முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆறுமுகனின் ஒன்பது கோலங்கள்

சதுர்த்தி கூடும் செவ்வாய் அங்காரகச் சதுர்த்தி ஆவது போல செவ்வாய் அன்று சஷ்டித் திதி வருவது அங்காரக சஷ்டி ஆகும். முருகனுக்கு உரித்தான நாள் செவ்வாய்தானே! செவ்வாய் கிரகத்தின் அதிபதியும் சுப்ரமண்ய மூர்த்தி ஆவார்.
மனிதன்
1. உறவுப் பகை
2. அடுத்த வீடு, நில, கடை, அலுவலக, தொழில் வகைப் பகை
3. சொத்துப் பகை
4. தன் குடும்பத்திலேயே பகை
5. தன் வினைகளால் வரும் துன்பங்களைக் கண்டு, தானே தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டு, புகை, மது, முறையற்ற காம இச்சைகளால் தன் ஆன்மாவைச சுட்டு, இறைப் பூஜைகளை வெறுத்து அல்லது சரியாக ஆற்றாமல், தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் தற்பகை
6. பூர்வ ஜன்மப் பகை - இதனை அகற்றுதல் மிகவும் கடினம்
இவ்வாறு ஆறு விதமான பகைகளால் அல்லல்படுகின்றான். இவற்றிற்குக் கணிசமான நிவர்த்தி தர உதவுவதே அங்காரக சஷ்டி வழி பாடு ஆகும்.
செவ்வாயும் சஷ்டியும் கூடும் நாளில் முருகப் பெருமானின் அனைத்துக் கோலங்களையும் குறிப்பாக செவ்வாய்க்கு உரித்தான எண் ஒன்பது (9) என்பதால் குறைந்த பட்சம் ஒன்பது விதமான முருகனுடைய திருக்கோலங்களைத் தரிசித்து,
பாம்பன் சுவாமிகளின் பகை கடிதல், ஷண்முகக் கவசம் மந்திரங்களை ஓதி, அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீஓதிஆண்டவர் ஓதிமலை

ஸ்ரீமுருகப்பெருமான் லால்குடி

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி (பழநி போல ஆண்டிக் கோலம்),
வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலம்,
முருகனுக்கு வலப்புறம் மயிலின் தலை இருக்கும் கோலம்,
முருகன் தனித்து அருளும் கோலம்,
முருகனுக்கு இடப் புறம் மயிலின் தலை இருக்கும் கோலம்,
மயிலின் மீது முருகன் அமர்ந்திருப்பது,
ஆறுமுகங்களுடன் இரு கரங்கள்,
ஆறு முகங்களுடன் பன்னிரெண்டு கரங்கள்,
சோமாஸ்கந்த மூர்த்தியாக சிவன், பார்வதி மத்தியில் முருகன் அமர்தல்
- என்பதாக இவ்வாறாக ஒன்பது வகை முருகப் பெருமான் மூர்த்திகளுக்குச் சிவப்பு நிற மலர்களைச் சார்த்தி, பாம்பன் சுவாமிகளின் பகை கடிதல் தோத்திரத்தைத் தினமும் ஓதி வந்து, சிகப்பு நிற உணவுகள், கனிகள், பவளம் சார்த்தி வழிபட்டுத் தானம் அளித்தலால் தன்னை எப்போதும் வெறுப்பவர்களுடைய மனம் மாறி நல்லது நடக்கவும், பகைமை தணிய உதவிடும்.
முருகனுடைய ஒன்பது கோலங்களைத் தரிசிக்க இயலாதோர்  முருகன், சுப்ரமண்யன், கார்த்திகேயன், செங்கல்வராயன், ஷண்முகன் போன்று ஒன்பது வகை நாமங்கள் பூண்ட முருக மூர்த்திகளையாவது தரிசிக்க வேண்டும்.
அங்காரக சஷ்டி அன்று தனி விமானம், தனி விமானக் கலசம், தனித்த சன்னதி கொண்டு முருக மூர்த்தியை
ஆறுவிதமான நறுமணப் புஷ்பங்கள்,
ஆறு விதமான நறுமணத் திரவியங்கள்,
ஆறு விதமான வாத்திய இசைகளை எழுப்புதல்
ஆறு விதமான நைவேத்யங்கள், அன்னதானத்துடன்
வணங்குதலால் செவ்வாய் தசை, புக்தி, அந்தர அம்சங்களில் ஜாதகப் பூர்வமாக உள்ளோருக்கு - இக்கால கட்டத்தில் வரும் துன்பங்களால் அவதியுறுவோர் நன்னிலை பெற உதவும்.
பழைய வீட்டு, நிலச் சொத்தை வைத்துக் கொண்டு முன்னேற முடியாமல் தவிப்போர் பலரும் உண்டு. பொதுவாக, நில வகைச் சொத்தில் முறையாக வாஸ்து பூஜைகளை ஆற்றாமையால், வாஸ்து சக்திகள் பூரித்திடாது மறையும்போது, நில, வீட்டுச் சொத்துக்களில் முடக்கம் ஏற்படும். இந்நிலையில் வெள்ளி வேல் ஏந்தி அருளும் முருகனை வேல் வழிபாடு ஆற்றி, அங்காரக சஷ்டி நாளில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
வைர வேல் தாங்கி இருக்கும் முருகனுக்கு இந்நாளில் சிவப்பு பட்டாடைச் சார்த்தி, சிவப்புக் கேசரிப் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்தலால், பழைய வீடு, புது வீடு, புதிதாகக் குடி புகுந்த வீடு சம்பந்தமான மனக் குறைகள், சங்கடங்கள் தீர உதவும்.

அட்டமி அருளும் அளவிலா அனுகிரகம்

அஷ்டமித் தர்ப்பணமாதல்
அட்டாட்டத் தலைமுறைக்கும்
அத்தனையும் சாருமாமே!
- (அட்டாட்டம் 8 x 8 = 64 தலைமுறைகள்) என்பது - 64 தலைமுறைகளுக்கும் அருளும் அட்டமித் தர்ப்பணப் பலாபலன் துதி ஆகும். அதாவது அஷ்டமியில் வரும் தர்ப்பண சக்தி நாளில் ஆற்றிடும் முறையான தர்ப்பணமானது, 64 முந்தைய தலைமுறைகளுக்கும் சென்று அனுகிரகத்தைத் தருவதாகும். இந்த 64 தலைமுறைகளில் எதிலேனும் உத்தமப் பித்ருக்கள் அமைந்து இருந்தால் அவர்களுக்கும் இதற்கடுத்த உன்னத உத்தம நிலைகளை, பித்ரு முக்தி, பித்ரு மோட்ச நிலைகளைப் பெற்றுத் தருவதாகும்.
எவ்வாறு அஷ்டமியில் தர்ப்பண நாள் வந்து சேரும் என அறிய வேண்டும் அல்லவா! ஒரு வருடத்தில் வரும் 96 வகை ஷண்ணாவதித் தர்ப்பண நாட்களில் ஏதேனும் ஒன்றோ, பலவோ அஷ்டமித் திதியோடு சேர்ந்து வருதல் அட்டாட்டமத் தர்ப்பணத் திருநாள் ஆகும்.
சத்திய பராக்ரமர் எனும் மகரிஷி சத்தியத்தையே ஆயுதமாகக் கொண்டு - தீயவர்களை அழிக்காது - ஆனால் தண்டித்துத் திருத்தி - சத்தியத்தை நிலை நிறுத்திட அரும் பாடுபட்டு உத்தம நிலைகளை அடைந்த பராக்ரம ராஜ ரிஷி ஆவார். பெரிய மகாராஜாவாகத் துலங்கிய சத்திய பராக்ரமர், விஸ்வாமித்திரர் போன்று மகத்தான ராஜரிஷி ஆவார். அரிச்சந்திர மகாப் பிரபுவிற்கும் முன்னால் சத்தியமான தர்ம ஆட்சியை நிலை நிறுத்தித் தந்தவர். இவர் இத்தகைய சத்தியப் பராக்ரம சக்திகளைப் பெறுவதற்கு மூல காரணமே தினந்தோறும் தம்முடைய 64 தலைமுறைகளுக்கும் நித்தியத் தர்ப்பணம் மட்டும் அல்லாது நித்தியத் திவச ஹோமங்களை 64 தங்கக் கவச ஹோம குண்டலங்களில் வைத்து வழிபட்டு வந்ததாகும்.

ருத்ர பல்குனி சித்தர் பூவாளூர்

இதனால்தான் இன்றும் எமலோகத்தின் பாதை சத்திய லோகப் பாதை வழியாகவே அமைந்துள்ளது. சத்திய லோகத்தின் முதல் பர்ணசாலையும் சத்திய பராக்ரமருடைய குருகுல வாசப் பர்ணசாலையே ஆகும்.
குரு ஆட்சி செய்யும் மீன ராசிக்கு எட்டாம் இடமாகத் துலங்குவது துலா ராசியாகும். ஜாதகத்தில் எட்டாம் பாவன அம்சங்கள் மிகவும் துல்லியமாக நன்முறையில் அமைந்திருப்போர் சத்தியப் பராக்ரமசாலிகளாக விளங்குவார்கள்.
ஆயம்புலத்தார் அட்டாதி அட்டபுலம்
தோயம் துலச்சாரத் துங்காளத் தோம்புயத்தார்
காயம் அரிந்து உத கந்துளவார் காரியத்தால்
ஏயம் புறத்தான் எம்பெருமாள் எம்பாரே
ஏயம் புறத்தான் எம்பெருமாள் எம்பாரே
ஏயம் புறத்தான் எம்பெருமாள் எம்பாரே
வேயத் தர்ப்பணம் விரிந்தேகும்
--------- நமத் தர்ப்பயாமி,
--------- நமத் தர்ப்பயாமி,
--------- நமத் தர்ப்பயாமி.
(கோடிட்ட இடத்தில் மூதாதையர் பெயர் சொல்லவும்) என்று ஓதி எள்ளும், தர்ப்பணமும் வார்த்தளிக்கவும்.

ஸ்ரீபிட்சாடனர் திருப்பாற்றுரை

பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் 64 தலைமுறைகளில் ஒருவரேனும் பொய் பேசாது தர்மத்தில் தலை சிறந்து இருப்பர். இவர் ஒருவருடைய சக்தியே 64 தலைமுறைகளையும் நிறைந்து காக்க வல்லதாகும். எனவே, மேற்கண்ட தர்ப்பணத் துதியுடன் தர்ப்பணம் அளித்திட்டால் உங்கள் 64 தலைமுறைகளில் எவரெவர் சத்தியப் பிரகாசராக விளங்கினாரோ அவர் எந்த உத்தம லோகத்தில் இருந்தாலும் அவருடைய சத்திய அனுகிரக சக்திகள் உங்களுக்கு மட்டுமல்லாது ஏனைய 62 தலைமுறைக்கும் .. அவர்கள் உங்களையும் சேர்த்து - எங்கு பிறந்து - மீனாய், மனிதராய், மாமரமாய் வளர்ந்தாலும் சரி அனைவரையும் சென்றடைய உதவும்.
அஷ்டமி தர்ப்பண நாளில் பிட்சாடன மூர்த்தி அருளும் ஆலயத்தில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. தொழிலில், தர்மத்தில், நற்குணத்தில் நல்வழி சாராது தன் சந்ததிகள் பிறவழி ஆகிடுவரோ என்று அஞ்சுவோர் மூதாதையர் ஆசிகளால் சந்ததிகளையேனும் நலவழிப்படுத்த உதவும் அட்டாட்டமத் தர்ப்பண நாளிதுவே!
திருச்சி - லால்குடி அருகே பூவாளூரில் பல்குனி ருத்ர சித்தருக்கு இந்நாளில் 64 விதமான கனிகள், நறுமணப் புஷ்பங்கள், தானியங்கள், வெட்டி வேர், குங்கிலியம் போன்ற ஹோமத் திரவியங்களால் மாலை சார்த்தித் தர்ப்பணம் இட்டு வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். 64 தலைமுறைகளுக்கும் இருந்த இடத்தில் இருந்தே தர்ப்பண சக்திகளை அளிக்க வல்லவர் பல்குனி ருத்ர சித்தர் போன்ற சித்தர் பெம்மான்களே!

நவகரத்தவளுக்கு நவபூஜை

மஹா நவமியாக, நவமித் திதிகளுக்கெல்லாம் மூத்ததாக, பிரகாசிக்கும் நவராத்திரி நவமித் திதியன்று நவகரத்தாளாக, ஒன்பது கரங்களுடன் ஸ்ரீஆயுர்தேவி தேவாதி, தெய்வ மூர்த்திகளுக்கு முதன் முதலில் அருட் காட்சி தந்தாள். தெய்வ மூர்த்திகள் வழிபட்ட பல கோடி யுகங்களுக்குப் பிறகே, பூவுலகிற்கு தசமித் திதியில் மக்களின் வழிபாட்டிற்கென சித்தர்களின் அருளாசியுடன், தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சித்தரின் ஆசித் துறையுடன், சத்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் பூவுலகிற்குக் கலியுகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.  
நாள், கிழமை, யோகம், கரணம், யோகம் என, பஞ்ச அங்க காலங்களின் பிணைப்பே பஞ்சாங்க விளக்கம் என அறிவீர்கள் அல்லவா! இருப்பினும் அமாவாசை, மஹா நவமி போன்ற நாட்களில், திதிகள் ஏனைய நான்கையும் விட சக்திப் பூர்வமாகப் பொலிகின்றன. நவமி, மஹா நவமியாக, அண்ட சராசர நவமித் திதி  அருணாசலத்தில் சரஸ்வதி பிம்ப விஸர்ஜன நாளுமாகவும் அமைகின்றது.
மற்ற நவமித் திதிகளை விட, மஹா நவமியில், திதியின் ஆரம்பம் முதல் முடிவு வரை நவமித் திதி சக்திகள் நன்கு பூரித்து நிறைந்திருக்கும்.
நவமித் திதி, புனர்பூச நட்சத்திர நாட்களில் ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவது நல்ல கல்விச் செல்வம் பெற உதவும். நவமித் திதி தோறும் தோறும் குதிரைகளுக்கு அவித்த கொள், புல் அளித்து உணவிட்டு வருதல் நல்ல நினைவு சக்தியைப் பெருக்கும்.
சரஸ்வதி பூஜையன்று மட்டுமே புத்தகங்களை எடுத்து வைத்துப் பூஜிப்பது என்றல்லாது, பட்சந் தோறுமாக, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வரும் நவமித் திதியில், முக்கியமான புத்தகங்கள், ஆபீஸ் ரெகார்டுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், இட்டுப் பூஜித்தல் வேண்டும். இவ்வாறு சிறு வயதிலிருந்தே புனர் பூச நட்சத்திர நாள், நவமித் திதிப் பூஜைகளை ஆற்றி வந்தால், கல்வியறிவு, நல்ஒழுக்கத்துடன் நன்கு பரிமளிக்கும்.

இடமுக மயிலுடன் முருகன்
பின்னவாசல் லால்குடி

வீணை ஏந்திய சரஸ்வதிக்கு இந்நாளில் ஆரஞ்சு வண்ணப் பட்டாடை சார்த்தி முதலில் ஸ்ரீபிரம்ம மூர்த்தியை வணங்கி, அவருடைய திருவடிகளில் முழுத் தாமரை மலர் மலையை வைத்துப் பிறகு இதனை சரஸ்வதிக்கு சார்த்துதலால் கலைமகள் ஆனந்தித்து அருள்கின்றாள். நிலையில்லாது வாழும் கணவன் நல்மதி பெற இதனை ஆற்றி வழிபட்டு வர வேண்டும்.
வித்யா சக்திகள் பரிமளிக்கும் வஸ்துக்கள், திரவியங்கள், பொருட்கள் பலவும் கலியுகத்தில் உண்டு. இவற்றில் எல்லாம் வித்யா சக்திகள் நன்கு பூரணிக்கின்றன. வெண் பட்டு, வெண் தாமரை, வெள்ளரிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, குங்குமப் பூ, வித்யா விருத்தித் தைலம், நவச்சாரம், பனை ஓலை, எழுத்தாணி, சிலேட்டு, பலப்பம், பென்சில், பேனா, கல்சிலேட், குச்சி போன்ற வித்யா சக்திகள் பரிமளிக்கும் பொருட்களை, வெள்ளைப் பட்டுத் துணியில் நிரவி வைத்து, ஸ்ரீசரஸ்வதியை வெண்ணிற நறுமணப் பூக்கள் (குறிப்பாக வெண் தாமரை), முழு முந்திரி, பெரிய வகை நெல்லிக் கனிகள், பெரப்பம் பழம், மஞ்சள் பூசிய முழு பச்சரிசி அட்சதைகள் போன்றவற்றை வைத்துப் பூஜித்தல், நைவேத்யம் செய்தல் இல்லத்தில் நல்ல வித்யா சக்திகள் நிரவிட உதவும்.
மறுநாள் விஜய தசமியில் முதியோர்கள் முதல், சிறு பிள்ளைகள் வரை அனைவரும் சிலேட்டுக் கல்லில் குச்சி வைத்து (பலப்பம்) இறை நாமாக்களை 108 முறை எழுதிட வேண்டும்.
நவமித் திதி நேரம் நன்கு அமர்ந்து மிகவும் பொறுமையாக, ஸ்ரீசரஸ்வதிக்கு லட்சார்ச்சனை நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானது. முதலில் சற்றுக் கஷ்டமானாலும் கடைபிடித்துப் பாருங்களேன், இதன் மகத்துவங்கள் அற்புதமாகப் புலனாகும்.
நேமம், நேமி, (கும்பகோணம் - பாபநாசம் அருகே) சக்கரப்பள்ளி, சக்கராப்பூர், தேரழுந்தூர் போன்ற சக்கரம் (நேமி) சம்பந்தமான தலங்கள் நவமித் திதி சக்திகளைக் கொண்டவை ஆகும்.
இத்தலங்களில் ஸ்ரீசரஸ்வதி சிலா ரூபம் இருப்பின், அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலும், கலைவாணியின் சிலா வடிவு இல்லையெனில், ஸ்தல விருட்சத்திற்கும் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

விஜய யாத்ரா

மகா நவமி, மகா பரணி, மகா அஷ்டமி போல, மனசுத்தி தரும் மகத்தான சக்தி வாய்ந்த தசமித் திதியை விஜய தசமியாகப் போற்றுகின்றனர். அசுரச் சக்திகளை அம்பாள் வென்று வெற்றிக் கொடி நாட்டிய தினமாகவும் விஜய தசமி துலங்குகின்றது.
அம்பாள், அரசர்கள் போல வெற்றிக் கொடியை நாட்டி, விஜய யாத்திரை கொண்டு தான் வெற்றியைப் பறை சாற்றிக் கொள்ள வேண்டுமா?
அம்பாள் அசுரர்களுடன் சமர் புரிந்தது, சித்தர்களின், மஹரிஷிகளின், தேவாதி தேவர்களின் வேண்டுகோளின் பேரில்தான்! அம்பாள் அசுர சக்திகளை வென்று ஜெயக் கொடியை நாட்டுவது ஜீவன்களின் நலனுக்காகவும், எத்தகைய வலிய தீய சக்திகளையும் இறையருளால் மனித குலத்தால் வென்றிட முடியும் எனவும் உணர்த்திடவும்தான்.
மனிதர்களாலும் தேவர்களாலும் அசுர சக்திகளை வெல்ல இயலாமல் போன போதுதான், இருவகையினருமே தங்களால் ஆவது ஒன்றும் இல்லை. அனைத்தும் இறைவனால் ஆவது என்று உணர்ந்து இறைவனைச் சரணடைகின்றனர். எனவே இறைவனைச் சரணடைந்திடில்தான் நல்வாழ்வு மலரும் என்ற எண்ணமே அம்பாளின் வெற்றிக் கொடி வாசகமாகும். உண்மையில், மாயைகளில் சிக்காது, பக்தியுடன், தேவர்களும் மனிதர்களும் வாழ்ந்திட்டால் அசுர சக்திகளுக்கு இடமேது?

அமர்ந்த நிலை முருகன்
ஊட்டத்தூர்

மேலும் அசுர சக்தி என்று தனித்து எதுவும் உருவாவது கிடையாது. மனிதர்களிடம் தோன்றுகின்ற பொறாமை, கோபம், பகைமை, குரோதம், விரோதம், அதர்மமான காம இச்சைகள், பேராசை போன்ற தீவினை சக்திகள்தாம் ஒன்றாக உருவெடுத்து, அசுர சக்திகளாக விரிந்து, ஜீவன்களை வதைத்தலாகின்றன. எனவே சூரபத்மன், பகாசுரன், மகிஷாசுரன், ராவணன் போன்ற அசுர சக்திகள் எல்லாம் பல கோடி யுகங்களாக பூமியில் நிலவிய எண்ணற்ற தீய எண்ணங்களாக, தீய சக்திகளின், தீய காரியங்களின் தொகுப்பே ஆகும்.
உதாரணமாக, நல்லவர்களாக வாழ்வோரும் கூட, ஒரு சிறு தீய எண்ணத்திற்கு, தீய காம உணர்ச்சிக்கு, தீய செய்கைக்கு ஆட்பட்டால் கூட, அது உடனே அசுர வடிவு கொண்டு குடும்பத்தில், சுற்றுப் புறத்தில் பரவெளியில் நிரவி விடும். நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு புல், செடி, மரத் தாவரமும் இவ்வகையில் மனிதரால் வெளியிடப்படும் ஒவ்வொரு தீய எண்ணத்தைச் சுத்திகரித்துத் தூய்மை செய்கின்ற சமுயாய அறப்பணிகளை ஆற்றுகின்றது என்பது பலரும் அறியா தாவர தேவ சக்தி ரகசியமாகும்.
ஒவ்வொரு மனிதரும் தன்னுள் நுழையும் தீய எண்ணத்தை, தீய சக்தியை அவ்வப்போதோ, அன்றன்றோ களைந்து விட்டால் அசுர சக்திகள் பிறப்பெடுப்பதை, பரவுவதைத் தணித்து விடலாம். இதற்கு உதவுபவையே மாத சிவராத்திரி, பௌர்ணமி கிரிவலம், நவராத்திரி போன்ற இரவு நேர வழிபாடுகள் ஆகும்.
உதாரணமாக, வேலை வாய்ப்பிற்காகத் தேர்வோ, நேர்முகத் தேர்வு நடக்கும் போதோ அவரவருடைய திறமை, மதிப்பெண்கள் போன்றவற்றைப் பொறுத்தும் வேலை வாய்ப்பு கிடைக்குமல்லவா! இது வெளிப்படையாக இவ்வாறு தக்கவருக்குக் கிடைக்கும் என்று கூறினாலும், உண்மையில் எவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டுமென்று விதிப் பூர்வமாக எழுதி இருக்கின்றதோ அவருக்குத்தான் கிட்டும் என்பதே உலகெங்கும் ஆன்மீகப் பூர்வமாக நிகழ்வதாகும்.
எதுவுமே, எல்லாமே தனக்கே கிடைக்க வேண்டும் என்று பேராசையால், தவறான எண்ணங்களும், தவறான செயல்களிலும் பலரும் இறங்குவர். இவ்வகையில்தான் ஒவ்வொருவரிடமும், உலகில் ஒவ்வொரு இடத்திலும் அசுர சக்தி உருவெடுக்கின்றது. இன்னொருவருடைய வாய்ப்பில் குறுக்கே புக யத்தனித்தால், அதுவே குறுக்கே புகுந்தவருடைய வாழ்க்கையிலேயே எந்த சம்பவத்திலாவது எவரேனும், எச்சமயத்திலேனும் குறுக்கே புகுமாறு வந்து அமைந்து வேதனைகளை அள்ளித் தரும்.

பட்டீஸ்வரம் முருகப் பெருமான்

கோயில் தரிசனத்தில் வரிசையாக க்யூவில் சென்றிருக்கும் போது முண்டியடித்துக் கொண்டு பிறர் வாய்ப்பைக் கலைத்துச் செல்ல முற்பட்டால், அப்போதைக்கு அது கைக்கு எட்டி நிகழ்ந்தது போல் ஆனாலும், பிறகு வாழ்க்கையில் அவசியமான சந்தர்ப்பத்தில் இன்னொருவர் குறுக்கே புகுந்து தடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
அருணாசலமாம் திருஅண்ணாமலை அன்னதானத்தில் பலரும் வரிசையில் வராது குறுக்கே புகுந்து வர முயற்சிக்கும் போது, ஏழைகள் ஏதோ வயிற்றுப் பசியால் இவ்வாறு செய்யக் கூடும் எனினும் படித்தவர்களும் செய்திட்டால் என் செய்வது? இப்படி சிறு அன்னதான வரிசைக்கே இன்னொருவருடைய சந்தர்ப்பத்தில் குறுக்கே புகுந்தால், நாளைக்கு உங்கள் வேலை வாய்ப்பிலோ, வேலையிலோ, பதவி உயர்விலோ, வாழ்க்கையிலோ எவரேனும் குறுக்கே புகுந்து உங்களுக்கு வர வேண்டியதைத் தடுத்து விடுவார்கள் என்று வலியுறுத்திச் சொல்லி வருகின்றோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாம்.
இப்படி எவ்வளவுதான் வலியுறுத்தி உரைத்தாலும், ஒரு முறை, அன்னதானத்தில் அனைவரையும் மீறி, பலரையும் அதர்மமான முறையில் தாண்டி வந்த ஒருவர் வேக வேகமாக அன்னதானத்தைப் பெற்று செல்லும் போது, “இப்படி நான் பலரையும் தாண்டிப் பிரசாதத்தைப் பெறுவது என்று என் தலையில் எழுதி இருக்கின்றதல்லவா! பூர்வ ஜன்மத்திலோ அல்லது இதற்கு முன்னேயோ எவரோ எனக்கு வருவதைத் தடுத்ததினால் தானே நான் இங்கு இவ்வாறு இதனைப் பெற்றிருக்கின்றேன்!” என்று சற்று விதண்டாவதமாகக் கூறிச் சென்றார் எனில், அன்றையப் பொழுதில் அது பூர்வ ஜென்மமாக அமைந்ததா அல்லது அவராக இவ்வாறு பலருடைய வாய்ப்புகளையும் தடுத்துப் புதுக் கர்ம வினையை அதுவும் திருஅண்ணாமலை புனித க்ஷேத்திரத்தில் சேர்த்துக் கொண்டாரா?
எந்த முடிவிற்கு வருவீர்கள்?
இதனால்தான் புதிதாக ஏற்படுத்திக் கொண்ட கர்மாவா, பூர்வ ஜன்மக் கர்மக் கழிவா என்று புரியாது இத்தகைய நிலைகள் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு. எது பூர்வ ஜென்மமானது, எது புதுக் கர்ம சாரமானது என்பதை சற்குருவால்தான் சரியாகக் கூற முடியும். ஆனால் சற்குருவோ ஒவ்வொரு முறையும் நேரே வந்து இது சரி இது சரியில்லை என்று நேரில் வந்து கூறிக் கொண்டு இருக்க முடியுமா?
இறைவன் பகுத்தறிவு என்று ஒன்றையும் அளித்து சற்குரு மூலமாக வாழும் வழி முறைகளையும் அளித்திருக்கின்ற போது, இறைப் பகுத்தறிவுப் பூர்வமாக இது நல்லது, இது கெட்டது, இது தீயது என்று அவரவரே நிச்சயமாக பெரும்பாலான சமயங்களில் முடிவெடுத்து விடலாம். இதற்காகத் தான் ஆழ்ந்த நம்பிக்கை என்பதையே இறைவன் பக்தியின் அடித் தளமாகத் தந்துள்ளார்.
எனவே சற்குரு நேரில்தான் வந்து சொல்ல வேண்டும் என்று அல்லாது எங்கெல்லாம் நேரடியாக வழிமுறைகளைப் பெற வேண்டுமோ அங்கு அவரிமிருந்து பெற்றும், பிற சமயங்களில் சற்குரு நிச்சயமாக நமக்கு நல்வழி காட்டுவார் என்றும் பரிபூரணமாக நம்புகின்றவர்களுக்கு, ஆழ்ந்த நம்பிக்கை பூண்டு இருப்பவர்களுக்கு, தானாகவே நல்மார்கம் வந்தமைந்து, புதுக் கர்மா சேருகின்ற தன்மைகளும் குறைந்து கொண்டே வரும். ஒரேயடியாகக் கர்ம வினைகளைக் கழித்து விட முடியாது. பலவற்றையும் அனுபவித்தே கழித்தாக வேண்டும்.
மேற்கண்ட உதாரணத்தில், குறுக்கே புகுந்து பிரசாதத்தைப் பறித்துச் சென்றவர், உண்மையிலேயே நல்ல எண்ணம் பூண்டவராக இருந்தால், இவ்வாறு விதண்டா வாதமாகப் பேசி இருக்க மாட்டார். இவ்வாறு பேசியதில் இருந்தே அன்று அவர் புதியதாக ஒரு கர்மாவை அதிலும் அருணாசல புனித பூமியிலேயே சேர்த்துக் கொண்டு விட்டார் என்று புலனாகின்றது அல்லவா.

ஸ்ரீஇலஞ்சி முருகன்

எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியிலும் புதிதாகக் கர்ம வினைகள் சேர்ந்து விடாது, மிக மிகக் கவனமாக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறர் ஏன் இவ்வளவு அதர்மங்கள் செய்தும் வளமாக வாழ்கின்றார்கள் என்று பலரும் கேட்பர். நல்லனவற்றையே எண்ணி, செய்து வருதலும் நல்முறையே என்றாலும், மனம் எப்போதும் நல்லதையா நினைக்கும்? இப்படி ஒருவரிடம் எப்போதும் ஒட்டி இருக்கும் மனதையே அடக்க முடியாத போது, பிறர் சரியில்லையே என அவரைத் திருத்த நாம் யார் என ஒவ்வொருவரும் நன்கு ஆத்மவிசாரம் செய்தல் வேண்டும்! இதுவும், நல்லதையே எண்ணி, நல்லதையே ஆற்றுவதற்கான வழிமுறைகளுள் ஒன்றாகும்.
எங்கே ஏதேனும் புதுக் கர்ம வினைகள் வந்து ஒட்டிக் கொண்டு விடுமோ என பயந்து கொண்டே தயக்கத்துடன் எதையும் செய்ய வேண்டும் என்று பொருளல்ல. மனதுக்கும், உள்ளத்துக்கும், உடலுக்கும் இடையே வேற்றுமைகள் இல்லாது, மனம் ஒருமித்து இருப்பதே தியானத்தின் இலக்கண விளக்கம். இதையும் சிறிது, சிறிதாக அடைதல் கூடும்.
ஆனால் இவ்வாறு சொல்வது எளிது! செயல்படுத்துவது சிறிது சிறிதாகவே நடைமுறைக்கு வரும். வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தால் உடனே தியானம் கை கூடி விடாது. உடலோடு ஒருமித்ததாக அன்னதானம், ஆலயத்தில் குப்பை பொறுக்குதல் போன்ற ஏதேனும் நற்காரியத்தை ஆற்றி விட்டு, இதனை மனதில் எண்ணி அமர்ந்து தியானம் செய்து பாருங்கள், பலன்கள் நன்கு தெரியும்.
தினமும் இயன்ற வரையில் ஆலயத்தில் சங்கோஜம் பாராது குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தப்படுத்தவதும், தினமும் மூன்று பேருக்காவது அன்னம் அளித்து வருவதும் நல்ல தியானப் பலன்களைத் தரும் விஜய யாத்திரை மார்கமாகும்.
கலியுகத்தில் சற்குரு நேரில் வந்து அரவணைக்கலாகாதா, வழிகாட்டக் கூடாதா என்று பலரும் எண்ணுவர். தகுந்த பக்குவம் கனியும் போது சற்குருவின் அருள் தானாகக் கனியும். சற்குருவின் நேரடிப் பார்வையில் இருப்பவர்களுக்கும் பல சோதனைகள் ஏற்படும், இவை யாவும் ஆழ்ந்த நம்பிக்கைக்கான பலத்த அஸ்திவாரங்களை உருவாக்கத் துணை புரிபவையே!
இவர் தான் சற்குரு என்று சுட்டிக் காட்டப் பட்டாலும், கலியுகத்தில் சற்குரு கூறுவதில் எது தனக்கு சாதகமாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களே இன்றைக்கும் உண்டு. எது தனக்குச் சாதகமாக இல்லையோ அதை அவர் சொல்லக் கூடாது என்றும், அல்லது சற்குருவின் வாயிலிருந்து தான் எண்ணுவதே தனக்குச் சாதகமாக இருப்பதாக வர வேண்டும் என்று சுயநலமாக எண்ணுபவர்களும் கலியில் பெருகி வரும் போது, கலியுகத்தில் நேரடியாகவே சற்குருவை எப்படியப்பா எளிதில் பெற முடியும்?
சற்குரு என்பவர் இறைவனுடைய பிரதிநிதி. இப்போதைய நிலைக்கு தனக்கு சாத்தியமாகின்றதோ, ஏற்று வருகின்றதோ என்றும் ஒரு போதும் எண்ணாமல் சற்குரு சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு செயலாற்றும் நம்பிக்கையும் கொண்டு செயலாற்றுபவர்கள் ஒரு சில பேர்கள் தான் தேறுவர்கள் என்ற நியதியும் கலியுகத்தில் இருப்பதால்தான் தற்காலத்தில் ஆழ்ந்த நம்பிகையைப் பெருக்குவதே வழிபாட்டின், பக்தியின் முதல் நி லை ஆகின்றது.
இவ்வாறு சற்குருவை அடைபவர்களுக்கே உண்மையான வெற்றி என்பதை அம்பிகையே உணர்த்தி வெற்றிக் கொடி நாட்டியதே விஜய தசமியாகும். அம்பிகையின் சற்குருவே ஈஸ்வரன் ஆவார். இதை உணர்த்துவதற்காகத்தான் அம்பிகை இன்றும் பல தலங்களிலும், மக்களின் மனதிலும் விஜய யாத்திரை புரிகின்றாள். ஆம், எத்தனையோ கோடி பக்தர்களின் உள்ளத்தில் அம்பிகை விஜய யாத்திரை கொள்ளும் தினமே விஜய தசமி தினமாகும். அம்பிகை விஜய யாத்திரை புரிந்தால், தானாகவே தீவினை சக்திகள் பலவும் மறையும் அல்லவா.  
கோயில் நிலங்கள், கோயிலுக்குரிய இடங்கள், வீடுகள், கடைகளை மிக மிகக் குறைந்த வாடகை கொடுத்தும், வாடகை கொடுக்காமலும் ஏமாற்றி ஆக்ரமித்து வருபவர்கள் அனைவருமே சூரபத்மனை போல் பேராசை கொண்டவர்களே! உடலாலும், மனதால் பிறன் மனையைத் தீண்டுபவர்களும் ராவணனைப் போல் அசுரர்களாக இருப்பவர்களே.
அதர்மமான முறையில் பொருள் ஈட்டியோரும், பதவி, பணம், அந்தஸ்து காரணமாகப் பிறரை இம்சிப்போரும் ஹிரண்யாட்சசன் போலான அசுரர்களே! இத்தகையோர் தம்முடைய தீவினைகளை உணர்ந்து இனியேனும் திருந்தி வாழ விஜய தசமியில் இருந்து சங்கல்பம் செய்து கொண்டு நன்கு திருந்தி மன சுத்தியுடன் வாழத் தொடங்குதல் வேண்டும். உடனடியாக இதனைக் கைக் கொள்தல் கடினமே! சிறிது, சிறிதாகவே முயற்சிக்க வேண்டும். இதற்காக முதல் சங்கல்பமாக தினமும் ஆலயத்திற்குச் சென்று ஆலயத்தில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி சுத்தப்படுத்தி வர வேண்டும். இதுவும் மனசுத்திக்கான மிகவும் எளிய வழிமுறைகளில் ஒன்றாகும்.
ஒவ்வொருவருக்கும் ஒன்பது சரீரங்கள் உண்டு. இதில் ஒன்று பரிசுத்தமானது. மனிதன் இந்த ஒன்பதிலும் மாறி மாறி வாழ்வதால்தான் பல்வேறு மன நிலைகள் ஏற்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் உடலில் ஓரிரு சரீரங்களாக நல்லனவாகவே இருக்கும்.
விஜய தசமி அன்று குறைந்தது 12 அம்பாள் ஆலயங்களில் குப்பைகளைச் சிறிதளவேனும் பொறுக்கி வழிபடுதல் நன்று. வெறுமனே வழிபடுதல் மட்டுமல்லாது 12 ஏழைகள் அல்லது நடுத்தரக் குடும்பத்தினர் உள்ளத்தில் பதியும்படி நற்காரியங்களை ஆற்றிட முயற்சி செய்யுங்கள். கையில் காசில்லை, பணமில்லை என்று எண்ணாது 12 ஆலயங்களில் பிரகாரங்களில் கீழே கிடக்கும் குப்பைகளை எடுத்தாவது சுத்தம் செய்தல் வேண்டும். இதனால் ஆலய தேவதைகள் உங்கள் உள்ளத்தில் யாத்திரை செய்து மன சுத்திக்கு நல்ல தேவசகாய உதவி பெறுங்கள்.
சிதறுகாய் உடைத்தல் மன சுத்திக்கு மிகவும் உதவும். குத்தகைக்காரகளுக்கே சிதறு காய்த் துண்டங்கள் போகும்படி அல்லாது குத்தகை முறை இல்லாத இடங்களில் அல்லது குத்தகைதாரரிடம் அனுமதி பெற்று, ஏழைகள் அனைவரும் சிதறு காயைப் பொறுக்கி மகிழும்படி இந்த ஆலயங்களில் விஜய தசமி அன்று குறைந்தது 24 சிதறு காய்களையாவது உடைத்து இறைவனையும், ஏழைகளையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். இவ்வகையில் ஏழைகளின் மனதில் நீங்கள் விஜய யாத்திரை கொண்டிடலாம். மனிதனும் மகான் ஆகலாம் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

அவமானம் அணுகாதிருக்க ...

ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் பற்பல ஆன்மீக சக்திகளை, தெய்வீக அனுகிரகங்களைத் தாங்கி நிற்கின்றன. உண்மையில் சக்கரம் என்பதற்குக் காலம் என்றும், காலம் என்பதற்குச் சக்கரம் என்றும் பொருள் உண்டு. தீன பிருஷ்ட சங்கு என்று ஓர் அற்புதமான சங்கு உண்டு. கால சக்திகளை உணர்த்த வல்லதும், அதியற்புத வாக் சக்திகளையும், வாக்படுத்வ தேவ சக்திகளையும் கொண்டதும் ஆகும். ஆஞ்சநேயர் எப்போதும் இதனைத் தாங்கி இருப்பதுடன் கழுத்தில் இத்தகைய சங்குகளாலான மாலைகளையும் அணிந்திருப்பதால்தான், வியாகரண பண்டிதராய், ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தாமே சுயம்புவாய் உணர்ந்தவராய்ப் போற்றப்படுகின்றார்.
கோ துவாதசி நாளில், பசுவின் கழுத்தில் இந்த தீன பிருஷ்ட சங்குதனை அணிவித்து, கழுத்துப் பகுதிக்குப் பாலால் அபிஷேகம் செய்து, பசு, கன்றுடன் பெருமாள் கோயிலை வலம் வந்து பூஜித்து, பசுவிடமிருந்து இச்சங்கையே கோ மாதா அளிக்கும் பிரசாதமாகப் பெற்று இல்லத்திப் பூஜித்திடுவார்கள்.

தீயத்தூர் ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் திருத்தலம்

கோபாலன், கோபால கிருஷ்ணன், கோவர்த்தனன், கோவிந்தன், கோகுல் போன்ற பசுவின் பெயரை உடையவர்கள், கண்டிப்பாக கோ துவாதசி நாளில் தீன பிருஷ்டி சங்கைக் கொண்டு, இல்லத்தில் பூஜைகளை ஆற்றுதலால் அம்பிகை, கோமாதா, பூ மாதா, பெற்ற மாதாவாகிய தாய் ஆகிய நான்கு தாய்களின் ஆசிகள் கிடைக்க நல்வழி பிறக்கும்.
பாசாங்குசம் என்றால் ஒருவித தேவ ஆயுதம்தானே. ஆயுதம் என்றால் தற்காலத்தில் எண்ணப்படுவது போல பிறரை வதைக்கப் பயன்படும் கருவி என்று பொருளல்ல. தேவ ஆயுதம் எனில் தீய சக்திகளை, தீவினைகளை அழித்துத் திருத்துதல் எனப் பொருளாகும். சர்வ பாசாங்குசம் என்றால் அனைத்துப் பாசாங்குசங்களின் ஒருமித்தத் திரட்டு என்பது பொருளாகும். சர்வ பாசாங்குச சக்திகள் நிறைந்த தலமான சென்னை திருவட்டீஸ்வரன் பேட்டை சிவாலயத்தில் நிறைய சாம்பிராணி தூபமிட்டு வழிபடுதலானது பகைவர்களிடம் இருந்து காக்க வல்லதாகும்.
அங்குசத்தின் தலைமை சாசனம் பாசாங்குசம், பாசாங்குசங்களின் தலைமையானதாம் சங்கு, பாசாங்குச சங்குகளின் தலைமையானதா ம் பாசாங்குலி முத்திரை, பாசாங்குலி முத்திரைகளின் தலைமைப் பீட மூர்த்தியே பாசாங்குச ஏகாதசிக்கான வழிபாட்டுத் திவ்ய மூர்த்தியாகிய பெருமாள் மூர்த்தி. பாசாங்குலி ஏகாதசி அன்றும், கோ துவாதசி நாட்களிலும் பாசாங்குலி முத்திரை இட்டு, சூரிய மூர்த்தியைத் தரிசித்து, பசு, கன்றை வலம் வந்து, பசுவை லட்சுமி அம்சமாகப் பூஜித்து வணங்குதல் திருமகள் அருளைப் பெறும் ஆன்ம சாதனங்களை அளித்திடும்.
லட்சுமி கடாட்சம் என்றால் பணப் பொழிவு என்று மட்டும் பொருளல்ல. வருகின்ற பணம் நன்கு நிலைத்து, விருத்தியாகி, நன்முறையில் கருவியாகுதலும், செலவாகி நன்முறையில் பயன்படுதலும் லட்சுமி கடாட்சமே. பானையில் பதுக்கி வைப்பது லட்சுமி கடாட்சமாகாது. எனவே, லட்சுமி கடாட்சம் பெறும் முன், முதலில் லட்சுமி கடாட்சத்திற்கான ஆன்ம சாதனங்களைப் பெற்றிட வேண்டும்.
துளசி பூஜா பலன்கள்
கோ பூஜை பலன்கள்
கோ துவாதசி பலன்கள்
தாமரைப் புஷ்ப பூஜா பலன்கள்
போன்ற பலவும் லட்சுமி கடாட்ச சாதனங்களாகும். வாக் சக்தியும் லட்சுமி கடாட்ச சாதனங்களுள் ஒன்றே. தற்போது பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் பூர்வ ஜன்மங்களில் இத்தகைய பூஜைகளை ஆற்றி இருப்பர்.
கோ துவாதசி நாளில் ஆவுடையார் கோயில் அருகே உள்ள தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆலயத்தில் லிங்க மூர்த்தியைத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து தாமரை மலர்கள் ஊடே, திருமகள் பூஜிக்கும் சகஸ்ர லட்சுமீஸ்வர லிங்கத்தைப் பிரகாசிக்கச் செய்து, 12 ஜோடி பசு, கன்றுகளுடன் வலம் வருவதால், சிறு சிறு கடன்கள் தீர்ந்து வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட உதவும்.  கோ சூக்தம் எனும் அபூர்வமான மந்திரங்களை ஓதிப் பூஜித்தல் மிகவும் விசேஷமானது. பணப் பிரச்னைகளால் அவமானம் ஏற்படாது தற்காத்துக் கொள்ள மிகவும் உதவும்.

அசோக திரிராத்ரி விரதம்

இலங்கையில் சற்றுக் காலம் ராமனைப் பிரிந்து வாடிய சீதாதேவி அசோக மரத்தடியில் மூன்று இரவுகள் திரிராத்ரி விரதங்களைக் கடைபிடித்து, இதன் பலாபலன்களால் ஆஞ்சநேயர் மூலம் நற்செய்திகளைப் பெற்றனள். அசோக திரிராத்ரி விரதத்தின் நியதிகள் கடுமையானவை. எனவே எவ்கையிலும் ஆற்றிடுவோம் எனத் தீவிர மனோ வைராக்யச் சங்கல்பம் பூண்டு இருப்போர்க்கே சற்குரு மூலமாக அசோகத் த்ரிராத்ரி விரத முறைகள் புலப்படுத்தப் பெறும்.
எனினும் அசோகத் த்ரிராத்ரி விரத முறைகளைப் பெறுவதற்கான ஆரம்ப நிலைப் பூஜைகள் உண்டு. இம்மூன்று நாட்களிலும் அசோக மரத்திற்கு மஞ்சள், சந்தனம், சிந்தூரம், விபூதி, குங்குமம், சாந்துப் பொட்டு ஆகிய ஆறையும் இட்டுத் தரிசித்தல் வேண்டும். ஆறு விதமான வழிகளில் - துயரம், சோகம், வேதனைகள், மனவருத்தம், கவலைகள், துக்கம் ஆகிய ஆறும் கலியில் ஒருவருக்கு ஏற்படும். பிரிவு, மரணம், நோய், பகைமை, வறுமை, பக்திக்குறைவு ஆகிய ஆறுமே கலியில் மேற்கண்ட ஆறு வகைத் துன்பங்களுக்கும் - குறிப்பாக சோகத்திற்கு - மூல காரணங்கள் ஆகின்றன. இவற்றில் உப பிரிவு காரணங்களும் உண்டு.

திருமகள் மலைமகள் கலைமகள் இலஞ்சி திருத்தலம்

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தும் துன்பங்கள், வருத்தம் ஏற்படுவதுண்டு. அசோக மரத்திற்கு மேற்கண்ட ஆறு வகையான சோக மூல காரணங்களை உணர்வித்து, பிராயச்சித்த, பரிகாரங்களைப் பெற்றுத் தரும் தெய்வீக சக்திகள் உண்டு. அசோக மர இலையின் விளிம்பில் உள்ள வளையங்கள் சோக நிவர்த்திகளைத் தர வல்ல வேதச்சலனச் சக்கர ஆரங்கள் ஆகும்.
வேத மந்திரங்களில் சில சொற்களை உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் என நீட்டியும், குறைத்தும், சமமாயும் உச்சரிப்பார்கள். அசோக வேத மந்திர சப்த இலக்கணங்களில் நீட்டல், குறைத்தல் நிறைந்திருக்கும். வேத மந்திரங்களில் கிரந்திகள் எனும் படியான ஒரே மாதிரியாக இருப்பது போன்ற வாக்கியமும் வரும். (உ-ம் புருஷ சூக்த மந்திரத்தில் ... ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே .. ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத்)
இதனால் நல்ல கவனமும், ஜாக்கிரதையாக, பொறுமையாக பணிவுடன் அடக்கமாகச் செய்யும் மாண்பும் மிகும். பள்ளி, கல்லூரி, கல்விச் சாலைகளில் அசோக மரங்களை வைத்திருக்கக் காரணமே மேற்கண்ட வேத மந்திர சக்திகள் மாணவ குழாத்திற்கு இவை அனைத்தையும் பெற்றுத் தந்திடவே ஆகும்.
அசோகத் திரிராத்ரியின் மூன்று நாட்களில் 12 அசோக மர இலைகளை ஒரு தாம்பாளத்தில் வைத்து (கூர்மையான நுனி கிழக்குப் பக்கம் பார்த்து) இரு பகுதிகளாக 12, 12ஆகப் பிரித்து வைத்து, தமிழ், வடமொழி வேத மந்திரங்களை இதன் முன் ஓதி வருதல் வேண்டும். இரவில் அசோக இலைகளின் நுனிகளை வடக்குப் பார்த்து வைத்துத் தமிழ், தேவமொழி வேதமந்திரங்களை ஓதுதல் வேண்டும்.
வேத மந்திரம் அறியாதோர் எளிமையான ஸ்ரீகாயத்ரீ மந்திரங்களை ஓதுதல் வேண்டும். பகலில் மட்டும் தீர்த்த வகையாக எதையாவது அருந்திடலாம். திட உணவைத் தவிர்த்தல் நன்று. இந்த மூன்று நாட்களிலும், மறுநாள் காலையில் சற்று இரவுப் பொழுது இருக்கும்போதே அதிகாலையில் எழுந்து, அசோக இலைகளைப் பித்ருக்களாக பாவனை செய்து வணங்கிட வேண்டும். சோக நிவர்த்திக்கான கீழ்க் கண்ட அருமந்திரத்தை, இம்மூன்று நாட்களிலும் இடை விடாது ஓதுதல் நன்று.

அசோகமரம் இலஞ்சி

தரித்திரம் மற்றும்
துக்க நிவாரணத் துதி
(வசிஷ்ட மஹரிஷி அருளியது)
விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்ப்பூர காந்தி தவளாய ஜடாதராய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
கௌரி ப்ரியாய ரஜநீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்த்தனாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்க்க பவ ஸாகர தாரணாய
ஜ்யோதிர் மயாய குணநாம ஸுந்ருத்யகாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய
பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ஜீர பாத யுகலாய ஜடாதராய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகதாய புவனத்ரய மண்டிதாய

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

ஆனந்த பூமி வரதாய தமோமயாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
பாநுப்ரியாய பவ ஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ரத்ரயாய ஸுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்ய பரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய
முக்தேஸ்வராய பலதாய கணேஸ்வராய
கீத ப்ரியாய வ்ருஷபேஸ்வராய வாஹநாய
மாதங்க சர்ம வஸநாய மஹேஸ்வராய
தாரித்ரய துக்கதஹநாய நம: சிவாய
உலகத்தில் சோகத்திற்கு ஆட்படாதவர்கள் கிடையாது. சோகத்தில் இருப்பவர்களின் உடலிலிருந்து சோக கிரணங்கள் உற்பத்தி ஆகும். இவற்றை அசோக மரமே ஈர்த்து தம் இலைகளில் பொலியும் கோண நீரோட்ட மேட்டு வளைவு சக்திகளால் நிவர்த்தி செய்து அளிக்கின்றன.
அசோகா என்று ஒரு வகை இனிப்பு உண்டு. விரத நாட்களில் இதனை மூன்று அம்பிகையர் அருளும் தலங்களில் (அம்பாள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரி போன்று) படைத்துத் தானமளித்தல் மிகவும் விசேஷமானது.
சுருள் முடி கொண்டவர்கள் உண்டு. இவர்கள் சோக நிவர்த்தி மந்திரங்களை மனனம் செய்து வருதலால் அவர்களுடைய கேசங்களில் மறைந்திருக்கும் சில வகை ஆன்ம சக்திகள் பலருக்கு உதவும் வகையில் நன்கு விருத்தியாகும். சுருள் முடி அமைவதற்கும் ஆன்மீகக் காரணங்கள் பல உண்டு. சுருள் முடி கொண்ட ஆடவர், பெண்டிருக்கு விரத நாட்களில் ஆவன உதவிகளைச் செய்தல், தானமளித்தலால் ஒரு சிறு விஷயத்தால் தேக்கமடைந்துள்ள நல்ல உறவுகள் மீண்டும் மலர்ந்திட நன்கு உதவும்.
கேசவப் பெருமாள் என்ற பெயருடன் திருமால் அருளும் தலங்களில் பலாப் பழம், பறங்கி, பப்பாளி போன்ற நார் வகை உணவு, கனிவகைளைப் படைத்துத் தானமளித்தலால் கபாலம் சம்பந்தமான பிரச்னைகளுக்குப் பெருமாளின் அருளால் கேசவர்தினி மண்டல தேவதைகள் கருணை புரிவர்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam