மண் கொண்டு குழியை மூடச் செய்தார். குழந்தைகளும் இதை விளையாட்டாக எண்ணிக் குழியை மூடினர். ஒரு சித்த புருஷரின் ஜீவசமாதிக்கு  இது இறைவனின் திருவிளையாடல் என்று அவர்கள் உணர்ந்தாரில்லை. நெடுநேரமாகியும் குழியிலிருந்து சப்தம் கேட்காமையால் குழந்தைகள் அழத்தொடங்கினர். அப்போது....
குழியிலிருந்து.. ஸ்ரீபடேசாஹிப் கரம் மட்டும் வெளிவர.....
அவர்கையில் பல வண்ணங்களில் மிட்டாய்கள்! குழந்தைகள் மிட்டாய்களை எடுத்துக் கொண்டு குதூகலமாக ஓடி ஊர்மக்களுக்குச் சொல்ல..... இவ்வாறாகப் பரிணமித்ததே ஸ்ரீபடேசாஹிபின் ஜீவ சமாதி!
ஸ்ரீலம்போதராக்னி சக்கரம்
(திருக்கயிலாயப் பொதியமுனிப்பரம்பரை சக்திஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் அருளிய சக்கரம்)
ஸ்ரீவருணா இஷ்டதிகம்பர சித்தர் என்று சித்த புருஷர்களால் அழைக்கப்படும் கசவனம்பட்டி நிர்வாண மௌன சித்த ஸ்வாமிகளின் பிரம்ம ஜோதி பீஜாட்சரங்கள் பொறிக்கப் பெற்ற சக்கரமிது. ஸ்ரீசித்த  ஸ்வாமிகளின் பக்த கோடிகளும் ஏனையோரும் தினந்தோறும் பூஜிக்கத்தக்க வழிபாட்டுச் சக்கரம், பாமரரும் எளிதில் வழிபடக்கூடிய சக்திவாய்ந்த தெய்வீகச் சக்கரம்.
அனைவரும் இந்தச் சக்கரத்தைப் பூஜித்து ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தரைப் (ஸ்ரீகசவனம்பட்டி ஜோதி நிர்வாண ஸ்வாமிகள்) போற்றி வழிபட்டு எல்லா நலனும் பெற்று இறையருளுடன் நற்காரியங்கள் புரிந்து நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம். நம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகளின் குருவருளினால் அரிய ஆன்மீக இரகசியங்கள் நிறைந்த “இந்த லம்போதராக்னி சக்கரத்தைக்“ கலியுக மக்களின் நல்வாழ்விற்கென பெருங்கருணையுடன் வழங்கியவர் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் ஆவார்.

ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தர்

ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தர் என்று சித்த லோகங்களில் திருநாமம் கொண்டவரே ஸ்ரீகசவனம்பட்டி மௌன நிர்வாண சுவாமிகள்
ஸ்ரீகசவனம்பட்டி ஜோதி நிர்வாண சுவாமிகள் என்று பல திருபெயர்களில் பவனிவந்து திண்டுக்கல் அருகே கசவனம்பட்டி கிராமத்தில் தோன்றிப் பூலோகத்தை இரட்சிக்கும் சித்தபுருஷர். சில ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி பூண்ட ஸ்ரீசித்த சுவாமிகள் தற்போது வருணாஇஷ்ட திகம்பர லோகத்தில் ஸ்ரீபராசக்தியின் திருவடிகளில் உறைந்து பலகோடி லோகங்களையும் காத்து வருகிறார்.
ஸ்ரீலம்போதராக்னி சக்கரம் :

ஸ்ரீலம்போதராக்னி சக்கரம்

பூலோகவாசிகளுக்கு எளிதில் அனுக்கிரஹம் செய்யும் பொருட்டு ஸ்ரீலம்போதராக்னி என்னும் அருட்பெரும் லோகத்திலிருந்து அருள்புரிகின்றார் . பூலோகம், புவர்லோகம், சுவர் லோக ஜீவன்கள் இந்த “ஸ்ரீலம்போதராக்னி யோகம்“ மூலமாகவே ஸ்ரீசித்த ஸ்வாமிகளைக் காணலாம், பேசலாம், கண்டு மகிழலாம். நம்மைக் கரை ஏற்றுவதற்காகவே அருட்பெரும் ஜோதியாம், ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர லோகத்திலிருந்து (ஸ்ரீபராசக்தியின் பெருஞ்ஜோதி லோகம்) ஸ்ரீ லம்போதராக்னி லோகத்திற்கு வந்து அங்கு இறைநிலை கொண்டு நம்மை ஆட்கொள்கிறார் ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தர்.
ஆன்மச் சக்கரம் : சித்தர், மஹான், யோகி, ஞானி உட்பட ஒவ்வொருவருக்கும் ஓர் “ஆன்மச் சக்கரம்” உண்டு. இவை ஜீவ இரகசியங்களாகும். இதை ஒருவர் அறிந்து கொண்டால் அவர் தன் பிறவிகள் அனைத்தையும் அறிந்தவராகிறார். சற்குரு ஒருவரே அவரவருடைய “ஆன்மசக்கரத்தை“ கணித்து அறியும் தெய்வீக அருள் பெற்றவர். ஆனால் தான் அறிந்ததை வெளிக்காட்டாது அடியார்களின் நல்வாழ்வை அவரவர் ஆன்ம சக்கரத்திற்கேற்ப தீர்க்க தரிசனமாக முன்னரே அறிந்து அருள்கின்ற தெய்வத்திருஉரு.
சித்த புருஷர்களின் ஆன்ம சக்கரம் :
பொதுவாக ஒவ்வொரு சித்த புருஷர்களின் ஆன்ம சக்கரமும் கோயில் மூல மூர்த்திக்குரித்தான தெய்வீக சக்தியைப் பெற்றுள்ளமையால் அது பிரம்ம இரகசியமாக வைக்கப்படுகிறது. ஆனால் கலியுகத்தில் மக்கள் பல துன்பங்களில் உழன்று வாடுகையில் உத்தம சற்குரு மக்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்து இறையருளுடன் ஆன்ம சக்கர இரகசியங்களைப் பெருங்கருணையுடன் அருள்கின்றார்.
இவ்வாறாக, ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஸ்வாமிகள் தம் சித்தர் குலத் தோன்றல் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளுக்கு அருளிய ஸ்ரீலம்போதராக்னி சக்கரம் தற்போது பக்தர்களின் ஆன்ம நேயத்திற்காக வெளியிடப்படுகிறது.
ஸ்ரீ லம்போதராக்னிச் சக்கரம் – வழிபடும் முறை
1. இந்தச் சக்கரத்தை சுத்தமான எவ்விடத்திலும் வைத்து ஆராதிக்கலாம்.
2. சக்கரத்தினுள் உள்ள முக்கோணப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைத்தல் வேண்டும்.

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்

3. ஸ்ரீ கசவனம்பட்டி சுவாமிகள்,சிலை, விக்ரஹம், படம், ஓவியம் இவற்றின் கீழ் சக்கரத்தை வைத்துப் பூஜிப்பதால் ஆகர்ஷண சக்தி எளிதில் உருவாகிறது.
4. ஸ்ரீ சித்த சுவாமிகளின் உருவத்தின் கீழ் சுத்தமான வஸ்திரம், பலகை, வெள்ளி, தாமிர, வெண்கலந்தட்டு (தர்ப்பை பாய்) அரிசி பரப்பப் பெற்ற வாழை இலை போன்றவற்றில் சக்கரத்தை  வைக்கலாம்.
5. சக்கரத்தைப் படுக்கை வசத்தில் வைத்தால் கூர்மையான முக்கோணப் பகுதி ஸ்ரீசுவாமிகள் படத்தை நோக்கி இருக்க வேண்டும். சக்கரம் நிமிர்ந்து இருப்பின் முக்கோணப்பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.
6. மஞ்சள், குங்குமம், விபூதி, அட்சதை, புஷ்பம் எத்தகைய பூஜைக்குரிய பொருளாலும் அர்ச்சித்துப் பூஜை செய்யலாம்.
7. சக்கரம் தகட்டில் பொறிக்கப்பட்டிருந்தால் பால் தேன், பன்னீர் போன்ற எந்த திரவியத்தாலும், நறுமணப் பொருட்களாலும் அபிஷேகம் செய்யலாம்
.8. வேத மந்திரங்கள், தமிழ்மறைகள், சகஸ்ர நாமங்கள் (1008 போற்றிகள்), விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, சஷ்டிக் கவசம் போன்ற எத்தகைய இறை மந்திரங்களாலும் ஓதி வழிபடலாம்.
9. இச் சக்கரப் பூஜைக்குக் கடுமையான நியம அனுஷ்டானங்கள் கிடையாது. உடல் நிலை சரியில்லாவிடில் இறைநாமம் ஓதியவாறு கைகால்களை நன்கு சுத்தம் செய்து நெற்றில் திருநீறு, நாமம் இட்டுப் பின் பூஜிக்கலாம்.
10. பூஜையின் துவக்கத்தில்
“ஸ்ரீம்தேவி ஐம் வாக் தேவியே நம:
வருணா இஷ்ட திகம்பர யோகினியே நம :“
என்ற மந்திரத்தை 5 முறை ஓதிய பின்
 “ஸ்ரீம் ஓம் கங் கசவன அவதூத சித்த தேவாய நம :“
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஸ்ரீம் ஓம் கங் கசவன அவதூத சித்த தேவாய நம : ஸ்ரீசுவாமிகளின் மூலமந்தரம்.
11. இநதப் பூஜையில் நிவேதனம் செய்யப்பட்ட உணவை, பசுவிற்கும், ஏழை, எளியோர்க்கும் வழங்க வேண்டும். பால். பழம்,  முந்திரி, திராட்சை, அன்னம், பாயசம் எனத் தகுதிக்கேற்றவாறு எதையும் படைத்து வணங்கலாம்.
12. படைக்கப்பட்ட உணவைச் சிறிது பிரசாதமாக ஏற்றபின் நிவேதனப் பொருளை ஏழைகட்கும், பசுவிற்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறாக எளிய முறையில் தம் வசதிக்கேற்றவாறு ஸ்ரீலம்போதராக்னிச் சக்கரத்தை அனைவரும் வழிபட்டு ஸ்ரீகசவனம்பட்டி சித்த சுவாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்தால் எல்லா நலமும் பெற்று வாழ்வோமாக!
பிரத்யதி தெய்வம் ஸ்ரீவிநாயகர்
ஸ்ரீலம்போதரன் என்ற பெயர் ஸ்ரீபிள்ளையாருக்கு உரித்தானதாகும் (லம்ப – பெரிய உதரம் – வயிறு – பெரியவயிறு உடையவன் ) ஸ்ரீலம்போதராக்னிச் சக்கரத்தின் பிரத்யதி தேவதை ஸ்ரீவிநாயக மூர்த்தி ஆவார். இச்சக்கரத்தின் உட்புறத்தில் நான்கு சதுரலோகங்களிலும் ஸ்ரீவிநாயகர் பரிபூரணமாக உரைந்து கவசமாக நின்று அருள்கின்றார். ஸ்ரீவிநாயகரின் பெருவயிற்றில் வசிக்கும் ஸ்ரீஅகமர்ஷண மஹரிஷி, ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர யோகினி தேவியை உபாசித்து ஸ்ரீகணேசரின் திருவயிற்றில் திகழும் பாக்கியத்தைப் பெற்றார். இவரே “உ” என்னும் பிள்ளையார் சுழியை உலகிற்கு அளித்தவர். எனவே ஸ்ரீவிநாயக பக்தர்களுக்கு இந்த ஸ்ரீலம்போதராக்னிச் சக்கரம் ஒருவரப் பிரசாதி!
அனைவர்க்கும் அருள்மழை பொழியும் அற்புத கற்பக விருட்சம்!

சுயநாம ஜபம் – 2
தன் பிறப்பின் இரகசியத்தை எளிதில் காட்டவல்ல சுயநாம ஜபத்தைச் செய்யும் முறையை இங்கு விளக்குகிறோம்.
1.தினமும் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில்  சுயநாம ஜபத்தைச் செய்தல் உத்தமமானது.
2. வெறும் தரையில் அமரலாகாத , தர்பைப் பாய், கம்பளி ஆடை, மரப் பலகை, பருத்தித் துணி, அரசு, ஆல், வேம்பு போன்ற விருட்ச இலைகள், நார்ப்பட்டு போன்றவற்றுள் எதையேனும் விரித்து அமரவேண்டும்.
3. தியான இடத்தில் பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி நீரைத் தெளித்து, ஊதுபத்தி ஏற்றி வைத்துத் தொடங்கினால் விரைவில் தெளிந்த இறைச் சிந்தனை கிட்டும். எனினும் வசதி, கால நேரம் பொறுத்து எளிமையாகச் செய்யவும்.
4. குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் சீரிய ஒற்றுமை, மன அமைதி ஏற்படும்.

கனக தாரைக்குப் பின்

கேரளத்தில் தன் வீட்டில் எஞ்சியிருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியையும் அளித்த ஏழைப் பெண்மணிக்காக ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடியருளினார், இதன் பலனாக அப்பெண்மணியின் வீட்டு முற்றத்தில் தங்கக் காசுகள் குவிந்தன. இந்த வரலாற்றை அனைவரும் அறிவர். இதற்குப் பிறகு நடந்ததை யாரோ அறிவர், சித்த புருஷர்களைத் தவிர...
வீடு நிறையத் தங்கக் காசுகள் குவிந்து கிடப்பததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் அப்பெண்மணி!
பெண் : சுவாமி! இவ்வளவு செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

ஸ்ரீஆதிசங்கரர் மாந்துறை

சங்கரர் : நன்றாக சுக போகங்களுடன் வாழ்வாயாக, பெண்மணி!
பெண் : சிவ சிவ! இவ்வளவு செல்வமிருந்தால் பிரச்சனைகளும் கூடவே வரும் . இதுவே தங்களிடமிருந்தால் பலருக்கும், பயன்படும், சுவாமி!
சங்கரர் : துறவிக்கு எதற்கு செல்வம்? உனக்கு ஸ்ரீலட்சுமி அளித்ததை நான் தொடக்கூடாது அம்மா! மேலும் உள்ளன்போடு ஒரு நெல்லிக்காயைத் தானமளித்ததற்கு இத்தகைய புண்ணியம் கிட்டும் என்பதை மக்கள் உணரவே இறைவன் நிகழ்த்தும் திருவிளையாடல்.
பெண் : சுவாமி! செல்வம் வந்த விதம் விளக்கினீர்கள், இதனைப் பயன்படுத்தும் வகையையும் விளக்க வேண்டுகிறேன்.
சங்கரர் : கலியுகத்தில் இறைப் பண்புகள் மங்கி அதர்மம் பெருகும். இறைநியதிப்படி இக் கேரளபூமியில் மட்டுமே இறைவழிபாடுகள் வைதீகமாக நன்முறையில் நடக்கும். எனவே கேரள பூமியெங்கும் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் இச்செல்வம் கொண்டு திருப்பணிகளைச் செய்வாயாக! குறிப்பாக  அனைத்துத் தெய்வமூர்த்திகளுக்கும் பஞ்சலோக விக்ரங்களை அமைத்துத் தருவாயாக! இவை காலத்தால் அழியாது! இறை சாந்தித்தியமும் இவற்றில் குறைவு படாது.
ஸ்ரீஆதிசங்கரரின் கட்டளைப்படி அப்பெண்மணி கேரள பூமியில் அனைத்துக் கோயில்களிலும் விக்ரங்களை உருவாக்கித் தந்து, ஏனைய பல அற்புதமான திருப்பணிகளையும் செய்து உன்னதப் தெய்வ சக்தி பெற்றாள்.
கனகதாரையாக வந்த செல்வத்தைத் தனக்கென்று கொள்ளாது இறைப் பணிக்காகவே செலவிட்டாள். தர்மச் சத்திரங்கள், அறக்கட்டளைகள், கோயில் யானைகள் பராமரிப்பு, திருக்குளங்கள் சீரமைப்பு, வேதபாடசாலைகள், ஏழைகளுக்கு அன்னதான சாலைகள்  போன்றவற்றை நிர்மாணித்து மஹேசன் சேவையைப் பூர்ணமாக நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெற்றாள்.
அந்தப் பெண்மணியே தேவதாப்ராப்தம் பெற்று திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தேரிலும், யானையிலும் உற்சவ மூர்த்தியாய் பவனி வந்து பகவதி தெய்வாம்சம் பெற்று அருள் பாலிக்கின்றாள். இத்தகைய ஆன்மீக இரகசியத்தை குருமங்கள கந்தர்வா அருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam