![]()  | 
    ![]()  | 
    ![]()  | 
    
ஓம் ஸ்ரீவல்லப  கணபதி துணை 
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை 
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
|   பாற்கடல் யாருடையது ?  | 
    
 
பாற்கடல்  என்று ஒன்று உண்டா என்பது பலர் மனதில் எழும் ஐயமாகும். இதில் எவ்வித சந்தேகமும் தோன்றுவதற்கு இடமே இல்லை. குழந்தையாகப் பிறந்த நாம் இன்று பெரியவர்களாக வளர்ந்து விட்டோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவ்வாறு நாம் பெரியவர்களாக வளர்வதற்கு உதவியது என்ன? தாய்ப் பால்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.
வாதத்திற்காக  சிலர் தாய்ப் பால் அவசியம் இல்லை, புட்டிப் பால் குடித்தும் ஒரு குழந்தை வளரும் என்று கூறினாலும் அந்த புட்டிப்பாலிலும் உள்ளது என்ன ? அதுவே அமிர்த சக்தி என்ற ஜீவ சக்தி. எனவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவ சக்தியின் திரட்சியே பாற்கடல் ஆகும். 
மனிதனால்  உணர முடியாத ஜீவ சக்தியானது உணர்ந்து ரசித்து ருசிக்கக் கூடிய நிலையில் உள்ளதே அமுதச் சுவை, அமிர்த சுவை என்பதெல்லாம்.
வேதங்கள்  இறைவனை சுவை மயமாய் இருப்பவன் என்று வர்ணிக்கின்றன. இறைவனும் அமுதமும், இறைவனும் சுவையும் ஒன்றே என்றும், சுவை வடிவாக இருப்பவனே இறைவன் என்றும் வேதங்கள் இறைவனை வர்ணிக்கின்றன.
அப்படியானால்  இந்த பாற்கடல் எங்கு எப்போது தோன்றியது, இப்போது அது எங்கே இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன அல்லவா ? எதையுமே கண்ணால் பார்த்துப் பழகிய மனிதனுக்கு இத்தகைய கேள்விகள் எழுவது இயற்கையே. 

திருப்பாற்றுறை
சுமார்  இருபது வருடங்களுக்கு முன்னால் ஒருவர் ஒரு பிளாடிக் டப்பாவை காதில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு செல்வதை ஒருவர் பார்த்து, “என்னப்பா செய்கிறாய்?” என்று கேட்டால் அதற்கு அவர் நான் லண்டனில் உள்ள என் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? 
ஆனால்,  இன்று ஒருவர் விளையாட்டாக ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை காதில் வைத்துக் கொண்டு, “நான் அமெரிக்காவில் உள்ள என் அப்பாவுடன் பேசுகிறேன்,” என்று சொன்னால் உடனே நம்பி விடுவீர்கள். 
மணிக்  கணக்கில்  மொபைல் போனில் பேசும் ஒருவருக்கு ESN, MIN, SID என்று மொபைல் தொலை பேசியுடன் சம்பந்தப்பட்ட இந்த மூன்று முக்கிய சங்கேத குறிகள் எதைக் குறிக்கின்றன என்று தெரியுமா ? 
எனவே  நம் முன்னோர்கள் உரைத்தபடி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற நிலையில் மனிதன் வாழ்வதால்தான் புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக இரகசியங்களை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.
எந்த  விஞ்ஞான அறிவும் இல்லாத குழந்தைகளும் மொபைல் போனில் பேசி பயன் பெறுவதைப் போல நமது முன்னோர்கள் காட்டிய மெய்ஞான வழியில், அது புரியாததாக இருந்தாலும், அவ்வழி செல்வதால் கிட்டும் பலன்கள் ஏராளம், ஏராளம். 
நாம்  தற்போது வாழும் இந்த பூலோகம் மிகவும் இளமையானது. அதாவது, மிகவும் சமீப காலத்தில் தோன்றியது. பூமியின் வடிவம் உருண்டை என்று சொல்கிறோம் அல்லவா ? ஆரம்பத்தில் பூமி தோன்றியபோது அது காலணா நாணய வடிவில்தான் இருந்தது. 
இதுவே  கோள்களின்  பண்டைய வடிவம்.   நம்  பூலோகத்தை  விட முதிர்ந்த கோள்கள் எல்லாம் பொதுவாக இந்த காலணா வடிவில்தான் இருக்கும். அதனால்தான் மற்ற கோள்கள், கிரகங்களிலிருந்து வரும் விமானங்கள் எல்லாம் தட்டு வடிவில் பறக்கும் தட்டுகளாக அமைந்துள்ளன. 
நம்முடைய  உடலில் உள்ள செல்களும் இரத்த அணுக்களும் இந்த நாணய வடிவில் (disc  shape) அமைந்துள்ள விதம் நாம் பண்டைய பூமிகளைச் சேர்ந்த மக்கள் என்பதைக் குறிப்பதாகும். 
இவ்வாறு  சிருஷ்டி  காலத்திற்கெல்லாம்  அப்பாற்பட்டு  தோன்றியதே  பாற்கடலாகும். இறைவனும் பாற்கடலும் ஒரே சமயத்தில் தோற்றம் கொண்டதால் அதை திருப்பாற்கடல் என்று அழைக்கிறோம். 
எனவே  திருப்பாற்கடல்  என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும். அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார்.
ஆம்,  ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன. இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும்.
திருச்சி  திருவானைக்கோவிலிலிருந்து  சுமார் மூன்று கி.மீ. தொலைவில் காவிரி கொள்ளிடக் கரையில் எழுந்தருளி உள்ளதே திருப்பாற்றுறை சிவத்தலமாகும்.
இறைவன்  ஸ்ரீஆதிமூல  நாதர். அம்பிகையின் திருநாமமோ ஸ்ரீ மேகலாம்பிகை, ஸ்ரீநித்ய கல்யாணி என்பதாகும். திரு ஆனைக்காவிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் இடப்புறம் பனையபுரம் செல்லும் சாலை வழியாக சென்று அடையக் கூடியதே திருப்பாற்றுரை, திருப்பாற்றுறை திருத்தலமாகும்.
ஆதியில்  முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக, ‘ஒருவன் என்னும் ஒருவன்‘ என்ற நிலையில் திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் தரிசித்திடலாம். 
இப்போது  ஒரு சந்தேகம் தோன்றலாம். இறைவன் சிருஷ்டியின்போது எதுவுமே தோன்றவில்லை என்றால் பாற்கடலில் உள்ள பால் மட்டும் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் தோன்றுவது இயற்கையே. 
எனவே  நாம் மீண்டும் மீண்டும் மனதில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது திருப்பாற்கடலில் உள்ள பால் நாம் அறிந்த பசுவிடம் இருந்து பெறும் பால் கிடையாது. அது இறைவனின் உருவமே. இறைவனின் சக்தியே. அதற்கு உருவமோ வடிவமோ வண்ணமோ எதுவுமே கிடையாது. 
ஆனால்,  சித்தர்கள், மகான்கள் போன்ற பேரருளாளர்கள் மக்கள் நற்கதியை அடையும் பொருட்டு பாற்கடலுக்கு ஒரு வடிவத்தை அளித்து மக்களின் தரிசனத்திற்காக அளித்துள்ளார்கள்.   மகான்களின்  பல தெய்வீக திருப்பணிகளில் இதுவும் ஒன்று.
சொல்லப்  போனால் வசிஷ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் போன்ற மகரிஷிகளையே நம் ஊனக் கண்களால் காண முடியாது என்பதே உண்மை. நம்மை கடைத்தேற்றுவதற்காக நம்மைப்போல மனித வடிவம் எடுத்து நம்முடன் நம்முள் ஒருவராய் வாழ்ந்து நமக்கு நற்கதி அளிக்க பாடுபடுகிறார்கள்.
|   மணிவண்ணன் பெற்ற மால் வண்ணம்  | 
    
 
 தனித்திருந்த  இறைவன் பலவாய் விரிய சங்கல்பம் கொண்டான். அப்போது தன்னுடைய திருமேனிப் பிரகாசத்திற்கு ஒரு உருவம் அமைத்து அதனால் தோன்றிய இறை வடிவமே திருமால் ஆனது. திருமாலின் உருவம் நாம் நினைப்பது போல் கரிய வடிவம் அன்று. 
எவ்வாறு  கரியிலிருந்து  உருவான வைரத்தை நாம் பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கிறதோ அது போல திருமாலை பக்தியால் நெருங்க நெருங்க அவர் வண்ணம் பொன் வண்ணமாய் பொலியும் என்று சித்தர்கள் பெருமாள் வண்ணத்தை சித்தரிக்கின்றனர். 
“அந்த கருப்பு பக்தி பைத்தியம் பிடிக்க வைக்கும் கருப்பு“, என்று குருமங்கள கந்தர்வா கண்ணனின் மேனி அழகை அடிக்கடி புகழ்ந்து கூறுவார்கள். கண்ணனின் வண்ணத்தை குறித்து ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பாடிய பிரபந்த பாடல்களைக் கேட்டு கண்ணீர் சொரியாத அடியார்களே கிடையாது. 
இதே  கருப்பு வண்ணம்தான் காளிதேவியின் மேனி அழகும் என்று காளியின் வண்ணத்தை நினைவு கூர்வார் ராமகிருஷ்ண பரமஹம்சர். 
சிவபெருமானிடமிருந்து தோன்றிய கார்வண்ணன் எம்பெருமானைப் பணிந்து தான் இயற்ற வேண்டிய திருப்பணி குறித்து வினவியபோது காக்கும் கடவுளாக இருந்து இந்த பிரபஞ்ச இயக்கத்தை நிகழ்த்துவாயாக என்ற அன்பு கட்டளையை இட்டார் பெருமான்.
இறைவனின்  ஆணையை சிரமேற்கொண்ட கார்மேகப் பெருமாள் தன்னுடைய பணியைத் தொடர தியானத்தில் ஆழ்ந்தார். உள்மனதில் பஞ்சாட்சரம் ஒலிக்கலாயிற்று. ஆம் பெருமாளின் இதயத்தில் உயிர்த் துடிப்பாய் இருப்பவர் பஞ்சாட்சர நாதன்தானே. 
யுகங்கள்  கடந்தன. யுகத்தைக் குறிக்கும் யுக நாதர்களான மனுக்கள் கூட தோன்றாத காலம் அது. 
பெருமாள்  ஒலித்த பஞ்சாட்சர வேத கீதங்கள் எங்கும் பரந்து ஒளிப் பிழம்பாய், ஒலி அலைகளாய் உலகை நிறைத்தன. எம்பெருமான் பேருவகையுடன் அந்த பஞ்சாட்சர சக்திகளை ஐந்து தலைகளை உடைய நாகமாய் மாற்றி பெருமாளுக்கு ஆதிசேஷ படுக்கையாக அளித்தார். அன்று பெருமாள் கொண்ட கோலம்தான் அனந்த சயனக் கோலம். 
அனந்த  சயனக் கோலம் என்பது  படுத்து ஓய்வெடுப்பதற்காக இறைவனால் பெருமாளுக்கு அளிக்கப்பட்ட படுக்கை அல்ல. ஒரு விநாடி கூட ஓய்வு என்பதே இல்லாது இந்த பிரபஞ்சத்தில் ஜீவன்களை காத்து, ரட்சித்து அவர்களை மீண்டும் இறைவன் பாதத்தில் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டவரே பள்ளி கொண்ட ரங்கநாதர். பள்ளி கொள்ளுதல் என்றால் நிரந்தரமான பொறுப்பை ஏற்று நிர்வகித்தல் என்பதே ஆன்மீகப் பொருளாகும். 
அதுபோல்தான்  பள்ளிக்கூடம்  என்றால் ஒழுக்கப் பாடங்களை முறையாக கற்று சமுதாயத்தில் நன்னெறியில் நிலைத்து நிற்க உதவும் சாலை, கூடம் என்பது பொருளாகும். பள்ளி என்றால் நன்னெறியில் நிலைகொள்தல் ஆகும். 
இவ்வாறு  பெருமாள்  எவ்வளவு நாள் அமைதியாக பள்ளி கொண்டிருக்க முடியும் ?
தேவர்கள்  பாற்கடலை  கடைந்து அமிர்தம் பெறத் துடித்தார்கள். இறைவன் அமுத மயம். பாற்கடல் பரந்தாமனும் அமுத மயம்தானே. அவர்களை சரணடைந்தாலே அனைத்தையும் பெற்று விடலாமே. ஆனால், விதி தேவர்களையும் விட்டு வைக்காதே. 
 தேவர்கள்  பாற்கடலை  கடையும்போது  வேறு வழியின்றி பெருமாள் தேவர்களுக்கு உதவி செய்ய மந்திரகிரியான மத்தை எப்படித் தாங்குவது என்று அறிவதற்காக பாற்கடலின் அடித் தளத்தை அடைந்தார். 
மந்திரகிரி  என்பது லட்சணக் கணக்கான மைல்கள் உயரமும் அகலமும் உடையது. அதனைத் தாங்க வேண்டுமானால் அது சாதாரண தேவ சக்தியால் இயலாது என்பதால் பெருமாள் கூர்ம அவதாரம் என்ற ஆமை வடிவிலான ஒரு அவதாரத்தையே எடுத்துக் கொண்டு பாற்கடலின் அடித் தளத்தை அடைந்தார்.
பாற்கடலின்  அடித் தளத்தில் தான் நிற்பதற்கு ஒரு நிலையான இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடம் மந்திரிகிரியைத் தாங்கும் அளவிற்கு பலம் உள்ளதா என்பதை சோதிப்பதற்காக கடல் தளத்தை நுணுக்கமாக ஆராயத் தொடங்கினார்.
அப்போது  எங்கிருந்தோ  ஒரு குரல் கேட்டது. “நைனா, அங்கே நிக்காத நைனா. உள்ளே போய்டுவே. அந்த இடம் ரொம்ப வீக் (weak). இங்கே வா, ஒனக்காக ஒரு எடத்தை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்,”
பெருமாளுக்கு  ஒரே ஆச்சரியம். எவராலும் நெருங்க முடியாத பாற்கடலின் அடித் தளத்தில் தன்னை உரிமையுடன் அழைக்கும் அந்த குரலைக் கேட்டு அவர் திகைத்து நின்றார். 
சுற்றும்  முற்றும்  குரல் வந்த திசையை நோக்கி பார்த்தார். எங்கோ தொலைவில் ஏதோ ஒரு உருவம் தெரிவது போல் இருந்தது. அந்த உருவத்தை நன்றாக நெருங்கிப் பார்த்தார். அவருடைய ஆச்சரியம் இன்னும் அதிகமாகி விட்டது.
அவர்  பார்த்த திசையில் பெருமாளையே ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் அச்சாக இன்னோரு ஆமை அங்கே நின்று கொண்டிருந்தது.
பெருமாளுக்கு  ஆச்சரியம்  எல்லை மீறியது.“இதுவரை பிரபஞ்சத்தில் எவருமே, ஏன் தேவர்களே அறியாத ஒரு அற்புதமான அவதாரத்தை எடுத்து நாம் இங்கு வந்திருக்கும்போது நம்மை போன்ற வடிவில் உள்ள இந்த duplicate ஆசாமி யார் ?” என்று அவருடைய மனம் தீவிரமாக யோசித்தது. 

ஸ்ரீபிரம்ம மூர்த்தி
திருப்பாற்றுறை
உடனே  அந்த ஆமையிடமிருந்து, “நைனா, டூப்ளிகேட் நான் இல்லே. நான் ஏற்கனவே 300 தேவ ஆண்டுகளாக உனக்காக ஒரு நல்ல இடத்தை செலக்ட் பண்ணி வச்சிக்கிட்டு நீ எப்போ வருவேன்னு காத்திருக்கிறேன்,” என்ற அன்பான குரல் கேட்டது.
பெருமாள்  உடனே புரிந்து கொண்டார்.“இவர் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண ஆமையோ வேறு ஏதோ தேவ உருவமோ கிடையாது. இது எம்பெருமானின் சக்தி பெற்ற சித்தராகத்தான் இருக்க வேண்டும்”, என நினைக்க மறு விநாடி ஆமை வடிவில் இருந்த அந்த அற்புத சித்தர் தன்னுடைய ப்ரத்யக்ஷ இறை உருவைக் காட்ட பெருமாள் அந்த சித்தரை வணங்கி ஆசி பெற்றார். 
அவரே நிலவோட்டு நிலை சித்தர் என்ற அற்புத சித்த பிரான் ஆவார். அப்பெருமானின் அவதார ரகசியத்தைப் பற்றி சித்தர்கள் மட்டுமே அறிவர். அச்சித்தர் பிரான் பெருமாளுக்கு ஆமை சிருஷ்டி பற்றிய ஆன்மீக விளக்கங்களை எல்லாம் எடுத்துரைத்தார். நாம் நினைப்பது போல் பாற்கடலை கடைவதற்காக மட்டுமே தோன்றிய மகாவிஷ்ணுவின் அவதாரம் கூர்ம அவதாரம் என்பது கிடையாது. 
எம்பெருமான்  லீலையில்  மகாவிஷ்ணுவின்  கூர்ம அவதாரத்திற்கு முன் இறைவன் நிகழ்த்திய ஆமை வடிவ அவதார லீலைகள் கோடி கோடி. அதில் ஒன்றே தேவர்கள் பாற்கடல் கடைந்த அமிர்த வைபவம்.
அனந்த  சயனத்தில்  பள்ளி கொண்ட பெருமாள் உலகைக் காக்கும் ஸ்திர சக்திகளை அனுகிரகமாக பெற்றார் அல்லவா ? அந்த நிலையான சக்திகளை மேலும் பலப்படுத்தும் வகையாக அமைந்ததே கூர்ம அவதாரமாகும்.
“நிலைவோட்ட திர வித்தை” என்ற அகத்திய கிரந்தங்களில் ஒரு கோடி அத்தியாயங்கள் கூர்ம அவதார மகிமையைப் பற்றி விளக்குகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒன்பது கோடி நாடிப் பாடல்கள் உண்டென்றால் எம்பெருமானின் அவதார லீலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ?
நிலைத்த  தன்மைக்கு, ஸ்திர தன்மைக்கு ஆமை வழிபாடு பெரிதும் உதவுகிறது. இன்றும் பல சிவ பூஜைக்கான பீடங்களை ஆமை வடிவில்தான் அமைக்கிறார்கள். இதனால் இறை பூஜைகளினால் நாம் பெறும் பலன்கள் நிலைபெற்று நற்காரியங்களுக்காக மட்டும் பரிமளிக்கின்றன. 
ஆமை  ஓட்டிற்கு  நிலவோடு என்ற ஒரு பெயரும் உண்டு. ஆமை ஓட்டின் மேற்பாகம் பூமியின் மேற்பரப்பை ஒத்திருப்பதால் ஆமை ஓட்டை வைத்து இயற்றப்படும் வழிபாடுகள் பூமாதேவியைப் போல் பொறுமையையும் மன அமைதியையும் அளிப்பவையாக உள்ளன. ஆனால், இத்தகைய ஆமை ஓடுகள் இயற்கையாக இறந்த ஆமைகளிடமிருந்து பெற்றவையாக இருக்க வேண்டியது அவசியம்.
தற்காலத்தில்  பலரும் ப்ளாட்டுகளாக மாற்றப்பட்ட விவசாய நிலத்தில் வீடுகளை கட்டி விடுகிறார்கள். இது அடிப்படை வாஸ்து தோஷமாகும். அறிந்தோ அறியாமலோ இவ்வாறு விவசாய நிலத்தில் வீடுகளை கட்டியவர்களும் அல்லது அத்தகைய வீடுகளில் குடியிருப்பவர்களும் ஆமைகள் வணங்கி வழிபட்ட மணமேற்குடி பொன்னகர பெருமாளை வணங்கி குறைந்தது எட்டு படி சர்க்கரை பொங்கல் படைத்து தானம் அளித்தலால் மேற்கண்ட தோஷங்களுக்கு ஓரளவு பிராயசித்தம் கிட்டி வீடுகள் திடீரென தரையில் அழுந்தி விடும் துன்ப நிலையிலிருந்து விமோசனம் பெறுவர். 
இவ்வுலகில்  காசு, பணம், இன்பம், துன்பம் என்ற எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை ஒன்று இல்லாதவன் இறைவனே. ஆமை ஓட்டிற்கு, “எல்லை இல்லா எல்லை,“ என்று ஒரு சித்தர்களின் பரிபாஷை விளக்கம் உண்டு. 
உதாரணமாக,  ஒரு படி பால் கொள்ளும் பாத்திரத்தில் இரண்டு படி பாலை ஊற்ற முடியுமா ? முடியாது என்பது பொதுவான பதில். ஆனால், இரண்டு படி பாலைக் காய்ச்சி ஒரு படியாக செய்தால் அதை அந்த பாத்திரம் கொள்ளும் அல்லவா ? அவ்வாறு காய்ச்சின பாலை இன்றும் நன்றாக காய்ச்சி பால்கோவா செய்தால் இன்னும் மூன்று, நான்கு படி பாலைக் கூட அந்த பாத்திரம் கொள்ளும் அல்லவா ?
ஆனால்,  அப்படிச்  செய்தால்  பாலில் உள்ள தண்ணீர் சுண்டிப் போய் விடுவதால் அது உண்மையில் இரண்டு படி பால் ஆகாது என்று விஞ்ஞான ரீதியான பதிலைச் சொல்லலாம். மெய் ஞான கணக்கில் பால் சுண்டும்போது பாலின் அமிர்த, அமுத, சிரஞ்சீவி சக்திகள் பன்மடங்கு விருத்தி ஆகின்றன என்பதே சித்தர்கள் கூறும் தெய்வீக இரகசியம் ஆகும்.
அதே  போல ஒரு படி பாலில் ஒரு படி நீரை சேர்த்தால் என்ன ஆகும் ? பாலின் சக்தி பாதியாக குறைவதாக நாம் கணக்கிடுவோம். உண்மை அதுவன்று. அது ஒரு படி பாலில் இரண்டு பங்கு விஷத்தை சேர்த்ததாக கணக்கிடப்படும் என்ற தேவ கணக்கை சித்தர்கள் அளிக்கிறார்கள்.
பாலைக்  காய்ச்சுவதால்  எப்படி அதில் உள்ள அமிர்த சக்திகள் பன்மடங்கு விருத்தி ஆகும் என்பதை புரிந்து கொள்பவர்களால்தான் பாலில் தண்ணீர் சேர்த்தால் அது எப்படி விஷமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
பாலில்  22 வகையான  அமிர்த சக்திகள் இருப்பதாக சித்த கிரந்தங்கள் அறிவிக்கின்றன. இந்த அமிர்த சக்திகளை வேறு எதிலிருந்தும் நாம் பெற முடியாது. 
இந்த  அமிர்த சக்திகளில் ஒரே ஒரு சக்தியை மட்டுமே பூரணமாகப் பெற்று சிரஞ்சீவியாக இன்றும் பூவுலகெங்கும் நடமாடி வரும் அற்புத மகரிஷியே மார்க்கண்டேயர் ஆவார். 
மார்க்கண்டேய  மகரிஷி திருப்பாற்றுறை தலத்தில் பல்லாண்டுகள் தவமியற்றி பாலில் உள்ள அமிர்த சக்திகளை சாதாரண மக்களும் பெறக் கூடிய எளிய வழிபாட்டு முறைகளை அளித்துள்ளார். 
பாலில்  உள்ள அமிர்த சக்திகளுக்கும் திதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவ்வாறு ஒவ்வொரு திதிகளிலும் இயற்ற வேண்டிய வழிபாடுகளை நிலவோட்டு நிலை சித்தரிடமிருந்து நமக்கு அளித்துள்ளார் மார்க்கண்டேய மகரிஷி. கலியுக மக்களின் நன்மைக்காக ஸ்ரீஇடியாப்ப சித்த பாரம்பரிய வழித்தோன்றல் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அளித்துள்ள இந்த அற்புத சித்த பாரம்பரிய வழிபாடுகளை கடைபிடித்து அனைவரும் நித்திய சுகத்தை அடைய வேண்டி அவற்றை இங்கு அளிக்கின்றோம்.
பாலில்  உள்ள அமிர்த சக்திகளை நிலை நிறுத்தும் சக்தி பழத்திற்கு உண்டு. பாலுடன் பழம் சேரும்போது பாலில் உள்ள அமிர்த சக்திகள் பெருகி நிலைபெற்று அது மனித உடலுக்கு ஏற்ற ஜீவ சக்திகளாக மாறி அற்புத நோய் நிவாரண சக்திகளை வர்ஷிக்கின்றது. 
பால்,  பழத்துடன்  சுத்தமான  தேனும் சேர்ந்தால் சிரஞ்சீவி சக்திகள் பன்மடங்காக விருத்தியாகின்றன என்பது சித்தர்கள் அறிவிக்கும் ஆன்மீக இரகசியம். ஆனால், இந்த அமிர்த, சிரஞ்சீவி சக்திகள் எல்லாம் இறைப் பிரசாதமாக பெறப்படும்போதுதான் நிறைவு பெறுகின்றன, பூர்ணம் அடைகின்றன என்பது அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தாத்பர்யமாகும். 
இங்கே  அளிக்கப்படும்  அபிஷேக ஆராதனைகள் எல்லா இறை மூர்த்திகளுக்கும் பொருந்தும் என்றாலும் மார்க்கண்டேயர் வழிபட்ட திருப்பாற்றுறை திருத்தலமே சிறப்பான பால் அபிஷேகத்திற்கு உகந்த முதன்மை பெற்ற தலம் என்பதில் ஐயமில்லை. 
| மார்க்கண்டேய மகரிஷி அருளிய பாலமுத பசுந்துறை அபிஷேக முறை | 
| திதி | அமிர்த மந்திரம் | பலன் | 
| பிரதமை | விசுவசித்து | கல்வியில் உன்னதம் | 
| துவிதியை | மேருசந்திரா | ஆடை அணிகலன் சேர்க்கை | 
| திரிதியை | வாருணம் | செல்வ விருத்தி | 
| சதுர்த்தி | நிலரூபம் | காரியத் தடங்கல்கள் நிவர்த்தி | 
| பஞ்சமி | மாருதம் | தீர்க சுமங்கலித்துவம் | 
| சஷ்டி | நிலகன் | வயிற்றுக் கோளாறுகள் விலகும் | 
| சப்தமி | ஆற்றுவாரை | நிலத் தகராறுகள், தோஷங்கள் விலகும்  | 
| அஷ்டமி | விளகீதம் | அயல்நாட்டு வேலை வாய்ப்பு | 
| நவமி | மைமாது | கண் நோய்கள், முக வாதம் | 
| தசமி | அவுரி | பெண்களுக்கு பாதுகாப்பு | 
| ஏகாதசி | சாருமேகம் | தோல் வியாதிகள் நிவாரணம் | 
| துவாதசி | சுநாகம் | திருமணத் தடைகள் விலகும் | 
| திரயோதசி | சுடராழி | எதிரிகளால் துன்பம் வராது | 
| சதுர்த்தசி | கோடல் | அகால மரணம் அண்டாது | 
| அமாவாசை  பௌர்ணமி  | ஏலவாய் | குடும்ப ஒற்றுமை | 
| கிழமை | பழம் | அமிர்தம் | பலன் | 
| ஞாயிறு | மலை வாழை | கவித்தலம் | கடன் தொல்லை நீங்கும் | 
| திங்கள் | அன்னாசி | மருகம் | பித்ரு சாப நிவர்த்தி | 
| செவ்வாய் | ஆப்பிள் | வானகந்தம் | நீண்ட ஆயுள் | 
| புதன் | மாதுளை | நற்சுனை | இதய நோய்கள் தீரும் | 
| வியாழன் | செவ்வாழை | மேகலா | வேத சக்திகள் பெருகும் | 
| வெள்ளி | திராட்சை | சுகீர்த்தி | மூட்டு நோய்கள் நிவாரணம் | 
| சனி | பேரீச்சம்பழம் | துபலா | வயதானவர்களுக்கு பாதுகாப்பு | 
மேற்கூறிய  அபிஷேகத்தை  அந்தந்த திதிக்குரித்தான அமிர்த மந்திரங்களை குறைந்தது 108 முறை ஓதி நிறைவேற்றுதல் நலம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அபிஷேகத்திற்காக  அளிக்கப்படும் பால்  சுத்தமான  பசும்பாலாகவும்  தண்ணீர் சிறிதும் சேர்க்காததாகவும் இருந்தால்தான் மேற்கூறிய பலன்களை முழுமையாகப் பெ ற முடியும்.
திதி,  கிழமை இவற்றிற்குரித்தான அமிர்த மந்திரங்கள் பாலில் நிரவியுள்ள அமிர்தங்களின் பெயர்கள் அல்ல. ஆனால், அந்த அந்த அமிர்த சக்திகளை மக்கள் அபிஷேக ஆராதனைகளின் மூலம் பெறுவதற்காக மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்து பெற்று அளித்த மந்திர பதங்களாகும். 
திதி,  கிழமைக்கான  அபிஷேக ஆராதனைகளை தனியாக நிறைவேற்றலாம் என்றாலும் திதியும் கிழமையும் சேர்வதே சிறப்பாகும் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
உதாரணமாக,  நீங்கள் ஞாயிற்றுக் கிழமை பாலமுத பசுந்துறை முறையில் அபிஷேகம் நிறைவேற்றுவதாக இருந்தால் அன்றைய தினத்திற்குரித்தான திதியை தெரிந்து கொள்ளுங்கள். அன்று பிரதமை திதியாக இருந்தால் பிரதமை திதிக்கு உரித்தான அமிர்த மந்திரம் விசுவசித்து என்பதையும் ஞாயிற்றுக் கிழமைக்கு உரித்தான கவித்தலம் என்ற அமிர்த மந்திரத்தையும் 108 முறை ஓதி அபிஷேகத்தை நிறைவேற்ற வேண்டும்.
முதலில்  பால், அதைத் தொடர்ந்து சுத்தமான தேன், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைக்கு உரித்தான பழம் மலை வாழைப் பழம். பழங்களைத் துண்டுகளாக நறுக்கி அபிஷேகம் செய்தல் சிறப்பு. இதைத் தொடர்ந்து மற்ற அபிஷேக ஆராதனைகளையும் தாராளமாக நிறைவேற்றலாம். 
இதனால்  மற்ற அபிஷேக திரவியங்களில் நிரவி இருக்கும் அமிர்த சக்திகளும் பன்மடங்காகப் பெருகும். மேலும் அதே நாளில் அதாவது ஞாயிற்றுக் கிழமை அன்று மற்ற பழங்களுக்குரித்தான அமிர்த மந்திரங்களை ஓதி அந்தப் பழங்களையும் அபிஷேகத்தில் சேர்ப்பதும் அமிர்த சக்திகளை பன்மடங்காக விருத்தி செய்யும். 
அபிஷேக  ஆராதனைகளின்  போது சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய, “மற்றுப் பற்று .... ” என்று ஆராம்பிக்கும் தேவார பதிகத்தை ஓதுதல் சிறப்பாகும்.
இத்தலத்தில்  திருஞானசம்பந்த  மூர்த்தி  நாயனார் தன்னை சிவபெருமானின் காதலியாக பாவித்து அருளிய தேவார பதிகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கடுமையான நோய்களிலிருந்து நிவாரணம் அளித்து குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சக்தி பெற்றது. சதுர்த்தசி திதி அன்று நிரவும் கோடல் அமிர்த சக்திகளைப் பெற்றுத் தரும் அற்புத பதிகம். 
|   பால் வனமா, பாலை வனமா ?  | 
    
மார்க்கண்டேய  மகரிஷி அமிர்த சக்திகளை   இவ்வுலக  மக்களின்  நல்வாழ்விற்காக  அர்ப்பணிக்க  இப்பூவுலகம்  எங்கும் பவனி வந்து அற்புத சேவைகளை ஆற்றினார். இதில் மார்க்கண்டேயர் நிறைவேற்றிய வழிபாடுகள் பெரும்பாலும் பாலை வனப் பகுதிகளிலேயே அமைந்தன.
அமிர்த  சக்தி என்பது ஜீவ சக்தியாக இருப்பதால் சூரியன்தானே ஜீவ சக்தியை முழுமையாக அளிக்க முடியும். அதனால்தான் சூரிய சக்தியை அதிகம் பெறும் ஆப்பிரிக்க கறுப்பு இனத்தவர்கள் ஜீவ சக்தியை அதிகம் பெற்று உலகெங்கும் பிரசித்தி பெற்றுள்ளார்கள். அவர்கள் பெற்றுள்ள அசாத்திய உடல் பலம் என்பது ஜீவ சக்தியின் ஒரு அம்சமே. 
எப்போதும்  வெறும் கோவணத்துடன் மட்டுமே திகழ்ந்ததால் கறுப்பர்களின் சாதாரண வாழ்க்கை முறையே ஜீவ சக்தியை பெருக்கும் வழிபாடாக அமைந்து விட்டது. 
இந்த  ஜீவ சக்தியால் என்ன பயன் ?
ஜீவ  சக்திதானே  இறை சக்தி. ஜீவ சக்தியை முழுமையாகப் பெற்றால்தான் ஜீவ சக்தியின் பரிபூரண உருவமான இறைவனைக் காண முடியும். இக்காரணம் பற்றியே இறைவனை முதன் முதலில் தரிசித்தவர்கள் ஆப்பிரிக்க அரிசோனா பகுதியைச் சேர்ந்த கறுப்பு இன மக்கள் ஆகிறார்கள்.
இவர்களே  கடவுளை முதன் முதலில் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள். ஆசையை அறவே ஒழித்த உத்தமர்கள். உண்மையில் இவர்கள் ஆசையை வென்றவர்கள் என்று கூறுவதைவிட ஆசை என்றால் என்ன என்பதே தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். இத்தகைய வெள்ளை உள்ளம் கொண்ட உத்தமர்களையே குழலுறவு தியாகிகள் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள்.

ஸ்ரீபள்ளி கொண்ட பரந்தாமன் 
திருபாற்றுரை
எனவே  சூரிய சக்தி மிகுந்த பாலைவனங்களில் 60 சதுர்யுகங்கள் அலைந்து அற்புத சிவலிங்கம் ஒன்றையும் நிர்மாணித்து வழிபாடு இயற்றினார் மார்க்கண்டேய மகரிஷி. மார்க்கண்டேய மகரிஷி நிர்மாணித்த அந்த சிவலிங்கம் இன்றும் லட்சக் கணக்கான மக்களால் பூஜிக்கப்பட்டு வருவதே மார்க்கண்டேய மகரிஷியின் பக்தி எந்த அளவு பூரணமானது என்பதை மக்களுக்கு உணர்த்துகிறது.
பல  லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராம பிரான் ராமேஸ்வரம் கடற்கரையில்   மணலில்  தன் திருக்கரங்களால் பிடித்து வைத்து சிவலிங்கம் இன்றும் கோடிக் கணக்கான மக்களுக்கு வழிகாட்டுவது போல் மார்க்கண்டேய மகரிஷி அன்புடன் அரவணைத்த சிவலிங்கம் இன்றும் லட்சக் கணக்கான மக்களுக்கு அருந்துணையாய் வழிகாட்டி வருகிறது.
ஜீவ  சக்தியே தியானத்தின் அடிப்படை. ஜீவ சக்தியை உடலில் முறையாக நிரவ உதவுவது கோவணமாகும். “கோவணம் இல்லையேல் கோ தரிசனம் இல்லை,” என்பார் குருமங்கள கந்தர்வா. இவ்வாறு ஜீவ சக்தியை முறையாக உடலில் நிரவி தியானத்தில் மலரும் வித்தையை நன்கு உணர்ந்தவர்கள் எகிப்திய நாட்டினரே.
இன்றைக்கு  உலகெங்கும்  விளங்கும்  தியான முறைக்கு ஆதாரமாக அமைவது எகிப்து நாட்டில் தோன்றிய தியான முறையே ஆகும். நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சிவகுருமங்கள கந்தர்வாவுடன் எகிப்து நாட்டு பிரமிடுகளை தரிசனம் செய்தபோது தியானத்தின் பல உயர் நிலைகளை தம் கோவணாண்டியிடமிருந்து கற்றுக் கொண்டார்.
“எத எங்க எப்ப கத்துத் தரனும்னு எங்களுக்குத் தெரியும்டா. அதனாலதான் இத்தன ஆயிரம் மைல் தூரம் கடல் தாண்டி ஒன்ன கூட்டி வந்து இந்த தியானத்த பத்தி சொல்லித் தர்றேன்,” என்று எகிப்திய தியான இரகசியங்களை சிறுவன் வெங்கடராமனுக்கு போதித்தார் மௌனகுரு.
“சாலமன், சாலமன் அப்டீன்னு சொல்றாங்களே. அந்த அறிவாளி ராஜா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்தான். அவனுக்கு இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நீ இங்க வந்து தியானம் கத்துக்க ஆரம்பிச்ச. இன்னம் நீ அதுல முழுமை அடையல பாரு. அதுனாலதான் ஒன்ன ஏன் தலைல மெத்த மேல கட்டிடாங்க.   ஹூம்  ... இப்பவாவது  தியானத்தை  முழுசா கத்துக்க ...” என்று தொடர்ந்தாராம் பெரியவர். 
சிறுவனான  வெங்கடராமன்  தன்னைப் பெரிய வாத்தியார் பாராட்டுகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று கூடத் தெரியவில்லையாம். அதுதான் குழலுறவு தியாகி நிலை ! 
மார்க்கண்டேய  மகரிஷியால்  வழிபடப்பட்ட  சிவலிங்கம்  அடுத்து மோசஸ் தீர்க்கதரிசியாலும் வழிபடப் பெற்றது. எகிப்திலுள்ள சினாய் மலையிலிருந்து (Mount Sinai) பத்து கட்டளைகளைப் பெற்ற மோசஸ் இந்த சிவலிங்கத்திடம் வைத்து ஆசிபெற விழைந்தபோது அந்த பத்து கட்டளைகளும் மறைந்து பசு வடிவில் காட்சி தரவே அன்று முதல் மோசஸ் பசுவின் பாலில் உள்ள அமுத சக்திகளை உணர்ந்து பாலை வனம் எங்கும் பல்லாண்டுகள் அலைந்து தன்னை நம்பி வந்தவர்களுக்கெல்லாம் பசுவின் பெருமையையும், அமிர்த சக்திகளைப் பற்றியும், ஜீவ சக்தி ஆக்கத்தின் மூலம் இறைவனை அடையும் இரகசியங்களையும் அளித்து வந்தார் மோசஸ். 
மோசஸ்  எம்பெருமானுக்கு  அளித்த தங்க நந்தி வாகனம் இன்றும் பக்தர்களால் இரகசியமாக பூஜிக்கப்பட்டு வருகிறது என்று சித்த கிரந்தங்கள் தெரிவிக்கின்றன.
|   எல்லையில்லா எண் சூத்திரம்  | 
    
மார்க்கண்டேய  மகரிஷி ஜீவ சக்திகளை உலகெங்கும் நிரவுவதற்காக பாலை வனத்தில் 60 சதுர்யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்றினார் என்று விளக்கியுள்ளோம் அல்லவா ? இவ்வாறு ஆறாம் எண்ணிற்கும் ஜீவ சக்திகளின் கூறான சுக்ர சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 
சுக்ர  சக்திகள்  என்பவை அசுர சக்திகளைக் குறித்தாலும் எதிர்மறை சக்திகளை அழிக்க சுக்ர சக்திகள் அவசியமே. அதனால்தான் ஜீவ சக்திகளை பெருக்கி நைஷ்டிக பிரம்மச்சார்யர்களாக திகழும் பீஷ்மர், கிருஷ்ணர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற அவதார புருஷர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் மறைமுக சேவையை நாம் எத்தனை யுகங்கள் எடுத்துக் கொண்டாலும் புரிந்து கொள்ள முடியாது.
யாராலும்  வெல்ல முடியாத அசுரனான சூரபத்மனை வெல்வதற்காக முத்துக் குமார சுவாமி ஆறு முகங்களுடன், சஷ்டி திதியில், சரவணபவ என்ற ஆறு பீஜாட்சர சக்திகளின் வெளிப்பாடாகத் தோன்றினார். 
எனவே  ஆறின் தன்மையை புரிந்து கொள்வது கடினம். உதாரணமாக, குரு என்பவர் மிகுந்த சக்தியுள்ள நற்சக்தி கிரகமாக இருந்தபோதும் ராமர் ஜாதகத்தில் ஆறாமிட அதிபதியான அவர் உச்சம் பெற்றிருந்ததால் எதிரியான ராவணன் மிகுந்த பலம் பெற்று ராமருக்கு இணையான பராக்கிரமத்துடன் விளங்கியது நாம் அறிந்ததே.
ஆறாம்  எண்ணிற்கும்  மனிதனின்  ஜீவ சக்திக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் 6, 15, 60 வயதை மனிதன் அடையும்போது அவன் உடம்பில் பற்பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்கள் நன்முறையில் மனித வாழ்விற்கு பயன்படுவதற்காக நம் முன்னோர்கள் ஏழாவது வயதில் பூணூல் வைபவத்தையும், 25ம் வயதில் திருமணத்தையும் (7+6+6+6=25), 60ம் வயதில் சஷ்டியப்த பூர்த்தி என்ற வைபவத்தையும் கொண்டாடி ஜீவ சக்திகளை மனித உடலில் முறையாக நிரவினார்கள்.
இதையே  காலத்தே பயிர் செய் என்று குறிப்பிட்டார்கள் நம் முன்னோர்கள். இந்த வயது கணக்கை நாம் முறையாக கடைபிடித்து வராததால்தான் குடும்ப வாழ்வில் அமைதியின்மையும் சமுதாயத்தில் பல பிரிவினைக் கொந்தளிப்புகளும் தலை விரித்து ஆடுகின்றன.
அதே  போல ஜாதகத்தில் எட்டாம் இடத்தைப் பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகும். காரணம் எட்டாம் இடம் கர்ம ஸ்தானமாகும். எட்டாம் எண் விதி வழி செல்வது. சனி பகவானே விதியை நிர்ணயிக்கும் மூர்த்தி.
எட்டாமிட அதிபதியான சனீஸ்வர பகவானை லக்னத்தில் பெற்றதால் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தன்னை நம்பியவர்களின் விதியை மாற்றும் வல்லமை பெற்ற உத்தம குருநாதராக பிரகாசிக்கிறார்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி திருபாற்றுறை
எட்டு  பனை மரம் உயரம் உடைய மார்க்கண்டேய மகரிஷியை விதியை மாற்றிய சிரஞ்சீவிதானே. 
இவ்வாறு  விதியை மாற்றும் உபாயமாக சித்தர்கள் அருளும் குசா கோட்பாடே நான்கில் தொடங்கி எட்டில் முடியும் கோட்பாடாகும். அதாவது எந்த ஒரு காரியத்தையும் நான்கில் ஆரம்பித்து எட்டில் முடித்தால் அது சிறப்பாக முடியும் என்பது சித்தர்களின் கோட்பாடு. 
எந்த  காரியத்தையும்  அது ஆரம்பான தேதிக்கு உரிய எண்ணிற்கு குசா எண் அமையும் தேதியில் முடித்தால் அக்காரியம் வெற்றி பெறும். அதன்படி பார்த்தால் நான்கிற்கு உரிய குசா எண் எட்டுதானே.
தண்ணீருக்காக  கிணறு வெட்டுதல், காணாமல் போன பத்திரங்கள், குழந்தைகளைத் தேடுதல், மருந்து உண்ணுதல், நேர்த்தி காரியங்களை நிறைவேற்றுதல் போன்ற காரியங்களை நான்காம் தேதி ஆரம்பித்து எட்டாம் தேதி முடித்தால் அக்காரியம் எவ்வித இடையூறும் இன்றி நல்லபடியாக முடியும்.
  உதாரணமாக,  எங்கு வைத்தோம் என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட பத்திரத்தை தேடும்போது அதை 4 அல்லது 13, 22, 31 போன்ற தேதிகளில் தேட ஆரம்பித்தால் அது 8, 17, 26 போன்ற தேதிகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
  அதே  போல நான்காம் தேதியிலோ அல்லது அதன் கூட்டுத் தொகை வரும் தேதிகளிலோ மருந்து உண்ண ஆரம்பித்து 8, 17, 26 தேதிகள் வரை உட்கொண்டால் வியாதி விரைவில் நிவாரணம் பெறும் என்பது உண்மை. 
  எனவே  உங்கள் காரியங்களை நான்கில் ஆரம்பித்து எட்டில் முடித்து நலம் பெற வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
  இந்த  சித்த இரகசியத்தை நிறைவேற்றுவதற்காக இறைவன் நமக்கு அளித்த அற்புத திருத்தலமே திருப்பாற்றுரை சிவத்தலமாகும். 
  இத்தலத்தின்  இரகசியம்  என்ன ?
  பாலில்  உள்ள அமிர்த சக்திகள் மொத்தம் 22. இதன் கூட்டுத் தொகை 2+2 = 4.
  மார்க்கண்டேய  மகரிஷி திருப்பாற்றுறை திருத்தலத்தில் பாலமுத பசுந்துறை என்ற அபிஷேக முறையை அருளியுள்ளார் அல்லவா ? இதன் பின்னால் ஒரு அற்புத இரகசியம் உண்டு. பாலமுத பசுந்துறை என்பது எட்டு பட்டைகள் உடைய சிவலிங்கத்தைப் போன்ற ஒரு சஞ்சீவினி சக்கரமாகும். 
  மார்க்கண்டேய  மகரிஷி திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் 64 ரசமணி உருண்டைகளை நிர்மாணித்து உள்ளதுபோல திருப்பாற்றுறை திருத்தலத்தில் பாலமுத பசுந்துறை என்று எட்டு முகங்கள் கொண்ட சஞ்சீவினி சக்கரத்தை சூட்சுமமாக நிர்மாணித்துள்ளார்.
  இதன்  பயனாக திருபாற்றுரை லிங்கத் திருமேனி மேல் நாம் அபிஷேகம் செய்யும் பாலில் உள்ள அமிர்த சக்திகள் அனைத்தும் மார்க்கண்டேயர் நிர்மாணித்த சஞ்சீவினி சக்கரத்தால் அமுத பிரகாச கதிர்களாக மாற்றப்பட்டு   மனிதர்கள்  ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைத்த புண்ணிய சக்திகளாக மாறி பக்தர்களுக்கு இறைப் பிரசாதமாக வர்ஷிக்கப்படுகின்றன.
  மார்க்கண்டேய  மகரிஷியின்  அற்புத இந்த தொண்டிற்கு ஈடு இணை ஏதும் இப்பூவுலகில் உண்டோ.
  எனவே  நான்கில்  ஆரம்பமான  க்ஷீர சக்திகள் மார்க்கண்டேய மகரிஷியின் அருளால் எட்டில் பூர்ணம் பெற்று பக்தர்களின் விதியையும் மாற்றும் சிவப் பிரசாதமாக பொலிகின்றன என்பதே திருப்பாற்றுரை சிவத்தலத்தின் அற்புத மகாத்மியமாகும். 
|   நித்ய கல்யாணியின் நெடுந்தவம்  | 
    
  எப்போதுமே  குழந்தை மேல் அப்பாவிற்கு ஒரு மடங்கு பிரியம் என்றால் அதன் அம்மாவுக்கு பத்து மடங்கு பிரியம் இருக்கும் அல்லவா ?
  ஸ்ரீஆதிமூல  நாதர் பக்தர்கள் விதியையே மாற்றி அவர்களுக்கு நன்னிலை அளிக்கிறார் என்றால் அன்னை நித்ய கல்யாணி என்னவெல்லாம் தன் குழந்தைகளுக்கு அருள்வாள். அதையும் அறிந்து கொள்வோமா ?
  திருஞான  சம்பந்த மூர்த்தி நாயனார் ஆறு வயது பாலகனாக இருக்கும்போது திருப்பாற்றுறை திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு இத்தலத்தில் புனருத்தாரணம் நிறைவேற்றினார் என்று விளக்கியுள்ளோம் அல்லவா ? மகான்களும் அருட் செல்வர்களும் எது செய்தாலும் அது மக்களின் நலனுக்காகத்தானே இருக்கும்.
  இத்தலத்தில்  அம்பிகை ஆறு வயது சிறுமியாக பல யுகங்கள் தவமியற்றி நித்திய சுமங்கலி சக்திகளை இத்தலத்தில் நிலை நிறுத்தி அற்புத சேவை செய்தாள். நித்ய கல்யாணி அம்பாளின் அற்புத தவத்தை மெச்சியே திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தன்னை இறைவனின் காதலியாக பாவித்து இத்தலத்தில் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். 
  காமம்  புகுமுன்  காயத்ரீ புக வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அதனால்தான் ஏழு வயதிற்குள் இத்தலத்தில் எழுந்தருளி அற்புத சேவை ஆற்றினார் சம்பந்த மூர்த்தி நாயனார். 
  நித்ய  கல்யாணி ஆற்றிய தவம் யாதோ ? அது மிகவும் எளிமையான தவம்தான். ஆனால், அம்பாள் அத்தவத்தை இயற்றிய வயதுதான் நம்மை பிரமிக்க வைப்பதாகும். ஆம். ஆறு வயது நிறைந்த பெண் குழந்தை வடிவில் அம்பாள் இத்திருத்தல ஈசனை வலம் வந்து வணங்குவதையே தன்னுடைய எளிய நித்திய வழிபாடாக வைத்திருந்தாள். 
  கேட்பதற்கு  இது மிகவும் சாதாரண தவம் போல்தான் தோன்றும். ஆனால், அம்பாள் வலம் வந்த காட்சியை சற்றே கண் முன்னே கொண்டு தியானித்துப் பாருங்கள். 

ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி
திருப்பாற்றுறை
  சுற்றிலும்  மணல் வெளி. அதன் நடுவே மேற்கூரை கூட இல்லாத ஒரு சிவலிங்கம். சித்திரை மாத கடும் வெயில். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிழலின் அரிச் சுவடே இல்லை. அந்த தகிக்கும் வெயிலில் ஆறு வயது பெண் குழந்தை அடி மேல் அடி வைத்து சிவலிங்கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. மானிடக் குழந்தையாக உருவெடுத்து  வந்து அம்பாளின்  பாதமோ ஆறு வயது பெண் குழந்தையின் தளிர் பாதங்கள். அம்பாள் அணிந்திருந்த ஒரே அணிகலன் காலில் தவழ்ந்த வெள்ளிக் கொலுசு மட்டுமே. 
  இவ்வாறு  வெட்டவெளியில்  வெறும் பாதங்களுடன் வலம் வந்து வணங்கிய காலம் ஒரு மாதமோ வருடமோ அல்ல. யுகக் கணக்கில் அம்பிகையின் கடுந் தவம் நெடுந் தவமாக தொடர்ந்தது. 
  அம்பாளின்  திருஅதரங்கள்  பஞ்சாட்சர  மந்திரத்தை  ஒலிக்க, உள்ளத்தில் எம்பெருமானின் திருவடிகள் ஜொலிக்க, அம்பாளின் திருப்பாதங்களில் வெள்ளிக் கொலுசுகள் சுக்ர ஜோதிக் கிரணங்களை எங்கும் பரப்ப தன் பொற் பாதங்களை கொள்ளிடம் மணலில் பதித்து அற்புதமாக வலம் வந்து கொண்டிருந்தாள் அம்பிகை.
  இந்தக்  குழந்தையின்  தவத்தைக்  கண்டால் யார் மனம்தான் இறங்காது. இறைவனும் இறுதியில் இளகி, இறங்கி வந்தான். அம்பிகையை தன் இதயக் கமலத்தில் நிரந்தரமாக பதித்துக் கொண்டான். இவ்வாறு இறைவன் இறைவியை தன் இதயத்தில் பதித்துக் கொள்வதே நிரந்தர சுமங்கலி சக்திளை ஒரு தலத்தில் நிரவுவதாகும். 
  அதனால்  கல்யாண குணங்கள் நிரம்பி வழிந்த ஈசனுடன் ஒன்றிய கல்யாணி நித்ய கல்யாணி அம்பிகை ஆனாள். 
ஆனால்,  இறைவன் இறைவியை தன் நெஞ்சில் பதித்துக் கொண்டது சூட்சுமமாகவே. இது சாதாரண மனிதக் கண்களுக்கு தெரியாது அல்லவா ? எனவே மனிதர்களின் ஊனக் கண்களுக்கும் அம்பிகையின் தியாகம் புரிந்தால்தானே அந்த இறை லீலை மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். 
எனவே  அம்பிகையின்  இதற்கான தவமும் மீண்டும் தொடர்ந்தது. இம்முறை இறைவன் அம்பிகையை மேலும் சோதிக்க விரும்பவில்லை. அம்பிகையின் விருப்பப்படி இறைவன் இறைவியை தன் இதயக் கமலத்தில் ஏற்றுக் கொண்ட சிவ லீலையை உலகறியச் செய்தான்.
எப்படி  ?
ஆறு  வயது பச்சிளங் குழந்தையாக இறைவனை வெறும் பாதங்களுடன் கொதிக்கும் மணல் வெளியில்   இறைவனை  வலம் வந்த இறைவியை வெட்ட வெளியில் சுடுகாட்டில் மலரும் நித்ய கல்யாணி மலராகப் படைத்தான் எம்பெருமான்.
ஆம்,  திருபாற்றுறை  அம்பிகையே  முதன் முதலில் இவ்வுலகில் நித்ய கல்யாணி அம்பிகையாக மனிதர்களின் ஊனக் கண்களுக்கு நித்ய கல்யாணி மலராக மாறி காட்சியளித்தாள்.
நித்ய  கல்யாணி தியாக ராஜனின் இதய ராணி ஆனாள்.
தியாக  ராஜனின் தியாக ராணியே நித்ய கல்யாணி.
நித்ய  கல்யாணி என்ற அற்புத தெய்வீக மலர் முதன் முதலில் இப்பூவுலகில் தோன்றிய தலமே திருப்பாற்றுறை திருத்தலமாகும். உண்மையில் நித்ய கல்யாணியை மலர் என்று கூறுவதை விட நித்ய கல்யாணி அம்பிகை என்று வர்ணிப்பதே பொருத்தமாகும்.
சித்தர்கள்  இந்த அற்புத மலரை நிர்மால்ய நித்திலம் என்று வர்ணிக்கிறார்கள். 
நித்ய  கல்யாணி மலர்கள் மூன்று வண்ணங்களில் அமைவதுண்டு. வெண்மையான நித்ய கல்யாணியை சிவ அம்சம் என்றும், சிவப்பு வண்ண கல்யாணியை சக்தி அம்சம் என்றும், வெள்ளையும் சிவப்பும் சேர்ந்த மலரை அர்த்த நாரீஸ்வர கோலமாகவும் சித்தர்கள் வணங்கி வழிபடுகிறார்கள். 
நித்ய  கல்யாணியை  சித்தர்கள்  நிர்மால்ய  நித்திலம்  என்று அழைப்பதன் காரணம் என்ன ?
நித்திலம்  என்றால் முத்து என்று பொருள். அம்பிகை ஏக சிந்தனையாக பஞ்சாட்சர மந்திரத்தை தன் திருஉதடுகளை அசைத்து ஒலித்துக் கொண்டே இருந்தாள் அல்லவா ? அந்த பஞ்சாட்சர ஒலிகளே நித்ய கல்யாணியின் ஐந்து இதழ்களாக மலர்ந்தன. 
முத்து  என்பது சந்திர சக்திகளின் பரிபூர்ணமான சக்தியே. அதாவது சந்திர சக்திகள் பூர்ணத்தின் பூரணமாக அமைந்ததே முத்து.
அதனால்தான்  இறைவனின்  இந்த பரிபூர்ண தன்மையை விளக்க வந்த மணிவாசக பெருமான், “தோளா முத்தச் சுடரே,” என்று எம்பெருமானை அழைக்கின்றார். இவ்வாறு பஞ்சாட்சர சக்திகள் பரிபூர்ணமாக நிறைந்த மலரே நித்ய கல்யாணி என்பதால் இதை சித்தர்கள் நித்திலம் என்கிறார்கள். 
நித்திலம்  என்பதும்  பஞ்சாட்சரம்தானே  ?
நித்ய  கல்யாணியின்  மற்றுமோர்  தெய்வீக அம்சம் என்னவென்றால் அதை இறைவனுக்குச் சூட்டுவதில்லை. காரணம் அது ஏற்கனவே அது அர்ப்பணிக்கப்பட்டு விட்டது என்பதால்தான். ஆம், அதுதானே நித்ய கல்யாணி அம்பிகையின் பிரார்த்தனை.
நித்ய  கல்யாணி மலர்வது தரையில் அல்ல. தியாகராஜனின் இதய கமலத்தில். அப்படியானால் நித்ய கல்யாணி மலர்ந்தவுடனே  அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விடுகிறது என்பதுதானே பொருள். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை நாம் நிர்மால்ய மலர்கள் என்றுதானே அழைக்கிறோம்.
இதுவே  சித்தர்கள்  நித்ய கல்யாணி மலரை நிர்மால்ய நித்திலம் என்று அழைப்பதன் தெய்வீக இரகசியமாகும். 
கோயில்  சுடுகாடு  கொல் புலித்தோல் மேலாடை என்று சிவபெருமான் சுடுகாட்டைத்தானே தன்னுடைய இருப்பிடமாக கொண்டு வசிக்கிறான்.
அதனால்  சிவபெருமானின்  இருப்பிடமான  சுடுகாட்டில்  நித்ய கல்யாணி மலர்கள் அதிகமாக மலர்வதை இன்றும் நாம் கண்கூடாக க் காணலாம். இவ்வாறு நித்ய கல்யாணியின் பஞ்சாட்சர சக்தியை உணர்ந்த எத்தனையோ மகான்கள் அம்மலரை வழிபட்டு உத்தம நிலையை அடைந்துள்ளார்கள். அத்தகையோரில் ஒருவரே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார்கள்.
தன்னுடைய  இள வயதில் தினமும் அவர் சுடுகாட்டிற்குச் சென்று அங்குள்ள நித்ய கல்யாணி மலர்களை தரிசித்து, பஞ்சாட்சர ஜபம் ஓதி உன்னத நிலையை அடைந்தது பலரும் அறிந்த ரகசியமே.
திருப்பாற்றுறை திருத்தலத்தில் நிகழ்ந்த  அற்புத வரலாறு ஒன்றையும் இங்கு அளிக்கிறோம்.
விவசாய  குடும்பத்தில்  தோன்றிய பனங்காளை என்ற பெயருடைய ஒரு இளைஞன் திருப்பாற்றுரை திருத்தலத்தில் வசித்து வந்தான். பெயருக்கேற்றபடி திடகாத்திரமான உடல் பலத்துடனும் அசாத்திய மன வலிமையுடனும் திகழ்ந்தான் பனங்காளை. 
அவனுக்கு  வில்வ மங்களா என்று காதலி இருந்தாள். அவள் ஸ்ரீரங்கத்தில் மாடவீதியில் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் வசித்து வந்தாள். பெரும்பாலும் கொள்ளிடம் ஆற்றில் நீர் பெருக்கு இல்லாத காரணத்தால் அக்கரையில் இருந்த தன் காதலியை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நடந்து சென்றே தினமும் பார்த்து விட்டு வருவான் பனங்காளை.
இரவு  பகல் எந்நேரமும் தன் காதலியின் நினைவாகவே, அவளைத் தன் உயிர் மூச்சாகவே கொண்டு வாழ்ந்து வந்தான் பனங்காளை. ஒரு நாள் கொள்ளிடம் ஆற்றில் எதிர்பாராத விதமாக வெள்ளம் வந்து விடவே பனங்காளையால் ஆற்றைக் கடந்து செல்ல முடியவில்லை.
மாலை  கடந்து இரவு நேரமும் வந்து விட்டது. காதலியைக் காணாமல் பனங்காளைக்கு மூச்சே நின்று விடும் போல் தோன்றியது. கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு குறைவதாகத் தெரியவில்லை.
பார்த்தான்  பனங்காளை. பொங்கி வரும் வெள்ளப் பெருக்கில் பாய்ந்து வேகமாக ஆற்றின் குறுக்கே நீந்த ஆரம்பித்தான். அப்போது சற்று தூரத்தில் உடைந்த பனை மரம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து வருவதைப் பார்த்த பனங்காளை வேகமாக நீந்திச் சென்று அதைப் பற்றியவாறே எளிதாக நீந்தி மறுகரைக்கு வந்து சேர்ந்தான்.
அந்த  அவசரத்திலும்  திரும்பி  செல்வதற்காக  வசதியாக இருக்கட்டுமே என்று அந்த பனை மரத்தை கரையில் ஏற்றிப் போட்டு விட்டு வேகமாக தன் காதலியின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். நள்ளிரவு. எங்கும் அமாவாசை இருட்டு.
எப்படியோ  இருட்டில்  தட்டுத் தடுமாறி தன் காதலியின் வீட்டை அடைந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். வீட்டினுள் செல்வதற்காக எந்த கதவும் திறந்து இருப்பதாக தெரியவில்லை. அப்போது மேல் மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்குவதைக் கண்டான் பனங்காளை. 
அவனுக்கு  ஒரே ஆச்சரியம். “ஆஹா என்னைப் போலவே என் காதலியும் என்னைப் பார்க்காமல் தவித்திருக்கிறாள். அதனால் நான் எப்படியாவது வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் ஒரு கயிற்றைத் தொங்க விட்டிருக்கிறாள்,” என்று காதலியை மனதிற்குள் மனதார பாராட்டியபடியே அந்த கயிற்றைப் பற்றிக் கொண்டு மாடி மேல் ஏறி ஜன்னல் வழியாக காதலி இருக்கும் அறைக்குள் குதித்தான்.
தனக்காக  கொட்டக் கொட்ட தன் காதலி கண்ணுறங்காமல் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பாள் என்ற பனங்காளையின் கனவு பகல் கனவாய் மாறியது. காரணம் வில்வ மங்களா பஞ்சனை மெத்தை மேல் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
பனங்காளை  அறையினுள்  குதித்த சப்தம் கேட்டு அவள் திடுக்கிட்டு தூக்கம் கலைந்து எழுந்தாள். பனங்காளையைப் பார்த்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

பேரெழில் வானெழில் நின்னெழில்
ஸ்ரீபிட்சாடனர் திருப்பாற்றுறை
பனங்காளையிடம்,  “எதற்காக இந்த அர்த்த ராத்திரியில் வந்திருக்கிறாய் ?” என்று கேட்டாள்.
பனங்காளை  நடந்த விவரங்கள் அனைத்தையும் தன் காதலிக்காக தான் பட்டபாடு அனைத்தையும் விவரித்தான். 
பின்னர்,  “நான் மட்டும்தான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதில்லையே. நீயும்தானே என் மேல் உயிரையே வைத்து எனக்காக கயிறு எல்லாம் கட்டி வைத்திருக்கிறாயே,” என்று ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் வினவினான் பனங்காளை.
“கயிறா .. நான் எங்கே கயிற்றைக் கட்டி வைத்தேன்,” என்று ஒன்றும் புரியாமல் விழித்தாள் வில்வ மங்களா. பனங்காளை ஜன்னல் வழியாகத் தொங்கிய கயிற்றைக் காட்டினான் பனங்காளை. அதைப் பார்த்த வில்வ மங்களா, “அம்மா பாம்பு, பாம்பு, “ என்று கத்த ஆரம்பித்தாள்.
“ பாம்பா இது ?” என்று அப்போதுதான் அந்த கயிற்றைப் பார்த்தான் பனங்காளை. ஆம், உண்மையில் ஜன்னல் வழியாகத் தொங்கியது ஒரு பெரிய மலைப் பாம்பு. 
பனங்காளை  அதைப் பற்றி இழுத்து மேலே ஏறியதால் அந்த வலி தாங்காமல் அந்த பாம்பும் இறந்து இப்போது உண்மையிலேயே கயிறு போல்தான் தொங்கிக் கொண்டிருந்தது.
“ஆமாம், கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது என்று மக்கள் சொன்னார்களே. நீ எப்படி இந்த வெள்ளத்தைத் தாண்டிவந்தாய் ?” என்று கேட்டாள் வில்வ மங்களா.
“எல்லாம் உன் மேல் உள்ள காதல்தான் காரணம்,“ என்று கூறிய பனங்காளை தன் காதலியை அழைத்துக் கொண்டு அவளிடத் தன்னுடைய வீர பிரதாபத்தைக் காட்டுவதற்காக கொள்ளிடக் கரைக்கு சென்று தான் பற்றி வந்த பனை மரத்தைக் காட்டினான் பனங்காளை.
அதனருகில்  சென்ற வில்வ மங்களா தன்னுடைய மூக்கை இறுக மூடிக் கொண்டு, “இந்த பிணத்தைப் பிடித்துக் கொண்டா அக்கரையில் இருந்து நீந்தி வந்தாய் ?” என்று கேட்டாள்.
“பிணமா ... ?” என்று அருகில் வந்து பார்த்தான் பனங்காளை. 
ஆமாம்  அது எப்போதோ இறந்து போன ஒரு மனிதனின் உடல்தான். பல நாட்களுக்கு முன் இடுகாட்டில் புதைக்கப்பட்ட அது வெள்ளப் பெருக்கில் ஆற்றில் மிதந்து வந்துள்ளது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டான் பனங்காளை.
தாங்க  முடியாத துர்நாற்றத்தால்  வயிறு புரட்டிக் கொண்டு வந்தது. 
வில்வ  மங்களா தொடர்ந்தாள், “இப்படி நாற்றமடிக்கும் மனித உடலின் மேல் வைக்கும் ஆசையை அந்த ரெங்கநாதன் மேல் வைத்தால் எப்படி இருக்கும் ?”
தன்னையும்  அறியாமல்  தன் காதலி கூறிய வார்த்தைகள் பனங்காளையின் ஞானக் கண்களைத் திறந்தன. பனங்களை மௌனமானான். அவன் மனம் உள்முகமாகத் திரும்பியது. 
உலக  வாழ்க்கை  பொய்த்தது  பனங்களைக்கு. நேராக சுடுகாட்டிற்குச் சென்றான். அங்குள்ள நித்ய கல்யாணி மலர் அவன் கவனத்தை ஈர்த்தது.
“இந்தப் பொய்யான உலகத்தில் இருந்து மெய்யான ரெங்கநாதரை எப்படி அடைவாய் பனங்காளை ?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
பனங்காளை,  பனங்காளை  என்ற வார்த்தைகள் சுய நாம ஜபமாக நித்ய கல்யாணியின் ஐந்து இதழ்களில் இலயித்தன. நித்ய கல்யாணி நாம குருவாக பனங்காளைக்கு அமைந்தது.
நாட்கள்  செல்லச் செல்ல பனங்காளை என்ற எழுத்துக்கள் மறைய நித்ய கல்யாணி மலரில் இயற்கையாக அம்பிகையின் அருள் பிரவாகமாக அமைந்த பஞ்சாட்சரம் ஒலிக்க, ஒளிக்க ஆரம்பித்தது.
ஒரு  நாள் ஸ்ரீஅகத்திய முனி திருப்பாற்றுரைக்கு விஜயம் செய்யவே தன்னுடைய பஞ்சாட்சர ஜப மகிமையால் அவரை இனங் கண்டு கொண்டு அவர் திருவடிகளில் சரணடைந்தான் பனங்களை.
“பொய்யான இந்த உலக வாழ்விலிருந்து மெய்யான இறைவனை அடையும் மார்கத்தை உபதேசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன், ” என்று பிரார்த்தித்தான் பனங்காளை.
ஸ்ரீஅகத்திய  முனியும்,
குறுக்கத்தி  குருவாகும்
குறுக்கத்தி  குருவாக்கும் 
என்று  அருளி மறைந்தார். 
அகத்தியரின்  திருவாசகமான  மறை வாசகங்களை மனதினுள் எண்ணிப் பார்த்தான் பனங்காளை. அவனுக்கு வழி தெரிந்து விட்டது. அருகிலேயே இருந்தது குறுக்கத்தி மலர்ப் பொய்கை. 
அன்று  மூன்று குவளை மலர்கள் பூத்திருந்தன. அம்மலர்களை பறித்து திருப்பாற்றுறை சிவாலயத்தில் எழுந்தருளியிருந்த பெருமாள் மூர்த்தியின் மலர்ப் பாதங்களில் அர்ப்பணித்தான். ஒரு பூவிற்கு ஒரு கைப்பிடி என்ற கணக்கில் அன்று மூன்று கவள உணவை மட்டுமே ஏற்றான் பனங்காளை.
இவ்வாறு  தினமும் தொடர்ந்தது பனங்களையின் வழிபாடு. ஒரு நாளில் எத்தனை குவளை மலர்களை பெருமாளுக்கு அர்ப்பணிக்கின்றானோ அத்தனை கவள உணவுதான் ஏற்பது என்று தனக்குத்தானே ஒரு கொள்கையை நிர்ணயித்துக் கொண்டான் பனங்காளை. சில சமயம் ஒரே ஒரு நீலோத்பல மலர் மட்டும்தான் பூக்கும், அன்று பனங்காளை ஒரே ஒரு கவள உணவைத்தான் ஏற்பான். 
இவ்வாறு  60 வருடங்கள்  தொடர்ந்தது  பனங்காளையின்  குறுக்கத்தி  பூஜை. திடீரென ஒரு நாள் பொய்கையில் குவளை மலர்கள் மாயமாயின. ஒரு பூ கூட பனங்காளையின் கண்களில் படவில்லை. தினமும் அந்த பொய்கையை தரிசனம் செய்து விட்டு ஏக்க கண்ணீர்த் துளிகளை மட்டும் பெருமாளின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து விட்டு சென்றான் பனங்காளை.
உணவை  மறந்தான்  பனங்காளை. பனங்காளை வைராக்கியமான காளை அல்லவா ?
தன்னுடைய  நேத்ர மலர்களால் மட்டுமே அர்ச்சனையைத் தொடர்ந்தான் பனங்காளை. அதுவும் இறுதியில் நின்று விட்டது. நின்று விட்டது என்று சொல்வதை விட பனம் பழம் பழுத்து விட்டது என்று கூறுவதே முறையாகும்.
எப்போதுமே  பக்தி வாழ்க்கை ஒரு பிறவியில் எங்கு நிறைவு பெறுகிறதோ அங்கிருந்துதான் அடுத்த பிறவி தொடங்கும் என்பது தெய்வீக நியதி. அந்த நியதியின்படி  திருபாற்றுறை பொய்கையில் தவமியற்றிய பனங்காளையின் அடுத்த பிறவி அந்த குறுக்கத்தி பூத்த  பொய்கையிலேயே அமைந்தது.
ஆம், திருப்பாற்றுறை நீலோத்பல மலர்கள் பூத்துக் குலுங்கிய  தெய்வீக பொய்கையில் தோன்றியவரே பனங்காளை என்ற பொய்கை ஆழ்வார் ஆவார்.
கை என்றால் வாழ்க்கை, நடைமுறை என்ற அர்த்தங்கள் உண்டு. சிவபெருமானை, “சேர்ந்தறியாக் கையானை ...” என்பார் மணிவாசகர். 
இந்த உலக வாழ்வு பொய் கை அதாவது பொய்யான வாழ்வு என்று உணர்ந்து  பனங்காளையின் தோற்றம் ஏற்பட்டதால் பொய்கை ஆழ்வாரின்அவதாரம் மனிதர்களுக்கு குழந்தையாகப்  பிறக்கும் பொய்மை என்ற நிலை மாறி இறைவனை அலங்கரிக்கும் குவளை மலரில் அவதரிக்கும் தெய்வீக  பேற்றைப் பெற்றார் பொய்கை ஆழ்வார்.
அந்தக் குழந்தை பிறந்தவுடன் பேசியது, வேதங்களை ஓதியது.
நீல வண்ணனின் எட்டெழுத்தை எப்போதும் நெஞ்சில் நிறைத்தவாறே அரங்கனின்  மெய் கை நினைவுடன் வாழ்ந்தார் பொய்கை ஆழ்வார். 
இறையடியார்களும், பெருமாள் பக்தர்களும் பெருந்திரளாக வந்து பொய்கை  ஆழ்வாரிடம் இறை உபதேசங்களைப் பெற்றுச் சென்றனர். அற்புத சத்சங்கங்களை  உருவாக்கி பன்னெடுங்காலம் பெருமாளுக்கு சேவை செய்த பொய்கை ஆழ்வார் ஒரு சுக்ல பட்ச வெள்ளிக்  கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ரங்கநாத பெருமாளின் வலது கட்டை விரலில் அதாவது சுக்ர  விரலில் ஜோதியாய் ஐக்யமானார். 
இதுவரை எவரும் அறியாத பொய்கை ஆழ்வாரின் திருசரிதத்தை ஸ்ரீலஸ்ரீ  இடியபாப்ப சித்த ஈசனிடமிருந்து பெற்ற அருள் பொக்கிஷத்தை இவ்வாறு மக்களின் நலம் வேண்டி  அருளிக் கொண்டிருந்தார் சற்குரு ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள். 
அப்போது  ஒரு அடியார் தயங்கியவாறே ஒரு கேள்வியைக் கேட்டார்.
“வாத்யாரே, பொய்கை ஆழ்வார் அனைவருக்கும் குருவாய் விளங்கி ஆன்மீக வாழ்க்கையில் அவர்களை மேன்மை அடையச் செய்தார் என்று அற்புதமாக விளக்கினீர்கள். அப்படியானால் அவர் ரங்கநாதரின் குருவிரலில்தானே ஐக்யமாக வேண்டும் ? ’‘
“அதிகப்பிரசங்கித்தனமான கேள்வியாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்,” என்று ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார் அந்த அடியார்.
சற்குரு  சிரித்துக்  கொண்டே, “பரவாயில்லை, சார், நீங்கள் இப்படி கேட்டால்தானே பலருக்கும் விளக்கம் கிடைக்கும். பொய்கை ஆழ்வாரின் அவதாரம் குறித்தும் அவர் ரங்கநாதரின் மெய்கையில் சமாதி பூண்டதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விளக்கிக் கூற நாங்கள் எப்போதும் தயாரகத்தானே இருக்கிறோம். ஆனால், அவற்றை எல்லாம் மனிதனின் குருவி மூளையால் கிரகிக்க முடியாது. ”
சற்ற  நேரம் கழித்து தொடர்ந்தார், “ இருந்தாலும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு சில விஷயங்களை விளக்குகிறேன். இந்த உலக வாழ்க்கை நீர்க்குமிழி போல் பொய்யானது. இறைவன் ஒருவனே உண்மை என்பதை தெளிவாக உணர்ந்தவர் பொய்கை ஆழ்வார். அந்த நிலையை உணர்ந்தவன் இறைவனின் அடிமையாகி விடுகிறான். ”
“அடிமைக்கு எந்த சாய்சும் (விருப்பம்) கிடையாது. பொய்கை ஆழ்வாரை ரங்கநாதர் எங்கு வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அது அவருடைய விருப்பம். ஆள்காட்டி விரல் குரு விரல் என்ற ஒரே ஒரு ஜோதிட விஷயத்தை தெரிந்து கொண்டு இந்த கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.”
அடியார்  சிரித்தபடியே  தலையைக் குனிந்து கொண்டார்.
சற்குரு  தொடர்ந்தார், “ஆனால், நீர்க்குமிழி என்ற ஒரு தமிழ் பதத்தை முழுமையாக புரிந்து கொள்ள அகத்தியரே காகபுஜண்ட மகரிஷியிடம் ஒரு சதுர்யுகம் பாடம் படித்தாராம். அப்படியானால் ஆன்மீகம் என்பது எவ்வளவு பரந்து விரிந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”
“அடியேனை எடுத்துக் கொள்ளுங்கள். அடியேன் ஒரு கேவலமான நாய், எச்சில் இலை. இந்த எச்சில் இலையை அங்காளி இன்றைக்கு கபாலி கோவில் கோபுரத்தின்மேல் வைப்பாள், நாளைக்கே ஈ மொய்க்கும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவாள். அது அவள் இஷ்டம், காரணம் அவள் ஆண்டான், அடியேன் அவள் அடிமை.”
“இந்த எண்ணம்   இருக்கும்  வரைதான் ஒருவன் தெய்வீகத்தில் நிலைத்து நிற்க முடியும்.”
தாங்கள்  மூச்சு விடுகிறோமா இல்லையா என்று கூட அறியாமல் அடியார்கள் சித்த அமிர்தத்தை மௌனமாக பருகிக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீவெங்கடராமன் தொடர்ந்தார், “அகத்தியரின்  சீடர் போகர், போகரின் சீடர் புலிப்பாணி. போகர் தான் என்றுமே அகத்தியரின் சீடன் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தாரே தவிர, கனவிலும் அவர் தான் புலிப்பாணியின் குரு என்று எண்ணியது கிடையாது.”
“இதுதான் உத்தம சீடனின் இலக்கணம். உத்தம சீடன்தான் உலகம்போற்றும் குருவாக மாற முடியும்.”
“திருஞான சம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர் மூன்று வயது குழந்தையான சம்பந்தரை தன் தோளில் சுமந்து கொண்டு பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று கொண்டிருந்தார். சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு தான் தன் அப்பாவின் தோள் மேல் அமர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற நினைவே முற்றிலும் கிடையாதாம். தான் எம்பெருமானின் திருவடி நிழலிலேயே ஊர்ந்து கொண்டிருப்பதாகத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாராம்.”
“இதுதான் பிஞ்சிலே பழுத்தது என்பது. இவ்வாறு பிஞ்சிலே பழுத்தவர்கள்தான் சம்பந்த மூர்த்தி நாயனார், ஆதிசங்கர பகவத்பாதாள், பொய்கை ஆழ்வார் போன்ற உத்தமர்கள். ”
“இவ்வாறு பிஞ்சிலே பழுத்ததால்தான் அவர்கள் குருமார்கள், மதபோதகர்கள், ஆச்சார்யார்கள், ஜகத்குரு என்ற பட்டத்தை எல்லாம் பெற்றார்கள். இதுவே அகத்தியர் அருளிய 
குறுக்கத்தி  குருவாகும்  குறுக்கத்தி  குருவாக்கும்  என்பதன் உண்மைப் பொருளாகும். “
“இப்போது பொய்கை ஆழ்வார் எப்போது சீடன் ஆனார், எப்போது குரு ஆனார் என்று உங்களால் சொல்ல முடியாது. இது காலம் கடந்த அனுபூதி. சற்று நேரத்திற்கு முன் திருப்பாற்றுரை அம்பாள் ஆறு வயது சிறுமியாக காலில் வெள்ளிக் கொலுசு அணிந்து வெட்டவெளி சிவலிங்கத்தை வலம் வந்தாள் என்று அம்பாளின் தவத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.”
“அப்போது ஒரு அடியார் அம்பாள் காலத்தில் கொலுசு செய்வதற்கு எங்கே ஆசாரிகள் இருந்தார்கள். வாத்யார் ஏதோ கதை சொல்கிறாரா என்று தனக்குள் நினைத்தார்,” என்று சிரித்துக் கொண்டே ஒரு அடியாரைப் பார்த்து கண் சிமிட்டினார். 
அடியார்கள்  சிரிப்பு  அந்த அறையை நிறைத்தது.
ஸ்ரீவாத்யார்  தொடர்ந்தார், “இவை எல்லாம் காலம் கடந்த அனுபூதிகள். விஞ்ஞானத்தில் ஒன்றுக்குப் பின் இரண்டு வரும், இரண்டிற்குப் பின் மூன்று வரும். ஆனால், மெய்ஞானத்தில் இரண்டிற்குப் பின் ஒன்று வரலாம், மூன்றிற்குப் பின் இரண்டு வரலாம்.”
அமைதிப்  பூங்காவில்  ஆலய மணியாய் சற்குருவின் குரல் ஒலித்தது.
“சார், இது கலியுகம். குருவைத் தேடி சீடன் செல்ல முடியாது. நான்தான் குரு, நான்தான் குரு என்று காவி கட்டி, ருத்ராட்ச மாலைகளை மாட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் ஏராளம். வெளி அடையாளத்தை வைத்து ஞான குருவை அடையாளம் காண முடியாது. அதனால் சற்குருமார்களே சீடர்களை தேடி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சீடர்களை ஞானப் பாதையில் அழைத்துச் செல்கின்றனர்.”
“தட்சிணாமூர்த்தி அருளும் சின் முத்திரை எதைக் காட்டுகிறது. குரு விரல்தான் சுக்கிர விரலை நாடி அதைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது குரு சீடனை நோக்கிச் செல்ல வேண்டும். இதைத்தானே ரங்கநாதரும் செய்தார். ”
“உண்மையாக ரங்கநாதரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு முதலில் கிடைப்பது இந்த பொய்கை ஆழ்வார் தரிசனமே. அடியார் தரிசனம் பெறாமல் நிச்சயம் எவரும் ஆண்டான் தரிசனத்தைப் பெற முடியாது.”
“பொய்கை ஆழ்வாரின் உத்தம பக்தியை ரங்கநாதரைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே அந்த உத்தமமான பக்தனுக்கு தன் உடலில் உத்தமமான இடத்தை அளிக்க விரும்பினான் ரங்கநாதன். இறைவனின் உத்தமமான இடம் இதயம். இதயத்துடன் தொடர்பு கொண்டது வலது கட்டை விரல்.”
“மேலும் பொய்கை ஆழ்வாரின் தவத்தை நீங்கள் நினைவு கூர்ந்தால் அவர் வெறும் கவளச் சோறுதான் உண்டு வாழ்ந்தார் என்பது தெரியும். இந்த கவளச் சோறு விரதம் ஆன்மாவுடன் தொடர்பு உடையது. ஆன்மாவின் அளவோ வலது கட்டை விரல் அளவே. தன்னுடைய ஆன்மாவே பொய்கை ஆழ்வார் என்பதை உலகிற்கு உணர்த்தவும் ரங்கநாதன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினான்.”
|   மேகலா அருளும் மேகலை  | 
    
 திருப்பாற்றுறை அம்பிகை  மேகலா என்னும் திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றாள். இடுப்பில் அணியும் ஒட்டியாணத்திற்கு மேகலை என்று பெயர். தங்கம் விற்கும் விலையில் இப்படிப்பட்ட ஆபரணங்கள் தேவைதானே என்று பலரும் எண்ணக் கூடும்.
உண்மையில்  ஒட்டியாணத்தின்  ஆன்மீக இரகசியங்களைப் புரிந்து கொண்டால் பெண்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டு ஒட்டியாணத்தை வாங்கி அணிந்து கொள்வார்கள்.
ஒட்டியாணம்  என்பது பெண்கள் அணியும் ஆபரணம் என்றே பலரும் கருதுகின்றனர். உண்மையில் ஐயப்ப சுவாமி இடுப்பில் அணியும்   யோகப்  பட்டைக்குத்தான்  ஒட்டியாணம்  என்று பெயர். ஒரு காலத்தில் பூணூல் போல ஆண்கள் மட்டுமே அணிந்து வந்த ஒட்டியாணத்தின் அற்புத தெய்வீக சக்திகளை பெண்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தோன்றிய அணிகலனே ஒட்டியாணம் ஆகும்.
ஆண்கள்  அணிவது பருத்தியால் அமைந்தது. பெண்கள் அதை தங்கத்தில் அணிவது சிறப்பு.   அவரவர்  ராசி, காரிய சித்தி போன்ற காரணங்களைப் பொறுத்து அதன் நடுவில் முத்து, பவளம், மாணிக்கம் போன்ற ரத்தினக் கற்களைப் பதித்து அணிந்துகொள்வர். 
பெண்களின்  தொப்புளுக்குக்  கீழே ஒட்டியாணத்தை அணிய வேண்டும். பெண்களின் இந்த உடல் பகுதி அவர்களின் பிறப்பு உறுப்புகளுடன் தொடர்பு கொள்வதுடன் அவர்களின் ஆன்ம சக்திக்கும் இணைப்பு உடையதாகும் என்ற இரகசியத்தை சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். 
தங்களுடைய  குழந்தைகளை  நன்முறையில்  பெற்றுக்  கொள்ளவும், தங்களுக்கு வேண்டிய வாரிசை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் ஒட்டியாணம் பெரிதும் பயன்படுகிறது. 
பொதுவாக,  அக்காலத்தில்  மணமானவுடன்தான்  ஒட்டியாணத்தை  அணிவது வழக்கம். அவ்வாறு அணிந்த ஒட்டியாணம் பெண்கள் தாய்மை அடையும்போது இறுக்கம் அடையும் அல்லவா ? அந்நிலையில் அதைக் கழற்றி கோயிலில் அம்பாள் உண்டியலில் சேர்த்து விடுவார்கள். அல்லது வசதியில்லாத, குழந்தைப் பேறு இல்லாத சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக அளித்து விடுவார்கள். இந்த தானத்தால் அந்தப் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும் அல்லவா ?
இத்தகைய  உயர்ந்த எண்ணங்களுடன் நம் மூதாதையர்கள் திகழ்ந்தமையால்தான் மாதம் மும்மாரி பொழிந்தது. 
இவ்வாறு  ஒட்டியாணம்  அணியும் அளவிற்கு வசதியில்லாத பெண்கள் தாய்மை அடையும்போது ஐந்தாம் மாதம் தங்களால் இயன்ற தங்க நாணயங்களை அம்பாளுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். 
இன்றும்  இத்தகைய பொன் தானங்களை தாய்மை அடைந்த தாய்மார்கள் அம்பாளுக்கு காணிக்கை அளித்தல், வசதியில்லாத சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றினால் குழந்தை நன்றாக வளர்ந்து தாய்மைப் பேறும் சிரமமின்றி முறையாக அமைய மேகலாம்பிகை அருள் புரிவாள்.
இவ்வாறு  பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணமும் அவர்களுக்கு ஒரு ரட்சையாக அமைந்து பல மங்கல சக்திகளை அனுகிரகமாக அளிக்கின்றன. ஒவ்வொரு ஆபரணமும் பெண்களுக்கு என்ன பலனை அளிக்கிறது என்று ஆராய்வதைவிட நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு சமுதாய பலனும் இருக்கும் என்பதை உணர்ந்தால் பெண்களின் வாழ்க்கை சகல சௌபாக்கியங்களுடன் பூரித்து நிற்கும்.
அம்பாள்  திருப்பாற்றுறை  திருத்தலத்தில்  ஆறு வயது சிறுமியாக வெள்ளிக் கொலுசு அணிந்து இறைவனை வலம் வந்தாள் என்று கூறினோம் அல்லவா ? வெள்ளிக்கு   ஜீவ  சக்திகளை  நிரவும் அற்புத சக்தி உண்டு. அதனால்தான் சாந்தி முகூர்த்தம் என்ற வைபவத்தில் பால், பழம் அளிக்கும்போது அதை கட்டாயமாக வெள்ளி டம்ளர்களில் அளிக்கிறார்கள். 
மேலும்  அர்த்தசாம  பள்ளியறை  பூஜைகளிலும்  இறை மூர்த்திகளுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் பால் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தை அடியார்களுக்கு அளிப்பதால் கிட்டும் பலன்கள் பலப்பல.
இன்றும்  திருப்பாற்றுறை  திருத்தலத்தில்  ஆறு வயது சிறுமிகளுக்கு பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை தானமாக அளித்து வெள்ளிக் கொலுசு தானமாக அளித்தலால் திருமணத் தடங்கல்கள், சந்ததியின்மை, குறைப் பிரசவம், இரகசிய நோய்கள், மாத விடாத் துன்பங்கள் போன்ற பல பிரச்னைகளையும் எளிதில் தீர்த்து விடலாம்.
ஆறு  வயது நிரம்பிய பெண் குழந்தைகள் கையால் மேற்கண்ட பொருட்களை நவராத்திரி சமயங்களில் பெற்று அவற்றை மற்ற பெண் குழந்தைகளுக்கும், சுமங்கலிகளுக்கும் தானமாக அளிப்பதாலும் அற்புதமான பலன்களைப் பெறலாம். 
மூன்றாம்  பிறை தரிசன நாள் அன்று ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் தேன் கலந்த காய்ச்சி ஆறிய பசும்பாலை ஊற்றி குழந்தைகளுக்கு கிண்ணத்துடன் தானமாக அளித்தலால் படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள் நன்கு அறிவு வளர்ச்சி பெறும். உரிய வயதில் பருவம் அடையாத துன்பங்கள் விலகும். 
ஒரு  தங்க ஆபரணம் எப்படி நாம் விரும்பும் வாரிசை பெற்றுத் தர முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம். இது குறித்து சித்தர்கள் அளிக்கும் ஆன்மீக விஷயங்களை எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் இன்றைய மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சில விஞ்ஞான விளக்கங்களை அளிக்கிறோம்.
பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பல பாரம்பரிய உடல் கூறு, மனக் கூறு விஷயங்களைப் பெறுகிறார்கள். உதாரணமாக, குழந்தைகளின் நிறம், உயரம், பருமன், அறிவு, நினைவாற்றல், தோற்றம் பல விஷயங்கள் தங்கள் பெற்றோர்களைப் போலவே இருக்கின்றன. இதில் எத்தனையோ ஜெராக்ஸ் காப்பிகள் கூட அமைவது உண்டு. 
“அப்படியே அப்பாவை உரித்துக் கொண்டு வந்திருக்கிறான். இவளுக்கு முழுக்க முழுக்க அம்மா ஜாடை,” என்றெல்லாம் மக்கள் கூறக் கேட்டிருக்கிறோம்.
இவ்வாறு  பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மாற்றப்படும் தகவல்கள் மனித உடலில் ஒவ்வொரு செல்லிலுமே உண்டு. இதை chromosomes என்ற செல்லின் ஒரு அணுக் கூறுகள் இவ்வாறு தகவல்களை சேகரித்து மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளன. 
இந்த  chromosomes மொத்தம்  23 ஜோடிகளாக  அமைந்து இந்த தகவல் பாரிமாற்றத்தை நிறைவேற்றுகின்றன. இந்த 23வது ஜோடி ஆண் அல்லது பெண் என்ற தகவலை வைத்துள்ளது. இதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு தகவல்கள் மாற்றப்படுகின்றன. ஆனால், எந்த தகவலை மாற்றுவது, எதை விட்டுவிடுவது என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. உதாரணமாக, அப்பா கருப்பாக இருப்பார், அவர் உயரமாக இருப்பார். அவருடைய பையன் சிவப்பாக உயரமாக இருப்பான். காரணம் அக்குழந்தைக்கு அப்பாவின் உயரம் பற்றிய செய்தி மட்டும்தான் அனுப்பப்பட்டு உள்ளது. அக்குழந்தையின் நிறத்திற்கு அம்மாவின் பாரம்பரியம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. இவ்வாறு லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான தகவல்கள் உண்டு.
இங்குதான்  விதியை மாற்றும் திருபாற்றுறை ஈசனின் திருவிளையாடலும் அதையும் மாற்றும் அம்பிகையின் திருவிளையாடலும் ஆரம்பமாகிறது.
பாலில்  22 அமிர்த  சக்திகள்  உண்டு என்று கூறினோம் அல்லவா ? சுவாமிக்கு 15 திதிகளில் ஏழு நாட்களில் நாம் நிறைவேற்றும் அபிஷேக ஆராதனைகள் இந்த ஜீவ அணுக்களில் ஏற்படும் பாரம்பாரிய மாற்றங்களை நமக்கு எது நல்லதோ அதற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைக்கின்றன.
இவ்வாறு  திரு பால் துறை பால் அபிஷேகம் நம் விதியை மட்டும் அல்ல, நமது குழந்தைகளின் விதியை மட்டும் அல்ல நமக்குப் பின் வரும் எத்தனையோ சந்ததிகளின் விதியையும் மாற்ற வல்லதாகும்.  
இந்த  இரகசியத்தை  புரிந்து  கொண்டால்  அம்பாளின்  மேகலை சக்திகள் எப்படி 23வது chromosome ஜோடியை மாற்றி நமக்குத் தேவையான வாரிசை உருவாக்கும் என்பதை நீங்களே எளிதில் புரிந்து கொள்ளலாம். 
இது  தொடர்பாக  திருப்பாற்றுறை  அம்பிகையின்  மற்றோர் சுவையான அருட்பாங்கும் உண்டு. பொதுவாக அம்பிகை மூர்த்திகள் தாமரை அல்லது நீலோத்பல மலருடன் காட்சி தருவார்கள். தாமரை சூரிய சக்தியையும் நீலோத்பலம் சந்திர சக்தியுடனும் மிளிர்வது.
திருப்பாற்றுறை திருத்தலத்தில் நித்ய  கல்யாணி அம்மன் தாமரை, கருங்குவளை மலர்களுடன் சதுர்புஜ தேவியாய் அருள் பாலிக்கிறாள். அதனால்தான் பெருமான் மாற்றும் விதியையும் மாற்றும் தேவியாக மேகலாம்பிகை அருள்பாலிக்கிறாள். 
ஞாயிறு,  செவ்வாய், வியாழக் கிழமைகளில் 12 செந்தாமரை மலர்களால் அம்பிகைக்கு மாலை கட்டி அணிவித்தலும், திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் 12 நீலோத்பலம் மலர்களால் மாலை கட்டி அம்பிகைக்கு சாற்றி வழிபடுதலும் அற்புத வழிபாடாக அமைகிறது. சனிக் கிழமை அன்று ஆறு செந்தாமரை மலர்கள், ஆறு நீலோத்பல மலர்கள் கொண்டு மாலை அமைத்து அம்பிகைக்கு சாற்றி வழிபடுதல் அற்புத பலன்களை வர்ஷிக்கும்.
மேலும்  இவ்வாறு சூரிய சந்திர சக்திகளின் சங்கமமாக அம்பிகைகளின் சக்திகள் திகழ்வதால் இத்தலம் அற்புத பித்ரு முக்தி தலமாகவும் அமைந்து பலவிதமான பித்ரு தோஷங்களை நீக்குகிறது.
அனைவரும்  தம்முடைய  பன்னிரண்டு  தலைமுறையைச்  சேர்ந்த மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். பலருக்கும் தங்கள் 12 தலைமுறையைச் சேர்ந்த மூதாதையர்களின் பெயரே தெரியாத போது அவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறதே.
அமாவாசை,  மாத பிறப்பு போன்ற நாட்களில் 24 தாமரை மலர்கள் அல்லது 24 நீலோத்பல மலர்களால் மாலை கட்டி அம்பாளுக்கு சார்த்தி வழிபடுதலால் இவ்வாறு பல்ல்லாண்டுகளாக தம் மூதாதையருக்கு தர்ப்பணம், திவசம் அளிக்காத குறைபாடுகளுக்கு இது ஓரளவு நிவர்த்தியாக அமையும். 
இத்தகைய  வழிபாட்டிற்குப்  பின் குறைந்தது 24 படி பொன்னி அரிசியால் சாதம் சமைத்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தானமாக அளித்தலால் கடுமையான பித்ரு தோஷங்களும் தீரும் என்று சித்தர்கள் உறுதியளிக்கிறார்கள். 
|   ஆயிரம் கண்ணுடையானுக்கு ஆயிரம் நாமங்கள்  | 
    
இப்பிரபஞ்சத்தில் முதன்  முதலில் சஹஸ்ர நாமம் என்ற இறைவனுக்கு ஆயிரம் நாமங்களை ஓதி வழிபடும் முறை தோன்றியது திருப்பாற்றுறை திருத்தலத்தில்தான். அந்த ஆயிரம் நாமத்தை ஓதியது யாரோ ?
அந்த  ஆயிரம் நாமத்தை ஓதியவர் சாட்சாத் மகா விஷ்ணுவே. அவர் யாரைப் புகழ்ந்து ஓதினார் ? 
இந்த  கேள்வி தேவைதானா ? 
இருந்தாலும்  கேள்வி கேட்டு பதில் கூறினால்தான் சுவையாக இருக்கும் என்பதற்காக குருமங்கள கந்தர்வா அவர்கள் நீலவண்ணன் நீலகண்டனைப் புகழ்ந்து திருப்பாற்றுறை திருத்தலத்தில் ஓதியதே இப்பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் சிவ சஹஸ்ர நாமம் என்று பூலோக மக்கள் எவரும் அறிந்திடாத இரகசியத்தை வெளியிட்டுள்ளார்கள்.
பாற்கடலில்  பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு அரவணை வழங்கினார் அல்லவா எம்பெருமான் ? அதற்கு நன்றிக் கடனாக பரந்தாமனால் இறைவனுக்கு அளிக்கப்பட்ட புகழ்மாலையே சிவ சஹஸ்ரநாமமாகும். “நீலக்ரீவம்” என்று ஆரம்பிக்கும் இந்த சஹஸ்ரநாமம் இன்றும் சித்தர்களின் பொக்கிஷமாக, இரகசிய சிவ சொத்தாக வைக்கப்பட்டுள்ளது.
தேவமொழியில்  நீலக்ரீவம்  என்ற வார்த்தை ஐந்தெழுத்தைக் கொண்டதாகும். நீலவண்ணன் ஐந்தெழுத்தை ஓதியே எம்பெருமானை வேண்டி ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷனை அரவணை படுக்கையாக பெற்றார் அல்லவா ? எனவே பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின் வடிவத்தை ஐந்தெழுத்தில் பள்ளி கொண்ட எட்டெழுத்து என்று அற்புதமாக சித்தர்கள் வர்ணிக்கிறார்கள். 
எனவே  எம்பெருமான்  அளித்த ஐந்தெழுத்தின் சக்திகள் கொண்ட பைநாகத்திற்கு பரிசாக ஐந்தெழுத்து மந்திர சஹஸ்ரநாமத்தை தோத்திரமாக அர்ப்பணித்தது பொருத்தம்தானே. மேலும் இந்த சஹஸ்ரநாமத்தில் நீலக்ரீவம், விரூபாக்ஷம் போன்ற ஐந்தெழுத்து மந்திர சக்திகளே அதிகமாக இடம் பெற்றுத் திகழ்கின்றன.

சித்திர சபை திருக்குற்றாலம்
இவ்வாறு  பெருமாள்  இறைவனை புகழ்ந்து அருளிய சஹஸ்ரநாம வைபவத்தை திருஞானசம்ப மூர்த்தி நாயனாரும் தம்முடைய பாடலில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தர்கள்  சஹஸ்ரநாமத்தை  இரகசியமாக  வைத்திருந்தாலும்  அதன் அனுகிரக சக்திகளை அனைவருக்கும் சதா சர்வ காலமும் அள்ளி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
ஸ்ரீஅகஸ்திய  விஜயம் அக்டோபர் 2000 மாத இதழை அலங்கரிக்கும் அட்டைப் படத்தில் சுந்தர ஆஞ்சநேயருக்கு அன்னை அஞ்சனா தேவி நிலாச் சோறு ஊட்டும் வைபவம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டைப் படத்தில் மேற்கூறிய சஹஸ்ரநாமத்தின் ஒரு கூறு நீலோத்பல சக்திகள் மறைமுக அனுகிரக சக்திகளாக அளிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் பௌர்ணமி பூஜைக்கு ஈடான பலன்களைத் தரும் ஒரே அட்டைப் படம். 
நேரிடையாக  இத்தகைய நீலோத்பல சக்திகளைப் பெற விரும்புவோர் இத்தலத்தில் புருஷ சூக்தம், ஆயிரம்முறை நீலக்ரீவம் என்ற நாமத்தை ஓதி வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம். ஸ்ரீஅகத்தியர் அருளிய லட்சுமி துதியை ஓதுதல் இத்தலத்திற்கு உரிய அம்பாள் வழிபாடாக அமையும். 
ஸ்ரீஅகஸ்திய  விஜயத்தில் வெளியாகும் அட்டைப்படம் ஒரு சாதாரண காகிதத்தில் பதிந்துள்ள  படம்தானே, இது எப்படி சஹஸ்ரநாம சக்திகளை அளிக்க முடியும் என்ற சந்தேகம் தோன்றலாம். 
நாம்  கோயிலுக்குச்  சென்று இறைவனை வணங்கும்போது அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் போன்ற அர்ச்சனைகளை நிறைவேற்றுகிறோம். அர்ச்சனை ஆராதனைக்குப் பின் நிகழும் தீபாரதானையை நாம் தரிசிக்கும்போதும், கண்களில் ஒற்றிக் கொள்ளும்போது இந்த வழிபாட்டின் சக்தி கண்களின் மூலமாக நம் உடலை, சூட்சும சரீரத்தை அடைகின்றது.
அதே  போல திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்வதாலும், சபரி மலை மகர ஜோதியை தரிசனம் செய்வதாலும் எத்தனையோ கோடிக் கணக்கான கர்ம வினைகள் அந்த தீபங்களின் தரிசன பலன்களாக எரிந்து பஸ்மமாகின்றன. 
இவ்வாறு  ஏற்படும்  ஜோதி சக்திகளை பல வண்ணமாகவும் பிரிக்கலாம் அல்லவா ? சூரியக் கதிர்களைப் பிரித்தால் அதில் ஏழு வண்ணங்கள் உருவாகும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு சஹஸ்ரநாமத்தின் ஒலி சக்திகளை ஒளி சக்திகளாக மாற்றி அந்த ஒளி கிரணங்களை நிற மாலையாக மாற்றி படங்களாக அமைக்கும் சக்தி பெற்றவர்களே சித்தர்கள். இது சித்தர்களால் மட்டுமே நிறைவேற்றக் கூடிய இறைப் பணி ஆகும்.
இதையே  சித்தர்கள், “வண்ணக் களஞ்சியம் வானத்து ஒளி விளக்கு” என்று தங்கள் இறைப் பணியை பணிவுடன் கலர்புல்லாக வர்ணிக்கிறார்கள். 
இதைப்  பற்றி மேலும் விளக்குகிறோம்.
ஒரு  முறை ஒரு அடியார் ஸ்ரீவாத்யாரிடம் இந்த கேள்வியைக் கேட்டார்.
“விஞ்ஞான ரீதியாக நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது ஒரு உருவம் நம் மூளையில் பதிவாகிறது. உதாரணமாக, ஒருவர் யானையைப் பார்க்கும்போது யானையின் உருவம் மூளையில் பதிவாகிறது. அவர் தான் பார்த்தது யானை என்று மற்றவரிடம் கூறும்போது முதலில் அந்த உருவத்தை மனதிற்கு கொண்டு வந்து பின்னர் தன்னுடைய தாய் மொழிக்கு இணையான வார்த்தையாக அவ்வுருவத்தை மாற்றி அதன் பிறகு தான் யாரிடம் பேசுகிறோமோ அவருக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றிச் சொல்கிறோம்.”
“அவர் ஹிந்திக்காரராக இருந்தால் ஹாத்தி என்றும், தெலுங்கு பேசுபவராக இருந்தால் ஏனுகு என்றும், ஆங்கிலம் அறிந்தவராக இருந்தால் எலிபண்ட் என்றும் சொல்கிறோம்.”
“யோகிகள், ஞானிகள் இந்த யானை உருவத்தை மற்றவர்களுக்கு மனோ ரீதியாக அனுப்ப வேண்டும் என்றால் யானை உருவம் எந்த ஜியோமிதி வடிவத்தில் அமைந்ததோ (geometric shapes) அந்த வடிவத்தை மட்டும் அனுப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.”
“சித்தர்கள் என்ற உயர்ந்த நிலையில் உள்ள நீங்கள் எப்படி இந்த டெலிபதி, மனோ ரீதியான எண்ணப் பரிமாற்றத்தை கையாளுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?”
அதற்கு  ஸ்ரீவாத்யார்  சிரித்துக்  கொண்டே, “நீங்கள் சொல்வது தற்கால ஞானிகளுக்குப் பொருந்தும். நாங்கள் கற்கால வாசிகள். நாங்கள் கருப்பு யானையை கருப்பு யானையாகவே அனுப்பி விடுவோம், சிவப்பு தக்காளியை சிவப்பு தக்காளியாகவே அனுப்பி விடுவோம்.”
“இது சித்தர்களுக்கே உரித்தான ஏக போக உரிமை. இதை மற்றவர்களால் செய்ய முடியாது. இதை விளக்கினால் புரியவும் புரியாது,”
அடியார்,  “வாத்யாரே, எங்களுக்காக இந்த டெலிபதியைப் பற்றி நாங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமைப்படுத்தி அளிக்க முடியாதா ?”
ஸ்ரீவாத்யார்,  “நிச்சயமாக  நீ விரும்பும் அளவிற்கு எளிமைப்படுத்தி அளிக்க முடியும். சித்தர்களால் முடியாத காரியம் எதுவுமே இல்லை என்று சொல்லும்போது இதை நீ புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமைப்படுத்தி எங்களால் ஏன் அளிக்க முடியாது ?”
“இங்குதான் நீ ஒரு முக்கியமான சித்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிரமாதமான எந்த தெய்வீக விஷயத்தையும் எளிமைப்படுத்தி விட்டால் அதில் உள்ள தெய்வீக சுவை போய் விடும்.”
“அடியேனிடம் ஒரு அன்பர் வந்து, சுவாமி, எனக்கு கடவுளை காட்டுவீர்களா ?” என்று கேட்டார்.
“அடியேன், அவரிடம் சார், கடவுளைக் காட்டுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. ஆனால், அந்த உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மைகள் எளிமைப்படுத்தப்பட்டால் அதன் மதிப்புப் போய் விடும் என்று கூறினேன்.”
“அவரும் விடுவதாக இல்லை. சற்று நேரம் கழித்து அருகில் அமர்ந்திருந்த அவர் தந்தையை சுட்டிக் காட்டி. சார், இவர்தான் கடவுள். தரிசனம் செய்து கொள்ளுங்கள், என்றேன். அதைக் கேட்ட அன்பருக்கு சப்பென்று ஆகி விட்டது. அதற்குப் பின் அவர் அடியேனிடம் கடவுளைப் பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டார்”.
“எனவே அடியேனிடம் வரும் அடியார்களை குழப்போ குழப்பு என்று குழப்புவதையே தலையாய பணியாக செய்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் அவர்கள் இறைவனுக்காக ஒன்றிரண்டு நற்பணிகளையாவது ஊக்கத்துடன் செய்து வருவார்கள்,” என்று கூறி முடித்தார் குருமங்கள கந்தர்வா.
“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்” - இது திருமூலர்
“குழப்பம்  குருவின்  திருவார்த்தை  கேட்டல்” - இது ஸ்ரீ வாத்யார், அப்படியா ?
|   ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி  | 
    
வேறு  எங்கும் காண இயலாத அற்புத சதுர்மதி என்ற வீணையை திருக்கரங்களில் ஏந்திய வீணாதர தட்சிணா மூர்த்தி அருளும் திருத்தலமே திருப்பாற்றுரை ஆகும்.
இறை  மூர்த்திகளின்  அனுகிரக சக்திகள் கோடி கோடியாகும். இவ்வாறு ஒவ்வொரு திருத்தலத்திலும் உள்ள இறை மூர்த்திகளின் சக்தியைப் பற்றி விளக்கினால் அதுவே ஒரு புராணமாக அமையும் என்பது உண்மையே. 
நாம்  நினைப்பது  போல் லால்குடியிலுள்ள வீணாதட்சிணா மூர்த்தியும், துடையூரில் உள்ள வீணா தட்சிணா மூர்த்தியும், திருவரங்குளத்தில் உள்ள வீணா தட்சிணா மூர்த்தியும், திருப்பாற்றுரை வீணா தட்சிணா மூர்த்தியும் ஒரே விதமான அனுகிரகங்களை அளிப்பது கிடையாது. அவர்கள் ஏந்தியிருக்கும் வீணைகள் எத்தனையோ அற்புதங்களை சாதிக்க வல்லவை. யுகத்திற்கு யுகம் மாறக் கூடியவையே.
இவ்வகையில்  திருப்பாற்றுரையில்  இறைவன் கையில் ஏந்தியிருக்கும் சதுர்மதி என்ற வீணையானது ஒலியை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது. இதனால் என்ன பலன் என்று உடனே உங்களுக்கு கேட்கத் தோன்றும். இந்த வீணையின் மூலம் சுவாமி அளிக்கும் ஒரே ஒரு அனுகிரகத்தைப் பற்றி இங்கு விளக்குகிறோம்.
இத்தல  வீணாதர தட்சிணா மூர்த்தியை தரிசனம் செய்யும் பல கோடி சித்தர்களுள் ஸ்ரீஅகத்திய பிரானும் ஒருவர். அகத்தியர் தினமும் பொதிய மலையில் தன்னுடைய நித்ய கர்ம அனுஷ்டானங்களை முடித்த பின்னர் திருப்பாற்றுரை வீணா தட்சிணா மூர்த்தியை தரிசனம் செய்து தமிழ் மறை வேத துதிகளை ஓதுகிறார். அதை அன்புடன் கேட்டு ஆனந்தம் கொள்ளும் இறைவன் அகத்தியர் ஓதிய தமிழ் வேத துதிகளை ஒளியாக மாற்றி அகத்திய பெருமானிடம் மீண்டும் அளிக்கின்றான். 
இந்த  சிவ பிரசாதமான வேத ஒளிக் கதிர்களை அகத்திய பெருமான் பெற்று குற்றாலத்தில் உள்ள சித்திரசபையில் திகழும் சித்திரப் படங்களின் மேல் நிரவுகிறார்.
எனவே  எம்பெருமான்  ஏந்திய வீணையோ, குற்றாலத்தில் உள்ள சித்திரங்களோ அசையாமல் இருக்கும் பொம்மைகள் அல்ல. ஒவ்வொரு நொடிப் பொழுதும் இறைவனாலும் சித்தர்களாலும் புனருத்தாரணம் செய்யப்பட்டு அந்தந்த யுக கால தர்ம நியதிற்கேற்ற  அனுகிரக சக்திகளை மக்களுக்கு வாரி வழங்கும் அரிதிலும் அரிய பொக்கிஷங்களாகும். 
|   பாலகனுக்கு பால் அளித்த பால்துறை  | 
    
இறைவனின்  நெற்றிக் கண் சுடராய் தோன்றிய முருகப் பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தார்கள்  அல்லவா ? அவர்கள் எப்படி குழந்தை வேலனுக்கு பால் ஊட்டினார்கள் ?
ஆம், உங்கள்  எண்ணம் சரியே. திருப்பாற்றுறை திருத்தலத்திலிருந்து தினமும் வெள்ளிக் கிண்ணத்தில் பாலை  பெற்று முருகப் பெருமானுக்கு கார்த்திகைப் பெண்கள் ஊட்டி வந்தார்கள். 
அதனால் எத்தலத்தில்  முருகனுக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் ”திருப்பாற்றுறை தேவா போற்றி” என்று கூறி  முருகனுக்கு பால் அபிஷேகம் நிறைவேற்றினால் அபிஷேக பலன்கள் பன்மடங்காக பெருகும். 
எனவே பசு  மாடுகள் வைத்திருப்போர், பால் ஸ்வீட்டுகள், பால் பவுடர், வெண்ணெய், நெய் போன்று பால்  சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிப்பவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், பாலை பதப்படுத்தி  விற்பவர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரும் வழிபட வேண்டிய திருத்தலமே திருப்பாற்றுறை  ஆகும்.
திருப்பாற்றுறை  திருத்தலத்தில் “விக்ரவாகி” என்ற அபூர்வமான பிரம்ம கபாலத்தை தாங்கி பிச்சாடன மூர்த்தி  அருள்புரிகிறார். 
பிரம்ம மூர்த்திகள்  கோடி கோடி. அதில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைவதற்கு முன் தோன்றிய பிரம்ம  மூர்த்தியே விக்ரவாகி ஆவார். 
ஒரு கொட்டாங்கச்சியில்  பால்கோவாவை நிரப்பி இத்தல பிட்சாடன மூர்த்திக்கு நிவேதனம் செய்து 
வினைகள் தீர்ப்பாய்  விக்ரவாகி
வீடு கொடுப்பாய் பிட்சாடனா
என்ற “நாலெட்டு”  துதியை 108 முறை ஓதி தானம் அளித்தலால் தலையில் ஏற்படும் கட்டி, வலி போன்ற அனைத்து நோய்களும்  நிவாரணம் பெறும். 
எங்கு பால்  தானம், பால் பொருட்கள் தானம் அளித்தாலும் மேற்கண்ட நாலெட்டு துதியை ஓதி வருதலால் அற்புத  பலன்களைப் பெறலாம். உணவுப் பஞ்சம், ஆடை பஞ்சம் ஒரு நாளும் ஏற்படாமல் காக்கும் அற்புத  வழிபாடு இது.
வயதான காலத்தில்  தங்கள் குழந்தைகள் தங்களைப் பராமரிக்காமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சி வாழும் பெற்றோர்கள்  வயதுள்ள காலத்திலேயே மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றி வருவதால் அற்புத பலன்களைப் பெறுவார்கள்.  பாயில் படுத்து நோயில் வாடும் நிலையும் ஏற்படாது. 
ஓம் குருவே சரணம்