ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
விரைவுச் செய்தி விண்மலர் |
நம் சற்குரு அவ்வப்போது தெரிவித்த ஆன்மீகச் செய்திகளை நம் அடியார்களுக்கு பல்லாண்டுகளாக இந்த வெப்தளத்தில் வழங்கி வருகிறோம். சித்தர்கள் அளிக்கும் உபதேசங்கள் காலம் கடந்து இருந்தாலும் அவ்வப்போது அந்த செய்திகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாததால் அடியார்கள் மனதில் அச்சமும் பீதியும் ஏற்படுகின்றன. பல அடியார்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது இந்த வெப்தளம் என்பதால் இதில் குறைந்தது 10,000 பக்கங்கள் உள்ளன. இவை அல்லாமல் யூடியூப் வீடியோக்களும், ஒலிப் பேழைகளும் (audio files), இசைத் தொகுதிகளும் அடியார்களுக்கு சுவையளிக்கும் விதமாக ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன.
இத்தனை பக்கங்களையும் ஒரு சாதாரண மனிதால் இன்றைய அவசர உலகில் நிச்சயமாக படித்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் அவ்வப்போது நம் சற்குரு தெரிவிக்கும் செய்திகளை பதிக்கும்போது எந்தச் செய்தி, எந்தப் பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது என்பதை அடியார்கள் புரிந்து கொள்ள முடியாது தவிப்பது இயற்கையே.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை அடியார்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். சுமார் 99 சதவீத அடியார்கள் இந்த வெப்தளத்தை ஓரிரு முறை படித்து விட்டு இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முன் வருகிறார்கள். இந்த வெப்தளத்தை படிப்பது என்பது ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற ஒரு சாதாரண விஷயம் கிடையாது. உண்மையில் ஒரு மர்ம நாவலை விட ஆயிரமாயிரம் மடங்கு பிரமிப்பை ஊட்டுவதுதான் நம் சற்குரு அளிக்கும் ஆன்மீக விளக்கங்கள். ஆனால், அதே சமயம் மனித ஆத்மாவின் உள்ளே உள்ளே பொதிந்திருக்கும், பதிந்திருக்கும் ஆழ்ந்த விஷயங்களுக்கு உயிர் கொடுத்து அவைகளை வெளிக் கொண்டு வந்து மக்களுக்கு ஆன்மீக வெளிச்சம் என்னும் சூரிய ஒளிப் பிரகாசத்திற்கு வழிகாட்டுபவை இவை.
இந்த வெப்தளத்தை மெயில் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரின் மெயில்களுமே நம் சற்குருவின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். ஆனால், பல அடியார்களின் கேள்விகளும் இந்த வெப்தளத்தை முழுமையாகப் படிக்காத காரணத்தால் எழுவதால் அடியார்களை மென்மேலும் ஊக்குவிப்பதற்காகவே அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை.
இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தேதிவாரியாக இந்த வெப்தளத்தில் அளிக்கப்படும் விஷயங்களின் தொடர்புகளை (links) இங்கே அளித்துள்ளோம். உதாரணமாக, பலப்பல புது நோய்களும் பிரச்னைகளும் அடியார்களை வந்து தாக்குவதால் அவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் கம்பி இசையை இங்கு அளித்தாலும் அவ்வப்போது அவற்றில் அடியார்கள் சந்திக்கும் புதிய பிரச்னைகளை சேர்க்கும்போது இந்த ஏற்பாட்டால் அவர்கள் புதிதாக சேர்க்கப்படும் விஷயங்களை உடன் அறிந்து கொள்ள முடியும்.
அரவிந்த மாதாவின் சிறு வயது போட்டோ படமே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்பட்டுள்ளது. மாதாவின் தற்போதைய படத்தை அடியார்கள் பார்த்தால் அந்த மாதா சுட்டும் தத்துவங்களை நம் அடியார்கள் அறிந்து கொள்ள முடியாமல் குழப்பிக் கொள்வார்கள். அது போல் பகவான் ரஜனீஷின் ஒரு எழுத்தையும் படிக்கக் கூடாது என்று தம் அடியார் ஒருவருக்கு அன்புக் கட்டளை இட்டார் நம் சற்குரு. அத்வைத தத்துவத்தில் உச்சாணிக் கொம்பில் பிரகாசிக்கும் ஒரு உத்தமரின் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதா நம் சற்குருவின் விருப்பமாக இருக்கும். நிச்சயம் கிடையாது.
பகவான் ரஜனீஷின் கொள்கைகளையோ, அரவிந்த மாதாவின் வாழ்க்கை வரலாற்றையோ புரிந்து கொள்ளும் அளவிற்கான உள்ளப் பேராற்றலை அடியார்கள் பெறாததே இந்த யுகத்தின் கால வர்த்தமான பிரபாவமாகும். இதை அனுசரித்தே குஞ்சுகளை இறகில் வைத்துப் பாதுகாக்கும் தாய்க் கோழியைப் போல் தம் அடியார்களைப் பாதுகாக்கவே நம் சற்குருவின் இத்தனை ஏற்பாடுகளும்...
உதாரணமாக, ஜப்பான் நாட்டிற்கு பயணம் செய்த அரவிந்த மாதா இந்தியாவிற்குத் திரும்பியபோது சுமார் 10 மைல்களுக்கு அப்பால் ஒரு படகில் தன் குருநாதரின் இருப்பிடமான பாண்டிச்சேரிக்கு கடலில் வந்து கொண்டிருந்தபோது தன் குருநாதரின் ஆரா என்ற ஒளி வட்டத்தில் (aura) பிரவேசித்தார் என்று கூறுகிறார். நம் உடலில் இதயம் எங்கே இருக்கிறது, கல்லீரலின் எடை என்ன என்பதையே அறியாத நாம், சூட்சும சரீரம் என்றால் என்ன, அதன் நிறம் என்ன என்று நம் உடலைப் பற்றியே அறியாத நாம், எப்படி மற்றவர்களின் ஒளி வட்டம், சூட்சும சரீரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும், அதை அடியாளம் காட்ட முடியும்?
1.1.2024 | புதுவருடம் 2024 |
10.1.2024 | ஆலகிராமத்தில் தைப்பொங்கல் |
16.1.2024 | பெருமகளூரில் விருத்தசீர மாமேரு |
20.1.2024 | ஆலகிராமத்தில் தைப்பொங்கல் 2 |
31.1.2024 | பெருமகளூரில் விருத்தசீர மாமேரு 2 |
1.2.2024 | குழந்தை ராமரை அழைத்தால்... |
2.2.2024 | சனீஸ்வர பிரபாவ சக்கரம் |
4.2.2024 | அங்காளி அருள் அழைப்பு |
7.2.2024 | ஆதித்ய ஹ்ருதயம் |
8.2.2024 | தயைபுரி நீள்வட்டம் |
9.2.2024 | ஆதித்ய அழைப்பு |
ஓம் ஸ்ரீகுருவே சரணம்